அத்தியாயம் - 14
அழகியே… மேர்ரி மீ… மேர்ரி மீ.. அழகியே..
-2018-க்கு வந்தாச்சு!! ட்ரெண்டியான வரிகளையும்,இசையையும் ரசிக்கப் பழகியாச்சு! அப்படியொன்னும் நமக்கு வயசாயிடல! அதனால.. ஷேக் யுவர் பூட்டி! மூவ் யுவர் பாடி!-ன்னு நாமளும் பாடிக்கலாம்! அட்லீஸ்ட் புதுசா வருகை தந்திருக்கிற என் பொண்னோடயாவது என் ரசனைகள் ஒத்துப் போகனுமே! குட்டிப் பாப்பா தான்! ஆனாலும்.. அழகியே.. மேர்ரி மீ..-ன்னு பாடினா.. கலகலன்னு சிரிக்கும்! இப்போதைக்கு என்னோட பிரபஞ்ச அழகி அவ தான்! எத்தனை வருசம் கழிச்சு இந்தப் பாட்டைக் கேட்டாலும், இந்தச் சிரிப்பு கண்ணுல வரும்! நிச்சயமா!
எதிர்பார்த்தபடி சேத்ரனது பேக்கரி பிசினெஸ் பழைய நிலைக்குத் திரும்பி விட.. எல்லாம் என் கேர்ள் ஃப்ரெண்ட் என்னிடம் வந்து சேர்ந்த நேரம் எனப் பீற்றிக் கொண்டு பணியாளர்கள் அனைவரையும் கடுப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தான் சேத்ரன்.
காண்டீபனின் கைங்கரியத்தில் லோக்கல் நியூஸ் பேப்பர் ஒன்றில் இவர்களது பேக்கரியைப் பற்றிய ஆர்டிகல் ஒன்று வெளியாகி அவனை மேலும் குஷியாக்கியிருந்தது. இவை அனைத்திற்கும் இதுவரை சம்பாதித்த பணத்தில் பெருந்தொகையை அவன் செலவிட்டிருந்தாலும்.. எப்படியும் போட்டதைக் கைப்பற்றி விடலாம் என்கிற நம்பிக்கையுடன் விடாமுயற்சியில் ஈடுபட்டிருந்தான். போதாதற்கு அவனது இரண்டு கண்களைப் போல் காண்டீபனும்,நயனாவும் உடனிருந்தது அவனை மேலும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது.
அடுத்த சில வாரங்களில் ட்ரெஸ்டென் பேக்கரி அண்ட் கன்ஃபெக்சனரி ட்ரேட் ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது அவர்களுக்கு! தங்களது தயாரிப்புகளை ப்ரமோட் செய்வதற்கு இது ஒரு நல்ல சான்ஸ் என்பதால் வழக்கம் போல முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர்.
ஜெர்மனியின் பல நகரங்களைச் சேர்ந்த பேக்கரிக்களும்,கன்ஃபெக்ஷனரிக்களும் கலந்து கொண்டிருந்த அந்த ஷோ-வில் தாங்களும் ஒரு ஸ்டால் அமைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்தனர் சேத்ரனது மக்கள். உணவின் தரத்தைக் கண்ட சிலர், ட்ரெஸ்டெனில் மட்டுமல்லாது தங்களது நகரங்களிலும் கூட கடை திறக்கலாமே என்று வேறு கூறி விட்டுச் செல்ல, சேத்ரனைக் கையில் பிடிக்க முடியவில்லை.
ரீ-ஓபனிங் நாளிலிருந்துத் தினம் இரவு இருவரும் பால்கனியில் அமர்ந்து உரையாடுவதை வழக்கமாக்கியிருந்தபடியால் அன்றும் அமர்ந்திருந்தனர்.
