அத்தியாயம் - 4

Back to கார்காலம்…

1.மேகமூட்டம்:

“வா….வாட்ட்ட்ட்???”

-பெருசுகள் உதிர்த்த பேரீச்சம் பழ வார்த்தைகளைக் கேட்ட அண்ணன்காரனின் வாய், நொடிப்பொழுதில் வடபழனியிலிருந்து வண்டலூர் வரை சென்று வர.. சம்மந்தப்பட்ட இருவரோ, ஒருவரையொருவரின் முகத்தைப் பார்வையால் ஆராய்ந்தபடி அழுத்தமாய் அமர்ந்திருந்தனர்.

“என்னப்பா இது? ஹைவேஸ்ல காரை நிறுத்தி கொய்யாப்பழம் வாங்குற மாதிரி, வீட்டுக்கு சாப்பிட வந்தவங்கக் கிட்ட சம்மந்தம் பேசுறீங்க?” – அண்ணன்.

“அதனால என்னப்பா?, பனை மரத்துல ஏறுறவன் கள்ளு குடிக்க ஆசைப்பட்றதில்லையா?, அது போல பந்திக்கு வந்தவன் பரிசம் போட நினைக்குறதுல என்ன தப்பிருக்கு?” – அசோக்கின் தந்தை.

‘இந்தாளு வேற எக்குத்தப்பான நேரத்துல எதுகை,மோனையைப் போட்றாரு!’ – என்றெண்ணிக் கொண்டவன், மிஸ்டர்.மணிகண்டனை மடச்சாம்பிராணி லிஸ்ட்டில் சேர்த்து விட்டுத் தன் தந்தையிடம்..

“ப்பா.. இதெல்லாம் ஒத்து வராதுப்பா” என்றான் ஒரே போடாக.

“தம்பீஈஈஈ…” – எனக் கண்ணை விரித்துக் கருமணியால் மிரட்டிய அன்னையைக் கண்டு கொள்ளாமல் பதில் வேண்டித் தந்தையின் முகம் பார்த்தான் அண்ணன்.

“பிரியாணில கிராம்பைக் கடிச்சுட்டான் போல! அதான் க்ராக்கு மாதிரி பேசுறான் ராஸ்கல்! இந்த க்ராஸ்-டாக்கைக் கட் பண்ணிட்டு நாம மேல பேசலாம்டா மணிகண்டா”

ஃபாதர் பங்கமாய் வாரியதில் முகம் சுணங்கி விட, எரிச்சலுடன் நிமிர்ந்து, எதிரேயிருந்த அசோக்கை முறைத்தான் அண்ணன்.

‘இந்தக் கௌண்ட்டருக்கு இவன் இந்நேரம், காலை உதைச்சி சிரிச்சிருக்கனுமே! என்ன அமைதியா இருக்கான்’ – என சிந்தித்தவன், அவன் பார்வை பதிந்திருந்த இடத்தைக் கவனித்தான்.

சுருக்கிய புருவங்களும்,முசுட்டு மூஞ்சியுமாய் அவனை முறைத்தபடி அமர்ந்திருந்தத் தங்கையைக் கண்டு மனம் கொஞ்சம் சாந்தமாக,

‘என் தங்கச்சி, எலி மருந்து குடிச்சு எமலோகம் போனாலும் போவாளே தவிர, இந்த எடுபட்ட பயலை நிச்சயம் கட்டிக்க மாட்டா!’ என நினைத்துக் கொண்டு.. மீண்டும் தந்தையிடம்..

“இந்த ப்ரபோசலை ரீ-கன்சிடர் பண்ணியாக வேண்டிய கட்டாயத்துல இருக்கீங்கப்பா நீங்க” என்றான்.

புருவத்தைத் தூக்கி மகனை முறைத்தவர்..

“அபசகுனமா பேசுறதை நிறுத்திட்டு, அந்த ஆப்பிள் தட்டை எடுத்து மாப்பிள்ளைக் கிட்ட கொடு போ” – என்று விரட்ட..

“தம்பிக்கு இந்த ஏற்பாட்டுல இஷ்டமில்ல போலயே” – என்று அசோக்கின் தாய் மெல்ல வாய் திறந்ததும்..

“ஏன் தம்பி, என் மகன் சினிமாக்காரன்றதால வேணாம்ன்னு நினைக்கிறீங்களோ?” எனக் கேட்டார் மணிகண்டன்.

“தினம் சிவல்புரி சிங்காரத்தோட ராசி பலன் கேட்குறவனுக்கெல்லாம் சினிமாவைப் பத்தி என்ன மணிகண்டா தெரியும்?, இந்த சின்னப்பய பேசுறதையெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத”

“ஃபா…தர்ர்ர்ர்… இன்னிக்கு கெத்தா மூத்தமகன் மூக்கை உடைக்குற நீங்க, நாளைக்கு முக்காடு போட்டு உட்கார வேண்டிய சூழ்நிலை வரலாம். நல்லா யோசிச்சு முடிவெடுங்க”

“சம்சாரம், இந்த சவுண்டு பார்ட்டிக்கு ஒரு சர்பத் போட்டுக் கொடு! பயபுள்ள ரொம்ப சூடாயிருக்கு” – எனத் தன் மனைவியிடம் கூறியவரைக் கண்டு மண்டை காய்ந்து விட..

“அப்டின்னா நீங்க என் பேச்சைக் கேட்க மாட்டீங்க?” எனக் கோபமாய்க் கேட்டான் அண்ணன்.

“கல்யாணம் உனக்கில்லை. அதனால உன் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியமில்ல”

“அப்டின்னா அவசியமான ஆளு கிட்டக் கேளுங்க.”

மகன் தூண்டி விட்டதும், மகளிடம் திரும்பிய ராஜாங்கம்,

“கீர்த்தி, நீ என்னம்மா சொல்ற?” எனக் கேட்டார்.

“இப்பிடி எல்லார் முன்னாடியும் கேட்டா, அந்தப் பொண்ணு எப்படி பதில் சொல்லும்?” – இடை புகுந்த அசோக்கின் தாயை ஓரக்கண்ணில் முறைத்த அண்ணன்,

“என் தங்கச்சி கூத்துப்பட்டறைல கூனி வேஷம் போட்டவ!, அவளுக்குக் கூச்ச,நாச்சமெல்லாம் கொஞ்சம் கூடக் கிடையாது! கீர்த்தி, பிடிக்கலன்னா,பிடிக்கலன்னு பட்டுன்னு சொல்லிடு” எனக் கூற.. அவன் தலையில் தட்டிய ராஜாங்கம்,

“அண்ணன்னா கொஞ்சமாவது அடக்க,ஒடுக்கம் இருக்கனும்! சும்மா சும்மா அலறிக்கிட்டு..” என்று அதட்டிப் பின் மகளிடம்…

“நீ மாப்ள கிட்டப் பேசி பார்த்துட்டு உன் முடிவைச் சொன்னாக் கூட சரி தான்ம்மா! என்ன சொல்ற?” எனக் கேட்டார்.

அவள் நிமிர்ந்து அசோக்கைப் பார்க்க, முதுகுப்புற சட்டையை இழுத்து விட்டபடி எழுந்து நின்றவன்.. “போகலாமா?” எனக் கேட்டான்.

“எங்க??” என்றபடித் தானும் எழுந்த அண்ணனை அரை-டவுசர் போட்ட அய்யாச்சாமியாய் நினைத்து, ஒதுக்கித் தள்ளி விட்டு.. கீர்த்தியை நோக்கினான் அசோக்.

