8.3 சொட்டாங்கல்!
“பாட்டியெல்லாம் ஒரு ஆளுன்னு அவங்க பேசுறதை பெருசா மதிச்சு, எங்கம்மா ஏன் இப்பிடி life-ஐ loose பண்ணிட்டிருக்காங்கன்னு தெரியல ஜெபாக்கா! She is a living evil spirit. அதுக்கொரு சூனியத்தை வைச்சிட்டு smooth-ஆ வாழ்றதை விட்டுட்டு எதுக்கு இத்தனை drama?, ப்ச், ஆனா எங்கம்மாவை மட்டும் தப்பு சொல்ல முடியாது! எங்கப்பா மாதிரி ‘அம்மான்னா சும்மா இல்லடா’-கோஷ்டி கூட குடும்பம் நடத்துறது ரொம்ம்ம்ம்ம்பக் கஷ்டம்! ”
-ஜெபா அளித்த Greek yogurt,chia seeds, coffee, ,honey, rolled oats, cocoa powder சேர்த்துக் கலந்த healthier version of Tiramisu bowl-ஐக் காலி செய்தபடி சலித்துக் கொண்ட hunter-க்குத் தனது அன்னை-தந்தையின் போக்கு வழக்கம் போல பெரும் சலிப்பையும், கடும் வெறுப்பையும் கொடுத்திருந்தது.
அன்று தன் தந்தை அளித்தப் பைகளை கோபமும்,அழுகையுமாய் மேசையில் கிடாசி விட்டு நகர்ந்த hunter, தாத்தனின் சமாதானத்தில் மலை இறங்கிப் பின், பையிலிருந்ததைப் பிரித்துப் பார்க்க ஆர்வம் கொண்டுத் தன் அறையை விட்டு வெளியே வருகையில்,
அங்கு அவள் அன்னை, இரு பைகளுள் ஒன்று, அவருக்குப் பிடித்த உணவு வகைகள்,பொருட்களால் நிறைந்திருப்பதைக் கண்டு, அதிலிருப்பவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து அடக்கப்பட்டக் கண்ணீரும், ஏறி,இறங்கும் நெஞ்சுமாய் ஏக்கத்தையும்,வேதனையையும் முகத்தில் தேக்கிக் கொண்டு, நடுங்கிய கைகளோடு நிற்பதைப் பார்த்ததும், மறைந்த ஆத்திரம் மீண்டும் பொங்கிப் பெருக, விறுவிறுவென அவரருகே சென்று, வெடுக்கென அவர் கையிலிருந்ததைப் பிடுங்கி எறிந்து,
“ஒன்னு பாட்டிக்குப் பாய்சன் வைச்சிட்டு உன் ‘பதி’ கூட ஜாலியா வாழப் பாரு! இல்ல, ஈகோ தான் பெருசுன்னா, சிம்பிளா அப்பாவை டிவோர்ஸ் பண்ணிட்டு, ‘I am a single lady, I am a single lady’-ன்னு டான்ஸ் ஆடப் பாரு! தெளிவா ஒரு முடிவெடுக்க முயற்சி பண்ணாம, இப்பிடி ரெண்டுத்துக்கும் நடுவுல பெண்டுலம் மாதிரி ஆடி, சந்தோசத்தை இழந்து, நிம்மதியைத் தொலைச்சு, வாழ்க்கையைக் கண்ணீரும், கவலையுமா ஓட்டி, என்னைய ஸ்ட்ரெஸ் பண்றீங்கம்மா!, உங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே எனக்கு ரொம்ப எரிச்சலாவும், frustrating-ஆவும் இருக்கு!” – என்று ஆதங்கத்தில் சத்தமிட,
“ஹாசினி, என்ன இது டிவோர்ஸ் அது,இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு!, இதெல்லாம் அம்மா-அப்பாவோட பர்சனல்! நீ இதுல தலையிடக் கூடாது” – பின்னிருந்து குணசீலன், ஹம்சவர்தினியின் அப்பா கண்டிப்புடன் ஆஜராகவும், மேலும் ஆத்திரம் கொண்ட ஹாசினி,
“நான் தலையிடக் கூடாதா?, ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா இருக்கிறதால, அதிகமா பாதிக்கப்பட்டது நான் தான் தாத்தா! இந்த வீக்-எண்ட் மகாபலிபுரம் ரிசார்ட் போகலாம்ன்னு அப்பா சொல்றாரு, குடும்பமா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமா எங்களால?, அம்மா வருவாங்களா?, மாட்டாங்க! நைட் இங்கயே தங்குங்கப்பான்னு அப்பா கிட்ட நான் அவ்ளோ கெஞ்சுனேன்! முடியாது-ன்னுட்டாங்க! ஏன்னா, அம்மா இங்க இருக்காங்களாம்! தேவையில்லாத சண்டை வருமாம்! hurt பண்ணிடக் கூடாது, hurt ஆகிடக் கூடாதுன்னு அவ்ளோ கவனம் ரெண்டு பேருக்கும்!
ஒருத்தருக்கொருத்தர் பிடிக்கல, அதனால இன்னொரு வாழ்க்கையைத் தேடிக்கிட்டாங்கன்னா அது வேற தாத்தா! அப்பா ஒவ்வொரு முறையும் இது மாதிரி பையைக் கொண்டு வந்து நீட்டும் போது, அம்மாவுக்குப் பிடிச்ச அத்தனையும் உள்ளே இருக்கு! அதைப் பார்த்து,பார்த்து அழற பழக்கத்தையும் அம்மா மாத்திக்கல!
ரெண்டு பேருக்கும் நடுவுல வேற ஏதாவது கருத்து வேறுபாடோ, பிரச்சனையோ இருந்தா பரவாயில்ல! போயும்,போயும் அந்த சூனியக்காரக் கிழவி செய்ற சதியால.. இப்பிடியா லைஃபை ஸ்பாயில் பண்ணிக்கிறது?, முட்டாள்தனமா இல்ல?” என்று சுழித்த முகத்துடன் ஆங்காரமாய்க் கேள்வி கேட்டாள்.
“பாட்டியை அப்படியெல்லாம் பேசக் கூடாது ஹாசினி! உங்கப்பா கோபப்படுவார்ம்மா”
“படட்டும்! எனக்கென்ன! அவருக்கு அவங்கம்மா அவ்ளோ முக்கியம்ன்னா, என்னை எதுக்குப் பெத்தாராம்?”
“ஹாசினினினி” – அன்னை அதட்டியதும், திரும்பி முறைத்துப் பார்த்த hunter,
“நான் அப்பிடித் தான் பேசுவேன்! இன்னும் மோசமா கூடப் பேசுவேன்! I’m 15, I know it all! நீங்க ரெண்டு பேரும், என்னைப் பெத்துக்கக் காட்டுன ஆர்வத்தை, என்னை வளர்க்குறதுல காட்டல! I feel like I'm just the leftover mess from your physical urges! Irresponsible-ஆ இருந்து, You ruined my childhood! என்னைப் பத்தி நீங்க யோசிக்கல!, என் மேல உங்களுக்குத் துளி கூட அக்கறையில்லை! I hate you both!” – என்று டீனேஜ்க்கே உரிய துடுக்குப் பேச்சோடு, ஆவேசமாய்க் கத்தி விட்டு அறைக்குள் சென்று படாரெனக் கதவை சாத்திக் கொள்ள, விக்கித்துப் போய் நின்றிருந்தனர் அப்பாவும்,மகளும்.
