அத்தியாயம் - 11
இன்று…
கபாலீஸ்வரர் கோவில். காலை மணி 7.30.
வெள்ளை வேஷ்டி,சட்டையில் தன் நண்பர் பட்டாளத்திடம் நின்று முகம் கொள்ளாப் புன்னகையுடன் உரையாடிக் கொண்டிருந்த விஜய்யை இன்னமும் வியப்பு தீராமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்யா. பத்து வருடங்களுக்கு முன்பு வாயில் ஈ போவது கூடத் தெரியாமல்.. கொஞ்சமும் வெட்க,மானமின்றி அவனை எப்படி ஆ-வெனப் பார்ப்பாளோ! அதே பார்வை தான் இப்போதும்!
கொஞ்சம் கூட மாற்றமில்லை அவனிடம்! என்ன இருபதுகளிலிருந்த போது.. எப்போதும் முன்னுச்சி முடியைக் காற்றில் பறக்க விட்டிருப்பான்! இப்போது அதை ஜெல் தடவி ஏற்றிச் சீவி நிறுத்தி வைத்திருக்கிறான். மற்றபடி அதே மாயப்புன்னகை! அதேத் தீவிரமானக் கண்கள்!
அவள் பார்வையை உணர்ந்ததாலோ என்னவோ.. திரும்பி அவளை நோக்கினான் அவன். சிகப்பு நிறப் பட்டுப்புடவையில், எளிமையான அலங்காரத்தில்… காதில் பெரிய ஜிமிக்கிகளுடன்… அந்தப் பெரிய கண்களுடன்.. அழகான இதழ்களுடன்.. அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் புதிதாக ஏதோ ஒன்று சேர்ந்திருந்தது! என்ன அது?! புருவம் சுருங்க அவள் முகத்தைப் பார்த்தபடியே யோசித்தவன், கிடைத்த விடையில்.. 32-பற்களையும் காட்டிப் புன்னகைத்து… லேசாகக் கண்ணடித்தான்.
அவன் புன்னகையும்,செய்கையும் படபடக்கச் செய்ய… அவசர,அவசரமாகக் கருமணிகளை இருபுறமும் நகர்த்தியவள் மீண்டும் அவன் மீதே பார்வையை நிலைக்கச் செய்தாள்.
என்ன நடக்கிறது அவள் வாழ்வில்?? இவன்… இவன் அவளைக் காதலிக்கிறானாம்! அதுவும் பத்தாண்டுகளாக! எப்படி உணராமல் போனாள்?, இடியட்!! யோசித்துப் பார்த்தால்.. அவ்வப்போது அவனது பார்வையில் உணர்ந்த சிலிர்ப்பும், அவனது ஸ்பரிசத்தில் படபடத்த நெஞ்சமும், துஷர், விஜய்யைக் காதலிக்கிறாயா என்றுக் கேட்ட போது நடுங்கி அதிர்ந்த இதயமும்.. அப்போதே… அப்போதே அவனுக்க்கான அவளது எண்ணங்களை உணர்த்திக் கொண்டு தானிருந்திருக்கிறது! இது எதையும் புரிந்து கொள்ளாமல்… அத்தனை சிறுபிள்ளைத்தனமாகவா வாழ்ந்திருக்கிறாள்!
“சொந்தப் புருஷனையே ஏன் இப்படி ஆ-ன்னு பார்க்குற?, சரண்யா, கொஞ்சமாவது வெட்கப்படேன்” – அவள் அருகில் நின்று கொண்டு கேலி செய்த அசோக்கை முறைத்தாள் அவள்.
“உன் ஆளுன்னு சொன்னதுக்கு அன்னைக்கு அவ்ளோ கோபப்பட்ட?, இப்போ இவனையேக் கட்டிக்கிட்ட?”
அவனைக் கண்டு கொள்ளாமல் பரத்தின் தோளைத் தட்டியவள், தொப்பையும்,தொந்தியுமாய் நின்றிருந்த அசோக்கைக் கைக் காட்டி “யார் இந்த அங்கிள்?, ரொம்ப நேரமா என் பக்கத்துல நின்னுப் புலம்பிக்கிட்டே இருக்கார்?” எனக் கேட்க.. “ஏய்ய்ய்ய்” என்று சீறினான் அவன்.
“இப்போ தான கல்யாணம் பண்ணியிருக்க?, பிள்ள,குட்டின்னு செட்டில் ஆகிப் பாரு! குடும்ப பாரத்தைத் தாங்குறதுக்கு இந்தத் தொப்பை எவ்ளோ அவசியம்ன்னு அப்போ புரியும்”
அவன் பதிலில் புன்னகைத்தவளின் சிரிப்புச் சத்தம் கேட்டு அருகே வந்தான் விஜய். அவன் வந்ததும் நமுட்டுச் சிரிப்புடன் நண்பர்கள் இருவரும் நகர்ந்து விட.. காலையில் தான் கட்டியத் தாலியுடனும்,தயங்கிய பார்வையுடனும் நின்றிருந்தவளின் அருகே நெருங்கி நின்றான் விஜய்.
இதுவரை உணர்ந்திராத ஒரு ஆணின் நெருக்கம்.. லேசாக மூச்சு முட்டுவதைப் போலிருக்க.. அவன் தோளை உரசியபடிக் கன்னத்தைத் திருப்பியவளைத் தடுத்துத் தன்புறம் திருப்பியவன் “எதுக்குடி என்னைப் பார்த்த?” என்று வினவினான்.
கண்களை உயர்த்தி அவனையே நோக்கியவளிடம் “சைட் அடிக்கிறியா?” என்றான்.
“ம்ஹ்ம்..” வேகமாக மறுத்துத் தலையசைத்தவளிடம் குனிந்து “ஆனா, நான் உன்னை சைட் அடிச்சிட்டிருக்கேன்!, காலைலயிருந்து! இதுக்கு முன்னாடி உன்னை சாரி-ல பார்த்தப்போ நோட் பண்ணல! பட் இன்னிக்குத் தான் கண்டுபிடிச்சேன்!”என்றவன் தொடர்ந்து அவள் காதருகே “Saree உன்னை ரொம்ப செக்ஸியா காட்டுது!” எனக் கூற… பெரிதாக விழித்துப்.. படபடத்த நெஞ்சத்தை மறைக்க மறுபுறம் திரும்பியவளிடம்.. மெல்லிய குரலில்..
“புதுசா உன் முகத்துல ஏதோ ஆட் ஆயிருக்கிறதா… ரொம்ப நேரமா யோசிச்சேன்! இது தான்! இந்த வெட்கம் தான் அது..! ஏடாகூடமா என்னன்னவோ யோசிக்க வைக்குது” என்றான்.
லேசாக வியர்க்கத் தொடங்கிய உள்ளங்கையை இறுக மூடி… உள்ளக்கிளர்ச்சியை அவள் அடக்க முயன்ற சமயம்..
“சரண்யா..” என்றழைத்தவன்… திரும்பித் தன்னை நோக்கியவளிடம்..
“போல்டா என் கண்ணைப் பார்த்து ஆமா, சைட் அடிச்சேன்னு சொல்ற சரண்யா தான் எனக்கு வேணும். புரிஞ்சதா?” என்றான் அதட்டலுடன்.
“………….” – இமைக்காமல் பார்த்தவளின் அருகே மீண்டும் நெருங்கிப் புருவத்தை உயர்த்தியவனிடம் லேசாகத் தலை சாய்த்து “எ..என்னை அ..அவ்ளோ லவ் பண்றீங்களா?” மெல்லிய குரலில் முணுமுணுத்தாள் அவள்.
