செய்வோம் புது காதல் விதி!
அருகிலிருந்தக் கம்பத்தைப் பற்றி எழ முயற்சித்தவன்.. தள்ளாடி விழப் போவதைக் கண்டு.. ஓடிச் சென்று அவன் கையைப் பற்றி நிறுத்தினாள் அவள். அவளிடமிருந்து அலையாய்க் கிளம்பி.. மென்மையாய்.. அவன் நாசியை நிரப்பிய கல்வின் க்ளெய்ன் லாவண்டர் பர்ஃபியூமின் மணத்தை இழுத்து சுவாசித்து நுரையீரலில் நிரப்பியவன்.. பற்றுதலுக்காக.. அவள் தோளைத் தன் வலது கையால் இறுகப் பிடித்து... அவள் காதருகே “யூ ஸ்மெல் சோ குட்” என முணுமுணுக்க.. சட்டெனத் திரும்பி அவனை நோக்கியவள் பற்றியிருந்த அவன் கரத்தைப் பட்டென விலக்க.. தடுமாறி.. அந்தக் கம்பத்திலேயே தலையை இடித்துக் கொண்டுக் கீழே விழுந்தான் அவன். விழுந்த நிலையிலேயே நிமிர்ந்து அவன் அவளைக் காண முயல.. அவள் விறுவிறுவென அவளது காரை நோக்கி நடப்பது தெரிந்தது. ஹீல்ஸ் அணிந்திருந்த அவள் கால்களில் ஒன்றைப் படுத்த வாக்கிலேயே இறுகப் பற்றிக் கொண்டவன்.. “போகாத” என்றான்.
“ஆர் யூ க்ரேசி??, காலை விடு. காலை விடு டா” என்று அவள் துள்ளி விலகப் பார்க்க.. “நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அன்கான்ஸியஸ் ஆயிடுவேன்! அதுக்குள்ள நான் வீட்டுக்குப் போகனும். ப்ளீஸ்” –என்றான்.
“முதல்ல காலை விடு டா முட்டாள்”
“திரும்ப நான் கான்சியஸ் ஆகும் போது, நீ என்னை இப்படி ரோட்ல விட்டுட்டுப் போனது மட்டும் தெரிஞ்சது, நீ எங்க,எப்படியிருந்தாலும்.. தேடி வந்துப் பழி வாங்குவேன்” – மூச்சு வாங்கத் தெளிவின்றி உளறினான் அவன்.
“உன்னால ஸ்டெடியா ஒரு இடத்துல நிற்கக் கூட முடியல. நீ.. நீ என்னைப் பழி வாங்கப் போறியா?, உன்னை அதுவரைக்கும் நான் விட்டு வைப்பேன்னு நினைச்சியா?, அப்டியே கார் ஏத்தி உன்னைக் கொன்னுருக்கனும். உயிரோட விட்டேன் பாரு” - கோப மிகுதியில் குதித்தவளின் காலை அழுத்தமாகப் பற்றியபடி எழுந்து நின்றவன்.. இப்போது அவள் கையைப் பற்றியிருந்தான்.
“என் ஆப்ஷன்ஸ் எல்லாம் க்ளோஸ் ஆகிடுச்சு. இப்போ உன்னால மட்டும் தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்” மறுபடி,மறுபடி சொன்னதையே சொல்பவனைக் கண்டு கடுப்பாகி.. “என்னவோ உனக்கும்,எனக்கும் பல வருஷப் பழக்கம் மாதிரி ரொம்ப உரிமையா ஹெல்ப் பண்ண சொல்ற?, உன்னை மாதிரி ஒரு குடிகாரனை நம்பி.. எப்படி நான் வண்டில ஏத்துவேன்?” என்று சிடுசிடுத்தாள் அவள். அவள் தோளைப் பற்றித் தன் புறம் திருப்பியவன்.. அருகே நெருங்கி அவளை ஆராய்ந்தான்.
“எ..என்ன பண்ற?” – பல்லைக் கடித்தாள் அவள். “விலை உயர்ந்த நகை எதுவும் போட்டிருக்கியான்னு பார்க்கிறேன்!! இல்ல, கார்ல பெட்டி,பெட்டியா பணம் வைச்சிருக்கியா?, ஆனாலும்.. என்னைப் பார்த்தா திருடன் மாதிரியா தெரியுது உனக்கு?”
“பணமும்,நகையும் தான் பெருசா?”
“பின்ன?”
“நான் ஒரு பொண்ணு. பணம்,காசைத் தாண்டி பொக்கிஷமா பாதுகாக்க என் கிட்ட நிறைய விஷயமிருக்கு”
“அப்டியா?, அந்தப் பொக்கிஷத்தைக் கொள்ளையடிக்கிற ஐடியா இப்போதைக்கு எனக்கு இல்ல! கற்பு உனக்கு மட்டும் தானா? எனக்கு இல்லையா? ஏற்கனவே ஒரு தராதரம் கெட்டவ கிட்ட என் கற்பு பறி போயிடுச்சு! இதுல உன் கிட்ட வேற நான் மறுபடி இழக்கனுமா?” - அவன் கூறிய விதத்தைக் கண்டு முட்டிக் கொள்ளாதக் குறையாகப் பல்லைக் கடித்தாள் அவள். லவ் ஃபெயிலியர் கேஸ் போலவே இவன்! கடவுளே!
“ரொம்பப் பயப்படாத! நான் தப்பா நடந்துக்கிற அளவுக்கு.. நீ அவ்ளோ அழகா இருக்குற மாதிரி தெரியல! போதைல பார்க்கும் போதே இவ்ளோ மொக்கையா இருக்க!” – என்றவனைக் கண்டு ஆத்திரம் தலைக்கேற.. அவனது வயிற்றிலேயே ஓங்கி ஒரு குத்து விட்டாள் அவள். வயிற்றைப் பிடித்துக் கொண்டு மண்டியிட்டமர்ந்தவன்.. வலியில் துடித்து “ராட்சசி!” என்று கத்த... கண்டுகொள்ளாமல் தன் கார் கதவைத் திறந்தவள்.. அவன் குப்புற விழுந்தபடி வலது கையால் தரையை ஓங்கிக் குத்திக் கொண்டிருப்பதைக் கண்டு ஒரு நொடி நின்று.. பின் கண்களை அழுந்த மூடித் திறந்து அவனருகே சென்றாள். அவன் அணிந்திருந்த ஹூடியைக் கொத்தாகப் பற்றித் தன் பலம் கொண்ட மட்டும் தூக்கி நிறுத்தியவள்.. நேராகக் காருக்கு இழுத்துச் சென்று உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தினாள்.
தொடர்ந்து வாசிக்க---- கீழே உள்ள லிங்க்குகளைக் க்ளிக்கவும்.....