சிலையாய் சமைந்திருந்தவளின் தோள் தொட்ட குணசீலன், அவர் பங்குக்கு “இத்தனை வருஷத்தையும் பிடிவாதமா இருந்து உன் போக்குல கடத்திட்டம்மா!, இனியாவது நல்ல முடிவா எடுத்து வாழ்க்கையை நேராக்கிக்கப் பாரு!, இப்பிடியே அவர் இறங்கி வரட்டும்ன்னு நீயும், நீ பொறுத்துப் போகனும்ன்னு அவரும் ஈகோவை முன்னிருத்தி வாழ்ந்து முடிச்சிடலாம்ன்னு நினைக்கிறது சரிப்பட்டு வராதும்மா! நீங்க ரெண்டு பேரும் தனி ஆளுங்க இல்ல! உங்களுக்கு நடுவுல ஹாசினி இருக்கா! விவரம் புரியுற வயசும்மா அவளுக்கு! பெரியவனான எனக்கே உங்களோட ‘அர்த்தமில்லாத வாக்குவாதங்களையும்’, ‘முடிவில்லாத முகத்திருப்பல்களையும்’ பார்க்கும் போது ஆதங்கமும்,வருத்தமுமா இருக்கையில, சின்னப் பொண்ணு அவளால எப்பிடிம்மா இதையெல்லாம் சகிச்சுக்க முடியும்?,
அவ பிறந்ததுல இருந்து இப்ப வரை, தன்னைப் பெத்தவங்க ஒற்றுமையே இல்லாம சண்டையும்,சச்சரவுமா அடிச்சுக்கிறதைத் தான் பார்த்து வளர்ந்திருக்கா! ஒரு முறையாவது அன்பா,ஆதரவா ரெண்டு பேருமா சேர்ந்து உட்கார்ந்து பிள்ளை கையைப் பிடிச்சுப் பேசியிருக்கீங்களாம்மா?, உங்க நிலை, அவளுக்குப் பதட்டத்தையும், பயத்தையும், பாதுகாப்பின்மையையும் கொடுக்கிறது புரியுதா இல்லையா உங்களுக்கு?
மாப்பிள்ளை கிட்ட எத்தனையோ முறை இதைப் பத்திப் பேசிட்டேன்ம்மா! ரெண்டு பேரும் ஒற்றுமையா இருந்து குழந்தையை வளர்க்குறது தான் அவளுக்கு நீங்க கொடுக்குற மிகப் பெரிய சொத்துன்னு! மனம் வருந்தி, கண் கலங்கி, தலை குனிஞ்சு நின்னு நான் சொல்றதைக் கேட்டுப்பாரே தவிர, அவருக்கு, அவங்கம்மாவை மீறித் தெளிவா முடிவெடுக்கிறத் திராணி இல்லம்மா!” என்றவர் தொடர்ந்து தனது உரையாடலின் கனத்தைக் கூட்டும் வகையில், சில கண்ணீர்த் துளிகளை வெளியிட்டு,
“உன் அம்மா இருந்திருந்தா.. என்னைக்கோ ஏறக்கட்டி உன்னைப் புருசன் வீட்டுக்கு அனுப்பி வைச்சிருப்பா! அப்பா, உன்னை ஆதரிக்கிறேன்ற பேர்ல, மேம்போக்கா நடந்துக்கிட்டேனோன்னு ரொம்பவும் குற்ற உணர்ச்சியா இருக்கும்மா ” – என்று கரகரத்தக் குரலில் கூற,
“அப்பா…..” என தழுதழுத்தக் குரலில் அழைத்தவள், மகளின் ஆவேசத்தில் கதிகலங்கி, தந்தையின் கண்ணீரில் பலவீனப்பட்டு, ஆதரவற்றக் குழந்தையாய் அலமலங்க, செய்வதறியாது அலைபாய்ந்த விழிகளுடன் அவர் முகம் பார்க்க,
உடனே குரலைச் செருமி, கண்களைத் துடைத்துக் கொண்ட குணசீலன், “அப்பா இன்னும் எத்தனை நாள் உயிரோட இருப்பேனோ தெரியலம்மா!, சாகுறதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழ்றதைப் பார்க்காட்டி, என் கட்டை வேகாதும்மா” – என்கிற ஸ்டாண்டர்ட் டயலாக்கை உதிர்த்து, மகளின் தலை தடவிக் கொடுத்து விட்டு நகர்ந்து சென்றார்.
பூட்டிக் கிடந்த மகளின் அறை, தந்தையின் தளர்ந்த நடை, முன்னே மேசையில் பரவிக் கிடந்த பொருட்கள் என கண் கண்ட காட்சிகள் அத்தனையும் நெஞ்சில் சுமையேற்ற, இமைகளை இறுக மூடி நாற்காலியில் சாய்ந்தமர்ந்த வர்தினியின் மனம், தணலுக்குள் சிக்கிய புழுவாய்த் துடித்து கருகிக் கொண்டிருந்தது.
Hunter தொடர்ந்து புலம்பியதைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்த ஜெபா, முந்தைய தினம் மருத்துவமனையில் வியர்த்துக் கலங்கிய முகத்துடன் வர்தினியைக் கண்டதையும், அவர் குறித்து அங்கிருந்த தாதி தன்னிடம் கூறிய விசயத்தையும் எண்ணிப் பார்த்தவாறு சுருக்கிய புருவங்களுடன் அமர்ந்திருந்தாள்.
தாதி சொன்ன சேதி, இன்னும் தன் முன்னே அமர்ந்திருப்பவளை எட்டியிருக்கவில்லையென்பது, வெகு சாதாரணமாகக் காலாட்டியபடி அவள் வாயாடிக் கொண்டிருக்கும் விதத்திலேயே புரிந்தது.
இவள் தாத்தாவுக்கேனும் தெரிந்திருக்குமா? வாய்ப்பில்லை!
ஏனெனில், அன்று காலை அவள் ஜிம்மிலிருந்துத் திரும்புகையில், hunter-ன் தாத்தா நடைபயிற்சியை முடித்து விட்டு, பிரதான சாலையிலிருக்கும் டீக்கடையில் வெங்காய பஜ்ஜி வாங்கிக் கொண்டிருந்ததைக் காரிலிருந்தபடி கண்டிருந்தாள்.
அவரது பதட்டமற்றத் தோற்றத்தையும்,இயல்பான நடவடிக்கையையும் வைத்துப் பார்க்கும் போது, அவருக்கும் செய்தி எட்டியிருக்கவில்லை என்பது போலத் தான் தோன்றுகிறது.
என்ன செய்வது? – குழம்பிய மனதுடன் கடைசி ஸ்பூன் tiramisu-வைக் காலி செய்த ஜெபா, திடீரெனத் தோன்றிய யோசனையோடு நிமிர்ந்து hunter-ரிடம்,
“உன் அப்பாவோட ஃபோன் நம்பர் சொல்லு ஹாசினி” என்றாள், அருகிலிருந்த அலைபேசியை பரபரப்புடன் கையிலெடுத்தவாறு.