அவள் கையைப் பற்றி எழுப்பிய ராஜாங்கம், அசோக்கின் புறமாய் அவளை நகர்த்தி விட..

தன் தோளருகே தொங்கிப் போன முகத்துடன் நின்றவளை நிமிடத்துக்கும் அதிகமாக நோட்டம் விட்டு முன்னே கை காட்டி நடந்தான் அசோக்.

தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அவன் அமர்ந்து விட.. அவள் சற்றுத் தள்ளி, வெற்றிலைக் கொடியின் கீழிருந்த மர பெஞ்சில்… இரு புறமும் கை ஊன்றி, காலாட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

அவள் செய்கையைக் கண்டு புருவம் தூக்கி, உதட்டை வளைத்தவன்..

“ரெஸ்ட் கெட்-அப்-ல கிக்-கு கொடுப்ப-ன்னு பார்த்தா, சுடிதாரை மாட்டிக்கிட்டு சப்-ன்னு நிற்குற ?” எனக் கேட்டான்.

சம்மந்தமில்லாமல் பேசியவனை அவள் சுருங்கிய முகத்துடன் பார்க்க..

“இல்ல, வீட்ல இருக்கும் போது கையில்லாத சட்டையும், காலில்லாத பாண்ட்டும் போட்டு மல்லூ ஆண்ட்டி மாதிரி மஜாவா இருப்பேன்னு சொன்னியே?, அதான் கேட்டேன்” என்றான்.

“மண்டேலா மண்டையனுக்கெல்லாம் மஜா கேட்குதா!, ஏன் டா, மைக் செட்டுக்கு மேக்-அப் போட்ட மாதிரி இருக்குற உனக்கெல்லாம் எதுக்குடா கஜ,கஜா?”

“அடியேய்…. காலாவதியான கனகா! உன்னையெல்லாம் பார்த்து மஜாவாகுறதே பெரிய விஷயம்டி! நீயெல்லாம் ஏட்டு சுரைக்காய் டி! உன்னை வைச்சு சம்சாரியாகுறதெல்லாம் சாமான்யனுக்கு சங்கடமான விஷயம். புரிஞ்சுக்க”

“அடேங்கப்பா! சங்கராபரணம் பாடிட்டு சபரிமலை ஏற வேண்டிய கேஸூ, சம்சாரியாகுறதைப் பத்தி பேசுது பாரேன்! டேய்.. நாய் கடிச்ச நார்த்தங்கா! இதுக்கு மேல வாயைத் தொறந்த, நாக்குப்பூச்சியை நசுக்குற மாதிரி நசுக்கிடுவேன் சொல்லிட்டேன்”

“ஏன் ஒரு நாளைக்கு எட்டு கௌண்ட்டர் தான் போடுவேன்னு ஏசு கிட்ட வேண்டியிருக்கியா?”

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்”

“ப்ச்! அப்போ நான் கட்டம் போட்ட சட்டை போட்டுக் கலக்கலா வந்ததெல்லாம் வேஸ்ட்-ஆ?”

“வேணும்ன்னா என் வீட்டு நாய் கூட நின்னு நாலு ஃபோட்டோ எடுத்துட்டுக் கிளம்பு”

“அதுக்கெதுக்கு நாய்?, அதான் நீ இருக்கியே”

“டேய்ய்ய்”

“இப்ப என்ன, உங்கப்பன் கிட்டப் போய் இதெல்லாம் வேணாம்ன்னு சொல்லனுமா?”

“என்னமோ எனக்காக சொல்ற மாதிரி அலட்டிக்கிற?”

“ஆமாமா! எனக்கும் சேர்த்துத் தான்! எக்ஸையெல்லாம் எட்ட நின்னு பார்க்குறதோட நிறுத்திக்கனும்! எல்போ-வோட கோர்த்துக்கனும்ன்னு நினைச்சா, பொறிக்குள்ள சிக்குன எலி மாதிரியாய்டும் லைஃப்! “

“நான் உனக்கு எக்ஸா-டா?”

“ஆமா! கிஸ்ஸெல்லாம் அடிச்சிருக்கேன், எனக்கு எக்ஸ்ன்னு சொல்லக் கூட உரிமையில்லையா?”

-நக்கலாய் அவன் கேட்ட கேள்வியில், மூச்சு வாங்க, அசுர வேகத்தில் எழுந்து நின்றவள், “பொறுக்கி” என உச்சரித்துப் பல்லைக் கடித்தபடி அவனை முறைத்து விட்டு, அங்கிருந்து நகரப் பார்க்க..

“இங்க பாரு, ஒரு தடவை பார்த்ததுக்கே, மாப்பிள்ளையா உட்கார வைச்சு சோறு போடனும்ன்னு நினைச்ச உங்கப்பாவை எதிர்த்து, எனக்கு உங்க பொண்ணைப் பிடிக்கலன்னு சொல்ல முடியாது என்னால! உனக்கு வேணும்ன்னா நீ சொல்லிக்க” – எனக் கூறி விட்டு அவள் பதில் பேசும் முன் நடந்து விட்டான் அசோக்.

நெற்றியைத் தேய்த்தபடி எரிச்சலும்,கோபமுமாய் உள்ளே வந்தவளை ஒட்டுமொத்தக் குடும்பமும் ஏறிட.. முகத்தை மாற்றி.. சிரிப்பை ஒட்ட வைத்தவள்.. துப்பட்டாவைத் திருகியபடி சோபாவில் அமர்ந்தாள்.

“கீர்த்தி என்னடா?”

“ப்பா..”

“எதுவாயிருந்தாலும் உன் கிட்டக் கேட்கச் சொல்லி மாப்ள சொன்னாரே”

“ஏன் அவரு வாயை வட்டிக்கு விட்டிருக்கிறாராமா?” – அண்ணன் இடையில்.

தன்னையே ஆர்வமாய் நோக்கிக் கொண்டிருக்கும் மணிகண்டன் தம்பதியினரைக் கண்டு சங்கடம் எழ, அடிக்கண்ணில் அசோக்கை முறைத்தவள்.. பின் உதட்டை ஈரப்படுத்தியபடி..

“அ..அப்புறமா சொல்லட்டுமாப்பா?” என்றாள் அமைதியான குரலில்.

“புள்ளைய சங்கடப்படுத்தாதய்யா ராஜாங்கம்! அப்புறமா கலந்து பேசிச் சொல்லு” – என மணிகண்டன் அவளுக்குத் துணை கொடுக்க.. ஹப்பாடா-வென சாய்ந்து அமர்ந்தத் தங்கையைக் குழப்பமாய் பார்த்து விட்டு அசோக்கை நோக்கினான் அண்ணன்.

இரு விரல்களை வாயில் வைத்துக் கொண்டு எங்கோ பார்த்தபடி, இங்கு நடக்கும் விஷயங்களுக்கும்,தனக்கும் சம்மந்தமில்லையென்பது போல் காலாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவனைக் கண்டு காதில் புகை வர.. மெல்ல நகர்ந்து அவனருகே சென்றான்.

அண்ணன் தன்னை அண்டி வருவதை அடிக்கண்ணில் நோக்கியவன் “த ர ரி ந…” என வாசிக்க..

“டேய் பொறம்போக்கு நாயே! என் தங்கச்சியை என்ன சொல்லி டா மிரட்டுன?, ” என்று எடுத்ததும் பாய்ந்தான் அண்ணன்.

“ஷ்ஷ்ஷ், மரியாதையில்லாம பேசாத மச்சான்! மாமனார் நம்மள வாட்ச் பண்றாரு பாரு!”

“மாமனாரா?”

