3.‘J’ for ஜெபமலர், ‘A’ for யாரு??

ந்த sequin ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸோட ஸ்பெஷலே, deep neck sweet heart design தான்-ங்க! ஷோல்டர்ல இருக்கிற V-shape strap, உங்க collar bone-ஐ அழகா தூக்கிக் காட்டும்! Back-ல வைச்சிருக்கிற bow details, Saree-ஐ சிங்கிள் ப்ளீட் விட்டு நீங்க நடந்து போகும் போது, ஒட்டு மொத்த லுக்கையும் enhance பண்ணும்! உடுத்தும் போது நீங்க uncomfortable-ஆ feel பண்ணக் கூடாதுன்றதுக்காகவே ப்ளவுஸ் முழுக்க soft silk லைனிங் கொடுத்திருக்கோம். அதனால ஸ்கின்னை இர்ரிடேட் பண்ணுமோன்ற பயமே வேண்டாம்! Simple sequin borders இருக்கிற Silver or gold chiffon saree-யோட இந்த ப்ளவுஸ் wear பண்ணீங்க-ன்னா, party or evening functions-க்கு perfect fit-ஆ இருக்கும்!”

- silver sequins பதிக்கப்பட்டிருந்த ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸூக்குப் பொருத்தமாய்க் கருப்பு நிற plain saree அணிந்திருந்த ஜெபமலர், தன்னருகேயிருந்த Mannequin-ஐக் காட்டி விடாது வளவளத்துக் கொண்டிருந்த Instagram video-வை, அலெக்ஸின் கணினித் திரையில் ஆஆஆ-வெனப் பார்த்தவாறு பேச்சற்று நின்றிருந்தனர் androgen army புறம்போக்குகள்.

spaghetti strap, Halter Neck, lacy bralette, Tube top, Boat neck, Open Back, Latkan details, Bow details, crop top, belted blouse – என கண்ணைக் கவரும் வகை,வகையான ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ்களை, விதவிதமான டிசைன்களில், ரகம்,ரகமானப் புடவைகளுடன் அணிந்தவாறு அவள் கடகடவெனப் பேசும் பற்பல ‘Million Views’ வீடியோக்கள் ‘AJDesigns’ என்கிற Instagram page முழுக்கக் கொட்டிக் கிடந்தது.

“ஆத்தி!! 269K followers ஆமா!, Jesuraj_Alexander-க்கு எவ்ளோ ஃபாலோயர்ஸ் டே?” - சாதிக்

“170K டா” – ஜார்ஜ்.

“அலெக்ஸூ, நாளையிலிருந்து நீயும் RJ station-ல ஜாக்கெட்டோட உட்கார்ற” – சாதிக்.

தொண,தொணத்த நண்பர்களின் பேச்சைக் காதில் வாங்காமல் கணினித் திரையையே வெறித்திருந்தனர் அலெக்ஸூம், மோசஸூம்.

சுருக்கிய புருவங்களோடு வாயில் விரல் வைத்தபடி, அதுவரை அவளை அங்குலம்,அங்குலமாய் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மோசஸ், “ப்ச்,ப்ச்,ப்ச்” – எனக் குழப்பமாய் மறுத்துத் தலையசைத்து, “படிக்குற காலத்துல கண்ணு சின்னதா இருந்துச்சே டே?” – என்றான்.

“ஐ ஷேடோ, மஸ்கரா-லாம் போட்டு, ஐ லைனரால இப்பிடி wings வரைஞ்சா, கண்ணு பெருசா தெரியும் டூட்” – அவளது புகைப்படம் ஒன்றை மேக்ஸிமைஸ் செய்து, Mouse pointer கொண்டு அவளது கண்களை வட்டமிட்டபடி, பொறுப்பாய் விளக்கம் கொடுத்த அலெக்ஸிடம், தயக்கமாய்,

“க…க.. கண்ணு மட்டும் இல்ல டூட்…” – என இழுத்தவனைத் திரும்பி உக்கிரமாய் முறைத்தவன், அவளது ஃபோட்டோவை பட்டெனக் க்ளோஸ் செய்து,

“ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பன் மாதிரி பேசுங்க டூட்” என்றான்.

“ஏன், எனக்கு உரிமை இல்லையா?, அது என் ஆளு”

“அதெல்லாம், மாசம் முதல் தேதியான மனைவிக்கு மல்லிப்பூ வாங்கிட்டு போகும் போது ஞாபகத்துல இருந்திருக்கனும் டூட்”

“அ..அ..அது நினைச்சது கிடைக்கலேனா, கிடைச்சதை ஏத்துக்கனும்ன்ற லாஜிக்ல இயங்குனது… ப்ச், அந்த ‘Open back blouse’ வீடியோ பார்க்குறதுக்குள்ள எதுக்கு க்ளோஸ் பண்ணுன?” -எனச் சண்டையிட்டு மௌஸைப் பிடுங்கி,

“ஸ்லேட்டு முதுகுக்காரிரிரிரிரிரி” – எனப் பாடியவாறு ஆர்வமாய் அவளது Instagram page-ஐத் திறக்க முயல, அவன் பிடரியில் அடித்துத் துரத்தி விட்டு, ஜன்னலருகேயிருந்த ரெஸ்டிங் ஏரியாவில் லேப்டாப்புடன் சென்றமர்ந்தான் அலெக்ஸ்.

தனது பர்சனல் அக்கௌண்ட்டிலிருந்து அவளது profile-ற்கு ஃபாலோ பட்டனைத் தட்டி விட்டு, பொறுமையாக ஸ்க்ரால் செய்தவனுக்கு, ‘From Software Engineer to AJDesigns Owner – ஸ்லீவ்லெஸ் அக்காவின் Inspiring life journey’ – என local பத்திரிக்கை ஒன்றிற்கு அவள் அளித்திருந்தப் பேட்டி pin செய்யப்பட்டிருந்ததைக் கண்டு சிரிப்பு வந்தது.

‘நீ சொன்னா, நான் படிக்கனுமா?, மாட்டேன்! முடியாது!” – என வீம்பாய்க் கூறிச் சென்றவள், தடம் மாறி, வழி மாறி, உருமாறிப் பெற்றிருக்கும் பிம்பமும்,வடிவமும் அவன் முகத்தில் புன்னகையை மலரச் செய்தது.