“ஏன்-க்கா?, சமாதானம் பேசப் போறீங்களா?, பிரயோஜனமே இல்ல! ஒன்னு தெரியுமா உங்களுக்கு?, எங்கப்பாவோட Spotify-ல இருக்கிறது ஒரே playlist தான்! Title - ‘அன்னை ஓர் ஆலயம்’! அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம் வரை, தமிழ் சினிமாவுல வெளி வந்த மதர் செண்டிமெண்ட் சாங்க்ஸ் அத்தனையையும் அதுல add பண்ணி வைச்சு தினம் ‘ரிபீட் மோட்ல’ கேட்டு வெறித்தனமா பாசப் பயிரை வளர்த்துட்டிருக்கிறார்!” – முன்னே குனிந்து விழிகளை உருட்டி அபிநயம் பிடித்தவளைக் கண்டு ஜெபா சிரிக்க,
எரிச்சலுடன் உச்சுக்கொட்டியபடித் தனது நீண்ட கூந்தலைக் கையால் கோதி கொண்டையிட்டுக் கொண்ட hunter,
“ஏன்-ப்பா இப்பிடி இருக்கீங்கன்னு கேட்டா, யங் ஏஜ்-ல ஹஸ்பண்டை இழந்துட்ட என் பாட்டி பைத்தீஸ்வரி, ப்ச், வைத்தீஸ்வரி, சின்ன வயசுல அவுருக்கு பாலுக்குப் பதிலா பாசத்தைத் கப்,கப்-ஆ ஊத்தி கஷ்ஷ்ஷ்ஷ்டப்பட்டு வளர்த்துச்சுன்னு கூச்சமேயில்லாம கதை,கதையா சொல்லுவாரு! அந்த ‘Mother Gothel’-க்கு நன்றிக்கடன் செலுத்துற வேகத்துல, எங்க இரண்டு பேருக்கும் பால்டாயிலை ஊத்தி நடுத்தெருவுல கொண்டு வந்து நிறுத்திட்டாரு! ப்ச், அவரெல்லாம் யார் என்ன சொன்னாலும், தன்னை மாத்திக்க மாட்டாருக்கா! He is a brainwashed puppet!” – என்று கடுப்பாகக் கூறினாலும், ஜெபாவின் வற்புறுத்தலில் நம்பரைக் கூறி விட்டு,
“அக்கா, Chanel-tyla, hook steps கத்துக்கிட்டேன்! வீடியோ அனுப்புனேனே பார்த்தீங்களா?, இப்போ ஆடிக் காட்டட்டுமா?” – என்று தொண,தொணத்தபடி அங்கிருந்த alexa-வில் பாட்டைப் போட்டு ‘டான்ஸ்’ ஆடத் துவங்கி விட,
இங்கு ஜெபா, தன் கையிலிருந்த அலைபேசியில் விறுவிறுவென ‘உங்கள் மனைவி ஹம்சவர்தினி, ஸ்டேஜ் 2 மார்பகப் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக diagnose செய்யப்பட்டிருக்கிறார். Biopsy results-ல் Invasive Ductal Carcinoma எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. அவரை உடனடியாக சந்திக்கவும்! இந்தச் செய்தியில் சந்தேகமிருந்தால், ‘க்ரேஸ்’ மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளவும்’ – என மொட்டைக் கடுதாசியாக நான்கு வரி ‘மெசேஜ்’ ஒன்றை டைப் செய்து hunter-ரின் தந்தை தங்கப்பாண்டியனுக்கு அனுப்பி விட்டு, ஃபோனைக் கண் படாத இடத்தில் தூரமாகத் தள்ளி வைத்துப் படபடப்புடன் நகம் கடிக்கத் தொடங்கினாள்.
‘படித்த பிறகு, அழைத்தாரானால்.. எடுக்கக் கூடாது! ப்ளாக் செய்து விட வேண்டும்! எப்படியோ செய்தியைச் சேர்த்தாயிற்று! இனி அவர் பாடு!’ – என்றெண்ணியபடி குதிகால்களால் தரையில் தாளமிட்டவாறு டென்ஷனோடு சோஃபாவில் அமர்ந்திருந்தவள், வீட்டு அழைப்பு மணியின் சத்தத்தில், அவசரமாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
வெளியே, “இங்காரு லே, அவ அதட்டுனா, அலறனும்!, கத்துனா கதறனும்! அடிச்சா அக்காஆஆஆன்னு கால்ல விழுந்துடனும்! புரியுதா?”
-என மெல்லிய குரலில் கூறியவாறு, ஒரு கையில் ஹெல்மெட்டுடனும், மறுகையால் கதவருகேயிருந்த சிப்பி வைத்த வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்துத் தலை கோதி, முடியைச் சரிசெய்தபடி அலெக்ஸ் நின்றிருக்க,
அவனருகே கடுப்பில் உயர்த்திய புருவங்களுடன், ‘என்ன தலையைவா சீவிடுவாங்க’ ரீதியில் உதட்டை வளைத்து, அசால்ட்டாக ஒரு காலை ஆட்டியவாறு நின்றிருந்த gangster-ரும்,
தாழ்ப்பாளின் சத்தத்தில் அலெர்ட்டாகி, ஓரடி பின் நகர்கையில், கதவு திறந்து வெளிப்பட்ட ஜெபா, இவர்களிருவரையும் கண்டு, புருவம் சுருக்கிப் பின் விடைத்த மூக்குடன், இரு கைகளையும் மார்பின் குறுக்காகக் கட்டிக் கொண்டு, நிலப்படியில் ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்றவாறு, முறைத்துப் பார்த்தாள்.
அவளைக் கண்டதும் அப்பாவி பாவனையுடன், அலெக்ஸ் முகத்தைப் பாவமாக்கிக் கொள்ள, அவன் பின்னே gangster, வீட்டினுள் chanel பாடலுக்கு, தனது நீண்ண்ண்டடட கார்மேகக் கூந்தலை ஒரு பக்கமாக சிலுப்பி, இடையை ஒடித்து ஆடிக் கொண்டிருந்த hunter-ஐக் கண்டு, உச்சிக்கு ஏறிய வன்மத்தில், உடனடியாக கர்வத்தைக் கண்ணில் தேக்கி, தாடையைத் திமிராகத் தூக்கி, காலரைப் பின்னே தள்ளியபடி கெத்து குறையாது மிதப்பாய் அவளை நோக்கினான்.
Gangster காட்டிய மாஸை, தூசாக எண்ணி ஊதி விட்ட hunter, “அக்கா நான் மாடில போய் டான்ஸ் ப்ராக்டிஸ் பண்றேன்” – எனக் கூறி தனது Rapunzel கூந்தலை flaunt செய்தவாறு விறுவிறுவெனப் படியேறி விட்டாள்.
“கேட்டியாண்ணே?, டான்ன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ் ப்ராக்டிஸ் பண்றாளாம்!”– என்று அலெக்ஸின் காதைக் கடித்த gangster-ரிடம்,
“விட்றா! ப்ராக்டிஸைப் பாழாக்கத் தான நாம வந்திருக்கோம்?” – என்று பதிலுக்கு அவன் முணுமுணுப்பதையும் சந்தேகமாக நோக்கி,
“என்ன பால்?” – என்றாள் ஜெபா.
“ஆவின் பால்! எங்க கிடைக்கும்ன்னு கேட்குறான்”
“உனக்கெதுக்கு டே ஆவின் பால்?” – ஜெபா.
“ஏன், குடிக்கக் கூடாதா?, நான் வளர்ற பையன்-க்கா” – ஷோக்காக சமாளித்தபடி gangster.