“எல்லாரும் சொல்ற மாதிரி பேசாம, நம்ம பேக்கரிக்கு இன்னொரு ப்ரான்ச் திறந்தா என்ன?” - நயனா
“ஹ்ம்ம், பண்ணலாமே! இப்போப் போட்ட முதலீட்டை எடுக்கனும். லாபம் கிடைச்சதுன்னா.. அடுத்த ப்ரான்ச் திறக்கிறதைப் பத்தி யோசிக்கலாம்!”
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்”
“புது ப்ரான்ச்சை மேனேஜ் பண்ணுகிற அளவு ஒரு திறமைசாலியைத் தான் நான் பக்கத்துலேயே வைச்சிருக்கேனே! பின்ன என்ன பயம்!”
“என்னைச் சொல்றேளா?”
“ஆமா. ஏன் உன்னால முடியாதா?”
“ச்ச,ச்ச, எனக்கு அவ்ளோ பேராசையெல்லாம் கிடையாது சேத்ரன்”
அவள் மடியில் தலை சாய்த்திருந்தவன் எழுந்து அமர்ந்து அவளை நோக்கினான்.
“இது பேராசை இல்ல. நயனாவுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான விஷயம்!”
“அதுசரி!”
“ஃபினான்ஸியலி நான் இப்போ கொஞ்சம் வீக்ன்னு உனக்குத் தெரியும்! அதனால நான் ஹெல்ப் பண்றேன் உனக்கு அது,இதுன்னு டயலாக் அடிக்க மாட்டேன்! இத்தனை வருஷம் சம்பாதிச்சு,எப்படியும் பேங்க் பேலன்ஸை ஏத்தி வைச்சிருப்ப!, மேல கொஞ்சம் லோன் போட்டு இன்னொரு ப்ரான்ச் ஓபன் பண்ணி நீயே மேனேஜ் பண்ணிக்கோ! எல்லாத்துலயும் தலையிட்டு உன்னை டாமினேட் பண்ணாம.. ஓரலா.. எல்லா விஷயத்துக்கும் நான் சப்போர்ட்டிவ்வா இருப்பேன். என்ன சொல்ற?”
“ஹ்ம், உங்க உதவியால தான் நான் முன்னாடி வந்தேன்ற பேச்சு பின்னாடி வந்துடக் கூடாதுன்றதுல தெளிவா இருக்கேள்???”
“எக்ஸாக்ட்லி”
“நம்மால முடிஞ்ச அளவு நாம இரண்டு பேரும் சேர்ந்து நடக்கிற இந்தப் பயணத்தை சேஃபா ப்ளான் பண்ணுவோம்! மத்தபடி எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துக்கட்டும்!”
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்”
“இவ்ளோ தான் உன் ரியாக்ஷன் இல்ல?, மத்த பொண்ணுங்களா இருந்தா.. நான் பேசுற,பண்ற இத்தனை விசயங்களுக்கு என்னை கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்திருப்பாங்க”
“இதோடாஆஆஆ! அதான்.. நீங்க தினம் கொடுக்கிறேளே!, இதுல நான் வேற தரனுமா?”
“வெறும் கிஸ் மட்டும் ஒரு 34 வயது ஆண் மகனை சாடிஸ்ஃபை பண்ணிடுமாடி?”
“நீங்க ரொம்ப ரொம்பக் கெட்டவர் சேத்ரன்”
“ஆமா! கெட்டவன்! போடி”
“………..”
“எப்படியோ ஒரு நாள்.. நாமளும் ‘ப்ரம்மிபல்ஸ்’ மாதிரி பெஸ்ட் பேக்கரியா மாறனும்” – கண்களில் கனவு மின்னக் கூறியவனைக் கண்டு “யார் அது ப்ரம்மிபல்ஸ்?” என்று வினவினாள்.
“ஜெர்மனில இருக்கிற ஒரு பெஸ்ட் பேக்கரிடி”
“அவ்ளோ பெரிய ஆளுகளா அவங்க?, ம்-ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்கோ!, அவங்க கம்பெனியை ஹாக் பண்ணி ஒரே நாள்ல தலையில் துண்டு போட வைக்கிறேன்!”