Blouse business வெற்றிகரமாய் சென்று கொண்டிருப்பது, அவளது profile காட்டும் வீடியோக்களிலேயே புரிந்தது. Celebrity-களுடன் collaboration, Stitching classes, website, boutiques -என trend-க்கு ஏற்றவாறு தன்னை update செய்து கொண்டு, சோஷியல் மீடியாவை முழுமையாக உபயோகித்துத் தொழிலைத் திறம்பட நடத்துவது தெரிந்தது.

‘Sleeveless Akka’ – என அவளுக்குப் பெயர் சூட்டியிருந்த ‘Social media கா****ji-க்கள்’, ஒவ்வொரு வீடியோவிற்குக் கீழேயும் கமெண்ட் செக்ஷனில், அவசரமாகப் பாண்ட் ஜிப்பைக் கழட்டி, ஆபாசமான வார்த்தைகளைக் கொட்டி, ஆஆஆ-வென ஆ******ம் அடைவதைப் பிழைப்பாக வைத்திருப்பதையெல்லாம் அவள் பொருட்படுத்தியதாகவேத் தெரியவில்லை. கரண்ட் கம்பத்தில் ஒன்னுக்கடித்துப் போகும் எடுபட்ட நாயாக எண்ணி அவர்களை ஒதுக்கியிருக்கலாம்! அவளது டிசைன்ஸ் குறித்த கேள்விகள்/கருத்துக்களைத் தவிர வேறு எதற்கும் அவள் பதிலளித்திருக்கவில்லை.

அதேபோல் Sleeveless_Akka_fanpage – என்ற பெயரில், அவள் எதார்த்தமாக கையைத் தூக்கி Mannequin-ஐக் காட்டும் சாதாரண செய்கையைக் கூட, ஸ்லோ மோஷனில், மூட் சாங் ஒன்றை இணைத்து அரும்பெரும் படைப்பாக மாற்றப்பட்டு வலம் வரும் வீடியோக்களை நீக்கவோ,அழிக்கவோ முயற்சித்ததாகத் தெரியவில்லை! பார்க்கும் பெண்களனவரையும் Sexualize செய்வதை normalize பண்ணி வைத்திருக்கும் Maniac-கள் நிறைந்த மானங்கெட்டத் தளமிது என்கிற புரிதலைக் கொண்டிருந்தாள் போலும்!

தன் கணினித் திரை முழுக்க நிறைந்து, மலர்ந்து, மணம் வீசி நின்ற ஜெபமலர்களின் வாசத்தை, உலகம் மறந்து அவன் சுவாசித்துக் கொண்டிருந்த நேரம், அவன் தோளை உலுக்கிய மோசஸ், தன் செல்ஃபோனைக் காட்டி, பரபரப்பாக,

“AJDesigns -ல இருக்கிற ‘A’ யாரு டூட்?” எனக் கேட்டான்.

“என்ன?” – புரியாது விழித்த அலெக்ஸிடம்,

“ப்ச், AJ Designs -ல J for ஜெபமலர், A for என்னது?” என்றான் மீண்டும்.

“ம்ம்ம்ம், A for apple! பேசாம போ டூட்! தவத்தைக் கலைக்கிறதுக்குன்னே வர்றானுங்க” – என முணுமுணுத்தவாறு தோளிலிருந்த அவனது கையைத் தட்டி விட்டவனைக் கடுப்பாய் நோக்கி….

“ஐயோ டூட்! உங்களுக்குப் புரியலையா???, A for Andrew Moses. எண்ட பேரு! என்னை வேணாம்,வேணாம்ன்னு விரட்டி விட்டக் கள்ளி, கடைசியில நான் கிடைக்காத சோகத்துல, என் பெயரை அவ கடைக்கு வைச்சு, எனக்காக உருகி,மருகி, இப்பிடிக் கல்யாணம், காட்சி காங்(ண்)காம, ஒண்டியா நிற்குறாளே!!” – என ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட.. நண்பனைக் குழப்பமாய் பார்த்து விட்டு.. மீண்டும் தன் கணினித் திரையை ஸ்க்ரால் அப் செய்தவன், ப்ரொஃபைல் பிக்சரில் மின்னிய ‘AJDesigns’ -என்கிற பெயரை சுருக்கிய புருவங்களுடன் நோக்கினான்.

“அவங்கப்பா பேரு… சூசையாச்சே!” – என முணுமுணுத்தவனுக்குப் பதிலாய்,

“அம்மா பேரு பெர்சியா, தாத்தா பேரு சாமுவேல்” – என்ற மோசஸிடம்,

“பாட்டி பேரு?” என்றான்.

“ப்ச், பாட்டி பேரு எஸ்தர், டூட்”

“இதுல A எங்க வருது?” – லேப்டாப்பில் தாளம் போட்டவாறு உதடு கடித்து சிந்தித்தவனின் விரல்களைப் பற்றி, தன்னைச் சுட்டிக் காட்டி,

“A இங்க வருது” என்றான் மோசஸ்.

தாடையை இறக்கி முறைத்துப் பார்த்து, வெடுக்கெனத் தன் கையை உருவிக் கொண்டவன் அனிச்சையாக,

“A for Alex. என் பேர்ல கூடத் தான் A வருது. அதுக்காக..” – எனக் கூறிக் கொண்டிருக்கையில், இதழ்களின் உச்சரிப்பை, உச்சியில் ஏற்றிக் கொண்ட மூளை, உச்சஸ்தாதியில் வீறிட்டு, நொடியில் ஸ்தம்பித்து விட, விழி விரிய, பிளந்த வாயுடன் சட்டெனத் திரும்பித் தன் கணினித் திரையை நோக்கியவன், ,

A-யின் நடுவிலிருந்தக் கோட்டை நீட்டித்து, அதைக் கிடுக்குப் பிடி போட்டுப் பிடித்தபடி கீழே தொங்கிய J-யைக் கண்டவாறு, நிறுத்தி நிதானமாக “AJDesigns”-என முணுமுணுத்தான்.

