எல்லாப் பாட்டுமே செம ஹிட் தான்னாலும், ‘ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்’ டாப் மோஸ்ட் ஃபேவரைட்! மலேசியா வாசுதேவனுக்காக மட்டுமில்ல, நம்ம வாத்தியார் வாலியோட வரிகளுக்காகவே!
‘பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி, புக்ஸையெல்லாம் நீ சுமந்தால் பாவமடி’, ‘காத்திருந்தால் கண்மணியே பஸ் கிடைக்கும், காதலித்தால் கண்மணியே கிஸ் கிடைக்கும்-ன்னு ஸ்கூல் டைம்ல ஃப்ரண்ட்ஸ்க்குள்ள கேலி பேசிக்கிட்ட நாட்கள் உண்டு! (எஸ்! we were விளையும் பயிர் with restrictions.).
காதலிக்க ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’, கதறி கதறி அழ ‘பூங்கொடி தான் பூத்ததம்மா’, விரக்தி மனநிலையை விசிறி விட ‘இதயமே இதயமே’-ன்னு ஆல்பம் முழுக்க இளையராஜா, நம்மை இழுத்துக் கட்டி வைச்சிருப்பார்!
இதையெல்லாம் விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு!
சின்ன வயசுல காம்பவுண்டு,லைன் வீடுகள்ல குடியிருந்த போது, தெருவுக்கு ஒரு ‘அண்ணா’ இருப்பார் (க்ரஷ்-ன்ற வார்த்தையெல்லாம் அப்போ புழக்கத்துல இல்லாததால சைட்டுக்கெல்லாம் ‘அண்ணா’-ன்னு பேர் வைக்க வேண்டிய கட்டாயம். மன்னிக்கவும்).
பதின்ம வயதைக் கடந்து, ‘இளைஞன்’ என்கிற நிலைக்குள்ள எட்டு வைத்துக் கொண்டிருக்கும் உருவம்ன்னு வைச்சுக்கோங்க! பள்ளி முடித்து கல்லூரி சென்று கொண்டிருப்பவராகவோ, அல்லது அரசு வேலைக்கு பரீட்சையெழுத படித்துக் கொண்டிருப்பவராகவோ இருப்பார்! ‘படிச்சா இவனை மாதிரி படிக்கனும்’-ன்னு தெருவே பாராட்டுற மனுசன்!
‘இந்தப் பயலுக்குக் கொஞ்சம் கணக்கு சொல்லிக் குடுப்பா!, பத்தாங்க்ளாஸ்ல இத்தனை மார்க் எடுத்திருக்கான், என்ன க்ரூப் எடுத்தா நல்லாயிருக்கும்?’, பொண்ணை எங்க டியூசன் சேர்க்கலாம்?, பழைய புக்ஸ் கடை எது சீப்-ஆ இருக்கும்?’- என்பது போன்ற பெற்றோரின் கேள்விகளுக்கெல்லாம் பொறுப்பாய் பதில் சொல்லும் பொறுமைசாலி.
படிப்பாளி, புத்திசாலி, அமைதியானவன், அடக்கமானவன், கண்ணியமானவன், அப்டி,இப்டின்னு கண்டமேனிக்கு நல்ல பேரு எடுத்து வைச்சிருப்பாரு!