“அடியே மோகினி!!! இத்தனை நாளா நீ இந்தக் கண்றாவியை நினைக்கிறதில்லைன்னு நான் நிம்மதியா இருக்கேன்! தயவு செஞ்சு.. இனி நீ கம்ப்யூட்டர் பக்கமே போகாத”
“ஆமா, ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சேன். நான் ஒரு ஹாக்கர்ன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“எல்லாம் காண்டீபனோட திறமை தான்! உன்னைப் பத்தின டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணப்போ, நீ யு.எஸ்ல இருந்து வந்திருக்கன்றது தெரிய வந்தது! ரொம்ப எதேச்சையா உன் ஃபோட்டோவைப் பார்த்த தீபனோட யு.எஸ் வக்கீல் ஃப்ரெண்ட், உன்னை ஒரு ஹாக்கிங் கேஸ்ல பார்த்ததா சொன்னான். அப்புறம் அவனை வைச்சே உன் ஹிஸ்ட்ரியைக் கண்டுப் பிடிச்சோம்!”
“ஹ்ம்ம், அடிக்கடி உங்கக் கிட்ட ஸ்ட்ராங் ப்ரூஃப் ஏதோ இருக்கிறதா மிரட்டுவீங்களே?, என்ன அது?”
“உண்மையைச் சொல்லனும்னா……… அப்படி ஒரு ப்ரூஃபே என் கிட்ட இல்லடி. ஈஈஈஈஈஈஈ!!!! கோர்ட் உன்னை வார்ன் பண்ணினதுக்கு அப்புறம், நீ ஹாக் பண்ணுறதை விட்டுட்டதா அந்த வக்கீல் சொன்னான்! ஆனாலும்.. சும்மா மிரட்டிப் பார்க்கலாமேன்னு சீண்டுனேன்! அதுக்கப்புறம் எதுவும் பண்ணியா என்ன?”
“ஹ்ம்ம், நான் வேலை பார்த்த கம்பெனி இன்ஃபர்மேஷனை ஹாக் பண்ண ட்ரை பண்ணேன்! பட் மாட்டிக்கல!”
“எங்க இருந்து உனக்கு இவ்ளோ தைரியம் வந்தது. அம்மாஞ்சியாட்டம் இருந்த ஆளு நீ?”
“அதனால தான எங்கப்பா என் வாழ்க்கையை ஈசியா பந்தாட நினைச்சார்?, அதான். ரொம்ப தைரியமான பொண்னா என்னை மாத்திக்கனும்னு நினைச்சேன்! என்ன,ஏதுன்னு கேட்க ஆள் கிடையாது,தனிமையை விரட்ட நான் பழகுன பொழுதுபோக்கு விசயம் தான் இந்த ஹாக்கிங்” – சிரிப்புடன் கூறியவளை முறைத்து “இப்போ அப்படிக் கிடையாது. உனக்குன்னு நான் இருக்கேன்! இனி நமக்குன்னு குழந்தை,குட்டியெல்லாம் கூட வரும். மறந்துடாத” என்றான்.
“ஹ்ம், எங்க ஆரம்பிச்சாலும், கடைசியா இங்க வந்து முடிச்சுடுவீங்களே?” – சலித்துக் கொண்டவளிடம் “நீ தான்.. கிஸ்ஸைத் தாண்டி எதுவும் பண்ண விட மாட்டேன்றியே?” என்றவன் எட்டி அவளை அணைத்துக் கொள்ள.. அவனைத் தள்ளி விட முயன்று தோற்று கலகலவெனச் சிரித்தாள் அவள்!