அவளையே பார்த்தபடி உதடுகள் விரியப் புன்னகைத்தவன் “எப்படி ப்ரூவ் பண்ணனும்?” என்று வினவியபடியே அவள் வலது கை விரல்களைத் தன் ஐவிரல்களால் இறுகப் பற்றினான்.
“எப்படி ப்ரூவ் பண்ணுவீங்க?”
பற்றியிருந்தக் கரங்களை இழுத்து அவளைத் தன் மேல் சாய்த்து… “வாழ்நாள் முழுக்க உன் கூடவே வாழ்ந்து” என்றான்.
மீண்டும் வெட்கம் படர சூடாகிப் போன கன்னங்களை உணர்ந்து மெல்ல அவனிடமிருந்து விலகினாள் அவள்.
அவள் கரத்தை விடாமல் பற்றி அவள் முகத்தை நோக்கியவனிடம் அவள் என்னவென்று வினவ…. ஒன்றுமில்லையெனத் தலையாட்டியவன்… அவளையே ஒரு மாதிரி நோக்கி “எப்போ என் லவ்வை ப்ரூவ் பண்ணலாம்ன்னு சகுனம் பார்த்திட்டிருக்கேன்” என்றான்.
முகம் மாற விலக எத்தனித்தவளிடம்….
“ப்ச், தள்ளிப் போகாத” – என்றான்.
மீண்டும் விலகினாள் அவள்.
“ஏய் எதுக்கு விலகிப் போற?, உங்கப்பன் பர்மிஷன் கொடுத்தாத் தான் பக்கத்துல வருவியா?”
“இப்போ எதுக்கு எங்கப்பாவை இழுக்குறீங்க?”
“அப்போ பக்கத்துல வா”
“மாட்டேன்”
“ஏன்?”
“நீங்க முதல்ல வேற ஷர்ட் சேஞ்ச் பண்ணுங்க ப்ளீஸ்”
“எதுக்கு?”
“உங்க பர்ஃப்யூம் ஸ்மெல் பயங்கரத் தூக்கலா இருக்கு” – முகத்தைச் சுழித்தபடியே மூக்கைச் சொரிந்தவளைக் கண்டு முறைக்க முயன்று முடியாமல் சிரித்து…. “போடி” என்று விட்டு நகர்ந்தான் அவன்.
விஜய்- சரண்யா இருவருக்கும் அன்று காலை கபாலீஸ்வரர் கோவிலில் திருமணம் முடிந்திருந்தது. அவன் மீது முழுக்கோபத்தில் இருந்த ராகவனிடம் எப்படியோ பேசிச் சமாளித்து சரண்யாவைத் தன் வீட்டிற்கு அழைத்து வர… அவரை பார்த்தசாரதியிடம் பேச அனுப்பினான்.
தாலியென்று ஒன்று கழுத்தில் ஏறாமல் பெண்ணை அனுப்ப முடியாது என்று பார்த்தசாரதி கூறி விட.. அந்த வாரமே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான் விஜய். இன்னமும் அவனுக்கும்,பார்த்தசாரதிக்கும் சாதாரணப் பேச்சு வார்த்தைக் கூடக் கிடையாது! ஏன், அவருக்கு அவன் மீது நல்ல எண்ணம் கூட வரவில்லை! திருமணத்திற்குச் சம்மதமா என்று சரண்யாவிடம் கேட்ட போது அவள் தலையாட்டியதால்.. அவரும் சம்மதித்திருந்தார். அவள் தான், அன்று அவன் வீட்டிற்குச் சென்று வந்ததிலிருந்து மந்திரித்து விட்ட ஆட்டைப் போலல்லவா சுற்றிக் கொண்டிருக்கிறாள்?, அதனால் அனைத்தையும் அவர்கள் போக்கிற்கே விட்டனர்!
திருமணம் முடிந்த கையோட அன்றே மும்பைக்கு ஃப்ளைட் ஏறி விட்டான் அவன்! இரு பெற்றோர்களுமே திருப்தியான மனநிலையில் இல்லையென்பதை அவன் உணர்ந்தேயிருந்தான். இங்கேயிருந்தால் தேவையில்லாத மனக்கஷ்டம் தான்! ஆளாளுக்கு ஒன்றைப் பேசித் தலைவலியைக் கொடுப்பார்கள்! நாட்கள் கடந்ததும், கோபம் குறைந்த பின், அவர்களுக்குத் தங்கள் மீது நம்பிக்கை தோன்றியதும் இந்தப் பக்கம் தலையைக் காட்ட வேண்டியது தான் என்றெண்ணிக் கொண்டு மனைவியுடன் தனது மும்பை ஃப்ளாட்டுக்குள் அடியெடுத்து வைத்தான்.
வீட்டிற்கு வந்து இறங்கியதும், இருந்த சோர்வில் அப்படியே சோபாவில் சுருண்டு விட்டவளைக் கண்டுச் சிரித்து.. அவன் அறைக்குள் நுழைந்தான்.
அவன் மீண்டும் திரும்பி வந்த போது, அவள் முழுத் தூக்கத்திற்குச் சென்றிருந்தாள். புன்னகையுடன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன் தானும் அறைக்குச் சென்று உறக்கத்தைத் தழுவினான்.
மறுநாள் காலை எழுந்து குளித்து அலுவலகத்திற்குத் தயாராகி அவன் வெளியே வரும் போது… கையில் காஃபி கப்புடன் டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் சரண்யா.
தூக்கிக் கட்டியக் கொண்டையுடனும், ட்ராக்-ஷூட்,டீ-ஷர்ட் சகிதமிருந்தவள், அவனைக் கண்டதும் எழுந்து நின்றாள்.
“ஏன் சீக்கிரம் எழுந்துட்ட?, இன்னும் தூங்கிட்டிருப்பன்னு நினைச்சேன்” -விஜய்
“இல்ல… தூக்கம் வரல”
“சரி, நான் ஆஃபிஸ் கிளம்பனும் சரண்யா! இந்த வீக் நிறைய மீட்டிங்க்ஸ் இருக்கு! என்னால எதையும் அவாய்ட் பண்ண முடியாது! நெக்ஸ்ட் வீக் மிட்-ல இருந்து ஒரு பத்து நாள் லீவ் சொல்லலாம்ன்னு இருக்கேன்”
“………….”
“நீயும் கூட உன் கம்பெனில ரெசிக்னேஷன் அப்ளை பண்ணிடு! நோட்டிஸ் பீரியட்க்கு பே பண்ணிக்கலாம் நாம! இங்க நீ கொஞ்சம் செட் ஆனதும், நம்ம கம்பெனில ஜாயின் பண்ணிக்கலாம்”
“………….”
“என்ன எதுவும் பேச மாட்டேங்குற?, முதல் நாளே வெளியே கிளம்புறானேன்னு தோணுதா?, எனக்கு வேற வழி இல்ல! அதான், மேனேஜ் பண்ணிப்ப தான?,” – பேசிக் கொண்டே சென்றவன்… முகம் சுருங்க.. நின்றிருந்தவளைக் கண்டு.. “என்னாச்சு?” என்றபடி அருகே சென்றான்.
