Backing the Soul: சொல்லாததும் சொல்லும் இசை

1/22/20261 min read

Backing the Soul: சொல்லாததும் சொல்லும் இசை

#இது ஒரு நிலா காலம் – டிக் டிக் டிக்

ளையராஜா+ பாரதிராஜா + கமலஹாசன் + 3 பேரழகிகளோட ஒரு crime mystery thriller!

படத்திலிருக்கிற 3 பாடல்களில், கமலஹாசன்-மாதவி ஜோடிக்காக வைரமுத்து எழுதின, ‘பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே’-வைத் தான் நான் திரும்ப,திரும்பக் கேட்டு கேசட்டைத் தேய்த்திருக்கிறேன்.

because... நான், ‘அழகில் அழகு, தேவதை’-யிலிருந்தே, மாதவியின் மிகப் பெரிய விசிறி (1981 ஏப்ரல் - ராஜ பார்வை & அக்டோபர் -டிக் டிக் டிக்).

அதிலும், ‘கூந்தல் வண்ணம் மேகம் போல-ன்னு…’ – தொடங்குகிற பத்தியில், கண்ணதாசனின் சொற்கள் தேர்வு தந்த குளிர்ச்சியில், நாம் சிலிர்த்துக் கொண்டிருக்கும் போது, halter neck வைத்த long gown-ல், படிக்கட்டில் அமர்ந்தவாறு, தன்னுடைய அலை,அலையான நீண்ட கூந்தலை அசால்ட்டாக பின்னுக்குத் தள்ளும் மாதவிக்கு.. close up வைத்திருப்பார்கள்! Vintage tint-ல், வட்ட முகமும், மையிட்டப் பெரிய்ய்ய விழிகளும்.. வளைந்த புருவங்களும்.. நாடியில் மச்சமுமாக.. திரையை நிறைக்குற அந்த முகம்…. தேவதைகளுக்கானது..!

‘பொன் முகம் – தாமரை’- மலர்ந்து மணம் வீசச் செய்திருக்கிறார் கவியரசர்!

Back to ‘பூ மலர்ந்திட’ பாடல்: ஜென்சி மற்றும் கே.ஜே.ஏசுதாஸால் நிகழ்த்தப்பட்ட மேஜிக் இது!

நாம எல்லாருக்குமே படிக்குற காலத்துல ஒரு ‘character’ classmate ஆக இருக்கும்! சாந்தமான முகமும், அடக்கமான செய்கையும், அலட்டல் இல்லாத குணமுமாக ‘மௌனமே எனது தாய் மொழி’ ரீதியில் சத்தமேயில்லாம அவங்க பாட்டுக்க ஒரு பக்கம் இருப்பாங்க!

எனக்கு ஏசுதாஸோட குரல் அந்த கேரக்டரைத் தான் நினைவுபடுத்துது! ரசனையாக ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’-ன்னு ஒலிக்கும் போதாகட்டும், ‘யாப்போடு சேராதோ பாட்டு, தமிழ்ப்பாட்டு’-ன்னு மெல்லக் காதை உரசும் போதாகட்டும், ‘துடித்தேன், தொழுதேன், பலமுறை நினைத்தேன், அழுதேன்’-ன்னு ஆழமான உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் போதாகட்டும்… இது.. ஆர்ப்பாட்டமில்லாத.. அமைதியை மட்டுமே பரப்புகிற… சர்வ சாந்தமான குரல்ன்னு தோணும் எனக்கு!

அதே கேரக்டர், தன் கூட்டை விட்டுக் கொஞ்சம் வெளியே வந்து, … ‘இன்னும் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து’ -ன்னு அழிச்சாட்டியம் பண்ணும் போது, ‘இது தானே என் ஆசைகள் அன்பேஏஏ!!’,-ன்னு வைப்ரேட் ஆகும் போது, ‘செந்தாமரை, செந்தேன்மழை, என் ஆவி நீயே தேவி’ -ன்னு, கூச்சம் விட்டுக் காதல் செய்யும் போது, ‘பூவோடு…. தேனாட…’ -ன்னு குழையும் போது.. வருகிற.. wholesome feel, மன்மதன் என்னாங்க, மன்மதன், எங்கூரு மதியழகன் தெரியுமான்னு கேட்க வைக்கும்!