“ஹ்ம்ம்! மிஸ்டர்.ராஜாங்கம்??”

“டேய்ய்ய்.. சாவுகிராக்கி!”

“ப்ச், நீ என்னைத் திட்டி எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத மச்சான்! நீ.. என் சங்கறுத்தாலும், சடலமா வந்தாவது நான் உன் தங்கச்சியோட சாந்தி முகூர்த்தம் கொண்டாடத் தான் போறேன்!”

“டேய்ய்ய்….. *********”

“அட ச்சை!!! இது என்ன மச்சான்? அகராதிலயே இல்லாத கெட்ட வார்த்தையா இருக்கு??”

“மச்சான்,மச்சான்னு சொல்லாத டா! வெறியாகுது எனக்கு”

“நீ வெறியானாலும் சரி, நரியானாலும் சரி! உன் தங்கச்சி எனக்குத் தான்!”

-முடிவாய்க் கூறியவன், விடைபெற்றுக் கொண்டிருந்தத் தன் பெற்றோருடன் இணைந்து கொண்டான்.

எக்ஸ்ப்ரஷனே இல்லாத ஃபேஸோடு கீர்த்தியும், அகலமாய் இளித்தபடி அசோக்கும் ஒருவரையொருவர் கண்டு கொள்ளாமல் விலகிச் சென்றதோடு காட்சி நிறைவுற்றது.

2.கூதல்:

ரு மாலை வேளையொன்றில் அந்த ‘சீ வியூ’ ரெஸ்டாரண்டின் பால்கனியில் கடல் காற்று காதைத் தீண்ட… கடுகடுத்த முகத்துடன் நின்றிருந்தாள் கீர்த்தி.

“கீர்த்தி, நீ என்ன முடிவெடுத்தாலும் அண்ணன் உன் கூட வருவேன்! இப்போ வீட்டுக்கு வாம்மா ப்ளீஸ்..”

வழக்கமான நேரத்தைத் தாண்டியும் வீடு திரும்பாதிருப்பவளை எண்ணி ஒட்டு மொத்தக் குடும்பமும் குமுறிக் கொண்டிருக்க.. ஒரு வழியாக அண்ணனின் ஃபோன் கால்-ஐ அட்டெண்ட் செய்த கீர்த்தி, அவனது அக்கறைப் பேச்சைக் கேட்டு அநியாயத்திற்கு காண்டாகி விட்டாள்.

“ம்ம்ம்ம்ம், கூவ ஆத்துல குதிக்கலாம்ன்னு இருக்கேன்! நீயும் கூட வர்றியா?”

“என்னம்மா அண்ணன் கிட்ட இப்பிடிப் பேசுற?”

“என் வாழ்க்கைல நடந்த அத்தனை பிரச்சனைக்கும் நீ ஒருத்தன் தான் டா காரணம்! சனியன் சகடை”

“கீர்……த்தி.. நான் உன் அண்ணன்ம்மா”

“நான் மட்டும் அமெரிக்கக் குடிமகன்னா சொன்னேன்?”

“சரி சரி நீ ரொம்ப உக்கிரமா இருக்க! வாக்குவாதம் வேணாம்! இப்ப எங்கயிருக்கன்னு சொல்லு. நான் வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்”

“ஒன்னும் தேவையில்ல! நம்ம வீட்டு அட்ரஸ் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு! நானே வந்து சேருவேன்! நீ ஃபோனை வை”

“கீர்த்தி, கீர்த்தி இரு,இரு அம்மா பேசனுமாம்” – என்ற அண்ணனின் குரலைத் தொடர்ந்து..

“கீர்த்திதிதி..” – என்ற தாயின் குரலில் தாடையைச் சொரிந்தவள்..

“என்னம்மா? சொல்லு” என்றாள்.

“நீ குப்பை லாரில விழுந்து குருமா ஆனாலும் சரி, காவாக்குள்ள கால விட்டு கையை ஒடிச்சிக்கிட்டாலும் சரி! உனக்கு அந்தப் பையன் தான்ம்மா மாப்பிள்ளை! அதை நல்லா மனசுல பதிய வைச்சுக்க கண்ணு”

“என்னா மதரு, மிரட்டுறியா?, நான் மீ,மீ-ன்னு கூப்பிட்றதால நீ மினிஸ்டர் ஆகிட முடியாது! அதனால, சட்டம் பேசாத என் கிட்ட”

“கீர்த்தி…” – அன்னைக்கு அவள், பதில் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கையில் தந்தை உள்ளே வந்து விட….

“சொல்லுங்கப்பா” என்றாள்.

“மரக்கடை வினோத் ஞாபகம் இருக்குல்ல கண்ணு?”

“அவனுக்கென்ன இப்போ?”

“அவங்கப்பன், நீ அவன் வீட்டுக்கு மருமகளா வரனும்ன்னு மாங்காடு கோவில்ல தினம் மாவிளக்கு ஏத்திட்டிருக்கானாம்மா”

“ப்ச்! அவன் தான், அவங்க வீட்டு டிரைவர் மகளோட டில்லிக்கு ஓடிட்டான்னு சொன்னீங்களேப்பா?”

“ஓடுனவன் காலை வெட்டி ஒரிசால உட்கார வைச்சிருக்காங்களாம்! பையன் இப்ப அவைலபிள் தான்! மரக்கடைக் கிட்டப் பேசி அவனையே மாப்பிள்ளையாக்கிடட்டுமா?”

“எவளோ ஒருத்தி கூட ஓடுனவனைக் கட்டிக்கிட்டா நான் எள்ளு மிட்டாய் தான் விற்க முடியும்”

“என்னம்மா நீ, எல்லாருக்கும் ஒரு பாய்ண்ட் வைச்சிருக்க! பர்ஃபெக்ட் ஆன பையன் தான் வேணும்ன்னு உங்கம்மா நினைச்சிருந்தா, நீயெல்லாம் பிறந்திருக்கவே மாட்ட-ம்மா”

“டா….டி இ இ இ இ”

“சரி, ஜோக்ஸ் அபார்ட், ஏன் அசோக் வேணாம்?, காரணம் சொல்லு.”

“……………….”

“உங்கம்மாவையும்,உங்கண்ணனையும் அந்தாண்ட துரத்திட்டேன்! சொல்லு”

எல்லா விஷயங்களையும் ஃபாஸ்ட் ட்ராக்கில் டீல் செய்யும் தந்தை, இன்று.. தன்னிடம்.. நின்று, நிதானமாய்ப் பேசுவதைக் கண்டு பேச்சு வர மறுக்க.. தன்னை இப்படியொரு சூழ்நிலையில் நிற்க வைத்த அசோக்கின் மீது எழுந்த கெட்டக் கோபத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு.

“எதுவாயிருந்தாலும் உன் கிட்டக் கேட்கச் சொல்லி அந்தத் தம்பி சொல்லுது, அப்டின்னா அந்தத் தம்பிக்கு இஷ்டம் தான் போலம்மா”

“அப்டின்னு அவன் சொன்னானா?”

“சொல்லாட்டிப் புரிஞ்சுக்க முடியாதா?”

“ப்பா.. உங்களுக்கு அவனைப் பத்தித் தெரியாது!”

“அப்போ உனக்கு நிறைய தெரியுமா?”

“………”

“கீர்த்தி…”

“இவன் வேணாம்ப்பா! வேற மாப்பிள்ளை பாருங்க”

“வேற மாப்பிள்ளைன்னா யாரு?, மரக்கடை வினோத்தா?”

“ஏன்?, வினோத்தையும்,அசோக்கையும் தவிர உலகத்துல வேற ஆம்பளைங்களே இல்லையா?”

