நீ நான் நீ!
அன்று காலாண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாணவர்கள் தங்களுக்குள் காப்பியடிப்பதற்குத் தடை போடும் பொருட்டு +1 மாணவர்களை +2 மாணவர்களோடு இணைத்து அமர வைத்திருந்தனர். அசோக்கின் கேடு காலமோ என்னவோ, அவனுக்கு அருகே கீர்த்தி! அவளைக் கண்டதும், உள்ளே ஜெர்க் ஆனாலும் சமாளித்து.. பயத்தை மறைக்கும் பொருட்டு ‘த ர ரி ந…’ எனப் பாடியபடி முன் தலை முடியைக் கோதிக் கொண்டு காலாட்டியபடி அமர்ந்திருந்தான். அவன் ஆட்டிய ஆட்டில், பெஞ்ச் ஆட.. பக்கவாட்டில் திரும்பி அவனை முறைத்தாள் அவள்.
‘எதுக்கு பார்க்குறா’ என்று நினைத்தாலும் திரும்பாமல்.. மீண்டும் ‘த ர ரி ந…’ என்றவனைக் கண்டுப் பல்லைக் கடித்து.. டெஸ்க்கை நொட்,நொட்டெனத் தட்டி அவனை அழைத்தாள். அசால்ட்டாய் அவள் புறம் திரும்பியவன், புருவத்தை உயர்த்தி “என்ன?” என்றான் சைகையில். ஆடிக் கொண்டிருந்த அவன் கால்களையும், டெஸ்க்கையும் பார்வையிட்டு அவன் முகத்தை நோக்கியவளிடம்.. புருவத்தை சுருக்கியவன்.. “என்ன ஷூ வேணுமா?? இல்லையா??? ஓஓஓ பென்சிலா?” எனக் கேட்க.. பல்லைக் கடித்தவள்..
“கால் ஆட்டுறதை நிறுத்து” என்றாள். அவள் ஏக வசனத்தில் தன்னைக் குறிப்பிட்டதை உணர்ந்துத் தாடையை இறுக்கியவன்.. கால்களை நன்றாகக் குலுக்கி.. “ரோமியோ ஆட்டம் போட்டா.. சுற்றும் பூமி சுற்றாதே” – என ஹை ஸ்பீடில் பாட.. அய்யோ என நெற்றியைப் பிடித்தவள்.. அவன் குதித்த குதிக்கு ஆடிய தன் பாடியைப் பிடித்து வைக்க எண்ணித் தரையில் காலை பலமாக ஊன்றினாள். அதன் பின்பு அனைவரும் தேர்வெழுதத் தொடங்கி விட.. ஒவ்வொரு முறையும், யோசிக்கும் போது நிமிர்பவன்.. ‘த ர ரி ந…’ என வாசித்ததையே வாசித்தபடி.. எழுதிக் கொண்டிருக்க.. பாதி நேரம், கடித்தப் பற்களுடனே அமர்ந்திருந்தாள் கீர்த்தி.
தொடர்ந்து வாசிக்க.... கீழே உள்ள links-களை க்ளிக்கவும்!!