அன்று கிட்டு மாமா,மாமியைக் காண நயனாவை க்ளாஸ்ஹூட்டேவுக்கு அழைத்து வந்திருந்தான் சேத்ரன். வெகு விமர்சையாக வரவேற்றுப் பலகாரம் அளித்தவர்களைக் கண்டு நயனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்னம்மா?, அன்னிக்கு வீட்டை விட்டுத் துரத்துனவன் இன்னிக்குப் பெருசா வரவேற்கிறானேன்னு நினைக்கிறியா?” – கிட்டு
“அ…அப்படியெல்லாம் இல்ல சித்தப்பா. அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி! என் மேலயும் தப்பு தானே?, எங்கப்பாவைப் பத்தி நல்லா தெரிஞ்சும் சேத்ரனை இதுல இன்வால்வ் பண்ணியிருக்கக் கூடாது”
“விடு விடு. அந்த ஒரு நிகழ்வால தான இத்தனை வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் லவ்-பேர்ட்ஸ் ஆயிருக்கேள்?”
“ஏன் டா சேத்ரன், இந்தக் கருமாந்திரத்தை அன்னிக்கே பண்ணியிருக்கலாமோல்லியோ?, புள்ள பாவம், விஷம் குடிச்சு உயிரை மாய்ச்சுக்கிற அளவு துணிஞ்சாலே!” – அம்புஜம்
“மாமா தான் அதுக்குள்ள என் மண்டையைப் பொளந்து படுக்க வைச்சிட்டாரே!, ஆனாலும் என் தலை எத்தனை பேர்க்கிட்ட அடி வாங்கியிருக்கு?, எதுக்கும் ஒரு நாள் ஒரு மாஸ்டர் செக்-அப் பண்ணிக்கனும்” – என்றவனிடம் “வாயை மூடுங்கோ” என்று பல்லைக் கடித்தாள் நயனா.
“ஆனாலும் ஆளே மாறிட்டடி நீ! கண்ணாடியெல்லாம் போட்டுண்டு பார்க்க பேக்கு மாதிரி இருப்ப! இப்போ ரொம்ப ரொம்ப அழகாயிட்ட” – அம்புஜம் மாமி
“சித்திதிதிதி… அப்போவும் நான் அழகாத் தான் இருந்தேன். புட்டிக்குள்ள இதெல்லாம் மறைஞ்சிருந்தது. நீங்க நோட் பண்ணியிருக்க மாட்டேள்”
“அதான் சேத்ரன் நோட் பண்ணியிருக்கானே! அது போறாதா?”
“சித்தி! நீங்களும் நன்னா டெவலப் ஆயிட்டேள்! அக்ரஹாரத்துல மடிசாரோட இருப்பேள்! இப்போ பேண்ட்,சட்டையெல்லாம் போட்டுண்டு.. ஹாஹாஹாஹா”
“சிரிக்காதேடி. இந்தக் குளிருக்கு இது தான் செட் ஆகும்ன்னு இதை மாட்டிண்டு திரியறேன் நான்”
“அழகாத் தான் இருக்கு சித்தி” – என்று அரட்டையடித்துக் கொண்டிருந்தவளை நிறுத்தி வெளியே அழைத்துச் சென்றான் சேத்ரன்.
அவனுடன் கைகோர்த்துக் கொண்டு க்ளாஸ்ஹூட்டே வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்த நயனாவிற்கு, வாழ்க்கை மிகவும் அழகாக மாறி விட்டதாகத் தோன்றியது.
உண்மைத் தோற்றம் மறந்து, சாபக் கேட்டினால் கிளியாகிக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தவளைத் தன் ஸ்பரிசத்தினால்.. மீண்டும் உருவம் பெறச் செய்து இழந்த பாக்கியங்களை அள்ளித் தரும் ரட்சகனாகத் தன் வாழ்வில் வந்தவனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடி நடந்தாள் நயனா.
“என்ன அப்படிப் பார்த்துண்டிருக்க?”- சேத்ரன்
“இல்ல, நீங்க என் லைஃப்ல வராம போயிருந்தா என்ன ஆயிருக்கும்ன்னு யோசிச்சேன்!”