அவன் எண்ணம் போகும் போக்கைப் புரிந்து கொண்ட மோசஸூம், திகைப்புடன், மெல்ல அவன் தாடையைப் பற்றித் தன்புறம் திருப்பி,

“டூட்????” – என சந்தேகமாக அழைக்க,

கண்கள் காணும் பிம்பமும், அதை மூளை பகுத்தறிய நினைக்கும் விதமும், படபடப்பையும், பரபரப்பையும் தோற்றுவித்ததில் வார்த்தைகளற்றுத் திணறி, வெட்டி இழுக்கத் தொடங்கிய விரல்களால் பிடரியைக் கோதியபடி, வெடுக்கென எழுந்து நின்றவன், விறுவிறுவென வாஷ்ரூமை நோக்கி நடந்தான்.

‘என்னா டா யோசிக்குற அலெக்ஸூ???’

‘அழகன் மம்மூட்டின்னு நினைப்பா உனக்கு?’

‘ஒரு ‘பேமானி’-யான உனக்காக.. அந்த ‘business woman’ ஏங்கித் தவிச்சு, கல்யாணம் கட்டிக்காம… கன்னியாக.. தவ வாழ்ந்திட்டிருக்கிறதாகவா?’

‘ஏய் ஏய் ஏய் ச்சீ,ச்சீ,ச்சீ… daddy வயசு வந்தும் தாடியோட சுத்திட்டிருக்கிற.. உன் மொகரைக்காக… ஒருத்தி வருஷக்கணக்கா காத்திட்டிருப்பாளா?’

‘நீ அவ்ளோ-லாம் வர்த் இல்ல டூட்’

‘More over, அவ monthly turn over எங்க இருக்கு!, மொத்த சம்பளத்தையும் EMI-ல கொட்டுற உன் financial status எங்க இருக்கு!’

‘என்னைப் பழிவாங்க வழி பார்த்திட்டிருக்கிறதா சொன்னவ, என் பெயரை ஏன் வைக்கப் போறா??, அன்னைக்கு நேர்ல பார்க்கிற வரைக்கும், நான் அவ நினைப்புலயே இருந்திருக்க மாட்டேன்!’

‘No No No! இல்ல, இல்ல, இல்ல… AJDesigns-ல இருக்கிற A, நானாக இருக்க வாய்ப்பே இல்ல’

‘ஆமா!! வாய்ப்பே இல்ல’

– மனசாட்சி மானாவாரியாகக் கேள்விக் கேட்டு, மண்ணைத் தூற்றிக் காறித் துப்ப, வாஷ்பேசினின் முன் நின்று, வெந்நீரால் முகத்தை அடித்துக் கழுவியவன், மூச்சு வாங்க நிமிர்ந்து கண்ணாடியில் தன் பிம்பத்தை நோக்கினான்.

Alumni meet சென்று வந்ததிலிருந்து, விடாது அவனைத் துரத்திக் கொண்டிருக்கும் 4 மணிக் கனவின் upgraded version நினைவிற்கு வந்தது.

அதுநாள் வரை தலை நிறைய மல்லிப்பூவுடன், கேரளா கசவு சேலையில் முகம் காட்டாது நின்று, அவனை முதுகு உடைய ஓட விடும் ‘கொலுசு’, அன்றிரவு, அவன் நெஞ்சில் முகத்தை அழுத்தியவாறு, அப்பிக் கொண்டு நின்றது.

அந்தத் தொடுகை எதையோ, யாரையோ நினைவு படுத்த முயன்றதில் பரபரத்து, அவசரமாக அதன் கன்னம் பற்றி, ஆர்வமாக முகம் பார்க்க முயன்றவனின் இதயத்தில், ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி விட்டு, ஈஈஈஈ-என இளித்துப் பின் கோபமாய் முறைத்து வைத்தாள் ஜெபா.

“நீயா?????” – என அவன் திகைத்துக் கொண்டிருக்கையிலேயே, பிடரியில் பூச்சாடியை இறக்கி, அவனைப் பூட்டக்கேசாக்கி விட நினைத்தவளின் கைகளுக்குப் பூட்டு போட முடியாமல் திணறி, அவள் விரல்களை இறுகப் பற்றி,

“ஜெபா, ஜெபா, ஜெபா… வேணாம் வேணாம்!, கோபப்படாத மக்கா…” எனக் கெஞ்சியவனிடம்,

கண்களை இறுக மூடிக் கொண்டு “கையை விட்றா கபோதி” என்றவளின் அழகு முகத்தை அருகே கண்டு, கனவிலும் கிறங்கி, “விட்டா, நீ அடிப்ப” என முணுமுணுத்தவன் இரு கைகளையும் சேர்த்தணைத்துத் தன்னோடு அவளை ஒட்ட வைத்துக் கொண்டான்.

விடாது திட்டித் தீர்த்தவளின் வார்த்தைகளெதுவும் காதை வந்து சேராத அளவிற்கு, அவள் அண்மையும்,வெம்மையும் அவனை மோகம் மறந்து, காமம் கடந்து, கதிமோட்ச நிலைக்கு இழுத்துச் சென்றிருக்க, இளமையும்,வயதும் உணரத் துடித்தத் திருப்தியும்,அமைதியும் மனம் முழுக்கப் பரவியதில், வேகமும்,தாகமும் அடங்கிக் கண் மூடி, ‘ஜெ…..பா….’ எனக் காதோரமாய்… இதழ் தீண்ட.. வாய் விட்டு.. மெல்ல அவள் பெயரை முணுமுணுக்கையில்.. பட்டென விழிப்பு வந்தது.

தலை தூக்கி, தன்னிரு கைகளுக்குள் அகப்பட்டிருந்தத் தலையணையை நோக்கிப் பின் பெருமூச்சுடன் அதில் முகத்தை ஆழப் புதைத்தவனின் நாசி, அவள் கழுத்தோர வாசனையை நுகர்ந்ததில் திடுக்கிட்டு, பயந்து,அலறிப் படுக்கையை விட்டு அவசரமாய் எழுந்து நின்றிருந்தான்.

உடலும்,மனமும் பேரின்ப சுழலுக்குள் சிக்கித் திளைத்து, பெரும் சுகமொன்றை அனுபவித்து வந்த அலுப்பில், முறுக்கலோடு சிலுப்பித் திரிய, அந்த இம்சையான மனநிலை உருவாக்கிய சங்கடமான உணர்வில், மீண்டும் அந்தத் தலையணையில் முகம் புதைக்கப் பயந்து, அதை நுனி விரலில் பிடித்துத் தூக்கி, தூரமாய்க் கிடாசியிருந்தான்.