“வளர்ந்து… இன்னும் யார் வீடியோவை ரிலீஸ் பண்ணலாம்ன்னு இருக்க?, எவ்வளவு தைரியமிருந்தா, என் அனுமதியில்லாம என்னை வீடியோ எடுத்து சோஷியல் மீடியால போஸ்ட் பண்ணியிருப்ப?, 15-வயசுப் பையனுக்கு என்னத்துக்கு டே Instagram account?, படிக்கிற வேலையில்லையா உனக்கு?, வசந்தாக்காக் கிட்ட சொல்லவா லே?” – கோபத்துடன் மிரட்டியவளிடம்,
“க்காஆஆஆ…. க்காஆஆ.. சாரிக்காஆஆஆ” – பின் கழுத்தைச் சொரிந்தபடி அவஸ்தையாய் நெளிந்த gangster, அலெக்ஸிடம் காப்பாற்றும்படி கண் காட்ட,
தொண்டையைச் செருமிக் கொண்ட அலெக்ஸ்,
“விடு விடு மக்கா!, சின்னப் பையன்! ஏதோ ஆர்வத்துல… தெரியாம பண்ணிட்டான்! நான் கோவப்பட்டு.. நல்லாஆஆஆ திட்டி வுட்டுட்டேன்! நீயும் கடுமையா பேசாத! பாவம்!, Gen-z வேற! விரக்தில விசத்தைக் குடிச்சிடப் போறான்! அது போக, அப்பிடி என்ன இல்லாததையா சொல்லிட்டான்?, நாம வேணா, ‘யெஸ் வீ ஆர் இன் அ ரிலேஷன்ஷிப்’ அப்டின்னு ‘கொளுத்திப் போடு’ youtube channel-க்கு பேட்டி கொடுத்து உண்மையை உரக்க சொல்லிடுவோமா?” – என பிட்டைப் போட்டுப் பார்க்க,
மூச்சு வாங்க முறைத்துப் பார்த்தவள், படாரெனக் கதவை சாற்ற முயலவும், அவசரத்துடன் தடுத்து நிறுத்தி,
“வீடு தேடி வந்தவங்களை வாசலோட விரட்டி அடிச்சா எப்பிடி மக்கா?, உள்ள கூப்பிட்டு, ஆவின் பால் இல்லாட்டியும், ஆரோக்கியா பால்லயாச்சும் ஒரு டீ போட்டுக் கொடேன்! கூட தீனித் தட்டும் கொடுத்தேனா… இவன் நீ எவ்ளோ திட்டுனாலும் வாங்கிப்பான்” – என்றான்.
“ண்ணேஏஏ!” எனப் பல்லைக் கடித்த gangster, “எங்கம்மா எனக்காக சிக்கன் சுக்கா பண்ணி வைச்சிருப்பாங்க! நான் என் வீட்டுக்குப் போறேன்ண்ணே” – அழாக் குறையாகக் கூற,
“சுள்ளுன்ன்னு அடிக்குற வெயிலுக்கு, சுக்கா-லாம் சாப்பிட்டா, சூச்சூ வராது டே!, உனக்கு hunter-ரோட டண்டணக்காவை டேமேஜ் பண்ண வேணுமா? வேணாவா?” – என்று அலெக்ஸ் பேரம் பேசியதும், ‘கருப்பசாமி கோயில் பூசாரியிடம் துன்னூரு (திருநீர்) வாங்கிய சாமியாடியைப் போல, சிலிர்த்த உடலும்,விரித்த மார்புமாய் வீசிய கைகளுடன் முன்னே நடந்தான் gangster.
“உன் வயசுக்கு ஐஃபோன் அவசியமா லே?, ஃபோனை இங்கயே வைச்சிட்டுப் போற!, நான் inspect பண்ணிட்டு நாளைக்கு உங்கம்மா கிட்டத் திருப்பித் தரேன்”
-avocado shake-ம், makhana மற்றும் nuts சேர்த்த healthy ஆன மிக்சரையும் சாப்பிடக் கொடுத்து டீ டேபிளின் மீதிருந்த gangster-ரின் ஐஃபோனைக் (தாத்தாவிடமிருந்து மீட்டது) கைப்பற்றியபடி கூறினாள் ஜெபா.
ஷேக்கை சர்ர்ர்ர்ரென உறிஞ்சி விட்டுக் கை நிறைய மிக்சரை அள்ளி வாயில் அரைத்துக் கொண்டிருந்த gangster எரிச்சலுடன் அலெக்ஸை நோக்கி,
“அப்டின்னா, அவுரு ஃபோனையும் confiscate பண்ணுங்கக்கா! ஒரிஜினல் வீடியோவோட copy அவுருக்கிட்டயும் இருக்கு” – என்று போட்டுக் கொடுக்க,
உக்கிரமாக இருவரையும் முறைத்த ஜெபா, “ப்ளான் பண்ணித் தான் பண்றீங்களா லே கோட்டிப்பயலுவளா?” – என்று ஆத்திரப்படவும்,
“அது சும்மா, பிற்காலத்துல பிள்ளை,குட்டியெல்லாம் வந்தப்புறம், ஒரு ஸ்வீவீவீட் மெமரியா காட்டலாமேன்னு வைச்சிருக்கேன் ஜெபா!, ஏற்கனவே இவன் போஸ்ட் பண்ண வீடியோவை டெலீட் பண்ண சொல்லிட்டேன்! நீ வேணா, செக் பண்ணிப் பாரு” – என்று அலெக்ஸ் சமாதானப்படுத்த முயல,
“ம்க்கும், என் வீடியோவோட ஏகப்பட்ட எடிடட் வெர்ஷன்ஸ் இன்ஸ்டாக்ராம் முழுக்க உலா வந்திட்டிருக்கு! தலை போனப்புறம் தொப்பி தேடி என்னாண்ணே பிரயோஜனம்?” – மிக்சரை மென்றபடி சாவகாசமாய்க் கூறியவனைக் கேட்டு அவளது கோபத்தின் டிகிரி உயரத் துவங்குவதை உணர்ந்து, தப்பிக்க எண்ணி,
“தெருவை வேடிக்கை பார்த்துக்கிட்டே தீனி தின்னா, செம vibe-ஆ இருக்கும்! வா வா மாடிக்குப் போவோம்” – என்று gangster-ரை இழுத்துக் கொண்டு அலெக்ஸ் மாடியேற,
“உன் வீடா லே இது?, இஷ்டத்துக்கு உலா போயிட்டிருக்க?, மிச்சரைத் தின்னு முடிச்சுட்டேனா, மரியாதையா இடத்தைக் காலி பண்ணு!” – எனக் கீழேயிருந்துக் கத்திய ஜெபாவைக் கண்டுகொள்ளவில்லை இருவரும்.
அதுவரையிருந்த வெப்பநிலை மாறி, திடீரென மேகம் கருத்து, வானம் இருண்டு, காற்றின் வேகம் அதிகரித்திருக்க…
நீண்டவெளியாய்ப் பரந்திருந்த மாடியும், அதையொட்டியிருந்த அறையும், அறை முன்பு தொடங்கி அகலமாகப் பாதி மாடியை மறைத்திருந்த roofing sheet-டும், நடு,நடுவே கம்பங்களும்,அதில் இணைக்கப்பட்டிருந்த hanging pot-களில் செடிகளும், பலவண்ணப் பறவைகளோடு ஆங்காங்கு தொங்கிய கூண்டுகளும், மாடியின் மறுபாதியை சீரான இடைவெளியில் முழுதாக ஆக்கிரமித்திருந்த செடி,கொடிகளும்.. அது கொடுத்தக் குளுமையும் என.. பசுமையே உருவாகக் காட்சி தந்த இடத்தின் தோற்றம் மனதை லேசாக்கி,விழிகளை விரியச் செய்ய, வேடிக்கை பார்த்தபடி மெல்ல ஏறி வந்தவர்களில் அலெக்ஸ்,
ஏதோ ஆங்கிலப் பாடலுக்கு, எதிரிலிருந்த அறையின் கண்ணாடிக் கதவைப் பார்த்தவாறு grass rug-ல் ஸ்டைலிஷாக ஸ்டெப் போட்டுக் கொண்டிருந்த hunter-ஐக் கண்டு, மெச்சியவாறு உதட்டை வளைத்துப் பின்,
“ஹே அலெக்ஸா, ப்ளே முட்டக்கலக்கி” என்று பாட்டை மாற்றியதும், மூச்சு வாங்க இடையில் கை வைத்து முறைத்துப் பார்த்தபடி, வியர்த்து வழிய நின்றவளைக் கவனித்த, gangster-ரின் உள்ளம் துள்ள, ‘வேணும்! இவளுக்கெல்லாம்!’ என்று கறுவியபடி, அலெக்ஸின் அருகே கைக்கட்டித் தோரணையாக போஸ் கொடுத்தவாறுக் கண் முன்னே தொங்கிக் கொண்டிருந்த செடிகளில் பார்வையைப் பதித்தான்.