“கத்திப் பேசாத கண்ணு! பப்ளிக் ப்ளேஸ்ல நிற்குற!”

“………….”

“வீட்டுக்கு வா. எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம்!” – என்றதோடு தந்தை கட் செய்து விட, நெற்றியைத் தேய்த்துக் கொண்டவளுக்குக் கோபம் கொப்பளித்தது.

தன் எண்ணப்போக்கு என்ன?,உள் மனதின் எதிர்பார்ப்பு என்ன?, ஆசை என்ன?, எதுவும் அறியாமல், புரியாமல்.. காற்றில் பறந்தத் துப்பட்டாவை இறுக்கிப் பிடித்தபடிக் கடலை வெறித்தவளுக்கு குழப்பம் குத்துக்காலிட்டு மூளையில் அமர்ந்திருக்கும் உணர்வு!

தான் ஒரு தெளிவான பெண் என்கிற தனது எண்ணம் மொத்தமாய் அழித்து விடுமளவிற்கு, தன் புத்திசாலித்தனமும்,சிந்திக்கும் திறனும் செயல் இழந்து நிற்கும் நிலை கண்டு உள்ளம் பொறுமியது அவளுக்கு.

கோபமும்,தன்னிரக்கமும் தன்னிலை இழக்கச் செய்ய.. விளைவாய்.. கண்ணில் சேர்ந்து விட்ட நீருடன், மூக்கு விடைக்க நின்றவள்..

‘தான் கண்ணீர் விடுவதா?’- என்கிற ஈகோவுடன், மூச்சை இழுத்துக் கண்ணை மூடி, கண்ணீரை உள்ளடக்கி விட்டு நிமிர்கையில்... அவளையே பார்த்த வண்ணம், கையைக் கட்டிக் கொண்டு எதிரே நின்று கொண்டிருந்தான் அசோக்.

சுருங்கிய நெற்றியும்,அழுந்த மூடிய இதழ்களுமாய் தீவிர பாவத்துடன் நின்றவனை, அந்நொடி அங்கே எதிர்பாராது ஒரு நொடி அரண்டு விழித்தவள், மறுநொடி அவமானத்தில் முகம் கன்ற, அவசரமாய்த் தலையைத் திருப்பினாள்.

பல்லைக் கடித்தபடி அவள் முதுகை வெறித்தவன், “இப்ப என்னடி?, இந்தக் கல்யாணம் வேணாம்ன்னு நான் என் வாயால சொல்லனும்?, அதான?” எனக் கேட்டான்.

அவனது நக்கலில் சீண்டப்பட்டவள், திரும்பி அவனை முறைத்து..

“இல்லாட்டியும் நீ என்ன ஓகே சொல்ற ஐடியாலயா இருந்த?” என்றாள்.

“ஆமா! நான் ஓகே சொல்ற ஐடியால தான் இருந்தேன்னு சொன்னா.. என்ன பண்ணுவ?”

கையைக் கட்டிக் கொண்டு கேள்வி கேட்டவனை.. பிளந்த வாயுடன் அசந்து போய் பார்த்தவளைக் கண்டு..

“பின்ன?, எனக்கு 31 வயசாச்சு! எங்கம்மா,அப்பாவுக்கு ஒன்லி சன்! செல்லமா வளர்ந்த பையன்!, அப்படியிருக்கும் போது, முதல் முறையா அவங்க ஒரு பொண்ணைக் கை காட்டி கல்யாணம் பண்ணிக்கிறியாப்பான்னு கேக்குறப்போ.. நான் சரின்னு தான் சொல்லனும்?, அதான நியாயம்? என்னைய என்ன உன்னை மாதிரி நினைச்சியா?, நான்-லாம் பேரண்ட்ஸ் பேச்சுக்கு மரியாதை கொடுக்குற ஆளு!” என்று அவன் கூறியதும்..

பொறுமையற்ற மூச்சுடன் மூக்கைச் சொரிந்தவளைக் கண்டு…

“பட், இந்தப் பாலிசியெல்லாம் அவங்க கைக் காட்டுற பொண்ணுக்கு என்னைப் பிடிச்சிருக்கிற பட்சத்துல மட்டும் தான்!” என்றான்.

அவன் முகம் பார்க்க விரும்பாமல்.. அழுந்த மூடிய இதழ்களோடு, நொறுங்கக் கடித்தப் பற்களோடு.. நெற்றி முடி காற்றிலாட.. நேரே வெறித்தபடி நின்றவளின் பக்கவாட்டுத் தோற்றத்தையே அசையாது நோக்கினான் அவன்.

நீளமாய் வளைந்திருந்த புருவத்தையும், நீண்டிருந்த இமையையும், நீட்சியாய் வீற்றிருந்த பருக்களையும் தாண்டி அவன் பார்வை.. நீலக்கடலின் அழகைப் பிரதிபலித்துக் கொண்டிருந்த ஒற்றை மூக்குத்தியின் மீது பதிந்திருந்தது.

அவன் பார்வை தன் மீது படிந்திருப்பதை உணர்ந்தும் உதாசீனப்படுத்தி விட நினைத்தவள் பின் முடியாமல், ஒற்றைப் புருவம் தூக்கி அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

இடப்புறம் நின்றவளின், இடது தோளில் முகம் பதித்து, இடையை வளைத்து, இதமாய் தன் இதயம் சேர்க்க.. உடல் பரபரத்தாலும் அடக்கி, முகத்தில் எதையும் வெளிக்காட்டாமல் பாக்கெட்டிலிருந்து தனது செல்ஃபோனை எடுத்தான் அசோக்.

சுருங்கிய புருவங்களுடனே அவன் செய்கையை கவனித்துக் கொண்டிருந்தவளிடமிருந்து பார்வையை அகற்றாமல், ஃபோனை ஸ்பீக்கரில் போட்டவன்,

“ஹலோ அம்மா” என்றான்.

“சொல்லு கண்ணு” – கீச்சுக்குரலில் அம்மா.

“எனக்கு அடுத்த ஆறு மாசத்துக்கு அகமதாபாத்ல ஷூட்டிங் இருக்கு. அதனால, கல்யாணம்,விஞ்ஞானம்ன்னு என்னை ‘ட்ராப்’(trap) பண்ண நீ வைச்சிருக்கிற ப்ளான் அத்தனையையும் இம்மீடியட்-ஆ கேன்சல் பண்ணு”

“டேய்.. என்னா டா சொல்ற?”

“முக்கியமா காலைல ஐயர் குறிச்சுக் கொடுத்த கல்யாணத் தேதியை எட்டு துண்டா கிழிச்சு எச்சி துப்பிக் கீழ போட்ரு”

“டேய் பைத்தியக்காரா! தெளிவா பேசுடா?”

“ப்ச்! ஒரு தடவை சொன்னதை திரும்ப,திரும்ப சொல்லி எனக்குப் பழக்கமில்லை! அதனால ஃபோனை வை” – என்றவன் பட்டெனக் கட் செய்து விட்டு, அவள் புறம் திரும்பி...

“சொல்லிட்டேன்! கல்யாணம் வேணாம்ன்னு! இப்போ சந்தோஷமா?” எனக் கேட்டான்.

என்ன ரியாக்ட் செய்ய வேண்டுமென்று புரியாமல்.. விழித்துக் கொண்டு நின்றவளை முறைத்தபடி, பாக்கெட்டுக்குள் ஃபோனை வைத்தவன்..