அடுத்தடுத்த நாட்கள், சோலை மலரொளியில் சுந்தரப் புன்னகையைக் காட்டி, அவனை சுளுக்கெடுக்க வந்த ஜெபமலர்கள், விதவிதமான வாசனையை அறிமுகப்படுத்தி, அவனைத் தொடர் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கியதில், வரிசையாக மூன்று தலையணைகளை, ப்ளாஸ்டிக் நாற்காலியின் மீது விட்டெறிந்திருந்தவன், கடைசியில் ‘pillow scarcity’-க்கு உள்ளாகியிருந்தான்.

முகத்திலிருந்த நீரை வழித்தெறிந்தவாறு வாஷ்பேசின் முன்பு நின்றிருந்தவனின் உடல் மொழியைக் கணக்கெடுத்தபடி, பின்னே வந்து நின்றான் மோசஸ்.

“என் கிட்டயிருந்து எதை மறைக்கிறீங்க டூட்?, உங்களுக்கும்,அவங்களுக்குமிடையில என்ன நடக்குது?”

“……….”

“சொல்லுங்க டூட்! பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க?” – bass voice-ல் கேட்டவனின் முகத்தைக் கண்ணாடியில் நோக்கி,

“3 மாசத்துல மாப்பிள்ளை கிடைக்குமா டா மோசஸூ?” என வினவினான் அலெக்ஸ்.

“மாப்பிள்ளையா? யாருக்கு?”

“நான் அவளுக்குப் பார்த்துக் கொடுக்கனுமாம்”

“நீ ஏன் பார்க்கனும்?”

“………….” – பதில் கூறாமல் சுருக்கியப் புருவங்களும், கடித்த உதடுகளுமாய் இடுப்பில் கை வைத்தபடி கண்ணாடியையே பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென,

“நான், இன்னிக்கு அவளை பார்க்கப் போறேன் டா மோசஸூ” என்றான் முடிவாய்.

“ஏன்? ஏன்? எதுக்கு?, அப்போ நான்??, அவ என் ஆளு! எ…எ..என்னையும் கூட்டிப்போ”

“ப்ச்,ப்ச்,ப்ச்” – என மறுத்துத் தலையசைத்தபடி, விழிகளை மூடித் திறந்தவன், வலது கையில் சொடுக்கிட்டவாறுத் திரும்பி,

“உன் மவனுக்குப் பிறந்த நாள் வரப் போகுதுல்ல?” – எனக் கேட்டான்.

“ஆ….மா….”

“அவ கடையில இருந்து நான் அவனுக்கு ஸ்லீவ்லெஸ் சொக்கா வாங்கிட்டு வர்றேன்”

“டேய், டேய்ய்ய்ய்! என் மவனைப் பார்த்தா எப்பிடித் தெரியுது உனக்கு?” – எனப் பல்லைக் கடித்தவனைப் பொருட்படுத்தாதுக் கடகடவென வெளியே நடந்தான் அலெக்ஸ்.

இதற்கு மேல் ‘பாடி’ தாங்காது! முடிவு செய்து விட்டான் அவன்!

Alumni meet சென்று வந்த இந்த 3 நாட்களாக இரவில் கனவிலும், பகலில் வீடியோவிலுமாக (அவளது ப்ரொஃபைலிலிருந்த 150 வீடியோக்களுக்கும், 300 ஃபோட்டோக்களுக்கும், சலிக்காமல் ‘லைக்’ கொட்டியிருந்தான்) நாள் முழுக்க அவன் கண் முன்னே நின்று கொண்டு கண்டபடிக் கடுப்பேற்றுபவளை சகித்துக் கொள்ள முடியாமல், கனவு கொடுத்த சுக உணர்வை சுவைத்து விட்ட இளமை விடாது நச்சரித்ததில், அவளை நேரில் பார்த்தே ஆக வேண்டுமென்கிற அரைப் பைத்திய நிலையை எட்டியிருந்தான்.

அது போக, அவளிடமிருந்துப் பதில் பெற வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தது அவனுக்கு! ‘அவளது அம்மாவிற்கு என்னவானது’, ‘மாமா மகனை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?’, முக்கியமாக ‘AJdesigns-லிருக்கும் A யார்?’ என்பது போன்ற பற்பல விடைதெரியா கேள்விகள்!

நண்பர்கள் எவருக்கும் அவளது அலைபேசி எண் தெரிந்திருக்கவில்லை. Instagram-லிருக்கும் ‘contact details’ அனைத்தும் தொழில் தொடர்புடையதாகவே இருந்தது. எந்த வழியில் அவளை அணுகுவதெனப் புரியாமல், கடைசியில் நேரிலேயே சென்று விடத் தீர்மானித்து, அன்று மாலை அலுவலகம் முடிந்ததும் AJDesigns boutique-ஐ நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

கிண்கிணியாக ஒலித்தக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன், AC காற்றை அனுபவித்தவாறு, ஹெல்மெட்டைக் கழட்டி, முடியைக் கோதி சரிசெய்தபடி, கடை முழுக்கத் தொங்கவிடப்பட்டிருந்த விதவிதமான blouse-களைப் பார்வையிட்டுப் பின், பக்கவாட்டில் திரும்பினான்.

செவ்வக வடிவக் கண்ணாடி ஜன்னல் வைத்த அறையொன்றினுள், கையிலிருந்தப் பேனாவினால் projector screen-ஐ சுட்டிக் காட்டியபடி லயிப்புடன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்த ஜெபமலர், இன்று பச்சை நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும், சிகப்பு நிற ப்ளைன் காட்டன் புடவையும் அணிந்திருந்தாள்.

சீரற்ற மடிப்புகளோடு அவள் தோளில் தொங்கிய முந்தானையும், காதிலாடும் லோலாக்கும், சின்னக் கண்களின் கூர்மையும், தூக்கி நின்ற கன்னத்து எலும்பும், புன்னகைக்கும் போது, நாடியோரங்களில் தென்படும் சிறிய முடிச்சும் அவள் முகத்திற்கு அளிக்கும் சோபையை, வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான்.