“முடிக்கு என்னா போட்ற?, முள்தானிமெட்டியா?” அலெக்ஸ் தனது ராகிங்கைத் தொடர,
“வ்வ்வ்வாஆஆட்ட்?” என சுழித்த முகத்துடன் கேட்டுப் பின்,
“Not Your Mother’s Curl Talk Shampoo” என்றாள் மிடுக்குடன்.
“எங்கம்மாவை என்னத்துக்கு லே கருவாச்சின்னு திட்டுற?”
“ப்ச், அது shampoo பேரு”-என்றவள் அருகிலிருந்த மேஜை டிராயரைத் திறந்து உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்த face towel-ஐ எடுத்து முகத்தில் ஒற்றி எடுத்தபடி மரபெஞ்சில் அமர,
‘ஏன்?, சும்மா விட்டாக் காயாதா?, அலட்டல் ஆன்ட்ரியாண்ணே இவ’ – என்று முணுமுணுத்த gangster -ரைக் கண்டுகொள்ளாது,
“எங்க கிடைக்கும் அந்த ஷாம்பூ?– என விடாது அலெக்ஸ் கேட்கையில்,
மேலேறி வந்த ஜெபா, “ஏன் உங்கம்மாவுக்கு டீலர்ஷிப் எடுத்துக் கொடுத்து, சீயக்காய் பிசினஸை upgrade பண்ணப் போறியா?” எனக் கேட்டதும் பம்மி,
“வளர்ற புள்ள! இந்தா மிச்சர் சாப்பிடு” என்று hunter-ரிடம் தட்டை நீட்டினான்.
‘ஹ்ம்ம்’ – என கழுத்தை ஒடித்துத் திரும்பிக் கொண்டவளை ‘பார்றா’ எனக் கடுப்புடன் நோக்கி,
“இங்காரு, இதெல்லாம் இந்த சுள்ளான் கிட்ட வைச்சுக்க” என்று அவன் மிரட்டியதும், “ண்ணேஏஏ” என எகிறியபடி gangster-ரும், அவனது பிடரியில் இடியை இறக்கியவாறு ஜெபாவும், “சின்னப் பொண்ணுக் கிட்ட இப்பிடித் தான் பேசுவியா லே?” என்று திட்ட,
எரிச்சலாகிப் போனவன், “இதுவா சின்னப் பொண்ணு! ஜெகன் மோகினில வர்ற வெள்ளை லெகிங்க்ஸ் பேயாட்டம் இம்ம்பூஊஊஊட்டு நீளக் கூந்தலை வளர்த்து வைச்சுக்கிட்டு.. எந்நேரமும் விரிச்சுப் போட்ட மேனிக்கயே திரியுது! அதுமட்டுமா, இருட்டுனப்புறம் காலனிக்குள்ள, வெளிச்சமில்லாதத் தெருவுல, கொஞ்சங்கூட பயமில்லாமத் தன்னந்தனியா நடந்து போவுது!, ஹார்ன் அடிச்சா, முடியை சிலுப்பிக்கிட்டு, திரும்பி முறைக்கும் பாருஉஉஉ, ஹெட்லைட் வெளிச்சத்துல இது கண்ணுமுழியைப் பார்த்து, 3-நாள் ஜ்வரம் கண்டு போச்சு எனக்கு! தெரியுமா?” – எனத் தொடர்ந்து ‘நீ hunter-ன்னா, நான் Master-லே’ ரீதியில் அவளுடன் அக்கப்போர் புரிந்தான் அலெக்ஸ்.
Alexa இப்போது, ‘உந்தன் கை வீசிடும் பொய் ஜாடை என்னை’ – என சன்னக்குரலில் பிரதீப்பின் குரலில் பாடத் தொடங்கியிருக்க,
‘Tangled- Rapunzel’-ஆக ஏரியாவுக்குள் வலம் வருபவளை, ‘Dangled-ஜெகன்மோகினி’ என அவன் செய்த நக்கலில், உதட்டை மடித்துச் சிரிப்பை அடக்கியபடித் தோள் குலுங்கத் திரும்பி நின்ற gangster-ஐக் கண்டு முகம் கன்ற, ஆத்திரத்தில் சிவந்து விட்ட வதனத்தோடு, வெடுக்கென எழுந்தவளின் அருகே சென்று அவள் தோளை அமர்த்தி, அமைதிப்படுத்திய ஜெபா,
“இதான் டே உன் லிமிட்டு! இன்னொரு தடவை பிள்ளை கூட வம்பு பண்ணுன, வாய் உடைஞ்சு போகும் சொல்லிட்டேன்” என்று மிரட்டியதும், சிலிர்த்து, “எங்க உடைச்சுக் காட்றீஈஈஈ பார்ப்போஓஓம்?” என ஏறிக் கொண்டு வந்தான் அவன்.
பதறி அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளியவாறு, “ஏசப்பாஆஆ” எனப் பல்லைக்கடித்த ஜெபா,
“குடிச்ச shake-ஐக் கொட,கொடன்னு வாந்தி எடுக்க வைச்சுடுவேன்! ஒழுங்கா ஓடிப் போயிரு! ப்ப்போ லே…” – முழு சக்தியைப் பிரயோகித்தபடி முன்னேறி வந்தவனைத் தடுக்கும் பொருட்டு, தன் கையை பலம் கொண்ட மட்டிலும் அவன் நெஞ்சில் அழுத்தி…. காற்றில் பறந்த முந்தானையைக் கண்டுகொள்ளாது, முகத்தில் மோதிய கூந்தலை அசட்டை செய்தவாறு, அடிக்குரலில் கூறியவளது உதட்டின் மீது பூத்திருந்த வியர்வையை அருகில் கண்டவனின், பார்வை மாறி விட, தொய்ந்து அவள் மீது சரியச் சொன்ன உடலின் வேட்கைக்குச் செவி மடித்து, முன்னே தடுமாறியவனை அவள் தள்ளி விட்ட வேளை, பலத்த சத்தத்தோடு உருண்ட இடியுடன், பளிச்,பளிச்சென வானில் மின்னல் வெட்டியது.
ஒரே சமயத்தில் நிமிர்ந்து நால்வரும் கரு வானத்தை நோக்குகையில் Alexa, ‘பூவே காதல் பூக்கும் பூவே’ என இடையில் வர,
ஜெபா, “மழை வர்ற மாதிரி இருக்கு! வீட்டுக்குப் போறியா ஹாசினி?, இல்லாட்டி அம்மாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடு! நைட் சாப்பிட்டுப் போய்க்கலாம்!” – என்று hunter-ரிடம் கூறவும்,
“இல்லக்கா! ஈவ்னிங் எனக்கு chemistry tuition இருக்கு! நான் நாளைக்கு வர்றேன்” என்று விட்டு அவள் கூந்தலைச் சுழற்றிக் கொண்டையிட,
“1…2…3..4…5..” என அவள் சுற்றிய சுற்றை எண்ணிக் கொண்டிருந்த அலெக்ஸ், “pumpkin seeds சாப்பிட்டா முடி வளரும்ன்னு ரீல்ஸ்ல வருதே! உண்மையா ஜெபா?” எனக் கேட்டான்.