“பெருசா கண்ணீர் விட்ற?, ம்ம்??, கல்யாணம் தானடி?, என்னவோ என் கூட கட்டிலுக்கு அனுப்பி வைச்ச மாதிரி மூஞ்சியை அப்பிடி வைச்சுக்கிற?” – எனக் கேட்க..

வெடுக்கென நிமிர்ந்து ஆத்திரமாய் அவனை முறைத்துப் பின் அருவெறுப்பை முகத்தில் காட்டியவளைக் கண்டு..

தலையைப் பின்னே சாய்த்து, கழுத்தை நீவியபடி.. “ஓஓஓ….” என்றவன்..

“இமேஜினேஷனே அருவெறுப்பா இருக்கா?, அப்போ கஷ்டம்! கல்யாணத்தைக் கேன்சல் பண்ணது நல்லது தான்” என்று கூற..

ஒரு நொடி புரியாமல் கண்ணை விரித்தவள், மறு நொடி “ச்சை” என்று விட்டுத் திரும்பிக் கொள்ள..

‘சரி தான் போடி’ என்றவனும் விறுவிறுவென நகர்ந்து சென்று விட்டான்.

அவன் சென்றதும் தலையைப் பற்றிக் கொண்ட கீர்த்தி, என்ன சிந்திப்பதெனப் புரியாமல் ஒரு நொடி நின்று பின், ‘ப்ச்’ என்றபடிக் கைப்பையை எடுத்துக் கொண்டு லிஃப்ட் அருகே சென்றாள்.

மூடிக் கொண்டிருந்தக் கதவின் முன் கை நீட்டி அவசரமாய் அவள் உள்ளே நுழைகையில்.. லிஃப்ட்டை நிரப்பியிருந்த நான்கு பெண்களின் பின்னே பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு, தலையைப் பின்னே சாய்த்தபடி அசோக் நின்றிருந்தான்.

அவனைக் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழைந்தவள், கையைக் கட்டியபடி ஒரு ஓரமாக நின்று கொண்டாள்.

லிஃப்ட் நகரத் தொடங்கியதும், அந்த நான்கு பெண்களும் தங்களுக்குள் குசுகுசுவெனப் பேசியபடி, அவனைத் திரும்பித் திரும்பி பார்க்க.. முன்னேயிருந்த கண்ணாடியில் அவர்களது செய்கையைக் கவனித்த கீர்த்தி, ‘இவனையா பார்க்குறாளுங்க?’ என நினைத்து மெல்ல அவன் பிம்பத்தை நோக்கினாள்.

முன்னே நின்றிருந்த மங்கையரைத் தாண்டி அவன் விழிகள், தன் மனங்கவர்ந்தவளின் மீதே பதிந்திருக்க, கழுத்தைத் தடவியபடி வேறு புறம் பார்வையைத் திருப்பியவள், மீண்டும் அவனை நோக்குகையில்.. மெல்லக் கண் சிமிட்டி, உதடு குவித்து ‘உம்மாஆஆ’ என்றான் அவன்.

“அட கருமாந்திரம் பிடிச்ச களவாணிப் பயலே’ –கண்களை அகல விரித்து முனகியவளை முழுச் சிரிப்போடு நோக்கிக் காலாட்டிக் கொண்டே அவன் நிற்க..

லிஃப்ட் விளக்கின் ஒளியில் பளபளத்த அவன் பல் வரிசை அவனது முகத்திற்குக் கொடுக்கும் லட்சணத்தை, இஷ்டமின்றி உள் வாங்கியது அவள் இதயம்.

முறைத்தபடியேனும் தன் முகத்தையே நோக்குபவளைக் கண்டவனுக்கு மேலும் சிரிப்பு பொங்க.. அடுத்த அரைநொடித் தன் இதழ்களை அகண்ட நிலையிலேயே வைத்திருந்தவனைத் திரும்பி நோக்கினாள் முன்னே நின்றிருந்த பெண்ணொருத்தி.

“அசோக் மணிகண்டன்??” – சிரிப்பும்,தயக்கமுமாய் கேள்வி கேட்ட பெண்ணிடம் அவன் ‘ஆம்’ என்று தலையாட்ட..

“நான் உங்களோட பெரிய ஃபேன்! உங்க வெப் சீரீஸ், ஷார்ட் ஃபிலிம்ஸ் எல்லாம் பார்த்திருக்கேன்”

“ஓ! ரொம்ப நன்றிங்க”

“ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?”

“ஷ்யூர்” எனத் தலையாட்டியவனைக் கண்டு கீர்த்தி உதட்டை வளைக்க, அவளிடம் ‘ஹ்ம்’ எனத் தோளைக் குலுக்கி விட்டு.. முன்னே நின்ற பெண்ணருகே குனிந்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்தான் அசோக்.

இத்தனை நேரமாக இருவரையும் நோட் செய்திருந்த வில்லங்கப் பெண்ணொருத்தி, செல்ஃபியில் கீர்த்தியையும் கவர் செய்ய முயற்சிக்க,

‘இந்த விளையாட்டு தான வேணாம்ன்றது’ என்றபடித் தாடையைத் தாழ்த்தி லேசாக முறைத்தவன், அந்தப் பெண்ணின் கைப்பேசியை நகர்த்தி கீர்த்தியின் பிம்பத்தை out of focus-ல் வைக்க, கும்பலாய் சிரித்தவர்கள்..

“பேசாம, நீங்களே உங்க படத்துக்கு ஹீரோவா நடிக்கலாமே! ஹாண்ட்சம்-ஆ இருக்கீங்க” – எனக் கூற..

“இதைக் கொஞ்சம் கிழக்கு திசைக்கு கேட்குற அளவுக்கு சத்தமா சொல்ல முடியுமா?” – என்றவனைக் கேட்டு கீர்த்தி தலையைச் சொரிய, பெண்களோ கொல்லென சிரித்தனர்.

அதற்குள் க்ரௌண்ட் ஃப்ளோர் வந்திருக்க, கும்பலோடு கும்பலாய் இறங்கிச் சென்று விட்டவனை முறைத்தபடி பார்க்கிங்கை நோக்கி நடந்தாள் கீர்த்தி.

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில்.. ஓர் இரவு..

ந்த மேரேஜ் ஹாலின் மேடையில்.. பெண்,மாப்பிள்ளையைச் சுற்றிக் கூடியிருந்த மனிதத் தலைகளிடையே.. மீன்களாக நீந்தி முன்னே வந்த கீர்த்தி அண்ட் கோ.. சிரிப்பும்,ஜொலிப்புமாய் நின்றிருந்தத் தங்களது தோழியிடம்..

“கங்க்ராஜூலேஷன்ஸ் டி கரண்ட் அடுப்பு கல்பனா!” என்றனர்.

அவர்களது அடைமொழியில் ஆத்திரப்பட்ட கல்பனா “பரதேசிங்களா! இப்பிடித் தான் விஷ் பண்ணுவீங்களா?” என்று பாய..

“அதென்னங்க கரண்ட் அடுப்பு கல்பனா?” – எனக் கேட்டான் அவளருகே நின்றிருந்த மாப்பிள்ளைப் பையன்.

“அதுவா??, காலேஜ் ஹாஸ்டல்ல வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி, வீதி,வீதியா அலைஞ்ச எங்களுக்கு சலிக்காம சமைச்சு போட்டு வயித்தை நிரப்புன அன்னலட்சுமி சார் உங்க வைஃப்! எஸ்பெஷலி அந்த எலக்ட்ரிக் ஸ்டவ்ல ஒரு எலும்பு குழம்பு வைப்பா பாருங்க” – என்று கூறியதும் அவளது கேங் மக்கள் அனைவரும் கெக்கே,பெக்கேவென சிரிக்கத் தொடங்க..