“எனக்கு இப்போ எப்படியிருக்குத் தெரியுமா?” – சரண்யா
“எப்படியிருக்கு?” -விஜய்
“ஹை-வேஸ்ல உங்களோட பைக்-ல ஹை ஸ்பீட்ல போயிட்டிருக்கிற மாதிரி இருக்கு! வேகத்தைக் குறைங்கன்னு நான் கத்துறது கேக்குதா கேக்கலையான்னு உங்க சட்டையைப் பிடிக்கனும் போல இருக்கு”
முட்டைக் கண்ணை விரித்தவளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு. நெற்றியைச் சொரிந்தபடி முறுவலை அடக்கினான்.
“நீ..நீங்க என்னைப் ப….த்…..து வருஷமாக் காதலிக்கிறதா சொன்னதையே நான் இன்னும் டைஜெஸ்ட் பண்ணி முடிக்கல! அதுக்குள்ள…. கல்யாணம், மும்பை ட்ராவல்ன்னு வரிசையா… எல்லாம்! என்னவோ நீங்க என் கையைப் பிடிச்சு இஷ்டத்துக்கு இழுத்துட்டுப் போற மாதிரி ஒரு ஃபீல்! எனக்கு.. எனக்கு ப்ரேக் வேணும்” – சிறுபிள்ளையாய் சிணுங்கியவளைக் கண்டுச் சிரித்து.. அவள் இடையைப் பற்றித் தூக்கி மேஜையில் அமர வைத்தான்.
அவளை நெருங்கி.. காதோரத்தில் புரண்டிருந்தக் கூந்தலை ஒதுக்கித் தன் இருகைகளால் அவள் முகம் பற்றியவன்…. “என்ன ப்ரேக் வேணும்” என்றான்.
தனக்கு வெகு அருகே தெரிந்த அவன் கண்கள் வெளிப்படுத்தியக் காதலில்,ஆசையில், இன்னும்.. இன்னும் ஏதேதோ… உணர்வுகளில் சிக்குண்டு விழி விரித்தவளின் இதயம்… அந்தக் கண்களுக்குள் மொத்தமாய் விழுந்து விட… இமை தட்டி விழித்தாள் அவள்.
உதட்டைக் கடித்தபடிப் பார்வையைத் தழைத்தவள், இன்னமும் அவன் கைகளுக்குள் சிக்குண்டிருந்தத் தன் கன்னங்களில், அவனது உள்ளங்கை சூட்டை உணர்ந்தபடி.. “எனக்கு காஃபி போட மட்டும் தான் தெரியும், வேற எதுவும் சமைக்கத் தெரியாது.” என்றாள் திடீரென்று.
“பரவாயில்ல! சமைக்க ஆள் வைச்சுக்கலாம்” - விஜய்
“இனிமேலும் கத்துக்குவேன்னு சொல்ல முடியாது”
“கத்துக்க வேண்டாம்”
“ஆ..ஆசையா புருஷனுக்கு சமைச்சுப் போடுற பொண்ணுங்க கேட்டகரில நான் வர மாட்டேன்”
லேசாக நகைத்தவன் “தெரியும்” என்றான்.
“நான் **** கோர்ஸ் படிக்க ப்ளான் வைச்சிருக்கேன்! சிக்ஸ் மந்தஸ் கோர்ஸ்! லண்டன்ல ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டில அப்ளை பண்ணியிருக்கேன்”
“படிக்கலாம்! நானும் வர்றேன்! சேர்ந்து படிக்கலாம்!”
“………………….” – அவன் கண்களைத் தவிர எங்கெங்கோ நோக்கியபடி அனைத்தையும் கூறியவள், பார்வையை எங்கோ பதித்துக்கொண்டு முழுதாக ஒரு நிமிடத்தைக் கடத்தினாள்.
பின் அவன் கண்களை நோக்கி “என்னை ஏன் உங்களுக்குப் பிடிச்சிருக்கு?” என்று கேட்டாள்.
“தெரியல, பிடிச்சிருக்கு”
“எப்போயிருந்து என்னை லவ் பண்றீங்க?”
“நீ என்னை சைட் அடிச்ச நாள்-லயிருந்து”
“அப்டின்னா, ஏன் அப்பவே சொல்லல?”
“எங்கப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது! பெல்ட்டைக் கழட்டிடுவார்ன்னு பயந்து நீ விலகிப் போயிட்டேனா?, அதனால தான் சொல்லல”
“……………….”
“சரண்யா…….”
“ம்ம்”
“என் லவ்வை ப்ரூவ் பண்ண சகுனம் பார்த்திட்டிருக்கிறதா சொன்னேனே!, நியாபகம் இருக்கா?”
“ம்ம்”
“இப்போ பண்ணட்டுமா?”
-கிறங்கி வெளி வந்த அவன் குரலில்.. பார்வை தன்னாலேயே தாழ்ந்து விட.. அவன் பற்றியிருந்தக் கன்னங்கள் சிவப்பதை அவளால் உணர முடிந்தது. தொங்கிக் கொண்டிருந்த உள்ளங்கால்களில் தொடங்கியக் குறுகுறுப்பு.. உடல் முழுதும் வேகமாகப் பரவி.. மொத்தமாய் அவன் பற்றியிருந்தக் கன்னங்களில் குடி கொண்டு விட்டதாய் உணர்ந்தாள்.
அவள் கன்னத்தை அசைத்து… அவள் விழிகளைத் தன்னை நோக்கித் திரும்பச் செய்தவன்…. மெல்ல அவள் இதழ் நோக்கிக் குனிந்தான்.
அவன் செய்கையை விழி விரியப் பார்த்தபடி இமைக்க மறந்து அமர்ந்திருந்தவளைக் கண்டு நிமிர்ந்து… அவள் நெற்றியில் தன் நெற்றியை அழுத்தியவன்…
“பிடிக்கலன்னு தோணுதா?” என்றான்.
மறுத்துத் தலையசைத்தவள் அவன் விழிகளை நோக்கியபடி “ரொம்பப் பிடிச்சிருக்கோன்னு தோணுது” எனக் கூற.. உதடு நெளியப் புன்னகைத்தவன்…. தன் விழிகளை மூடி.. அவள் நெற்றியை மேலும் அழுத்தி… “இப்போ கிஸ் பண்ணட்டுமா?, வேண்டாமா?” என்றான்.
“தெரியல….” – மெல்லிய குரலில் முனகியவளின் இதழோரத்தில் அழுந்த இதழ் பதித்தவன்… பின் நிமிர்ந்து.. அவள் இடையைப் பற்றித் தூக்கி, மேஜையிலிருந்துக் கீழே இறக்கி விட்டு….
“ஏற்கனவே நான் ரொம்ம்ம்ம்ப லேட் மேடம்! அதனால நிறைய ப்ரேக் எடுத்துடாதீங்க” எனக் கூறி அவள் தலை முடியைக் களைத்து விட்டுக் கிளம்பினான்.
அன்றிரவு அவன் அலுவலகத்திலிருந்துத் திரும்பி வந்த போது அவள் மீண்டும் அதே சோபாவில் உறங்கிப் போயிருந்தாள். அன்று மட்டுமல்லாது அடுத்தடுத்த நாட்களிலும் அதுவே தொடர.. யோசனையுடன் நடமாடிக் கொண்டிருந்தான் அவன்.
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.
காலை எழுந்துக் குளித்து தலையில் சுற்றியிருந்த டவலுடன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவளை “சரண்யா…” என்றழைத்த விஜய்யின் குரல் பெட்ரூமிலிருந்து ஒலித்தது.