“35 வயசுல விழுந்த சொட்டையை இனி என்னத்தைத் தின்னாலும் ரிவர்ஸ் பண்ண முடியாது!, நீயெல்லாம் மொட்டை தான் அடிக்கனும்” என மூக்கறுத்தவளை முறைத்தவன், மீண்டும் hunter-ரிடம்,
“வெஸ்டர்ன்ல தான் இப்ப warrior ஆயிட்டியே!, தைரியமிருந்தா எங்க webmaster-ரோட ஒத்தைக்கு ஒத்தை நின்னு ஜெயிச்சுக் காட்டேன்!” – என்று விடாது வம்புக்கு நின்றான்.
“யாரு webmaster?, சார்-ஆ?” – இடுப்பில் கை வைத்து நக்கலாகக் கேட்டவளைக் கண்டு gangster-க்கு சுறுசுறுவெனக் கோபம் ஏற,
“ஏன்,வீட்ல அவன் தான் ஒட்டடை அடிப்பானா?” – ஜெபா குறுக்கே பூரவும், ஹாஹாஹோஹோஹிஹியென வேண்டுமென்றே பெரிதாய் சிரித்த ஹாசினி, அவளுடன் ஹை-ஃபைவ் அடித்துக் கொள்ள,
பெண்கள் கூட்டாய் சேர்ந்து கொண்டுத் தன்னை அசிங்கப்படுத்துவதில் வெம்பிப் போன gangster, “ண்ணேஏஏ” என அலெக்ஸின் மணிக்கட்டை இறுக்கியதில்,
“விட்றா! உனக்கு எட்டாதுன்னு அதுங்களுக்குத் தெரியல” – என்றவன்,
“ப்ச்! One to One வருவியா? மாட்டியா?” என்றான் hunter-ஐ நோக்கி.
தோரணையாய்க் கைகளைக் கட்டிக் கொண்ட hunter, “இந்த முறை என் டார்கெட், ஆறாவது தெரு அபிநய் தான்! ஏன்னா, Moonwalk-ல அவன் மைக்கேல் ஜாக்சனுக்கே tough கொடுக்குறானாம்! Airwalk-ல தரையைத் தொடாம-காத்துல மிதக்குறானாம்! அவனை ஜெயிக்குறது தான் இப்ப என் லட்சியம்” – எனத் தன்னிடம் தோல்வியுற்ற ‘gangster’, ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்பதைப் போல் அலட்சியமாகப் பேசியவளைக் கண்டு இரத்தம் கொதிக்கத் தகித்துப் போன gangster,
“Beats & Bites’- youtube சானலோட ‘Step-up Tamizha’ டான்ஸ் ப்ரோக்ராம்க்கு அடுத்த வாரம் நான் ‘audition’ பண்ணப் போறேன்-ண்ணே!, ஜெயிக்குறவங்களுக்கு ‘1லட்ச ரூபா’ பரிசு கொடுக்குறாங்களாம்! என் லட்சியத்தோட level எப்பவோ upgrade ஆயிடுச்சுண்ணே! இன்னமும் 100 ரூபா கப்-பைக் கொடுத்துக் கையைக் குலுக்கி அனுப்புற வெத்து ஃபங்க்ஷன்ல ஜெயிக்குறதையெல்லாம் பெருமையா பீத்திக்குறதுக்கு நான் என்ன பேபியா! நம்ம ரேஞ்சே வேற-ண்ணே!” என்று நக்கல் சிரிப்புடன் காலரைப் பின்னே தள்ளியவன் தொடர்ந்து, “போன முறை ஆடலும்,பாடலும் sack race-ல win பண்ணுன சாத்மிகா பாப்பா கூட வளர்ந்துருச்சுண்ணே! நம்ம தான் இன்ன்ன்ன்னும்ம்ம்” – என உதட்டை வளைத்தவனின் மட்டம் தட்டும் தொனி இப்போது hunter-ஐப் பதம் பார்க்க,
அவனை உறுத்து விழித்தவள், “அந்த 100-ரூபா கப்புக்காக மாரியம்மன் கோவில்ல மண்டலபூஜை போட்டதெல்லாம் மறந்து போயிடுச்சு போலக்கா” – என விசத்தைக் கக்க,
“ஆமா, எங்களை மாதிரி இல்லாம, இவுங்க கோயில்ல பண்ண வேண்டிய அங்கப்ரதக்ஷனத்தை மேடையில பண்ணி, ப்ரைஸைத் தட்டிட்டுப் போயிட்டாங்க”
“Reels-சும், Moj-ஜூம் பார்க்குற பன்னாடைக்கு பரதநாட்டியத்தைப் பத்தி என்ன தெரியும்?”
“அரை மண்டி போடுற உனக்கெல்லாம் எதுக்குடி Hip-Hop star ஆகுற ஆசை?”
“லேய்ய்ய், இந்த வயசுலயே பொண்ணு புள்ளைய ‘டி’ போட்டுப் பேசுவியா நீயி?” – அதுவரை இருவரது தர்க்கத்தையும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்த இருவரில் ஜெபா கோபமாகக் குறுக்கிட,
“அவ மட்டும் என்னைப் பன்னாடைன்னு சொல்லலாமா?,” – என்று gangster பாய்ந்ததும்,
“ஹா..சி..னி..” என்று கண்டிப்பாக ஜெபா அழைத்ததை அலட்சியம் செய்து, முசுட்டு முகத்துடன் “நான் வீட்டுக்குப் போறேன்-க்கா” என்று சிலிர்த்துக் கொண்டு நடந்தவளை கோபமும்,கடுப்புமாக நோக்கிய gangster,
“நைட் பார்ப்போம்ண்ணே” என்று கத்தியவாறு அவளை முந்திக் கடந்து தடதடவென படிகளில் இறங்கிச் செல்ல, தடுமாறி handrail-ஐ பற்றிய hunter, “அறிவிருக்கா டா இடியட்?” என்று திட்ட,
“உனக்குத் தான்டி கம்மியா இருக்கு! அதனால தான், என்னை விட ரெ…....ண்டு மார்க் physics-ல குறைச்சு வாங்கியிருக்க” என்று பதிலுக்கு gangster வார,
தூறத் துவங்கி விட்ட வானத்துக்குப் போட்டியாக சலசலத்தபடி வாக்குவாதம் செய்தவாறு இருவரும் வீதியில் நடந்து செல்வதை மாடியிலிருந்து கண்ட அலெக்ஸ், “வுட்றாத டே கணேஷூ! வுட்டே கொடுத்துராத டே!” – என்று கூவியதும்,
மழையில் நனையாது roofing sheet அடியில் நின்றிருந்த ஜெபா, “சின்னப்பசங்களுக்கிடைல மூட்டி விட்றியே!, என்னா லே வயசாகுது உனக்கு?” எனக் கத்துவதைக் கேட்டு, முகத்தை நனைத்த மழைத்துளிகளை துடைத்தெறிந்தவாறு அவசரமாக ஓடி வந்து அவளருகே நின்று,
“சண்டைல தான் டி சுவாரசியம் இருக்கு” எனக் கூறி, பின், கட்டியக் கைகளோடு கடுப்புடன் மழையைப் பார்த்து நின்றவளின் தோள் உரசி, “இப்ப அடிச்சிக்கிட்டாத் தான நாளைக்கு அணைச்சிக்க முடியும்?” – என வழிந்தான்.