‘ப்ளவுஸ் பார்க்குறீங்களா சார்?’ என்று வந்த பெண்ணிடம், ‘இல்ல, அந்த மேடமைத் தான் பார்க்கனும்’ – எனக் கூறிக் காத்திருந்தவன், சிறிது நேரத்தில் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளிருந்தவர்கள் வெளியேறுவதையும், தன்னிடம் விசாரித்த பெண் உள்ளே சென்று அவளிடம் அவன் குறித்துக் கூறுவதையும், அவள் பட்டென நிமிர்ந்து கண்ணாடி ஜன்னல் வழி தன் புறம் நோக்குவதையும் கண்டான்.

பின் அவள் அனுமதி தந்ததும் அறைக்குள் நுழைந்தவனை கையிலிருந்தத் தாள்களை அடுக்கியபடி தூக்கியப் புருவமும், வளைந்த உதடுகளுமாய் வரவேற்றாள் அவள்.

அவளது நக்கல் பார்வையைக் கண்டு கொள்ளாது, அந்த மீட்டிங் அறையைச் சுற்றி,சுற்றி நோக்கியவன், மெல்ல அவள் புறம் விழிகளை நிறுத்திப் பின் அவளிடம் தென்பட்ட மாற்றத்தை உணர்ந்து, “மு….டி….” எனத் திகைத்தவாறு கூறி அவசரமாய் அருகே வந்தான்.

அன்று, பின் முதுகு முழுக்கப் புரண்ட கூந்தல், இன்று தோள் வரை மட்டுமே தொங்கிக் கொண்டிருப்பது கண்டு, அதைத் தொட முயன்று,

“முடி எங்க மக்கா?, ஏன் வெட்டிட்ட?” என ஆச்சரியக் குரலில் கேட்டவனது நீட்டிய விரல்களைக் கடுப்புடன் தட்டி விட்டுப் பல்லைக் கடித்தபடி,

“ம்ம்ம், உன்னை வெட்ட முடியாததால, முடியை வெட்டிட்டேன்” என்றாள் அவள்.

“ப்ச்” என உச்சுக் கொட்டியவன், கையிலிருந்தத் தாள்களைப் பையில் வைக்கத் திரும்பி நின்றவளின் ‘Open back’ ப்ளவுஸ் காட்டிய, அண்டவெளியைக் கண்டு,

“இதுவும் நல்லாத் தான் இருக்கு” – என வழிந்து, பிடரியைக் கோதினான்.

வெடுக்கெனத் திரும்பி அவனை நேர்ப்பார்வை பார்த்தவள், கைகளைக் கட்டிக் கொண்டு, “எதுக்கு என்னைப் பார்க்க வந்திருக்க?” என strict voice-ல் கேட்டாள்.

அவள் கேள்வியை அலட்சியம் செய்து “முதன்முதல்ல உன் கடைக்கு வந்திருக்கேன். டீ,காபி எதுவும் தர மாட்டியா மக்கா?” – என்றவனிடம்,

“நேரா போய் லெஃப்ட் திரும்புனா, தெரு முக்குல ஒரு டீக்கடை இருக்கும்! அங்க குடிச்சுக்க” என்றாள் தயவு,தாட்சண்யம் பாராமல்.

கொஞ்சமும் கோ-ஆபரேட் செய்யாமல் விறைப்புடனே இருப்பவளை எண்ணித் தொங்கிய தலையுடன் “ஷ்ஷ்ஷ்” என சலித்து நிமிர்ந்தவன்,

ப்ரொஜக்டர் வெளிச்சம் முகத்தில் பட, பின்னிருந்த இருக்கையில் லேசாகச் சாய்ந்து, கையைக் கட்டிக் கொண்டு casual-ஆக நின்றவளின் தோற்றத்தைத் தலை முதல் கால் வரை நோக்கியவாறு, அவளை வெறுப்பேற்றும் நோக்கத்துடன்,

“கையைக் கட்டாத மக்கா” என்றான்.

‘ஏன்’ என்பது போல் பார்த்தவளிடம்,

“இல்ல….” என இழுத்து, “இடுப்பு மறைக்குது” என மெல்லக் கூறி விட்டு, நமுட்டுச் சிரிப்புடன் நாக்கைக் கடித்து, புருவம் உயர்த்தினான்.

புசுபுசுவென ஏறி விட்ட கெட்டக் கோபத்தில் மூச்சு வாங்க, மூக்கை விடைத்து முறைத்தவளைக் கண்டுப் பற்கள் தெரிய “ஹாஹாஹா”-வெனப் பெரிதாய் சிரித்தவன், பின்னிருந்த மேஜையில் சாய்ந்து, அவளைப் போலவே கைக் கட்டி நின்றான்.

இழுத்துப் பிடித்தப் பொறுமையுடன், நறநறத்தப் பற்களோடு “நான் உனக்குக் கொடுத்த 3 மாச டைம்ல, 3 நாள் முடிஞ்சு போச்சு!” – என்றாள்.

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” – நாலாபுறமும் தலையாட்டினான் அவன்.

“மாப்பிள்ளை பார்த்திட்டியா?”

“பார்த்துட்டே இருக்கியே!”

“யாரை?”

தாடையை இறக்கித் தலையசைத்துத் தன்னைக் காட்டியவனைக் கண்டு, ஏளனமாய் உதட்டைப் பிதுக்கி, பின்னிருந்த நாற்காலியில் இருகைகளையும் பதித்து,

“நீயா?” – என எகத்தாளமாய் வினவினாள்.

ப்ரொஜக்டர் ஒளியில், சிகப்பு நிறப் புடவையின் மத்தியில், கொஞ்சமாய் எட்டிப் பார்த்த வெண்ணிடையின் மீது பார்வையைத் திருப்பாதிருக்க பெருமுயற்சி செய்தவாறு,

“ஏன், நானா இருக்கக் கூடாதா?” என்றான் அவன் பதிலுக்கு.

“உனக்குத் தான் என் மேல அந்த மாதிரி நினைப்பெல்லாம் கிடையாதே!, இதெல்லாம் வேண்டாம், ப்ளீஸ் எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்ன்னு மூக்கால அழுத?” – உக்கிரமாய்க் கேட்டவளிடம்,

“அதையே சொல்லிக் காட்டாத மக்கா” என நிதானமற்ற குரலில் அதட்டியவாறு அருகே வந்தவன், தன் நெஞ்சளவு உயரத்திலிருந்தவளிடம் குனிந்து,

“அப்போ நீ 17,18 வயசுக் குழந்தைடி! சின்னப்புள்ள மனசைக் கெடுக்க சொல்றியா??” – எனக் கடுப்பாய்க் கேட்க,

“18-வயசுன்றது, குழந்தை வயசா உனக்கு?” – என்று எகிறினாள் அவள்.