“எதுக்கு இந்த விபரீதக் கற்பனை?,”
“சும்மா யோசிச்சிட்டிருந்தேன்”
“இந்த மாதிரி யோசிக்காம… இவனுக்கு எப்போ ஐ லவ் யூ சொல்றது,எப்போ கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்றது இப்படில்லாம் உருப்படியா யோசி நயனா”
“அதுசரி!”
“சரி விடு!, இந்த க்ளாஸ்ஹூட்டே சிட்டில நிறைய வாட்ச் மேக்கிங் இண்டஸ்ட்ரீஸ் இருக்கு. இங்க தயாரிக்கப்படுற வாட்சஸ் எல்லாம் வேர்ல்டு ஃபேமஸ்! அதனால் இங்க உனக்கு ஒரு வாட்ச் வாங்கலாம்!”
“ம்க்கும், நான் ஒரு டைமண்ட் நெக்லெஸ் கூடக் கேட்டேனே! அதையெல்லாம் டீல்ல விட்டுட்டீங்க?”
“அதான் கைல டைமண்ட் ரிங் போட்டிருக்கியே!, அது போதும்”
“நல்லா சமாளிங்க! சேத்ரன், பேசாம இப்படி பண்ணா என்ன?”
“என்ன?”
“இங்கேயே நம்ம பேக்கரிக்கு ஒரு ப்ரான்ச் ஸ்டார்ட் பண்ணினா என்ன?, நீங்க இதுக்கு முன்னே வேலை பார்த்த பேக்கரி இங்க தானே இருக்கு?, சோ.. இந்த ஊரைப் பத்தி உங்களுக்கு நல்லாத் தெரியும். மோர் ஓவர், சித்தி,சித்தப்பா இங்க இருக்காங்க. அவங்களும் நமக்கு உதவியா இருப்பாங்க. எப்படி என் ஐடியா?”
“வெர்ரி குட்! இந்த மாதிரி யோசிக்கப் பழகுன்னு தான் நான் அடிக்கடி சொல்றேன்! யெஸ்! ரொம்ப நல்ல ஐடியா! நீ சொன்ன மாதிரியே செஞ்சுடலாம்! கொஞ்ச நாள் போகட்டும்” - என்றான் அவன்.
பேச்சு வார்த்தையாகத் தொடங்கியது தான் என்றாலும், அடுத்த ஓராண்டில் க்ளாஸ்ஹூட்டேவில் ‘N-கேக்ஸின் இரண்டாவது கிளை தொடங்கப்பட்டு ஓரளவு நல்ல லாபத்தை வழங்கிக் கொண்டிருந்தது.
சொன்னது போலவே.. ஒவ்வொரு விசயங்களையும் நயனாவையே முன்நிறுத்திச் செய்தவன், அது அவளுக்கான,அவளுடைய பேக்கரி என்பதை உணர்த்தினான். தன்னுடைய நீண்ட நாளைய ஆசை நிறைவேறி விட்டத் திருப்தியில் மேலும் அழகாக மிளிர்ந்தாள் நயனா.
இந்த ஏற்பாட்டில் சேத்ரனுக்குப் பிடிக்கவே,பிடிக்காத ஒரு விசயமிருந்தது. அது நயனாவைப் பிரிந்திருப்பது! இரு பேக்கரிகளும் வேறு,வேறு நகரங்களிலிருப்பதால்.. வாரம் ஒரு முறை மட்டுமே இருவராலும் சந்தித்துக் கொள்ள முடிந்தது.
“நாங்க மட்டும் இருக்கறச்சே, ரெண்டு மாசத்துக்கொரு முறை தான் டி வருவான்! இப்போ பார், வாரம் தவறாம வர்றான்” – என்று மாமி மோவாயில் இடித்துக் கொண்டாலும் அவன் வந்து போவது தவறவில்லை.