But, இந்தப் பாட்டுல (பூ மலர்ந்திட), அந்த voice கொஞ்சம் ‘naughty’ பண்ணுது! ஒரு photographer தன்னோட model மீது ‘இந்தக் கார்த்தி உன் காலடி நாய் செல்வி’-ரீதியில் மொத்தமாக கிறங்கி,மயங்கி விட்டதன் விளைவாக, வழிசலைக் கட்டுப்படுத்த முடியாம, இளமைத் துள்ளலோட, அவஸ்தையானத் தன் மன உணர்வுகளை, அப்பட்டமாகவே வெளிப்படுத்துகிறான்! பாட்டு visual treat-ம் கூட! ‘இலையாடை உடுத்தாத பூக்கள், செடி மீது சிரிக்கின்ற நாட்கள்’- வரிகளின் போது.. that eye lock between the main leads!! <3 <3 <3!

ஆனா, நான் சொல்ல வந்தது இது குறித்தல்ல! காதல் பாடல்களையெல்லாம் இளையராஜா, ‘சிலுப்பி விடு, செதற விடு’ன்னு அசால்ட்டு பண்ணிட்டு, போயிட்டே இருப்பார்! No debate!

இந்தப் படத்துல, 3 பேரழகிகள் குறித்த introduction-க்கு ஒரு பாட்டு வைக்குறாங்க! அது.. என்ன மாதிரியான பாட்டாக இருக்கனும்?,

3 பேருமே மேடை மேகங்கள்! Flash light-ன் கீழ் வசிப்பவர்கள்! இளமையும், செழுமையும் கொண்ட, கவர்ச்சியே உருவான, கலர்ஃபுல் கன்னி மான்கள்! So, பாட்டு க்ளாமரஸா இருக்கனும்!

பேச்சுல,கண்ணுல,உடையில, நடையில, செய்கையிலக் கூட கவர்ச்சியைக் காட்டிடலாம்! ஆனா, இசையில் எப்படிக் காட்டுவது?, ‘பாட்டு கேட்க, ரொம்ப க்ளாமரஸா இருக்குது’-ன்னு எப்படி சொல்ல வைக்கிறது?

ராஜா நம்மை சொல்ல வைக்கிறார்!,

இசையை சுருட்டாக சுருட்டி, நம் முன்னே நீட்டி, ‘கண்ணை மூடிட்டு ரெண்டு இழு,இழுங்க-கவர்ச்சி சும்மா கன்னா,பின்னான்னு காதுல கேட்கும்ன்னு’ casual-ஆக சொல்கிறார்!

‘பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது’-ன்னு உள்ளங்காலுக்குக் கீழ உலகத்தை அடக்கி, இடுப்புல கை வைச்சுக்கிட்டு, தூக்குன புருவத்தோட கெத்தா நிக்குற 3 சுந்தரிகளுக்கு வரி எழுதிட்டார் வைரமுத்து!

வார்த்தைகளுக்கிருக்கிற confidence, conquer ஆகுமிடம் எஸ்.ஜானகியின் கிறங்கிக் கலங்கடிக்கும் போதைக் குரலில் தான்! அவர் ஒரு போதைக் கோதை!

இந்தப் பாட்டின் ஹைலைட் ஆகக் கருதப்படுவது, டி.வி.கோபாலகிருஷ்ணனுடைய ‘நகுர்தன, திரனந’ தான்!

ஆனால், எனக்கு 2nd BGM தான்ங்க goosebumps! substantive! படு கவர்ச்சியானது! (பார்க்கவும் தான்!) விக்கலாக ஆரம்பிக்குற விதம், பிறகு ‘தும்,தும்’-ன்னு காதை இடிக்குற ‘Male voice’, கிறக்கமாக, கர்வமாக, ‘நா ந ந’ – வை உதிர்த்து விட்டுப் போகிற ‘female voice’ (உஷா உதுப்-ஆ?, தெரிஞ்சா சொல்லுங்க) The ultimate allure! அந்தப் படத்தின் கதை, கதாபாத்திரங்கள் குறித்த புரிதலை இந்தச் சில நொடி இசை தெள்ளத்தெளிவாகச் சொல்லி விடும்! ராஜாவின் observing capacity-க்கான sample இது!!

#சலக்கு சலக்கு சேலை – செம்பருத்தி.

2 young hearts, fresh faces, first love’ – இது தான் படத்தோட கரு! புதிதாக மொட்டு விட்டு, மெல்ல மெல்ல விரிகிற பூவோட மலர்ச்சியைப் பிரதிபலிக்கிற மாதிரி ‘raw’-வான இசையை படம் முழுக்க வெளிப்படுத்தியிருப்பாரு இசைஞானி! பல்லவனையும், Baggy pants-யும் நினைவுபடுத்துகிற 90ஸ்-க்கே உரித்தான ட்யூன்கள்!