“ச்சி! அதுங்க சின்னப்புள்ளைங்க லே”
“ஆனா, நமக்கு இது applicable தான?”
அவனது பேச்சின் போக்கு புரிந்து பக்கவாட்டில் நின்றவனை தலை திருப்பி, மூக்கு விடைக்க முறைத்தவள், கன்னத்தை உரசியக் கூந்தல் கற்றைகளை காதோரம் செருகியவாறு,
“ப்ளான் பண்ணி வீடியோவைப் பரப்பி விட்டுட்டு பேச்சா லே பேசுற நீயி?” – என்று சீற,
“அது ஒரு அழகான accident மக்கா!,” என சமாளிக்க முயன்றவன் பின், “clip-ல நான் பேசப் பேச, கிளுக்கி,கிளுக்கி சிரிச்சுட்டு, இப்ப முறைச்சா என்னாடி அர்த்தம்?, ஃபோன்ல மட்டும் தான் ஃபீலிங்க்ஸைக் காட்டுவியோ?, இன்ன வரை உன் மாமன்-கிட்ட நிலையா ஒரு பதிலைச் சொன்னியாடி?, நாய் மாதிரி என்னை சுத்தல்ல விட்றது போதாதுன்னு, இப்ப கர்த்தர் விட்ட வழியையும் எதிர்த்துப் போர்க்கொடி தூக்குறியா?, என்னைப் பார்த்தா எப்பிடிடி தெரியுது உனக்கு?” – எனப் பதிலுக்கு எகிற,
“உனக்கு வாயடக்கம் வர்ற வரைக்கும் உன் marital status-N/A தான் லே!, அப்பிடியே காத்தோட, காத்தா வீட்டுக்குப் பறந்து போ” என்றவள் விருட்டென நகரப் பார்க்க,
“ஜெபா,ஜெபா,ஜெபா…. நில்றி,நில்றி” எனக் கையைப் பற்றி நிறுத்தியவன், மெல்ல,
“உனக்கும் சேர்த்து, உன் மாமன் கிட்ட நானே பேசட்டுமா மக்கா?” எனக் கேட்டான்.
“தேவையில்லை” – முறுக்கிக் கொண்டவளின் மணிக்கட்டில் அழுத்தம் கொடுத்து,அருகிலிழுத்து,
“என்ன்ன்னடி கேட்குது உன் மனசு?, என்ன்ன தான் வேணுமாம் அதுக்கு?, கட்டிக்கிட்டப்புறம் நீ என் குறுக்குல மிதிச்சாக் கூட வாங்கிக்குறேன் மக்கா!, இப்பிடி இழுத்தடிச்சு இம்சையைக் கொடுக்காதடி ப்ளீஸ்” என்றான்.
“இப்ப மிதிக்க எனக்கு வாய்ப்பில்லைன்னு நினைக்குறியா?”
“உரிமையிருக்குன்னு சொல்ல மாட்டேங்குறியேடி”
ஹ்ம்-என முகத்தைத் திருப்பிக் கொண்டவளின் கன்னம் பற்றித் தன் புறம் காணச் செய்தவன்,
“அருளப்பன் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ல, அவன் மவன், குழி விழுகுற கன்னத்தோட கொள்ளை அழகா சிரிக்குறான் டி” – எனக் கூற,
‘அதுக்கு’ எனப் புருவம் சுருக்கியவளின், நாடியைப் பெரு விரலால் வருடி,
“இங்க முடிச்சு விழ சிரிக்குற என்னோட Mini-Me-யைப் பார்க்க எனக்கும் கொள்ளை ஆசையா இருக்குடி” என்று கெஞ்சல் குரலில் கூற,
“முதல் குழந்தை ஆம்பளைப் புள்ளையா பொறக்கனும்ன்னு உங்கம்மா சொல்லுச்சாக்கும்?” – டாபிக்கின் போக்கை மாற்றி மூக்கை விடைத்தவளின் கன்னத்தை வலிக்கப் பற்றிக் கிள்ளி,
“எங்க நிற்குற என்னை, எங்க டி இழுக்கப் பார்க்குற! வேணும்ன்னே வம்பு வளர்க்குற மாதிரி பேசுவியா?”- எனத் திட்டியவனின் செய்கை கொடுத்த வலியில், முகத்தைச் சுழித்து கண்களை இறுக மூடிய ஜெபா,
“கையை எடுலே கபோதி” எனத்திட்ட,
அணிந்திருந்த ப்ளைன் காட்டன் புடவையின் லாவண்டர் நிறத்திற்கே உரிய மென்மையை, தன் சின்ன முகத்தில் பிரதிபலித்தவாறு, காற்றிலாடிக் கன்னத்தை மறைத்த முன்னுச்சி முடிகளின் நடுவே, சுருக்கியப் புருவங்களையும், அழுந்தக் கடித்தப் பற்களின் விளைவால், இரு கோடாய் நீண்டிருந்த இதழ்களையும் அருகே கண்டவன்,
மழையும்,குளிரும்,காற்றும்,இருளும்,வானமும்,வையமும் புரிந்த வேதியியல் மாற்றத்தில், திணறி, யுகம் மறந்து, தன் வசமிழந்து, முன்னிருந்த யுவதியின் யௌவனத்தில் ஈர்க்கப்பட்டு, பற்றியிருந்த முகத்தைத் தன்னை நோக்கி இழுத்து, சட்டெனக் குனிந்து அவள் இதழ்களிடம் சரணடைய நினைக்க,
அவன் நோக்கம் புரிந்து சடாரென முகம் திருப்பி, அவனது கைகளிலிருந்து விலகி, பின்னிருந்த கம்பத்தில் பிடரியை இடித்து முறைத்துப் பார்த்தவளின் மீது, “ஜெ…பாஆஆ” எனக் கெஞ்சலும், கொஞ்சலுமாய்த் தானும் சாய்ந்தவன், தன் உதடுகளுக்கு வாகாய் இருந்த உச்சியில் அழுந்த ஈரம் பதிக்க, அலர்ந்து, மலர்ந்து, விரிந்த விழிகளை மறைக்க முயற்சித்தபடி, அவன் நெஞ்சில் கைகளால் குத்தி எச்சரிக்கை செய்தாள் அவள்.
மார்பில் பதிந்த அவள் கரத்தைப் பற்றியிழுத்துத் தன் கழுத்தோடு கோர்த்துக் கொண்டவன், மயங்கிக் கிறங்கிய விழிகளுடன் மையலாய் அவள் முகம் பார்த்து, நெற்றி நோக்கிக் குனிய, பின்னோக்கி தலையைச் சாய்த்துப் புறங்கையால் அவன் இதழ்களில் லேசாய்த் தட்டி கண்களால் அதட்டினாள்.
