கடலும் காற்றும்!
தன்னை விட இரண்டு வயது சிறியவள், தன்னை ‘உலகம் தெரியாதவன்’ என்றதில், சுள்ளெனக் கோபம் வர வெடுக்கென எழுந்து நின்று, “Being optimistic is the toughest thing in the world பல்லவி!, எல்லாரலயும் அது முடியறதில்ல. எல்லாருக்கும் அது சாத்தியப்படுறதுமில்ல. ஆனா” என்றவன், அவளது நாற்காலியின் இரு புறங்களையும் பற்றி, நெருங்கி அவள் முகம் நோக்கிக் குனிந்து,
“you are a source of negativity பல்லவி! You spread only negative vibes. உன் தோற்றம், பேச்சு, எண்ணங்கள், ஐடியாலஜி அத்தனைலயும் எதிர்மறை அலைகள் கடல் போல நீண்டிருக்கு. உன் கூடப் பத்து நிமிசம் பேசுனா, ஒன்னு உலக வாழ்க்கையைத் துறந்து காவியைக் கட்டிக்கிட்டு காசிக்குப் போகனும், இல்லை.. நாலடி குழி தோண்டி, நானே போய் படுத்துக்கனும்.. இந்த உலகமும், வாழ்க்கையும் கர்ணக் கொடூரமானதுங்குற மாதிரியான எண்ணங்களை எதிர்ல நிற்குறவங்க மனசுல அனாயசமா உருவாக்குற!, என்ன ஆளு நீ?, இது நல்லதில்ல பல்லவி” -புருவம் சுருக்கி, முகத்தைச் சுழித்து வெறுப்பாய் வார்த்தைகளை உமிழ்ந்தபடி ஓரடி இடைவெளியில் நின்றவனின் கண்களை, சலனமற்று நோக்கினாள் பல்லவி.
“This is how I am. என்னால இந்த எதிர்மறை அலைகளிலிருந்து வெளி வர முடியாது. என் எண்ணங்களெல்லாம் ஒன்று கூடி கனமான இரும்பு சங்கிலியால என் கையையும்,காலையும் நகர முடியாத அளவிற்கு இறுக்கிக் கட்டி என்னைத் தணலுக்குள்ள நிற்க வைச்சிருக்கு. ஒவ்வொரு நிமிஷமும் எரிஞ்சு,கருகித் துடிச்சிட்டிருக்கிற எனக்கு, இதுல இருந்துத் தப்பிக்க வழியுமில்ல, வாய்ப்புமில்ல” -மெல்லிய குரலில் முணுமுணுப்பாய்க் கூறியவளின் பழுப்புக் கண்களையும், அதில் எரிந்த சீற்றத்தையும் கண்டபடி அசையாது நின்றிருந்தான் பிரஜரஞ்சன்.
மேலும் வாசிக்க.... கீழே உள்ள links-களை க்ளிக்கவும்....