“வந்துட்டேன்..” என்றபடியே அறைக்குள் நுழைந்தவள் அவன் முன்பு வந்து நின்றாள்.
“உன் கிட்டக் கொஞ்சம் பேசனும்” – வெகு தீவிரமாக முகத்தை வைத்திருந்தவனைக் கண்டு புருவம் நெரித்தவள் “சொல்லுங்க” என்றாள்.
“நமக்குக் கல்யாணமாகி ஒரு வாரம் ஆயிடுச்சு! தெரியுமா?”
“ம்!, அதுக்கென்ன இப்போ?”
“நானும் இந்த ஒரு வாரமா உன்னை நோட் பண்ணிட்டுத் தான் இருக்கேன்! உன் கிட்ட என்னவோ மிஸ்ஸிங்”
“என்ன மிஸ்ஸிங்?”
“உன் பழையத் துடுக்குத்தனம், வாயாடுறது, சண்டை போடுறது… இப்படி நிறைய்ய்யயய..”
“ப்ச், நீங்க காலைல 8 மணிக்கு ஆஃபிஸ் போனா.. நைட் பத்து மணிக்குத் தான் வீட்டுக்கு வர்றீங்க! இந்த கேப்ல என்னை எப்போ நோட் பண்ணீங்க?”
“சரண்யா.. இல்லாட்டியும் உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?, நீ பழைய மாதிரி இல்ல”
“………….” – பதில் கூறாமல் முறைத்தாள் அவள்.
“ஒரு வேளை… உன் கொள்கை,கோட்பாடுகள் எதுவும் நிறைவேறாம போன விரக்தில இப்டி ஆயிட்டியோ!” - சந்தேகமாய் அவன்.
“குடிச்சிருக்கீங்களா?”
“என்னடி இப்படிக் கேட்குற?”
“பின்ன ஏன் வந்ததிலிருந்து உளறிட்டிருக்கீங்க?”
“நான் உளர்றேனா?” என்று பதிலுக்கு அவளை முறைத்தவன் பின் முகத்தை மாற்றிக் கொண்டு.. “சரண்யா….” என்றான்.
“சொல்லுங்க”
“உனக்காக, என் லைஃப்ல நான் இப்போ ரொம்ப முக்கியமான ஒரு டெசிஷன் எடுத்திருக்கேன். அதைக் கேட்டா.. நீ சந்தோசத்துல அதிர்ச்சியானாலும் ஆயிடுவ”
“எ…என்ன? இப்போ என்னப் பண்ணி வைச்சிருக்கீங்க?”
“ப்ச், பதறாத சரண்யா! எல்லாம் நல்ல விசயம் தான்!”
“சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க சீக்கிரம்”
-பொறுமையற்றுக் கத்தியவளிடம் “இரு” என்றபடி நகர்ந்து சென்றவன் கப்போர்டிலிருந்து ஏதோ காகிதத்தை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
“என்ன இது?” – சரண்யா
“பிரிச்சுப் பாரு”
-அவன் நீட்டியக் காகிதத்தைப் பிரித்துப் பார்த்தவள், அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள். அது ஒரு சான்றிதழ்! பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்!
**** - தேதிப்படி, விஜய்குமார் என்கிற அவனது பெயர் ஜோசஃப் விஜய் (?!) என மாற்றப்பட்டிருந்ததற்கான சான்றிதழ்!
திறந்த வாயுடன் அவனை நிமிர்ந்து நோக்கியவளை மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாகத் தன் கழுத்து சங்கிலியை எடுத்துக் காட்டியவன்…
“ரொம்ப நாளா ருத்ராட்சம் போட்டுக்கனும்ன்னு ஆசை வைச்சிருந்தேன்! பட், எப்போ உன் கழுத்துல தாலி கட்டுனேனோ, அப்பவே அந்த ஆசையை விட்டொழிச்சுட்டு இந்த சிலுவையை மாட்டிக்கிட்டேன்” – பெருமூச்சுடன் கூறி.. கர்த்தரே என்னை ரட்சிப்பீராக என்று முணுமுணுத்தான்.
அவனையே இன்னமும் பிளந்த வாயுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் வாயைத் தன் கைகளால் மூடியவன் “இப்போ ஹாப்பி தானே சரண்யா?, நீ நினைச்ச மாதிரியே இப்போ நீ ஒரு கிறிஸ்டியன் பையனோட பொண்டாட்டியா இருக்க!” எனக் கூறி விட்டு….
“இனிமேலாவது… நைட் சோபாவிலயே படுத்துக்காம… பெட் ரூம்ல என் பக்கத்துல வந்து படுத்துப்பியா?” என்று வினவினான்.
உடல் குலுங்க.. மெல்ல வாயைத் திறந்து மூச்சை வெளியிட்டவள்.. மெலிதாகச் சிரிக்கத் துவங்கிப் பின் கடகடவென வாய் விட்டு.. விழுந்து விழுந்து நகைத்தாள்.
வயிற்றைப் பிடித்துக் கொண்டுப் படுக்கையில் உருண்டு,பிரண்டு சிரித்தவளைக் கண்டு எரிச்சலுற்று “ஏய், எதுக்குடி சிரிக்கிற?” என்றுக் கத்தினான் அவன்.
“எ.என்னை அரை மென்டல், அரை மென்டல்ன்னு சொல்லி,சொல்லி.. நீ..நீங்க இப்போ முழு மென்டல் ஆயிட்டீங்க! ஹாஹாஹாஹா….” – கண்களில் நீர் வழிய… சிரித்தவள் இன்னமும் நிறுத்திய பாடில்லை.
வயிற்றிலிருந்த அவளது இரண்டு கைகளையும் பற்றி, படுக்கையில் அழுத்தி… அவள் மீதுத் தானும் சாய்ந்தவன் “4 நாளா மண்டையைக் குழப்பி, நான் ஒரு ஐடியா கண்டுப்பிடிச்சு, அவசர,அவசரமா அதை செயல்படுத்தினா.. நீ.. நீ என்னையே கேலி பண்ணி சிரிப்பியா…” என்றவன் குனிந்து அவள் கன்னத்தில் பற்கள் பதியக் கடித்து வைக்க.. ஆஆஆஆஆ-வெனக் கத்தி மேலும் சிரித்தாள் அவள்.
தனது அறைக்குள்…. தனது படுக்கையில்.. தன்னுடைய காதலி…! முழுச் சிரிப்புடன்.. அவன் கைகளில்! கவிதையாய்த் தோன்றிய அந்த நொடியை முழுதாக அனுபவித்தவன்… பற்றியிருந்த அவளது கைகளை எடுத்துத் தனது கழுத்தில் கோர்த்துக் கொண்டு… அவள் கழுத்தில் அழுந்த இதழ் பதித்தான்.
நொடியில் உடல் சிலிர்க்க… தானாக மூடி விட்டக் கண்களுடன்.. மயங்கத் தொடங்கிய சரண்யாவின் முகத்தில் அத்தனைக் காதல்!
நிமிர்ந்து… அவள் கண்களில் இதழ் பதித்தவன்.. காதருகே குனிந்து “சரண்யா” என்றான்.
“ம்ம்” – சரண்யா
“நீ கேட்ட ப்ரேக்…. எப்போ முடியும்?”
“………………” – பதிலற்றுக் கண் மூடியிருந்தவளைப் புரட்டித் தன் மீது போட்டுக் கொண்டவன்…. “எப்போ வைச்சுக்கலாம்?” என்றான்.
