ரோசாப்பூ ரவிக்கைக்காரி – Music by Ilayaraja.
6/14/20241 min read


ரோசாப்பூ ரவிக்கைக்காரி – Music by Ilayaraja.
(சிரிக்காதீங்க டா Bloody 2k’s! உங்க ‘ஜலபுலஜங்கை’ விட இது நல்லாத் தான் இருக்கு! ஹ்ம்!)
வட்டமானத் தட்டு! தட்டு ஃபுல்-ஆ லட்டு ஃபீல் தான் இந்த ஆல்பம் எனக்கு! Yet another masterpiece from Maestro!
‘வெத்தளை,வெத்தளை’, ‘என்னுள்ளில் எங்கோ’ – இது ரெண்டையும் மலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம் கிட்டக் கொடுத்துட்டு, மற்றதை வழக்கம் போல, எஸ்.பி.பியின் ஆதிக்கத்தில் விட்டு விட்டார் ராஜா!
இந்தப் படத்துல வர்ற ‘உன்னி மேரி’ அக்காவோட- அகண்ட கண்களில் விழுந்து தொலையாத ஆண்களே இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்! கவர்ச்சியும்,தெய்வீகமும் சரிவிகிதத்தில் குடி கொண்டிருக்குற.. சிலை அது!
காதோரத்துல சுருண்ட முடி, side rose, பஃப் கை வைச்ச ப்ளௌஸ் (என்ன இருந்தாலும், அ..ந்..த ப்ளௌஸூ ஹாஹாஹா! No comments), தொங்கட்டானோடு மூக்குத்தி, உதட்டோர மச்சம், மலையாளப் பெண்களுக்கே உரிய செழிப்பான உடல்வாகுன்னு, கொள்ளை அழகு! ‘என்னுள்ளில் எங்கோ’- பாடலில் எக்குத்தப்பான எக்ஸ்ப்ரஷன்களைப் போட்டு அந்த ‘seductive’ சூழ்நிலையை ரொம்ப அனாயசமாகக் கையாண்டிருப்பாங்க! 'seducing' என்கிற பெயரில் அரைகுறை ஆடையோடுத் தொட்டு,உரசி இந்தக் காலத்துலக் காட்டப்படும் அற்பக் காட்சிகளை விட, இது அதிகத் தூண்டுதலை ஏற்படுத்துவதாகக் கமெண்ட் வந்திருக்கிறது ! வாணி ஜெயராமின் குரலில் இந்தப் பாடல் sugar syrup-ல் swimming-ஐப் போட்ட உணர்வைக் கொடுக்கும்!
இந்த ஆல்பத்துல என்னோட most favorite ‘உச்சி வகுந்தெடுத்து’ தான்! புலமைப் பித்தன் வரிகளும், ராஜாவோட இசையும், எஸ்.பி,பியின் குரலும் அந்தப் பாடலோட தரத்தை உயர்த்துகிற விதம், Nativity மாறாமல் render செய்த விதம் – Marvelous! உபயோகிக்கப்பட்ட ஒவ்வொரு கருவியும், சோகம்,ஏமாற்றம்,கோபம்ன்னு ஒவ்வொரு உணர்வை சிந்தி விட்டுப் போகுது! கூவிக் கூவி வெத்தளை விற்குற innocent ஹீரோவோட raw tone, கிராமத்துக்கே உரித்தானக் கரடுமுரடான வார்த்தை உச்சரிப்பு! – நான் எஸ்.பி.பியிடம் எதிர்பாராதது!
‘ஹேஏஏ முத்து,முத்தா மொட்டு விட்ட வாச முல்லஅஅஅஅஅ’-ன்னு மலேசியா வாசுதேவன் உயரப் பறக்க அழைக்கும் போது எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படல! ஏன்னா.. அவர் உச்சரிக்கிறதுக்காகவே படைக்கப்பட்ட வார்த்தையமைப்புகள் அவை என்கிற எண்ணம் எனக்கு! அவருக்கு இதெல்லாம் cake walk! ஆனா, தமிழர் அல்லாத ஒருவரான பாலு, ‘செங்கரையான் தின்னிருக்க நியாயமில்ல’ -ன்னு நம்ம கிராமத்து slang-ல வார்த்தைகளை அதிர விடும் போது.. யப்பாஆஆ! versatility at its peak!
