காண்பதெல்லாம் காதலடி!
“நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன்” – என்று சரண்யா கூறியதும்.. ஒரு நொடி.. ஒரே ஒரு நொடித் திகைத்த விஜய்.. அடுத்த நொடி முகத்தைச் சரிபடுத்திக் கொண்டான்.
“சோ…. கிடைச்சுட்டான் போல!, கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட அப்பாவி ஜீவன்?” – நக்கலுடன் விஜய்.
“ம்ம்”
“பேர் என்ன?, ஆரோக்கிய தாஸா?”
“ப்ச், சீனியர், அவர் பேரு ஸ்டீபன்”
“உங்கப்பாக் கிட்ட சொல்லிட்டியா?, இனி நீ ஏசுவின் நாமத்தைத் தான் ஜெபிக்கப் போறன்னு?”
“ம்ஹ்ம், இன்னும் சொல்லல”
“ஏன் சொல்லல?”
“ஆ..ஆக்சுவலி, ஸ்டீபனுக்கு இப்போக் கொஞ்சம் ப்ராப்ளம்!, அவர் வேலை பார்த்துட்டிருந்த கம்பெனில இருந்து அவரை லே-ஆஃப் பண்ணிட்டாங்க! அதனால….”
“ஓ!, வேலை வெட்டியில்லாதத் தெண்டக் கருமாந்திரத்தையா லவ் பண்ற நீ?”
“ஏன் இப்படிப் பேசுறீங்க?” – முகம் சுருங்க அவள் கேள்வி கேட்டதும், ஆத்திரம் பொங்கி வழிந்த மனதை நிதானத்துக்குக் கொண்டு வந்தவன்… “இல்ல, நீயே இப்போ 30 வயசை நெருங்கிட்டிருக்க! நீ லவ் பண்றவன் எப்படியும் உன்ன விட 1 வருஷமாவது மூத்தவனா இருப்பான்!, இந்த வயசுல நிலையான வேலை இல்லாத ஒருத்தனை, எப்படி லவ் பண்ணுன?” – எனக் கேட்க.. அவன் கேள்வியில் சுர்ரென்று தலைக்கேறியக் கோபத்துடன்… “அதைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?, நான் அவரைக் காதலிக்கிறேன். எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல. நீங்களும் கீழ போய் இஷ்டமில்லன்னு சொல்லிடுங்க” என்று படபடத்தாள்.
“என்ன மிரட்டுற? ம்?, நீ சொன்னா, நான் கேட்றனுமா?”
“………………..”
“லவ் பண்ற பையனை வீட்ல காட்டிக் கல்யாணத்துக்கு வழி பண்ண, தைரியமில்ல! என்னை மிரட்டுறியா நீ?”
“தைரியமில்லாமல்லாம் இல்ல!, அவருக்கு வேலை கன்ஃபார்ம் ஆனதும், இன்னும் 2,3 மாசத்துல நான் வீட்ல பேசிடுவேன்”
“உங்கப்பா சம்மதிப்பாருன்னு நம்புறியா?”
“அந்தாளு சம்மதத்தை யாரு எதிர்பார்த்தா?”
“ஓ!, அப்போ ஓடிப் போகப் போறியா?”
“ப்ச், நீங்க ஏன் அநாவசியமா கேள்வி கேட்குறீங்க!, என்னைப் பிடிக்கலன்னு சொல்றதுல உங்களுக்கு என்ன அவ்ளோ கஷ்டம்?”
“எனக்கு எந்தக் கஷ்டமுமில்ல!, பட், நீ ஒரு மோசமானவனைக் கல்யாணம் பண்ணி, வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கும் போது.. அய்யோ! அன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு நோ சொல்லாம, கல்யாணம் பண்ணியிருந்தா, இன்னிக்கு இப்டி ஆயிருக்காதேன்னு எனக்குத் தோணிடக் கூடாது இல்லையா?, அதான் கன்ஃபார்ம் பண்ணிக்கிறதுக்காக இத்தனை கேள்வி கேக்குறேன்”
“ப்ச், அய்யோ பாவம்ன்னு நீங்க நினைக்குற அளவுக்கு என் வாழ்க்கை மோசமா போயிடாது!, ஸ்டீபன் எவ்ளோ நல்லவர் தெரியுமா?, மோர் ஓவர், அவங்க ஃபேமிலில எல்லாரும் என்னை அக்சப்ட் பண்ணிக்கிட்டாங்க! எங்கப்பா தண்ணி தெளிச்சு விட்டாலும், எனக்கு அவர் ஃபேமிலி சப்போர்ட் பண்ணுவாங்க! சோ.. நீங்க தேவையில்லாம எதையும் யோசிக்க வேண்டாம்” – கோபத்தில் படபடத்தவளிடம் இறங்கிப் போக.. மனசாட்சி இடம் தராததால்.. முகம் இறுக ஒரு நொடி அமைதியானான் அவன்.
மேலும் வாசிக்க... கீழே உள்ள லிங்க்குகளைக் க்ளிக்கவும்!!!