புரியாமல் நோக்கியவளிடம் “நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை!” எனக் கூறிக் கண்ணடித்தான்.
முகம் சிவக்க.. அவனிடமிருந்து விலக எத்தனித்தவளை இழுத்துத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டவன்… விரிந்திருந்த அவளது கூந்தலை மெல்ல வருடினான்.
“சொல்லுடி..”
“நீங்க…. நீங்க இன்னும் சொல்லவேயில்லை” – தயங்கிய குரலில் கூறினாள்.
“என்னன்னு?”
“ஐ லவ் யூ-ன்னு?” – சிறுபிள்ளைத்தனமான முகபாவத்துடன் சிணுங்கிய குரலில் கேட்டவளிடம் “சொல்லித் தான் தெரியனுமாடி?, உனக்காக மதம் மாறி, பேரை மாத்தி ஜோசஃப் விஜய்ன்னு வைச்சிருக்கேனே! அப்போவே புரியலயா உனக்கு?” – என்று அவன் கூறவும் மீண்டும் கடகடவென வாய் விட்டுச் சிரித்தாள் அவள்.
“நான் உங்கக்கிட்ட கேட்டேனா மதம் மாறச் சொல்லி?, சரியான ஆர்வக்கோளாறு”
“எல்லாம் நேரம் டி! நீயெல்லாம் என்னைப் பார்த்து ஆர்வக்கோளாறுன்னு சொல்ற? கர்த்தாவே!”
“ஹாஹாஹாஹா….”
“பின்ன எதுக்குடி வந்ததுல இருந்து சோஃபால படுத்துத் தூங்குற?”
“ப்ச், பர்ப்பசா-லாம் பண்ணல! டெய்லி நீங்க லேட்டா வருவீங்க! உங்களுக்காக ஹால்ல டிவி பார்த்துட்டே வெய்ட் பண்ணிட்டிருப்பேன்! அப்டியே தூங்கியும் போயிருப்பேன்!”
“எவ்ளோ அசால்ட்டா சொல்ற நீ?, நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?”
“ஏன் பயப்படனும்?, வைஃப் தூங்கிட்டிருந்தா.. தூக்கிட்டு வந்து.. பெட்ல படுக்க வைக்கத் தெரியாதா?, சரியான அரை மென்டல்!” – என்றபடியே எழுந்து சென்றவளை அடிப்பாவி! என்கிற பார்வையுடன் ஆ-வெனப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அன்றிலிருந்துத் தொடங்கி அடுத்து வந்த ஒவ்வொரு இரவிலும் அவனுடன்… அவன் கையணைப்பில் தான் அவள் உறங்குவது!
தொடர்பற்றுப் போன பின்பும் மீண்டும் அவள் வாழ்வினுள் அதிரடியாய் நுழைந்து… அவன் போக்கிற்கு அவளை இழுத்து.. தன் காதலைச் சொல்லி, அவளையும் காதலிக்க வைத்து… வாழ்க்கைப் பாதையையே மாற்றி…. இன்று இத்தனை சந்தோசத்தையும் ஒட்டுமொத்தமாக அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருப்பவனை எண்ணி எண்ணி… நேசம் பொங்கியது அவளுக்கு.
ஏற்கனவே கூறியதைப் போல், அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்த கம்பெனியிலிருந்து அவளை விலக வைத்தவன், தன்னுடைய கம்பெனியில் அவளை ஆர்க்கிடெக்ட்-ஆக அப்பாயிண்ட் செய்து கொண்டான்! ஒரு அத்திபுத்திசாலி! கோல்ட்மெடலிஸ்ட்டை சேர்த்துக் கொள்ள.. கசக்குமா என்ன?, நண்பர்கள் அனைவரும் அவளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்காதக் குறை ஒன்று தான்!
அன்று அனைவரும் அலுவலகத்தில் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்டு கொண்டிருந்தனர்.
“என்னம்மா சரண்யா, நீ என்ன சாப்பாடு கொண்டு வந்திருக்க?, அண்ணனுக்கு எடுத்து வை! ஒரு கை பார்க்கிறேன்!” – அவளுக்கு சமையலில் ஏ,பி,சி,டி கூடத் தெரியாது எனத் தெரிந்தும் அவளை வம்பு செய்யும் நோக்கத்துடன் அசோக்.
“ஏய்… பொண்டாட்டியை சமைக்க விட்டு வேடிக்கை பார்க்குற ஆளுன்னு நினைச்சியா என்னை?” – அவளைக் காப்பாற்றி விடும் நோக்கத்துடன் பொங்கினான் விஜய்.
“நீ சமைச்சு பொண்டாட்டிய வேடிக்கை பார்க்க வைக்குற ஆம்பள நீயின்னு எனக்குத் தெரியும் மச்சி” – அவன் கலாய்த்ததும் கூட்டம் நகைக்க.. எரிச்சலுடன் நண்பனை முறைத்தான் விஜய்.
“ஏன் சரண்யா?, இவ்ளோ நாளா தான் ஒண்டிக்கட்டையா வெளியே சாப்பிட்டு சுத்திட்டிருந்தான்! நீ வந்தப்புறமாவது அவனுக்கு வீட்டு சாப்பாடு கிடைக்கும்ன்னு நினைச்சோமே” – அகத்தியன் கேட்டக் கேள்விக்கு என்ன கூறுவதென்றேத் தெரியவில்லை அவளுக்கு.
“ப்ச், அண்ணா! ஆஃபிஸ் வர்க்கும் பார்த்துக்கிட்டு, சமையலையும் அவளால ஹாண்டில் பண்ண முடியுமா?, ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம்ன்னு நான் தான் அவளை ஸ்டாப் பண்ணி வைச்சிருக்கேன்! மோர் ஓவர், கல்யாணம் ஆனதும் புருஷனுக்கு சமைச்சுப் போட்டே ஆகனும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா?, வயித்துப்பசின்றது எல்லாருக்கும் ஒன்னு தான்! பொண்ணுங்களை மட்டும் இந்த விசயத்துல பிரஷர் பண்றது ரொம்பவும் தப்பு”
-அவன் ஏதேதோ வாதாடினாலும், சரண்யாவுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி! இதுவே முன்னைப் போல் என்றால்.. பொண்டாட்டி என்ன சமையல்காரியா என்று சண்டைக்குப் போயிருப்பாள்! ஆனால்.. இப்போதிருக்கும் சரண்யா.. விஜய்யின் காதலியாயிற்றே! கொஞ்சம் அவனை உற்று நோக்கினால்.. இந்தத் திருமணம் நடந்த ஒரு மாதத்தில் லேசாக இளைத்து விட்டானோ! கவலையுடன் அவனை நோக்கிக் கொண்டிருந்தவளைக் கண்டு விஜய்யின் தோளை இடித்தான் பரத்.
“என்னாச்சு?” – வினவியபடியே அவளருகே வந்தவனின் சட்டைக் காலரைப் பற்றித் தன்னருகே இழுத்தவள்… “உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்துறேனா?” என்று வினவ….. சட்டையில் பதிந்திருந்த அவள் கரத்தை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு.. “உன்னால எனக்கென்ன கஷ்டம்?,லூசு மாதிரி பேசாதடி” என்றான் அவன்.
அன்று மாலை அலுவலகத்திலிருந்து ஐந்து மணிக்கேக் கிளம்பி விட்டாள். இரவு விஜய் வீடு திரும்பிய போதுத் முகம் முழுக்க சிரிப்பும், கையில் கரண்டியுமாய் அவனை வரவேற்றது சாட்சாத் சரண்யா தான்!