“வாயை அடக்கிட்டு இறங்குங்கடி! உங்களையெல்லாம் ரிசப்ஷனுக்குக் கூப்பிட்டதே தப்பு” – எனத் துரத்திய தோழியிடம் சிரித்து விட்டு அனைவரும் கீழிறங்க..

“ஏய் கீர்த்தி, உனக்கு இதெல்லாம் பாடம்! அடுத்து உன் கல்யாணத்துக்கு தயவு செஞ்சு இதுங்களையெல்லாம் கூப்பிட்டிடாத!” – என கல்பனா அறிவுரை கூற.. ஒரு நொடி முகம் மாறினாலும்.. மெல்லப் புன்னகைத்து.. நகர்ந்து விட்டாள் கீர்த்தி.

அதுவரையிருந்த ஜாலி மனநிலை மாறி, இதயம் ஜாகுவாராய் பாயத் தொடங்க சுருங்கிப் போன முகத்துடன் உணவுண்ண அமர்ந்தாள்.

அன்று, வீட்டுக்கு வா பேசலாம் என்ற தந்தை, வாரமொன்று கடந்த பின்னும் வாயைத் திறக்காமலிருப்பதை எண்ணி சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்றே புரியாமல், குழம்பிய குட்டையாய் சுற்றிக் கொண்டிருந்தவள், மன மாற்றத்திற்காகத் தான் கல்பனாவின் ரிஷப்ஷனுக்கு வந்ததே!.

ஆனால் இங்கு வந்தும் கூட மன நமைச்சல், நமைத்துப் போகாமலிருப்பது கடுப்பைக் கொடுக்க, தோழிகளிடம் விடைபெற்று விட்டு, ஏக எரிச்சலில் எட்டு வைத்து, வேக வேகமாகப் பார்க்கிங்கை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

அவளது வேகத்தோடு மேட்ச் செய்ய முயன்று தோற்றுப் போன ஹீல்ஸ் செருப்பு, வாரிலிருந்து வாரி விட, ஒரு நொடி தடுமாறியவள் அருகிலிருந்த மரத்தைப் பற்றித் தன்னைச் சமன் செய்து கொண்டு குனிந்து கீழே நோக்கினாள்.

பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்து “ஷ்ஷ்ஷ்ஷ்! இது வேறா” என சலித்துக் கொண்டவள்.. தோழிகள் எவளையேனும் அழைக்கலாமா என யோசித்துப் பின், “ச்சு” என்று விட்டு, அருகிலிருந்த பெஞ்சில் அமைதியாய் அமர்ந்து விட்டாள்.

இந்த சில நாட்களில் எரிச்சலும்,பொறுமலும் மட்டுமே அவளது அகத்தின் அடையாளமாகியிருக்க, அது கொடுத்த முகச் சுருக்கத்தில், சுணங்கிப் போய் அமர்ந்திருந்தவளின் அருகே நின்றது ஓர் உருவம்.

“கைக்கு செருப்பு மாட்டிக்கிறது தான் புது ஃபேஷனா?”

முன் நெற்றி முடி காற்றிலாட, ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டுக் கிண்டலாய் கேள்வி கேட்ட அசோக்கை அதிர்வாய் நிமிர்ந்து நோக்கினாள் கீர்த்தி.

அதுவரையிருந்த எரிச்சல் குறைந்து, பொறுமல் அடங்கி அகமும்,புறமும் லேசாவதை உணர்ந்து, அவள் அஹிம்சையாய் தன்னைத் தானே எதிர்க்கத் துவங்கிய வேளை… அவள் முகம் போகும் போக்கைக் கண்டு.. புருவத்தை நெறித்த அசோக்..

“என்ன?” என்றான்.

“ம்க்கும்” எனச் செருமித் தொண்டையில் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை அதன் இடத்திற்கு அனுப்பி விட்டு.. அவன் முகத்தை நோக்கி..

“என்ன என்ன?” என்றாள்.

“பேய் பிடிச்சவன் பேதி மாத்திரைய முழுங்குனா மாதிரி மூஞ்சியை ஏன் அப்பிடி வைச்சிருக்க?”

“என் மூஞ்சியே அப்பிடித் தான்”

“அதென்னவோ உண்மை தான்”

“ஆமா! நீ ஏன் எமதர்மராஜா எக்லேர்ஸ் மிட்டாயைக் கடிச்சா மாதிரி மூஞ்சியை இவ்ளோ ப்ரைட்-ஆ வைச்சிருக்க?”

-அடக்கி,அடக்கிப் பார்த்தும் முடியாமல், அவனுக்கான அவளது அகம் தன் அலப்பரையைக் காட்டி விட.. ‘அய்யய்யோ! ரொம்பக் கலாய்ப்பானே!’ என்று உள்ளுக்குள் புலம்பி உதட்டைக் கடித்தவளைக் கண்டு…

“ஆஹா….ன்????” என்றபடித் தாடையைத் தடவி சிரித்தவன்..

“ஹாண்ட்சம்-ஆ இருக்கேன்னு சொல்லாம,சொல்றியா?” எனக் கேட்டான்.

“ஹ்ம்! ஹேண்டே இல்லாத ஹிப்போவெல்லாம் ஹாண்ட்சம்-ஆ இருக்கிறதைப் பத்தி பேசுது”

“ஏய்ய்ய், ப்ரைட்-ஆ இருக்கேன்னு நீ தானடி சொன்ன?”

“லைட் வெளிச்சத்துல இருந்து கொஞ்சம் தள்ளி நில்லுன்றதை மாத்தி சொல்லிட்டேன்”

“சமாளிஃபிகேஷனு???”

“ஆமா! அது ஒன்னு தான் எனக்கிருக்கிற குவாலிஃபிகேஷனு”

“என்ன முணுமுணுக்குற?”

“ஒன்னுமில்ல! ஆமா, நீ எங்க இங்க?”

“மஹாலுக்கு மஞ்சள் அரைக்கவா வருவாங்க?, என் ஃப்ரெண்டு குழந்தைக்கு பர்த் டே பார்ட்டி”

“ஓஹோ”

“நீ ஏன் செருப்பைக் கைல பிடிச்சுக்கிட்டு செலிப்ரிட்டி மாதிரி போஸ் கொடுத்திட்டு இருக்க?”

“செருப்பு பிஞ்சு போச்சு”

“எவனை அடிச்ச?”

“இதுவரைக்கும் எவனையும் அடிக்கல! ஆனா, ஒருத்தன் இருக்கான்! மாட்டுனா, மாவுக்கட்டு போடுற அளவுக்கு அடிக்கனும்” – காண்டோடு அவள்.

“அது நான் இல்ல தான?”

“………”

“நான் தான் உன் ஃபீலிங்க்ஸை மதிச்சு, நல்லவனா கல்யாணத்தை நிறுத்திட்டேனே! இன்னும் எதுக்கு கத்தியை என் பக்கம் வைச்சிருக்க?”

“ஏன் உன் மேல வேற குற்றச்சாட்டே கிடையாதா?”

“வேற என்ன இருக்கு?” – பாக்கெட்டுக்குள் கையை நுழைத்தபடி புருவம் சுருக்கி யோசித்தவன் பின் முகம் மலர…

“புரிஞ்சிடுச்சு” என்றான்.

“என்ன புரிஞ்சுடுச்சு?”

“உன் ஃபோர்ஹெட்ல என் லிப்ஸ் ஃபோக் டான்ஸ் ஆடினதைத் தான சொல்ற?”