எப்போதும் சனிக்கிழமை இரவு அவளைச் சந்திக்க வரும் சேத்ரன் அன்று வெள்ளிக்கிழமையே வருகை தந்திருந்தான். காஷ் கௌண்ட்டரில் நின்று கொண்டிருந்த நயனாவிடம் வந்த அம்புஜம் “சேத்ரன் வந்திருக்கான் டி. முகம் வேற பார்க்கவே சரியில்ல. என்னவோ நடந்திருக்கு. நீ வீட்டுக்குப் போய் என்னன்னு கேளு. இதை நான் பார்த்துக்கிறேன்” என்று அனுப்பினார்.
என்னவோ ஏதோ என்று பதறியடித்து ஓடி வந்த நயனாவை வரவேற்றது சேத்ரனின் உர்ரென்ற முகம் தான். அவளைக் கண்டு கொள்ளாமல் காஃபியை உறிஞ்சியபடிப் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவனைக் கண்டுப் புருவம் உயர்த்தியவள் அருகே சென்று அவன் தோளைத் தட்டினாள்.
“ப்ச், என்னைத் தொடாத”
“ஹாஹாஹா.. இது என் வசனமாச்சே!”
“இனி இதை நான் தான் சொல்லுவேன்”
“ஏன் ஏன் ஏன்?, ஏன் நான் உங்களைத் தொடக் கூடாது?”
“இப்படி,இப்படித் தொடுறனால என்னடி பிரயோஜனம்?” – என அவளைப் போலவேத் தோளைத் தட்டிக் காட்டியவன் “காண்டீபனுக்கு,அவன் கேர்ள் ஃப்ரெண்டோட கல்யாணமாம். தெரியுமா உனக்கு?” எனக் கூறி முறைத்தான்.
“ஆமாம். அதுக்கென்ன இப்போ?, நண்பன் நல்லாயிருக்கிறதைப் பார்த்து பொறாமைப் படுறது,ரொம்பத் தப்பு!”
“ஏய்… லவ் மேட்டர்ல அவனுக்கு முன்னாடி 8 வருஷ சீனியர் நான். எனக்கு ஒன்னும் நடக்க மாட்டேங்குதே??”
“………….”
“உன் கையில நான் ரிங் மாட்டியே ஒரு வருஷம் முடிஞ்சுடுச்சு. ஆனா.. இன்னும் ஒரு இம்ப்ரூவ்மென்ட்டும் இல்ல. ஒரு நாளாவது.. என்னைக் காதலிக்கிறதா நீ சொல்லியிருக்கியா?”
“ஏன், சொல்லாம உங்களுக்குத் தெரியாதாக்கும்?”
“எக்ஸ்ப்ரஸ் பண்ணுனா தான் டி லவ்!”
“நேக்கு அதெல்லாம் வராது” – முறைப்புடன் திரும்பிக் கொண்டாள் அவள்.
“ஆமா, மண்டையை உடைக்க மட்டும் வரும்”
“இப்போ என்னன்றீங்க?”
“கல்யாணம் பண்ணிக்க சொல்றேன். சர்ச்சுக்குப் போய் மோதிரம் மாத்திண்டாலும் சரி, மடிசாரோட பெருமாள் கோயில்ல தாலி கட்டிண்டாலும் சரி!, என்னால இனி உன்னைப் பிரிஞ்சு இருக்க முடியாது. ட்ரெஸ்டென் ப்ரான்ச்சை காண்டீபன் பார்த்துக்கட்டும்! நான் கல்யாணம் பண்ணி,இங்கே உன்னோட செட்டில் ஆகப் போறேன். எனக்கு உன் பேக்கரில ஒரு வேலை போட்டுக் கொடு”
“என்ன பேச்சு இது?, உன் பேக்கரி,என் பேக்கரின்னு”
“நம்மோடதுன்னு சொல்ற ரைட்ஸை தான் டி நானும் கேட்குறேன்”
“…………………”
“நயனா.. நீ என்ன யோசிக்கிறன்னு எனக்கு நல்லாத் தெரியுது.”