“பின்னே?, Malnutrition-னோட மங்கிப் போய்த் திரிஞ்சவளை, மங்கையர்க்கரசி-ன்னா சொல்ல முடியும்?, ப்ச், நாள் தவறாம இனி தினம் அவளுக்குக் கேப்பைக்களி கொடுங்க, உடம்புல கொஞ்சமாவது சதை வைக்கட்டும்ன்னு உங்கம்மாக் கிட்ட சொல்லிட்டு வந்தேனே! கொடுத்துச்சா இல்லையா?”

“கொடுத்துச்சு” – பொறுப்பாய்ப் பதில் கூறியவளைக் கண்டுப் புன்னகைத்து,

“ஓஓஓ! அப்போ இந்த ராக்கம்மா லுக்-க்கு ராகிக் களி தான் காரணமா?” – என்றவனை,

“ப்ச்” என Wings இட்ட விழிகளால் எரிச்சலுடன் நோக்கினாள்.

அந்த எரிச்சல் கக்கியப் புகையைப் புறக்கணித்து, குரலில் மென்மையைத் தேக்கி, “அம்மா எப்பிடி இறந்தாங்க ஜெபா?” – மெலிதாகக் கேட்டவனின் கேள்வியில் முகம் மாற, பார்வையைத் திருப்பி நேரே வெறித்து நின்றவள்,

“ஹார்ட் அட்டாக்”- என்றாள் வெறுமையாய்.

அவளது இறுகிய முகத்தையும், உணர்வற்ற கண்களையும் ஒரு சேர அளவிட்டு,

“உன் மாமன் மவனோட, உன்னை சேர்த்து வைக்க ஆசைப்பட்டாங்களே?” -என்றான்.

“அது நிராசையாயிடுச்சு”

“ஏன்?”

“ஏன்னா… ஏன்னா.. என்ன அர்த்தம்?, அவனுக்குப் பிடிச்சப் பொண்ணை, அவன் கட்டிக்கிட்டுப் போயிட்டான்”– ‘வந்துட்டான் கேள்வி கேட்டுக்கிட்டு! கேனப்பய’ என்ற ரீதியில் கடுப்புடனே பதில் கூறியபடி அவள்.

“நீயும் உனக்குப் பிடிச்ச பையனை கட்டிக்க வேண்டியது தான?”

-தூக்கியப் புருவங்களுடன் நேராய்ப் பார்த்து நின்றவளின் இடப்பக்க முகத்தை நோட்டம் விட்டபடி ‘இதுக்கு பதில் சொல்லுடி’ என்பது போல் அவன் கேட்க,

ஒரு நொடி.. ஏறி இறங்கும் மார்புடன், உதடு இறுக அமைதி காத்தவள், மறு நொடி.. அவன் முகம் நோக்கி,

“எனக்குப் பிடிச்சப் பையன்-னு, இந்த உலகத்துல எவனுமே இல்ல” என்றாள்.

ஒற்றைப் புருவம் உயர்த்தி, மேலும்,கீழும் தலையை ஆட்டி அவளது பதிலை ‘நம்பிட்டேன்’ என்று ஏற்றுக் கொண்டவன், அவளை லாக் செய்யும் நோக்கத்துடன்,

“AJDesigns-ல இருக்கிற A யாரு ஜெபா?” எனக் கேட்டான்.

கட்டியிருந்தக் கைகளை இறுக்கி, பல்லைக் கடித்துக் கண்ணை மூடித் திறந்தவள், நக்கல் வழிந்த குரலில்,

“ஏன்?, A for Alex-ன்னு நினைச்சியா?” எனக் கேட்டாள்.

“நினைக்கல. Confirm பண்ணிட்டேன்”

அவன் பதிலில் தோளைக் குலுக்கி, உதட்டைப் பிதுக்கி, இருபுறமும் தலையசைத்தபடி அசட்டையாய்ச் சிரித்தவளைக் கனிவுடன் நோக்கி, அனிச்சையாய் ஓரடி நெருங்கி நின்றவன், மதுரமாய் இனித்த அவள் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்து,

“எத்தனை செண்ட் பாட்டில் வைச்சிருக்க மக்கா?, ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு வாசனை வருது?” என மெல்லிய குரலில் முணுமுணுக்க,

Wings இப்போது மேல் நோக்கி விரிந்து, அவனை முறைத்தது.

சின்னதாய், வட்டமாய் ‘half boil’ சைஸிலிருந்த முகத்தினுள், கண்,புருவம்,மூக்கு,வாய்,கன்னம், நாடி என அத்தனை பாகங்களையும் அடக்க இயற்கை பட்டிருக்கும் சிரமம் புரிந்து, சிரிப்பு வந்தது அவனுக்கு.

“எலி மூஞ்சி” – முனகியவனின் எண்ணமும், பார்வையும் புரிந்து உதடு கோணக் கேவலமாய் நோக்கியவள், பக்கவாட்டில் திரும்பி,

“காலம் போன காலத்துல, ரசனை ம*று வேற” எனக் கடித்தப் பற்களிடையே முணுமுணுத்தாள்.

“ஆமாடி!, ரசனை ம*று தான்! என்னான்ற இப்போ?, முதல்ல, நீ ஏன் டி கோபப்படுற?, மரியால இருந்து, கிருபா வரை அத்தனை பேரையும் துரத்தி விடத் தெரிஞ்சவ, என்னைத் தேடி வராம இருந்ததுக்கு நான் தான் டி கோபப்படனும்! அப்பிடி என்ன மக்கா ஈகோ உனக்கு?, உன் அம்மா இறந்ததை சொல்லல?, உன் மாமன் மவனோட கல்யாணம் நடக்காததை சொல்லல?, முக்கியமா நீ சிங்கிளா இருக்குறதை சொல்லல?”