-சிரிப்பும்,நக்கலுமாய் அவன் கேட்டதும், அவனது முகம் பாராமல் அவசரமாய் எழுந்து நின்றவள்,

“இந்த மாதிரி பேச்சையெல்லாம் ரசிக்க, நீ பேலஸ்ல வாழ்ற பேச்சியம்மாவைத் தான் பிடிக்கனும்” – என்று முணுமுணுத்தபடியே நடக்கப் பார்க்க..

“ஏய்ய் ஏய்ய் நில்லு நில்லு” என்றவன்,

“ஒத்த செருப்போட எப்பிடி நடப்ப?” எனக் கேட்டான்.

“ஏன், கால்ல தான்”

“இந்த மாதிரி பழைய காமெடியெல்லாம் போட்டேனா, பிஞ்ச செருப்பாலயே பிய்ய,பிய்ய அடிப்பேன்”

“டேய்ய்..”

“சரி,சரி போனா போகுது! ஆபத்துக்கு பாவமில்ல! அப்டியே உருட்டி விட்ட கோ-கோ கோலா பாட்டில் மாதிரி என் ரெண்டு கைலயும் ஏறிக்க! நான் உன்னைத் தூக்கிட்டுப் போய் பார்க்கிங்ல விட்டுட்றேன்”

“ஏன் டா ராக் (Rock) வீட்டு வாசல்ல ராப்பிச்சை கேட்டு நிற்குறவன் மாதிரி இருக்குற! இந்த பாடியை வைச்சுக்கிட்டு நீ என்னைத் தூக்கிடுவியா?”

“கால் கிலோ ஹார்லிக்ஸ் பாக்கெட்டுக்கு ஜடை போட்டு விட்ட மாதிரி இருக்குற நீயெல்லாம் என் பாடி சைஸைப் பத்தி பேசுற பாரேன்”

“ஏய், வாயைக் குறைச்சுட்டு நவுந்து நில்றா! நான் வாத்து நடை, நடந்தாவது வாசலுக்குப் போய்க்குறேன்”

“ப்ச், வேணும்ன்னா ஒன்னு பண்ணு! அந்த பிஞ்ச செருப்பைக் கால்ல மாட்டிக்கோ”

“மாட்டிக்கிட்டு?”

“என் கையைப் பிடிச்சு நட”

“ஏய் போடா”

“நிஜமாத் தான் டி சொல்றேன்!”

“முடியாது போடா”

“ஏய்ய், டெங்கு பேஷண்ட் கையைப் பிடிக்குற டியூட்டி டாக்டரா நினைச்சுக்கடி என்னைய”

“நாயே! என்னைய எதுக்கு டா டெங்கு பேஷண்ட் ஆக்குற?”

“எதுக்கும் நீ கொசு கடிக்காம பார்த்துக்க”

“அய்யோ ஆண்டவா”

“இப்போதைக்கு உனக்கு நான் தான் ஆண்டவன்! அந்த செருப்பைக் கொடு இப்பிடி” என்றவன் அவள் கையிலிருந்ததைப் பறித்து அவள் காலருகே போட்டு விட்டு, அவள் அணிந்ததும், அவள் கையைப் பற்றித் தன் முட்டியருகே வைத்துக் கொண்டு முன்னே நடக்கத் தொடங்கினான்.

“ஹ்ம்ம்! எக்ஸ் கையை எல்போவோட கோர்த்துக்க ஆசைப்படக் கூடாதுன்னு நினைச்ச எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தியா?” – புலம்பலாய் அவன்.

“நீ இப்பிடியே பேசிட்டிருந்தேனா, எல்போவ ரெயின்போ ஆக்கிடுவேன் ஞாபகம் வைச்சுக்க” – சீறலாய் அவள்.

“ஆனா.. சரியான.. முரட்டுப் பீஸூ டி நீ”

“நான் முரட்டுப்பீஸூன்னா, நீ முட்டாப் பீஸூ டா!”

“அதென்னவோ உண்மை தான்” – என்றவன், இடதுகையால் புடவையைத் தூக்கிக் கொண்டு கீழே பார்த்தபடி, தன் தோளோடு தோள் உரச நடந்து வந்தவளைத் திரும்பி நோக்கி...

“ஆமா, நீ இந்த கில்மா மேட்டரை பத்தி என்ன நினைக்குற?”– எனக் கேட்டான்.

“என்னது???”

“க்கும்! Alma mater-ன்னு சொல்ல வந்தேன், டங் ஸ்லிப் ஆயிடுச்சு”

“என்ன உளர்ற?”

“அதை விடு!, உன் அண்ணனைத் தவிர வேற யார் கூடயாவது இப்பிடி நடந்து போயிருக்கியா?”

“இப்பிடி-ன்னா?”

“கையோட கை கோர்த்து, தோளோட தோள் உரச, நெருக்கமா முகம் பார்த்து???”

பலான எக்ஸ்ப்ரஷன்களைப் பல விதமாய்க் கொட்டியவனைக் கண்டுக் கடுப்பாகி விட.. அவன் கையிலிருந்துத் தன் கையை உருவிக் கொண்டவள்,

“இனி நான் பார்த்துக்கிறேன்! நீ கிளம்பு” என்றாள்.

“ப்ச், எதுக்குக் கோபப்பட்ற நீ இப்போ?” – என்றவன் அவள் கையை வலுக்கட்டாயமாகப் பற்றித் தன்னோடு சேர்த்துக் கொள்ள..

“ரொம்ப உரிமையா கையைப் பிடிக்குற?, இன்னொரு செருப்பு நல்லாத் தான் இருக்கு! பார்த்தேல?” எனக் கேட்டாள் அவள்.

“எப்பப் பாரு அடிக்குறதுலயே இருக்காதடி! ஆம்பள கிட்ட ஆசையாப் பேசுறவங்களுக்குத் தான் அடுத்த ஆறு ஜென்மமும் மனுஷப்பிறவி கிடைக்குமாம்”

“இந்த ஒரு ஜென்மம் மனுஷனாப் பிறந்ததுக்கே, உன்னை மாதிரி மந்திரவாதிகளோட-லாம் சகவாசம் வைக்க வேண்டியதா இருக்கு! இன்னும் ஆறா? வேணாம் சாமி”

“நான் மந்திரவாதியா?”

“ஆமா”

“அப்புறம் ஏன் டி நீ மயங்க மாட்டேங்குற?”

“……………………..”

– தன் முகம் பார்த்து அவன் கேள்வி கேட்பதை உணர்ந்தும் நேரே வெறித்தபடிப் பதில் கூறாது நடந்தவளை, அடுத்த ஐந்து நிமிடம் அவன் பார்வையால் தொடர.. உள்ளே அடித்த அனலில் சிக்கி விடாமலிருக்க..

“ரோட்டைப் பார்த்து நட” என்று அவனிடம் முணுமுணுத்தாள் அவள்.

“ஏன் நான் பார்க்குறது உனக்கு டிஸ்டர்ப் ஆகுதா?”

“கையைப் பிடிக்க விட்டதால தான நீ தைரியமா வசனம் பேசுற?”

“இல்லாட்டியும் உன் கிட்ட எனக்குப் பயமா என்ன?”

“இப்ப என்னான்ற?”

“இன்னும் ஒரு இஞ்ச் கிட்ட வா”

“எதுக்கு?”

“இச்சு பண்ணத் தான்”

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்….”

“இனியெல்லாம் சான்ஸ் கிடைச்சா, ஃபோர்ஹெட்டெல்லாம் கிடையாது! ஃபோர்லிப்ஸ் தான்”

“எதுக்கு நீ இப்பிடியே பேசிட்டிருக்க?”