புருவத்தைத் தூக்கி விசிலடித்தபடி உள் நுழைந்தவன்.. “என்னடி கிட்சன்ல இருந்து ஏதோ ஸ்மெல் வருது?” என்று வினவியபடி நேராக கிட்சனுக்குச் செல்லப் பார்க்க அவனைப் பிடித்து நிறுத்தி… பெட்ரூமை நோக்கித் திருப்பியவள்… “சர்ப்ரைஸ்! நீங்க ஃப்ரெஷ் அப் பண்ணிட்டு வாங்க” என்று அனுப்பி விட்டாள்.
அவன் திரும்பி வந்து அடுக்களைக்குள் நுழைகையில் மூடி போட்டிருந்தச் சட்டியைத் திறப்பதும்,கிண்டுவதுமாக இருந்தாள் அவள். அருகிலிருந்த செல்ஃபோனில் பாடல் வேறு விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.
இன்று மதியம் அனைவரும் கேலி செய்ததன் தாக்கம் என்பதை நொடியில் புரிந்து கொண்டவனின் இதழ்கள் புன்னகையில் நிரம்ப… அவளையேக் காதலுடன் நோக்கியபடி சமையல் மேடையில் கையைக் கட்டிக் கொண்டு சாய்ந்து நின்றான்.
“ஆஆஆசையா புருஷனுக்கு சமைச்சுப் போடுற பொண்ணுங்க கேட்டகரில நீ வர மாட்ட-ன்னு சொன்ன?”
நிமிர்ந்து அவனை முறைத்தவள் “ஸ்டவ்வை ஆஃப் பண்ணிடட்டுமா?” என்று வினவ… “ஏய்,ஏய் வேணாம்” என்றவன் தொடர்ந்து “பசிக்குதுடி” என்றான்.
“அவ்ளோ தான் முடிஞ்சது” என்றவள் ஸ்டவ்வை அணைத்து விட்டு ஒரு ஸ்பூன் கொண்டு தான் சமைத்ததை எடுத்து சுடச்சுட… அவனுக்கு ஊட்டினாள்.
பெரிதாக எதுவுமில்லை! ஃப்ரிட்ஜினுள் இருந்த ப்ரெட்டையும்,முட்டையையும் வைத்து… உப்புமா போல் கார,சாரமாக ஏதோ செய்திருந்தாள்! நன்றாகத் தானிருந்தது!
மலர்ந்த முகத்தில் எதிர்பார்ப்புடன்.. தான் கொடுத்ததை வாயில் மென்று கொண்டிருந்தவனின் முகத்தையே ஆர்வம் குறையாமல் நோக்கிக் கொண்டிருந்தாள்.
“எப்படியிருக்கு?”
மென்றபடியே சூப்பர் எனக் கைக் காட்டி விட்டு அவளையே நோக்கினான் அவன்.
பின் அவளும் எடுத்து சுவைத்துப் பார்த்து “ம்ம்ம்ம்ம்ம்” எனக் கண்ணை விரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த… அதற்கு மேல் பொறுக்காமல்…. இருகைகளால் அவளை அள்ளி.. அவள் இதழ்களை தன் வசப்படுத்தியிருந்தான் அவன்.
விரிந்த விழிகள்… மேலும் விரிந்துப் பின் நொடியில் இமைகளால் தன்னைப் போர்த்திக் கொள்ள…. அவளது நெகிழ்ச்சியில் கிளர்ந்து… அவளை இன்னமும் தன்னுள் அழுந்தப் புதைத்தான் அவன்.
‘நாளொரு யுத்தமும்,முத்தமுமென்று….
போகட்டும் எப்பவும் இப்படியே!!!!!!!!!!!!’ – செல்ஃபோனிலிருந்து எஸ்.பி.பியின் குரல் அழகாய் ஆசிர்வதித்தது.
நொடிகளோ, நிமிடங்களோ… நின்று போய் விட்டதாக அவர்கள் எண்ணியிருந்த பூமி, மீண்டும் சுற்றத் தொடங்கியதை உணர்ந்த கணம், அவளை விட்டு விலகியவன்… அவள் முகத்தைத் தன் நெஞ்சில் சாய்த்துத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.
‘சரண்யா….”
“ம்ம்ம்”
“எப்போ வைச்சுக்கலாம்?”
“…………………”
“காதல் கை கூடுறதுக்காக மட்டும் தான் டி காத்திருக்க முடியும்! இதுக்கும் கூடவா?”
“…………..”
“பதில் பேசுடி”
“நாளைக்குக் கோவிலுக்குப் போகலாமா?”
“கோவிலுக்கா? எதுக்கு?”
“ப்ச், சொல்லுங்க…..”
“பெரியார் ஃபாலோயர்டி நீ! உனக்கு எதுக்குக் கடவுள் பக்தி?”
“உங்களைக் கல்யாணம் பண்ணப்புறம் நான் மாறிட்டேன்! பதில் சொல்லுங்க. போகலாமா?”
“ஓ! போகலாமே! தாராளமா போகலாம்! பட், மிஸஸ் சரண்யா.. நான் கேட்டக் கேள்விக்கு இது பதில் இல்ல” – தன் தலையில் தட்டியவனின் கைகளை விலக்கி.. நிமிர்ந்தவள்.. “நாளைல இருந்து வாழ்க்கையத் தொடங்கப் போறோம் சாமி!, இப்ப மாதிரி எப்பவும் என் புருஷனோடு நிம்மதியும்,சந்தோசமுமா வாழனும்ன்னு நான் வேண்டிக்கனும் அதனால தான் உங்களை கோவிலுக்குக் கூப்பிட்றேன்” என்று கூற…. ஒரு நிமிடம் புரியாது விழித்தவன்.. பின் புரிந்து… “ஹேய்ய்ய்ய்ய்” என்ற போது அவள் ஓடியே விட்டிருந்தாள்!
மறுநாள் காலை எழுந்த போதே தன்னை நோக்கிக் கண்ணடித்துச் சிரித்தவனைக் கண்டுத் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக முறைத்து வைத்தாள் அவள்.
அன்று முழுவதும் அவன் கேட்ட கேள்விகளில் மொத்தமாகக் கடுப்பேறிப்போயிருந்தாள்.
“நீ என்ன ட்ரெஸ் போடப் போற?”
“நான் என்ன ட்ரெஸ் போட்டுக்கட்டும்?”
“இந்த மல்லிகைப் பூ, ஸ்வீட், பழம் இதெல்லாம் வாங்க வேண்டாமா?”
இதை விட இன்னும் கீழிறங்கி வாய் கூசாதக் கேள்விகளையெல்லாம் அவன் கேட்டு வைக்க.. காது சூடாகிப் போய் அவன் மேல் கொலை வெறியிருந்தாள் அவள்.
அவள் விருப்பப்படியே கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கி விட்டு….. ஏகாந்த மனநிலையுடன் வீடு திரும்பிய இருவரையும்.. சற்றும் எதிர்பாராத விதமாக வரவேற்றது அவர்களது நண்பர் பட்டாளம்!
கையில் நுரை பொங்கிய ஷாம்பெய்ன் பாட்டிலை வைத்துக் கொண்டு பலூன்களுடன் “சர்ப்ரைஸ் பார்ட்டிடிடிடிடிடிடி” எனக் கத்தி அனைவரும் இருவரையும் வரவேற்ற போது, விஜய்யின் முகம் போன போக்கைப் பார்த்து… சரண்யாவிற்கு சிரிப்புப் பொங்கியது.