இது எல்லாத்தையும் விடுங்க! 3rd BGM-ல உடுக்கை சத்தத்துக்கு மத்தியில ஒரு ஓலக் குரல் ஒலிக்குது! பாலு பாடியிருக்கிறார்! ‘மன்றம் வந்தத் தென்றலுக்கு, இதயம் ஒரு கோவில், காதலின் தீபம் ஒன்று’-ன்னு நான் romanticize செய்து வைத்திருக்கிற அவரோட ‘ஆஆஆஆ’-க்களின் தொகுப்பைப் பார்த்து, இந்த ஓலம் நகைப்பது போன்ற பிரம்மை எனக்கு!
விரக்தியின் உச்சநிலையிலிருக்கிற ஒரு பட்டிக்காட்டான், கோபம், ஆதங்கம்,ஏமாற்றம், கண்ணீர்ன்னு அடக்கி வைச்சிருக்கிற அத்தனை உணர்வுகளையும் ஏந்திக்கிட்டு, தணலா எரிகிற நெஞ்சோட அனலைப் பொறுக்க முடியாம, அடித்தொண்டையிலிருந்து ‘ஆஆஆஆ’-ன்னு கதறிக் கத்தனும்! ஆனா, அது வெறும் ஒலியாக இருந்து விடக் கூடாது! ஓசையாக இருக்கனும்!
ராஜா, இதை எப்படி விவரிச்சார், பாலு எப்படி catch பண்ணிக்கிட்டார்ன்னு தெரியல! ஆனா the outcome was out of the world! Totally! இதைப் படிச்சதும்.. இப்போ… இந்த நொடி நீங்க முணுமுணுக்கிறீங்களே! ‘வட்டுக்கருப்பட்டிய, வாசமுள்ள ரோசாவ’-ன்னு! அண்டம் அழிஞ்சாலும், ராஜா ஆள்வார்ன்னு நாங்க ஏன் ஆர்ப்பரிக்கிறோம்ன்னு புரியுதா?, He is immortal!!
அடுத்ததாக ‘மாமன் ஒரு நாள் மல்லிகைப் பூ கொடுத்தான்’ – அவுரு சிஸ்டரோட சேர்ந்து டக்கரா பாடுன பாட்டு இது! பெண்ணோட பார்வையிலிருந்து வருகிற பாடல்ன்றதாலேயே எக்ஸ்ட்ராவா அலட்டல், கொணட்டல்களை அள்ளித் தெளிக்க விட்டிருப்பாரு! ‘தேங்காய்ப் பூவாட்டம் நான் சிரிச்சிக்கிட்டிருந்தேனாம்’-ன்னு சிரிச்சு, நம்மையும் சிரிக்கத் தூண்டுவார்! இசை,வரிகள், picturization எல்லாமே hilarious-ஆ இருக்கும்!
எனக்கு mid of 80’s-ஐ விட later 70’s-ல அதாவது பாலு அவரோட, 30-களில் பாடின பாடல்கள் மீது craze அதிகம்! ‘ஆயிரம் நிலவே வா’ அளவிற்கு youthful-ஆ இருக்காது,அதே நேரம் ‘நிலாவே வா’ மாதிரி matured-ஆகவும் இருக்காது! இரண்டுக்கும் இடைப்பட்ட குரல் அது! தீவிர ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த வித்தியாசம் புரியும்!
எப்பவும் சொல்றது தான்! I belong to that Era. அது எனக்கானது! இன்னும், இன்னும் என்னை ‘இது மாதிரி’ நிறைய ரசிக்க வைக்க, எழுத வைக்கப் போகுது!