-சீரியஸாய்க் கேட்டவனை நிமிர்ந்து நோக்கியவள், வலது கையைத் தூக்கி, அவனது முன் நெற்றி முடியை உள்ளங்கையால் மேல் ஏற்றி விட்டு,

“எண்ணி மூணே வருஷத்துல முன்சொட்டை விழப் போற, மொன்ன நாய், உன்னை நான் தேடி வேற வரனுமா?” எனக் கேட்க,

ஒற்றை விரலால் அவள் கையை விலக்கியவன், “தொடாம பேசு மக்கா” என்று எரிச்சலுடன் கூறி விட்டு,

“தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன்னு இத்தனை வருஷத்தை ஒப்பேத்திட்டியே?, என் வயசும்,இளமையும் அநியாயமா கரைஞ்சு போயிட்டிருக்குடி” என்றான் ஆதங்கத்துடன்.

“இனிமேலும் அது கரையாம இருக்கனும்ன்னா, சீக்கிரமே எனக்கு மாப்பிள்ளை பார்க்குற வழியைப் பாரு”

“நானே மாப்பிள்ளை தான் டி”

“ஆனா உனக்குத் தான் என்னைப் பிடிக்காதே”

“பிடிக்கலன்னு நான் எப்போ மக்கா சொன்னேன்?”

“பிடிச்சிருக்குன்னும் சொல்லலையே”

“இப்பப் பிடிச்சிருக்குன்னு சொல்றேன். கட்டிக்கிறியா?”

“முடியாது! இப்ப என்ன இதுக்க்க்க்குப் பிடிச்சிருக்கு உனக்கு?”

“பதில் சொல்லிடுவேன்! ஆனா… நீ அடிப்ப” – என்றவனது பார்வை மெல்ல இறங்கி, மெல்லிடையில் பதிய, கண்கள் சுருங்க அசையாது அவனைக் கோபமாய் நோக்கியவளை நெருங்கி, “ப்ச், என்ன மக்கா?, நீ பார்க்கக் கூடாதுன்னு சொன்னா, நான் பார்க்கல!” என்று தன்னை ஒப்புக் கொடுத்து விட்டுப் பின், மேலும் நெருங்கி நின்று “பேச்சுலர் டி நானு! சோதிக்குற நீ என்னை?” என்று சிணுங்கி, அதற்கு மேல் பொறுக்காமல், தன் ஐவிரல்களால் அவள் இடை பற்றி வருட, ஒற்றைத் தொடுகைக்கேக் கிறங்கி, மயங்கி, உஷ்ண மூச்சோடு, முகம் மாற நின்றவனைக் கண்டு, அகம் மாறி விடாமலிருக்கப் பிரயத்தனப்பட்டு,

“தொடாம பேசு மக்கா” என அவனைப் போல சொல்லிக் காட்ட, கூச்சம்,சிலிர்ப்பென எதையும் காட்டாது கடுப்புடனே ரோபோ குரலில் கூறியவளைக் கண்டு ஏமாற்றத்துடன், மனமே இல்லாமல் கையை விலக்கியவன், தன் விரல்களை விரித்து.. உள்ளங்கையை நோக்கி மெல்ல புன்னகைப்பதைப் பார்த்து,

“இதுக்குப் பேரு இனக்கவர்ச்சி. Infactuation” என்றாள்.

‘ஷ்ஷ்ஷ்’ என நெற்றியைத் தேய்த்தவன், “ஃபீல் பண்ணக் கூட விட மாட்டேங்குறா! ராட்சசி” என முணுமுணுக்க,

அவன் வெளிக்காட்டும் உணர்வுகள் அவளைக் கொந்தளிக்கச் செய்ததில்,

“அப்போ வேணாமாம்! இப்ப மட்டும் வேணுமாம்!, எல்லாமே உன் இஷ்ட *****-ஆ?” – என்று சீறினாள் அவள்.

“சரிடி! உன் இஷ்டப்படி என்ன பண்ணனும்?? சொல்லு”

“எனக்கு உன்னைப் பழிவாங்கனும்”

“கட்டிக்கிட்டுப் பழிவாங்கு”

“ஏய்ய்ய்ய்ய்”

“ஆமா மக்கா! ஃபர்ஸ்ட் நைட்டைக் கலைச்சு விட்டுத் திரும்பிப் படுத்துக்க! அதை விட ஒரு ஆம்பளையைப் பெருசா பழி வாங்கவே முடியாது”

அதுவரையிருந்தப் பொறுமை போய் விட, “உன்னைஐஐஐஐ” எனக் கர்ஜித்தவாறு, அவன் காலரை இறுகப் பற்றிக் கழுத்தை நெரிக்க முயன்றவளின் செய்கையில் முன்னால் இழுபட்டு, அவளை இடித்து விடாதவாறுப் பின்னாலிருந்த சேரைப் பிடித்துக் கொண்டு,

“ஜெபா… ஜெபா….” எனக் கதறி, வலித்தத் தொண்டையுடன் “கோபப்படாத மக்கா” என்றவனிடம்,

“ஒரு பொம்பளைப் பிள்ளை மனசை நோகடிச்சுட்டோம்ன்ற குற்ற உணர்ச்சியே இல்லேல்ல உனக்கு?” என்று திட்டியவளை சமாதானப்படுத்தத் தெரியாமல்,

“அப்போ நான் பொறுமையா எடுத்துச் சொன்ன அத்தனையையும் கேட்குற நிலைமைலயா நீ இருந்த?, உங்கப்பன் உருவாக்குன பள்ளத்தை, நிரப்ப உன் ஆழ் மனசு ஆள் தேடிட்டிருந்துச்சு ஜெபா!, அன்னைக்கு நான்-ன்னு இல்ல! உன் மேல யார் அக்கறைக் காட்டியிருந்தாலும், நீ கண்ணு,மண்ணு தெரியாம அவங்க காலடியில விழுந்திருப்ப! உன் சூழ்நிலையை உபயோகிச்சுக்கிற அளவுக்கு சுயநலவாதியா நான்? அது போக, நீ அப்போ சின்னப் பொண்ணு! உன் மேல எப்பிடி நான் ஆசையை வளர்த்துக்கிறது?, வயசும்,அனுபமும் ஏறும் போது உனக்கே ஒரு நாள் இதெல்லாம் முட்டாள்தனமாத் தோன்றி, நீயே மாறிடுவன்னு நினைச்சுத் தான் நான் விலகிப் போனேன்” – என வாயை விட்டான் அவன்.