“ஏய்ய்ய் நீங்க என்னடா பண்றீங்க இங்க?” -விஜய்
“சர்ப்ரைஸ் பார்ட்டி மச்சி” – அசோக்.
“எனக்குக் கல்யாணமாகி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு டா! இப்போ என்ன பார்ட்டி வேண்டிக் கிடக்கு?”
“நீ சம்பளம் இப்போ தானடா போட்ட?, அதனால தான்!”
“ப்ச், பூட்டுப் போட்ட வீட்டுக்குள்ள வந்து.. ஏன் டா அழிச்சாட்டியம் பண்றீங்க?” – தலையில் அடித்துக் கொண்டான் அவன்.
“ஏன் மச்சி நாங்க வந்தது உனக்குப் பிடிக்கலையா டா?”
அவனை இடைமறித்த சரண்யா “அய்யோ! அப்படியெல்லாம் எதுவுமில்லண்ணா! நீங்க வாங்க உள்ள” என்றபடி அனைவரையும் உள்ளே அழைத்துச் செல்ல… “ச்ச! கல்யாணத்துக்கு அப்புறம் இந்தப் புள்ள ரொம்ப மாறிடுச்சுடா” என்று சர்டிஃபிகேட் கொடுத்தபடியே உள்ளே நுழைந்தான் அசோக்.
அதன் பின்பு அனைவரும் உண்டு,குடித்து விளையாடி… இரவு வரைப் பொழுதைக் கழித்து விட்டு… பதினோறு மணி வாக்கில்.. கூத்தடித்த வரை போதும் என முடிவு செய்து… ஒரு வழியாகக் கிளம்ப… ஊஃப்ஃப்ஃப்ஃப்ஃப் என மூச்சு விட்டான் விஜய்.
ட்ராக்-ஷூட், டீஷர்ட் சகிதம்…. டைனிங் டேபிளில் கிடந்தவற்றை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்த சரண்யாவின் அருகே சென்றவன்… அவளைப் பின்னிருந்து இறுக அணைத்துக் கொள்ள… சிரிப்புடன் அவன் மார்பில் தலை சாய்த்தவள், ஹாஆஆஆவ்வ்வ்வ் எனக் கொட்டாவியை வெளி விட… “தூக்கம் வருதா?” என்றான் அவன்.
“ஹ்ம்ம் ஹ்ம்ம்”
“அப்போ இன்னிக்கு வேண்டாமா?”
உதட்டை மடக்கிச் சிரித்தபடி அவன் கைகளை விலக்கி விட்டு கிட்சனுக்குள் நுழைந்தாள் அவள்.
“இப்படி சிரிச்சா என்னடி அர்த்தம்?”
“உங்க இஷ்டம்ன்னு அர்த்தம்” – அடுக்களையிலிருந்துப் பதில் வந்தது
“என் இஷ்டம்ன்னா?, அப்போ உனக்கு வேண்டாமா?”
“ஷ்ஷ்ஷ்ஷ்” – என்றபடியே வெளியே வந்தவள்… டைனிங் டேபிள் மீதிருந்த கிஃப்ட் பார்சலை நோக்கினாள்.
தாங்கள் சென்றதும்… உடனே இந்த கிஃப்ட்டைத் திறந்து பார்க்க வேண்டுமென்று அசோக் வற்புறுத்திக் கூறியிருந்தபடியால் ஆர்வத்துடன் அதனருகே சென்றாள் அவள்.
“ப்ச், இப்போ இது ரொம்ப முக்கியமா?” – முணுமுணுத்தவனைக் கண்டு கொள்ளாமல்.. அவள் பார்சலைப் பிரித்த நொடி.. சொத்தென உள்ளிருந்து ஏதோ வந்து அவள் கன்னத்தில் அடிக்க… கிஃப்ட் இருந்த இடம் முழுதும் ஏதோ திரவம் வழிந்தது.
“ச்சிய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்றபடிக் கன்னத்தைத் துடைத்தவளைக் கண்டு.. “ஹாஹாஹா…. வைச்சு செஞ்சுட்டானுங்களா?, நல்ல வேளை நான் தப்பிச்சேன்! என்ன அது?” என்றபடியே அருகே வந்தவன் அந்தத் திரவத்தை எடுத்து நக்கிப் பார்த்து… “சாக்லேட் தான்” என்றான்.
“ச்சை” என்றபடி இன்னும் கன்னத்தைத் துடைத்துக் கொண்டிருந்த சரண்யா கோபத்துடன் “மறக்காம பிரிச்சுப் பாருன்னு எல்லாரும் மொத்தமா சொன்னப்பவே நான் அலெர்ட்டாகியிருக்கனும்! நாளைக்கு ஆஃபிஸ் போய் வைச்சுக்கிறேன்” என்று புலம்ப… அதையெல்லாம் கேட்கும் நிலையில் அவன் இல்லை!
அவனிடமிருந்துப் பதில் வராது போனதும்.. நிமிர்ந்து அவனை நோக்கியவள்.. முகம் மாற.. தனது சாக்லேட் கன்னங்களையே நோக்கியவனைக் கண்டு… விழி விரித்து.. மூச்சடைக்க அமர்ந்து விட..
மையல் கலந்த சிரிப்புடன் அவளை நெருங்கியவன் மெல்ல அவள் கன்னம் பற்றிக் குனிந்து.. சாக்லேட்டின் மீது அழுந்த இதழ் பதித்தான்.
அவனையே இமைக்க மறந்து நோக்கிக் கொண்டிருந்தவளைக் கண்டவன்.. தன் இதழ்களை அவள் கன்னத்திலிருந்து உதடுகளுக்குத் திருப்ப… மெல்லக் கண் மூடினாள் அவள்.
பத்தாண்டுகளாக இருவரது வாழ்விலும் சதி செய்து விட்டுக் கைகொட்டி சிரித்த விதி… அத்தோடு அவர்களைத் தண்ணீர் தெளித்து விட்டு விடாமல்.. மீண்டும் இருவரையும் சந்திக்க வைத்து… சில,பல குளறுபடிகளைச் செய்து.. கடைசியில் ஒன்று சேர்த்து… ஒரு அழகான தாம்பத்தியத்தையும் உருவாக்கி வைத்திருந்தது.
ஏதேதோ கொள்கை,கோட்பாடுகள் என்ற பெயரில் அவனது காதலைப் உணர்ந்து கொள்ளும் முதிர்ச்சியின்றி அவனுடனான நாட்களைக் கடந்திருந்தவள்… அவனை விட்டுப் பிரிந்த பின்பும்… பார்க்கும் ஒவ்வொருவரிடமும் அவனையே தேடிக் கொண்டு ஒரு புறம் திரிய….
அனைத்தையும் ஆராய்ந்து புரிந்து கொள்ளும் பொறுமையும்,தெளிவும் இருந்தும், முரட்டுத் தனமான தன் குணத்தினால், ஈகோவினால்.. கொண்ட காதலைப் பின்னுக்குத் தள்ளி.. காதலியைத் தேடி வராமல்.. இத்தனை ஆண்டுகளைக் கடத்தியிருந்த இவன் ஒரு புறம் திரிய..!