விடாமுயற்சியாக அவளது நாசியோடு உறவாட முயன்றவனின் நுனி மூக்கை சுண்டி விட்டவளை மீறி, கன்னத்தில் அவன் இதழ் பதிக்கச் செல்ல, அவளது அனுமதி மறுப்பில் அது காதோரக் கூந்தலில் சென்று விழவும்,
கடுப்புடன் அவள் கைகளைக் கம்பத்தின் பின்னே மடக்கி, முகம் முழுக்க இதழ் பதிக்க முயன்றவனின் முத்தங்களனைத்தையும், இதழ் விரிய, தோள் குலுங்கப் பொங்கிப் பெருகிய சிரிப்புடன் மையலும்,சிணுங்கலுமாய் அவள் முறியடிக்க, அழுந்த அவளது இடை பற்றித் தூக்கித் தன் முகத்தோடு முகம் உரச மழையின் கீழ் நிறுத்தியவன்,
இருவரையும் நனைத்த சாரலின் நடுவே, தன் முகத்தில் பரவிய அவளது மூச்சுக்காற்றின் வெம்மையில் குளிர்காய்ந்தபடி, “ஒத்துழைக்கவே மாட்டியா?” என்று கரகரத்தக் குரலில் முணுமுணுக்க,
அவன் தோளைச் சுற்றிப் படர்ந்திருந்த கைகளை இறுக்கி, உடல் குலுங்க, உதடு மடித்துக் குதூகலமாய்ச் சிரித்தவாறு, ஆசையும்,ஆர்வமும் போட்டி போட, நிரம்பி வழியும் உணர்வுகளோடுத் தவித்து,தகித்து நிற்பவனை, சுற்றலில் விட முடிந்த கர்வத்தில், கனிவும்,நெகிழ்வுமாய் அவன் முகம் பார்த்து மெல்ல மறுப்பாய்த் தலையசைத்தவளின் விழிகள் செய்யும் சேட்டையில் எதைக் கண்டானோ!
ஆழ மூச்சிழுத்து, அவள் நெற்றியில், தன் நாசியை அழுத்தி, கன்னத்தோடு அழுத்தமாய் தாடியை உரசி, அவள் கழுத்தோடு முகத்தை முழுதாய்ப் புதைத்து, மோகமும்,தாபமுமாய்ப் பற்கள் பதிய முத்தமிட்டு, அவளைத் தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு, “சரி! பொழச்சு போ” என்றான் அடிக்குரலில்.
சொட்டு,சொட்டாய்க் கோர்த்து வழிந்த நீர்த்துளிகளோடு மெல்லிய தூறலாய்ப் பொழிந்து கொண்டிருந்த மழை நடுவே, முத்துத்துளி தாங்கி, புத்துயிர் பெற்று, பளிச்சிட்டுப் புன்னகைத்த செடிகளினிடையே, இரு கை நீட்டி, வளைந்து,புகுந்து பரவிச் சென்ற குளிர்க்காற்று, தொங்கிக் கொண்டிருந்த பூச்சட்டிகளோடு ஊஞ்சலாடி, கிறீச்சிட்டப் பறவைகளோடு மோனராகம் பாடி, உலகம் மறந்து, உன்மத்தம் கொண்டு, ஒருவரையொருவரில் கரைந்து,நிறைந்து வழிந்த இருவரையும் தொந்தரவு செய்யாது.. சுற்றிச் சுழன்று… கவி வடிக்க முயன்ற வேளை..
Alexa, அவள் மனதைப் பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கும் வகையில்,
‘பார்வையின் ஜாடை புரியாமல்… நீ பாட்டுப் பாடி ஆவதென்ன?!! செவ்வானம்…. சின்னப் பெண் சூடும்… குங்குமம் ஆகாதோ!!!!’ – என சொக்கிக் கொண்டிருந்தது.
இடையினத்தின் மெல்லினம், அவனை வல்லினமாய் மாறச் சொல்லித் தூண்டிய வேளை, மேஜையிலிருந்த அலைபேசி ஒலிக்க, சட்டென சுயம் பெற்று, இருக்கும் நிலை உணர்ந்து, அவசரமாய்க் குதித்திறங்கி விலகி ஓடிச் செல்பளைக் கண்டு, பல்லைக்கடித்துப் பிடரியைக் கோதி, மனதையும்,உடலையும் ஒரு நிலைப்படுத்தியவன், தானும் அவளருகே வந்து,
மேஜை டிராயரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டவல்களில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு முனையை அவளிடம் கொடுத்து, மறுமுனையில், தன் தலையைத் துடைத்தபடி அவளை முறைத்துப் பார்க்க, அவனது பார்வையைக் கண்டு கொள்ளாது,
“ஐயோ! ஹாசினி அப்பா” என்று முணுமுணுத்தவாறு, அழைப்பை ஏற்காமல், கலக்கத்துடன் நகம் கடித்தாள் ஜெபா.
“hunter அப்பா தான?, எடுத்துப் பேசு! ஏன் முழிக்குற?” – என்றவனுக்குப் பதில் சொல்லாமல் call, cut ஆகும் வரைக் காத்திருந்தவள், அவசரமாய் அவருக்கு அனுப்பிய செய்தியை எடுத்துப் பார்த்தாள்.
பதிலனுப்ப முயலாமல் அவர் நேரடியாக அழைத்து விட்டது புரிந்தது! என்ன செய்வதென யோசனையுடன் நின்றவளின் அலைபேசியை எட்டிப் பார்த்து, அதிலிருந்த செய்தியைப் படித்து,
“ஐயையோ! ஹாசினி அம்மாஆஆ சாஆஆகப் போகுதா?” – எனத் தொண்டையைத் திறந்தவனின் வாயில் அடித்து,
“கூறுகெட்டவனே! அபசகுனமா பேசாதே லே!” எனத் திட்டி “இது அவ்ளோ critical இல்ல! Highly treatable! சர்ஜரில tumor ரிமூவ் பண்ணி,அடுத்த 3,4 மாசத்துக்கு chemotherapy எடுத்துக்கிட்டா கம்ப்ளீட்டா குணமாகிடும்ன்னு டாக்டர் என் கிட்ட சொன்னாங்க!” என்று கூற,
“அப்புறம் ஏன் டி உங்க வைஃப் சாகப் போறாங்க-ன்ற ரேஞ்சுக்கு அந்தாளுக்கு மொட்டைக்கடுதாசி அனுப்பி வைச்சிருக்க?” என்றவனிடம்,
ஹாசினியின் வீட்டுக் கதையைக் கூறி,
“இப்பிடி ஏதாவது பண்ணி பயமுறுத்தி விட்டாத் தான் அந்தாளு, அவங்கம்மா முந்தானையை விட்டு வெளியே வருவாரு! வைஃப் மேல அவரு வைச்சிருக்கிற அக்கறையை எக்ஸ்பிரஸ் பண்ண இது ஒரு சந்தர்ப்பமா அமையட்டும்! பார்ப்போம்! அவரு என்ன பண்றாரு…ன்னு” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த வேளை, மறுபடி தங்கப்பாண்டியனிடமிருந்து call வர, ஜெபா தடுக்கும் முன், எட்டி அழைப்பை ஏற்று விட்ட அலெக்ஸ்,
“பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா….” எனப் பாடி, உற்சாகக்குரலில், “என்ன Mr.பாண்டியன், பொண்டாட்டிக்கு ஊஊஊஊ, ஊஊஊன்னு சங்கூத ரெடி ஆயிட்டீங்களா?” – என்று நக்கலும்,நையாண்டியுமாய்ப் பேச்சைத் தொடங்க,
பதறிப் போன ஜெபா, “அட…. வெளங்காதவனே! என்னா லே பேசுற?” – எனக் கையை உதறிக் கொண்டு சத்தம் வராது துள்ளித் துடிக்க, அவளைக் கண்டு கொள்ளாது, “யூ சீ Mr.பாண்டியன், மார்பகப் புற்று நோய் என்பது…” – என்று க்ளாஸ் எடுத்தவாறு, தன் போக்கில் விலகி நடந்தான்.
உங்கள் கருத்துகளைப் பகிர...