இது மனோவோட ஆல்பம்! ‘நடந்தால் இரண்டடி’ மட்டும் தான் எஸ்.பி.பி! மற்றபடி sleek & cute-ஆக ஆல்பம் முழுதும் வலம் வருபவர் மனோ மட்டுமே! ‘சின்னக்கிளி என் செல்லக்கிளி’-ன்னு கொஞ்சலாக பட்டுப்பூவே!, ‘அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்’-ன்னு சரணாகதி நிலையில் ‘நிலா காயும் நேரம்’-ன்னு பாடலோடு சேர்த்து நம்மையும் காதல் செய்வார்!

நாம இப்போ நெக்ஸ்ட்,நெக்ஸ்ட்-ன்னு கேசட்டை fast forward பண்ணி ‘சலக்கு சலக்கு சேலை’-க்கு வருவோம்! காதலிக்கத் தொடங்கிய பின் வருகிற முதல் தொடுகை, நடுக்கம் தொடங்கி மயக்கம் வரை, தூறலாக ஆரம்பித்துப் பின் சடசடன்னு மழையா பொழியுற உணர்வைத் தரனும்! So, பாட்டுல நிச்சயம் மழை உண்டு!

அது போக, அன்று முதல் இன்று வரை தமிழ்ப் படங்களில் ஹீரோயின் single pleat உடன் மழையில் நனைந்தபடி ரொமாண்ட்டிக் சாங்குக்கு நெளிந்து, வளைந்து ஆடுவதென்பது சம்பிரதாயம்!

‘குத்தாலம் தேவையில்ல!, நீ சிரிச்சா சாரல் வரும்’ – என வாலியின் ரொமாண்ட்டிக் வரிகளுடன், டான்ஸ் கலந்த கலவையாக இருக்கும் பாடலில், முதல் பத்தி முடிந்ததும் flute portion ஒன்று வரும்!,

‘பாடிண்டே ஆடுவேளோ’-ன்னு நாகேஷ் கேட்குற மாதிரி, ‘ஆடனும், அதே நேரம் ஆகர்ஷிக்கனும்’ – ஸோ, எட்றா அந்த fluteஐ-ன்னு, கையில எடுத்திருப்பார் ராஜா!

நான் முன்பத்திகளில் சொன்னது போல, ஆண்-பெண்ணின் முதல் தொடுகைக்கே உரிய நடுக்கம்,விலகல் தொடங்கி, பின் மெல்ல மெல்ல சிணுக்கம், மயக்கம், கிறக்கம்ன்னு கதாபாத்திரங்களுடைய எண்ண அலைகள் அத்தனையும்… அப்பிடியே.. ஒலி அலைகளாக புல்லாங்குழல் வழி உருபெறுகிறது! எப்பிடிங்க??? ச்ச!

#அந்த நிலாவைத் தான் – முதல் மரியாதை

னக்குப் பொதுவாக இளையராஜா பாடினால் பிடிக்காதுங்க! சாரி ராஜா சார்! (core fans கொல்லப் போறானுங்க) ‘ஜன்..னனி… ஜன்..னனி’..-க்கெல்லாம் எல்லாரும் fire விடுவாங்க! நான் சேனலை மாத்தி விட்ருவேன்! அது போக ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’-ன்னு யேசுதாஸோட ‘Mesmerizing’ வாய்ஸ் என் ‘mood swings’-களை துரத்திட்டிருக்கும் போது, இவுரு கேசட் கடைசில ‘வட்ட ந்நிலா’-ன்னு கொணட்டுவாரு! காண்டாகும்! ‘என்னைத் தாலாட்ட வருவாளாவும்’ அதே தான்! அப்புறம், ‘என் தாயெனும் கோயிலைக் காக்க மறந்துட்ட பாவியடிக் கிளியே’, ‘சோலைப் பசுங்கிளியே’-ன்னுலாம் தொறந்தாருன்னா, நான் ஏரியாவுலயே இருக்க மாட்டேன்!

(‘காதல் கசக்குதய்யா’, ‘தாஸ்,தாஸ் சின்னப்பதாஸ், ‘ஓரம் போ, ஓரம் போ, ஏப்ரல் மேயிலே-லாம் வேற ரகம்! அங்க நான், அவரோட சண்டைக்கு நிற்குறதில்லை)

ஆனால்… ஆனால்… ரொமான்ஸ் மூட்ல இருக்குற ராஜாவோட டோனே (tone) வேறங்க! ‘முல்லைப் பூ போலே உள்ளம் வைத்தாய்’, ‘இளைய மனது… இணையும் பொழுது…’, ‘தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே’, ‘உண்மை சொல்லு பொண்ணே என்னை, என்ன செய்ய உத்தேசம்’, ‘பொன் மானே, என் யோகம் தான்’, ‘அந்திப்போர் காணாத இளமை’, ‘கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி!’ -இதையெல்லாம் எத்தனை முறை கேட்டிருப்பேனோ… கணக்கே இல்ல!

