அறிமுகம்

ணக்கம் மக்களே!

நான் நிவேதா ஜெயாநந்தன். பிறந்தது,வளர்ந்தது மாமதுரை! இடையில் சில வருடங்கள் அம்மாவின் சொந்த ஊரான போடிநாயக்கனூரில் வாழ்ந்தேன். தற்போது, கணவன் மற்றும் குழந்தையுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறேன்.

வயதுக்கு வந்தபின் வீட்டுக்குள் பூட்டி வைத்து வளர்க்கப்பட்ட 90-களின் தலைமுறையைச் சேர்ந்தவள் நான். அந்நாட்களில் என் கண் முன்னேயிருந்த இரண்டே entertaining source-களான புத்தகங்களையும், சினிமாவையும் கொண்டே பொழுதைபோக்கியாக வேண்டிய கட்டாயம்! அதன் பொருட்டுத் துவங்கியது தான் வாசிப்புப் பழக்கம்! நாளடைவில், வேர்கடலை பேப்பரைக் கூட விடாது வாசிக்குமளவிற்குத் தீவிரமாய் வளர்ந்து விட்டது!

டீனேஜ் காலத்தில், ஒரு மார்கழி மாத காலையில், என் வீட்டு மொட்டைமாடியில், கையில் ஆவி பறக்கும் காஃபி டம்ளருடன், background-ல் எங்கோ ஒலித்த PBS-ன் குரலோடு, பனி படர்ந்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலையைக் கண்டவாறு, மோன நிலையில் நின்றிருந்த போது, கடகடவெனத் தோன்றிய 4 வரிகளுக்குக் கவிதையென பெயர் சூட்டிய அன்று தொடங்கிய 'தமிழும்,நானும்' பயணம்.... இன்று... இங்கே....!

ஆரம்பம் முதல் இன்று வரை, எனது எழுத்துக்கள் அத்தனையும் அந்தந்தக் காலகட்டத்தில் எனக்கு இருந்த வயது, அனுபவம், முதிர்ச்சி மற்றும் மனநிலையின் வெளிப்பாடுகளே!

தொடர்ந்து என்னுடன் பயணிக்கும் அனைவருக்கும், பேரன்பும், பெரு நன்றியும்!!

Travel Diaries

கதை பேசிக் கொண்டே காற்றோடு போவோம்!