வாழ்க்கையைத் தங்கள் போக்கில் இழுத்துச் சுமந்து கொண்டு… சுமையையும் பொறுக்க முடியாமல்.. தவித்துத் திரிந்த இருவரையும், இழுத்துப் பிடித்து… உண்மையை உணர்த்தி.. இணைத்து வைத்தப் பெருமையை இவ்விதியேப் பெற்றிருந்தது!
ஏதேதோ நினைப்புடன் புன்னகை முகத்தோடு… தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த விஜய்யையே வைத்தக் கண் எடுக்காமல் பார்த்த சரண்யா… அவன் கன்னத்தை மெல்ல வருடி…. “ஐ லவ் யூ” எனக் கூற… 32-பற்களையும் காட்டிச் சிரித்தவன் கண்களை மூடியபடியே நகர்ந்து வந்து அவள் தோளில் தலை சாய்த்தான்….
“என்னை சைட் அடிச்சப்போ சொல்லாம, என் கூடப் பழகினப்புறம் சொல்லாம, ஏன், நான் தாலி கட்டினப்போக் கூட சொல்லாம.. செக்ஸ்க்கு அப்புறம் சொல்றியே! நீ….. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பக் கெட்டவடி!” என்றவனிடம்….
“ச்சிசிசிசிசிசிசி” என்று முகத்தைச் சுழித்தவள் தன் தோளிலிருந்து அவன் தலையைப் பிடித்துத் தள்ளி “நான் ஒன்னும் அந்த மீனிங்ல சொல்லல” என்றாள்.
“நீ அந்த மீனிங்ல சொல்லியிருந்தாலும் எனக்கு சந்தோசம் தான்! என் பர்ஃபாமன்ஸ் உன்னைப் பேச வைச்சதுன்னு பெருமைப்பட்டுக்குவேன்” – என்றவனைக் கொலை வெறியுடன் தாக்கத் தயாரானவளைத் தடுத்து அவள் இதழ் நோக்கிக் குனிந்தான் அவன்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு……………
பரத் வெட்ஸ் மதுபாலா – என்கிற பேனருடன் வரவேற்ற அந்தத் திருமண மண்டபம் முழுதும் நேஷனல் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மாணவ,மாணவிகளால் நிரம்பி வழிந்தது.
உயிர் நண்பன் திருமணம் செய்தாலொழியத் தான் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிற கொள்கையோடு இத்தனை நாட்களாக ஒண்டிக்கட்டையாகக் காலத்தைக் கழித்திருந்த நம் காலேஜ் ஹீரோ பரத்.. இப்போது விஜய்க்குத் திருமணம் முடிந்திருந்தபடியால் ஒரு வழியாகத் தனது நீண்ட நாள் காதலியான செல்வி.மதுபாலா சௌத்ரியைக் கரம் பிடிக்கத் தீர்மானித்து.. இதோ திருமணம் வரை வந்து விட்டான்,
இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அவனது நண்பர் கூட்டம் இதையொரு கெட்-டூகெதர் ஆக்க முடிவு செய்து பத்தாண்டுகளுக்கு முன் தங்களுடன் படித்த மாணவ,மாணவிகள் அனைவரையும் தேடிக் கண்டுப்பிடித்துப் பத்திரிக்கையை நீட்டி, அனைவரையும் ஒன்று கூட்டியிருந்தனர்.
மண்டபம் முழுதும் ஜேஜே-வென ஹிந்தியும்,ஆங்கிலமும் மாற்றி மாற்றி ஒலித்த வண்ணமிருக்க… தன்னுடன் படித்தத் தோழிகளை,சீனியர்களை தன் அன்னைக்கு அறிமுகம் செய்து வைத்தபடி பிஸியாகச் சுற்றிக்கொண்டிருந்தாள் சரண்யா. அவளுக்கு மீண்டும் கல்லூரிக்குள்ளேயே அடியெடுத்து வைத்து விட்ட உணர்வு!
கோபமும்,பொறுமலுமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தப் பார்த்தசாரதியும்,ராகவேந்திரனும் இவர்களிருவருக்கிடையே நிலவிய அன்னியோன்யத்தைப் பார்த்துத் தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அவர்களுடன் இணைந்திருந்தனர்.
சரண்யா எவ்வளவோ வற்புறுத்தியும் பார்த்தசாரதியிடம் விஜய் மன்னிப்புக் கேட்காததால்.. அவர் இன்னமும் மாப்பிள்ளை –என்றாலே சற்று இறுக்கத்துடன் தான் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்.
திட்டித் தீர்த்த அன்னை-மார்களோ இருவரது நேசத்தையும் புரிந்து கொண்டு.. நிம்மதியுற்று.. தங்களது ஸ்டாண்டர்ட் கேள்வியான “எப்போ பேரன்/பேத்தி வரப் போறாங்க?” என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்டு சரண்யாவை எரிச்சல் ஆக்கிக் கொண்டிருந்தனர்.
திடீரென மாப்பிள்ளை வந்துட்டார்! – என்று ஒலித்த சிறுவர்களின் குரல் கேட்டு.. ஒட்டு மொத்த மண்டபமும் திரும்பி வாசலை நோக்கியது.
ஒரே நிற கோட்-சூட்டில்.. குனிந்து ப்ளேசரின் பட்டனைத் திறந்து விட்டபடி விஜய்யும், முன்னுச்சி முடியை விலக்கியபடி பரத்தும் பேசிக் கொண்டே மண்டபத்தினுள் கால் பதிக்க… இருவரையும் காலேஜிலிருந்த அதே க்ரேஸூடன் நோக்கியதுக் கூட்டம்.
கிரிக்கெட் மட்டையைச் சுழற்றியபடி இருவரும் க்ரௌண்டுக்குள் காலடி எடுத்து வைக்கும் போது என்ன மாதிரியான கைத்தட்டல்கள் ஒலிக்குமோ.. அதே கைத்தட்டல்களும்,விசில் சத்தங்களும் காதைக் கிழித்தது.
வயதுக்குண்டான முதிர்ச்சியைத் தவிர்த்து இருவரிடமும் ஒரு மாற்றமுமில்லை! சொல்லப் போனால்.. கம்பீரம் கூடி… இருவர் முகத்திலும் தேஜஸ் அதிகமாகியிருந்தது.
“பரத், பரத், பரத்” என ஒலித்தக் கைத்தட்டல்களை அவன் ஒரு தலையசைப்புடன் ஏற்றபடி முன்னே நடக்க.. கூட்டத்தை ஒரு பார்வைப் பார்த்து விட்டு நண்பனின் தோளைத் தட்டித் தன் 32-பற்களையும் காட்டி அழகாக முறுவலித்த விஜய்யை.. வைத்த விழி எடுக்காமல் ஆ-வெனப் பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்யா.
அன்று போலவே இன்றும் அவள் பார்வை உறுத்த… சுற்றியிருந்தக் கூட்டத்தின் மத்தியில் அவளது பார்வையைக் கண்டு கொண்டவன்.. நின்று அவளை நோக்கித் திரும்பி என்னவென்று கேட்டுப் புருவத்தை உயர்த்தினான்.
இம்முறை படபடத்துத் திரும்பிக் கொள்ளாமல்… தானும் தலை சரித்துப் பதில் பார்வை பார்த்தவள்… மோகனப் புன்னகையுடன்… அவனை நோக்கிக் கண்ணடித்து உதடுகளைக் குவித்து முத்தமிட்டு “ஐ லவ் யூ ஹாண்ட்சம்” என்றாள்.
***************************** முற்றும் ****************************