இது அத்தனைக்கும் சிகரமாக.. ஒரு பாட்டு இருக்குது! முதல் மரியாதை படத்துல, சாதி விட்டு சாதி காதலிக்குற ஒரு young & beautiful ஜோடிக்கான பாட்டு!

அந்த நிலாவைத் தான் நான் கையில புடிச்சேன்!! – இந்தப் பாட்டோட அழகான காரணம் K.S.சித்ரா தான்! அந்த ஹீரோயின் கேரக்டரோட முதற்பொருள்,உரிப்பொருள், கருப்பொருளோட கச்சிதமாக ஒத்துப்போகிற மாதிரியான குரல் சித்ராவினுடையது!

‘மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சுன்னு’ - அந்த கேரக்டர் காட்டுகிற ‘வேணும்,ஆனா வேணாம்ங்குற’ மாதிரியான வெட்கம்,அலட்டல்,சிணுக்கம்,இணக்கம் -ன்னு அத்தனையையும் ஜானகியால perfect-ஆகக் கொண்டு வந்திருக்க முடியும்! ஆனால்.. ரெக்கை முளைச்சதும் பறக்குற பறவையோட ‘first experience’ -யைக் சொல்லுகிற மாதிரியான இளமைக்குரலுக்காக சித்ராவைத் தேர்ந்தெடுத்தவர், male voice-க்கு அவரே பாடியிருப்பார்!

ஏன்னா, ‘வெட்கம் விட்டு ஆசையெல்லாம் வெளிப்படையாக சொல்லனும்! ரொம்பத் தான் கிராக்கி பண்றவளை கேலியும், கிண்டலுமா வழிக்குக் கொண்டு வரனும்’ – இதெல்லாம் விசயம் தெரிஞ்ச ஆளாலத் தான் முடியும்! so, male voice matured-ஆகத் தான் இருக்கனும்! அப்போ தான, ‘ஓடி வா ஓடைப் பக்கம்! ஒதுங்கலாம் மெதுவாக’ன்னு கூப்பிட முடியும்!, ‘காத்தடிச்சா தாங்காதடி, மல்லிகைப்பூ மாராப்பு’-ன்னு நேக்கா வசியம் பண்ண முடியும்! ‘அடி போடி புள்ள! எல்லாம் டூப்பு’-ன்னு ஏமாற்றத்துல கோபப்பட முடியும்!

‘செவுளி’ – அப்பிடின்னு ஹீரோ திகைப்போட கூப்பிட்டதும், வெட்கமா ஒரு பார்வை பார்த்துட்டு, படபடப்புல ஓடிப் போகிற செவுளி, ஒத்த மரத்துப் பக்கமா, நிலாவை வெறிச்சுக்கிட்டு நிற்கும் போது, தொடர்ந்து வந்த ஹீரோ, ஹீரோயினைக் கட்டிக்கிட்டப்புறம்,

ஜோடிப் புறாக்கள் இரண்டு, நீண்ட வானத்துல, நிச்சலனமா நிற்குற நிலாவோட backdrop-ல, ரிதமா றெக்கை அசைச்சுக்கிட்டு, மெல்ல,மெல்ல உயரப் பறந்து போகிற மாதிரி…. அலை,அலையாக, ஏறி, இறங்கி, பாய்ந்து, படர்ந்து.. நம் விரல்களை வருடுகிற கடல்நீரைப் போல… soothing-ஆ காதை அடைகிற அந்த first music… கண்ணை மூடி, அஞ்சு விரல்களையும் நீட்டி, காத்துல கோலம் போடச் சொல்லுது! (இப்ப என் visualization-ல ஏன், சிவராத்தில ஆடுற ஜக்கி வர்றாரு)

இந்த வெரி ஃபர்ஸ்ட் போர்ஷன், சித்ராவோட குரல், இளையராஜாவின் லவ்விங் சைட் என நீளும் இந்தப் பாடல்.. one of the most romantic songs of Raja!!

எப்பவும் சொல்றது போல, வாழ்க்கையோட கடைசி நொடி வரை நான் ‘glorify’ செய்து கொண்டே இருக்கப் போவது ராஜாவோட இசையைத் தான்! வியந்து பார்த்துக் கொண்டே இருக்கப் போவது ராஜாவை மட்டும் தான்!

-நிவேதா.