“ஆனா.. நான் மாறாம.. இன்னும் உன்னையே எண்ணிட்டிருக்கிற முட்டாளா.. இப்ப உன் கண்ணு முன்னாடி நிக்குறதா நீ நினைக்குற?, அப்பிடித் தான?”

“ஏய்ய்ய் அப்பிடியில்லடி!இது வேற.. ஐயோ!,”– என்று மேலும் ஏதோ விளக்க விழைந்தவனைக் கையமர்த்தி,

மூக்கை இழுத்து உறிஞ்சியபடி, அவன் கழுத்தைப் பற்றியிருந்த விரல்களைத் தளர்த்தி ஒரு முடிவுடன், இருபுறமும் அவன் காலரை இழுத்து நேர்ப்படுத்தியவள்,

“இவ்ளோ தான் டா நீ!, உன்னால… என்னைக்குமே என்னைப் புரிஞ்சுக்க முடியாது” – எனப் பற்றற்றக் குரலில் கூற,

அவளது tone, tension ஏற்றியதில் “சேம் டூ யூ மக்கா” என்றான் எரிச்சலாக.

அவனை விட்டு விலகித் தன் கைப்பையை எடுத்துக் கொண்டுப் புறப்படத் தயாரானவளிடம், “நான் சொல்ல வர்றதைக் காது கொடுத்துக் கேளு ஜெபா! இவளே கேஸ் போட்டு, இவளே வாதாடி, இவளே ஜட்ஜ்மெண்ட் எழுதிக்குவாளாம்! லூசுக்கிறுக்கி!” எனப் பொரிந்தவன் மேலும்,

“அன்னைக்கு என் பேச்சும், செயலும் இவ்ளோ ஆழமா உன்னைக் காயப்பட்டிருத்திருக்கும்ன்னும், நீ இவ்ளோ அழுத்தமான ஆளுன்னும் எனக்கு அப்போ தெரியாது மக்கா..” என விடாது தொடர,

“தெரியாட்டிப் போனா.. பரவாயில்ல! இப்ப நீ கிளம்பு” என்றாள் அவள்.

“நான் இன்னும் பேசி முடிக்கல ஜெபா” – குரல் உயர்த்தியவனைப் பொருட்படுத்தாது அவள் வாசலை நோக்கி நடக்கத் தொடங்க, ஆத்திரம் கொண்டவன்,

“எனக்குப் பார்க்குற பொண்ணையெல்லாம் கலைச்சு விடுவா!, செய்யுற பிசினஸூக்கு என் பேரை வைப்பா!, கல்யாணமே பண்ணிக்காம, கன்னியாவே வாழுவா!, ஆனா.. என்னைத் தேடி வர மாட்டா! கட்டிக்கக் கேட்டா, முடியாதுன்னு சொல்லுவா” – எனக் கத்த,

பட்டென நின்றவள், வெடுக்கெனத் திரும்பி,

“ஆமா, வர மாட்டேன்! உன்னைத் தேடி வர மாட்டேன்! எங்கப்பன் கொடுத்தக் காயத்துல, கத்தியை சொருகிட்டுப் போன உன்னைத் தேடி நான் வர மாட்டேன்!, எப்பிடியெப்பிடி, யார் அக்கறை காட்டியிருந்தாலும் விழுந்திருப்பேனா.. ம்??, அன்னைக்கு நீ ஒருத்தன் தான் என் மேல அக்கறையா இருந்தியா?, என் மாமன் மவன் இல்ல?, உன் கூடவே சுத்துற மோசஸ் இல்ல?, உனக்கெல்லாம்….. கடைசி வரைக்கும் என்னைப் புரியாது டா” – பதிலுக்கு சத்தமிட்டவளைக் கண்டு சுர்ரென ஏற..

“ஆமா புரியாது டி! என்னான்ற இப்ப?” – என இடுப்பில் கை வைத்தவாறுத் திமிராய்க் கேட்டான் அலெக்ஸ்.

அவனது தொனி, தோனியின் ராக்கெட் ஷாட்டைப் போல கோபத்தைப் பல மீட்டர்கள் ஏற்றியதில், நிதானமாக,

“A for Alex இல்ல. Agnes. Saint Agnes. திருச்சபையில பாஸ்டர் எழுதிக்கொடுத்த பேரு! நான் ஆழமாகவும், அழுத்தமாகவும் உன்னையே நினைச்சிட்டிருக்கேன் தான்!, ஆனா… அதுல அன்போ, அக்கறையோ இல்ல! வெறும் பழிவெறி தான் இருக்கு!” என்றவள் தொடர்ந்து,

புருவத்தைத் தேய்த்தபடி, “அப்புறம், நான் என் லட்சியத்தை அப்டேட் பண்ணிட்டேன்! நீ எனக்கு மாப்பிள்ளை பார்த்து, கல்யாண ஏற்பாடு பண்ணி கச்சேரி வைக்கனும்ன்னு சொன்னேனே!, அது வேண்டாம்! கேன்சல் பண்ணிடு!” – என்றாள்.

கடித்தப் பற்களுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,

“Updated லட்சியம் என்னன்னா… எண்ணி ரெண்டு வருசத்துல, உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு நான் கன்னியாஸ்திரியாகவும், என்னை ரிஜெக்ட் பண்ணப் பாவத்துக்கு நீ பாதிரியாராகவும் மாறி… தேவனருளோட, நாம மக்களுக்குத் தொண்டு செய்யப் போறோம்! கர்த்தர் நம்மளை சீக்கிரமே ரட்சிக்கட்டும்!” எனக் கூறியதும்,

“ஐயோ இவ நினைச்சதை சாதிப்பாளே” என்றெண்ணிப் பதறி, முகத்தை அஷ்டக் கோணலாய் வைத்துக் கொண்டு, “நோ,நோ ஜெபா… ஜெபா…. காலைல 4 மணியானாலே, எனக்கு எக்குத்தப்பா கனவு வரும் ஜெபா! எதிக்ஸே இல்லாத நான் எப்பிடி…” என்று உளறுபவனைக் கண்டு கொள்ளாது விறுவிறுவென வெளியேறி விட்டாள் அவள்.