“நீ எதுக்கு ஹிப் தெரியற மாதிரி புடவை கட்டியிருக்க?”

“என்ன சொன்ன?”

“ஒன்னுமில்ல”

“சரி, பார்க்கிங் வந்துடுச்சு, கையை விடு”

“……….”

பிய்ந்த செருப்பில் பார்வையை வைத்தபடி, அவன் கையிலிருந்துத் தன் கையை உருவிக் கொள்ள முயன்றவள் முடியாமல் போக, நிமிர்ந்து அவன் முகம் நோக்கினாள்.

இருட்டுக்குக் கீழ் நின்ற இருவரைச் சுற்றியும் நிசப்தம் மட்டுமே குடியிருக்க, அவள் கை விரல்களோடுத் தன் ஐவிரல்களையும் கோர்த்துக் கொண்டு அவளையே அழுத்தமாய்ப் பார்த்தபடி நின்றவனைக் கண்டு மனம் தடுமாறி விட..

“கை….யை விடு டா” – என்று அடிக்குரலில் முணுமுணுத்தாள் அவள்.

விடுபடப் போராடியபடி அவளும், விடாமல் பிடித்து வைத்தபடி அவனும் ஒருவரையொருவர் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் செய்து கொண்டிருந்த போராட்டம், தூரத்தில் ஒலித்த ஹார்ன் ஒலியில் நிறைவுக்கு வர,

அவன் சட்டெனக் கையை விட்டதில் தள்ளாடி பின்னே விழச் சென்றவள், அவசரமாய் அவன் சட்டையைப் பற்றியிழுத்தாள்.

அவளோடு சேர்ந்து தடுமாறியவனும், ஒரு வழியாக, அவளைப் பிடித்து சமாளித்துக் கொண்டு நிற்க, மெல்ல வளைந்த இதழ்களுடன்.. அத்தனை நெருக்கத்தில் தன் முகம் நோக்கியவனை முறைத்து..

“இப்பிடித் தான் சட்டுன்னு விடுவாங்களா?” என அவள் திட்ட..

“நான் விட்றலாம்ன்னு நினைக்கும் போதெல்லாம், நீ தான் இப்பிடி என்னைக் கெட்டியா பிடிச்சு வைக்குற?” என்றான் அவன்.

“உளறாத”

“சரி, உளறல”

“கையை விட்டுத் தள்ளிப் போ”

“அது முடியாது..”

“டேய்ய்”

“நான் விட்டப்புறமும் கூட நீ ஏன் என்னைப் பிடிச்ச?”

“பைத்தியமா டா நீ?”

“இல்ல, இப்போ தான் தெளிவா இருக்கேன்”

“நீ எப்படி வேணா இருந்துட்டுப் போ! ஆளும், பார்வையும் பாரு” – என்றவள் வெடுக்கென அவனைத் தள்ளி விட்டு, உதறிச் செல்லப் பார்க்க, அனாயசமாய் அவளை அடக்கி, தன் இரு கரம் கொண்டு அவள் முகம் பற்றியவன், இழுத்த மூச்சோடு அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.

அன்று போல் அலறி விடாமல், இறுகக் கண் மூடி, உள் மனதின் உவகையை உளமார உணர்ந்தவள், மெல்லக் கண் திறந்து போது, மெல்லிய சிரிப்புடன் அவள் முகப் போக்கை கவனித்துக் கொண்டிருந்தான் அவன்.

அவன் சிரிப்பில் ரோஷம் பொங்க, கையைத் தூக்கி அவன் வாயை உடைக்கப் பார்த்தவளின் கரங்களை அவசரமாய்ப் பற்றி இறக்கியவன், அவள் முகம் நோக்கிக் குனிந்து..

“அண்ணன் கிட்டயும்,தங்கச்சி கிட்டயும் மாத்தி,மாத்தி அடி வாங்கத் தான் எங்கம்மா என்னைய பெத்து விட்டுச்சா?”

“அடி வாங்கியும் நீ அடங்க மாட்டேங்குறியே டா”

“எதுக்குடி அடங்கனும்?என்னை என்ன 17 வயசு விடலைப்பையன்னு நினைச்சியா?, மீசை வைச்ச ஆம்பள டி! இனியெல்லாம் அடிச்சா, திருப்பி அடிப்பேன், உங்கண்ணன் கிட்ட வயலண்ட்-ஆ, உன் கிட்ட ரொமாண்டிக்-ஆ”

-அழுத்தமாய் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு, சிரிக்காமல் பேசியவனைக் கண்டு பேஸ்தடித்து விட, அவசர,அவசரமாய் அவனிடமிருந்து விலகி நின்றவள், கைகளை நீவியபடி அவனை முறைத்து..

“வசனம் பேசுற ஜோருல, கையை உடைச்சிருப்ப டா பரதேசி” எனக் கூற…

“வலிக்குதா என்ன?, என்னடி லைட்-ஆ பிடிச்சதுக்கே வலிக்குதுன்ற?, உன்னை வைச்சுக்கிட்டு நான் எப்பிடிடி ஊட்டி,கொடைக்கானலை எஞ்சாய் பண்றது?” – எனக் கேட்டான் அவன்.

“என்ன டபுள் மீனிங்-ஆ?, டங்குவாரு அந்துறும் சொல்லிட்டேன்”

“ஏன், வர மாட்டியா?, தப்பு பண்ணிட்டேன் டி! ரெண்டாவது தடவை சான்ஸ் கிடைச்சும் உன் லிப்ஸை லிக்கராக்காம விட்டேன்ல?, அதான் நீ இப்பிடிப் பேசுற” – என்றவன், ஒற்றைக்காலை இழுத்தபடி முன்னே நடக்கத் தொடங்கியவளின் இடையை,ஒரு கையால் பற்றித் தூக்கிக் கொண்டு அவள் வண்டியருகே சென்றான்.

“எ…என்னடா பண்ற?” என்று கத்தியவளைப் பொருட்படுத்தாது அவள் வண்டியருகே அவன் இறக்கி விட, அவன் கையைத் தட்டி விட்டுத் தள்ளி நின்றவள்..

“இனி என்னைத் தொட்டேன்னா, தொலைச்சிடுவேன் சொல்லிட்டேன்” என்று மிரட்ட..

“நான் என்னைத் தொலைச்சுப் பல நாளாச்சு டி”

“வசனம் பேசாத டா! சகிக்க முடியல”

“சகிச்சுக்கிட்டுத் தான் ஆகனும்! உனக்கு வேற ஆப்ஷனே கிடையாது”

“ஏன் ஆப்ஷன் இல்ல?, மரக்கடை வினோத் இருக்கான்! தெரியும்ல?”

“ம்க்கும், அவனை வைச்சு நீ சோபா செட்டு தான் செய்ய முடியும்”

“உன்னை மாதிரி துருப்பிடிச்ச சேவிங் செட்டுக்கு அந்த சோபா செட்டு எவ்வளவோ பெட்டர்”

“ஏய்ய் கடுப்பேத்தாத டி”

“உன் கேடித்தனத்தை என் கிட்டயே காட்டுறியா நீ?, உன்னைக் கதற விட்றேன் பாரு டா”

-சூளுரைத்துக் கொண்டவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சர்ரெனப் பறந்து விட… “ஏய்,ஏய்,ஏய்ய்ய்” என அவளைப் பிடிக்க முயன்றவன் முடியாமல், இடுப்பில் கை வைத்துப் பிடரியைக் கோதியபடி சலித்த முகத்துடன் அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.