“என்ன யோசிக்கிறேன்?”
“உன் அம்மா,அப்பா,அண்ணன்”
“………………..”
“பதில் சொல்லு” – அமைதியாக விரல்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவள் பின் “இன்னொரு தடவை மடிசார் கட்டிண்டு கல்யாணக் கோலத்துல என்னால நிற்க முடியாது சேத்ரன். அது நிச்சயம் எனக்குப் பாட்டியைத் தான் நினைவு படுத்தும். என்னால தானே பாட்டி உயிர் போனது?” என்றாள்.
“நீ ஏன் அப்படி நினைக்குற?, தான் பெத்த பையன் ஆணாதிக்கவாதியா நடந்துக்கிட்டு ஒரு சின்னப் பொண்ணை தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு தூண்டி விட்ருக்கானேன்னு, உன் அப்பனை நினைச்சுக் கவலையில் போயிருக்கலாம் இல்லையா?”
“………….”
“நயனா… இது தான் நடக்கனும்னு விதி இருந்திருக்கு. நடந்திடுச்சு! இனி எதையும் மாத்தி எழுத முடியாது. நீ என்னைக் கட்டிண்டு சந்தோஷமா வாழ்ந்தா… அதை விடப் பெரிய திருப்தியை பாட்டிக்குக் கொடுக்க முடியாது.”
“இருந்தாலும்ம்ம்ம்ம்”
“இருந்தாலும் என்னன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதுக்காகத் தான் ஒன்னு ரெடி பண்ணியிருக்கேன்” என்றவன் அருகேயிருந்த ஐ-பேடை எடுத்துத் தனது ஃபேஸ்புக்கை ஓபன் செய்தான்.
தனது ஃப்ரெண்ட் லிஸ்ட்டிலிருந்து வைத்தியநாதன் என்கிற பெயரை எடுத்து அவள் முன்னே நீட்டி “பாரு, உங்கண்ணன் தான்” என்றான்.
மனைவி,குழந்தை சகிதம் ப்ரொஃபைல் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த வைத்தியைக் கண்டு உள்ளே விவரிக்க முடியாத உணர்வெழுந்தது அவளுக்கு.
“அப்பாவோட உறவை முறிச்சிக்கிட்டது சரி!, உனக்கு உதவி பண்ணுன வைத்தியை ஏன் நீ மறந்த?”
“மறக்கல. எங்கப்பாவுக்கு என்னைப் பிடிக்காது! எனக்கு சப்போர்ட் பண்றதால, அவனையும் வெறுத்துட்டார்ன்னா?,எனக்குத் தான் தாய்நாட்டோடயும்,பெத்தவங்களோடயும் இருக்கிற கொடுப்பினை இல்லாம போச்சு! அவனுக்கு என்ன தலையெழுத்து?, அதனால தான் அவனோட பேசுறதை நிறுத்தினேன்!”
“ஹ்ம்ம்ம், ஆனா உன் அண்ணன் உங்கப்பனை மாதிரி இல்ல. பொண்ணுங்களை மதிக்கிற நல்ல மனுஷனா இருக்கான்! உங்க புத்தியால தான் என் தங்கச்சி வாழ்க்கை கெட்டது, என் பாட்டி போய்ச் சேர்ந்தாங்கன்னு சொல்லி.. இனிமேலும் இதே மாதிரியிருந்தா.. என் அம்மாவை அழைச்சிட்டு வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்னு மிரட்டியிருக்கான். மனுஷன்,அடங்கி ஒடுங்கிப் போய் உட்கார்ந்துட்டாராம்!”
“நிஜமாவா சொல்றீங்க?”
“ஆமா.. ஹோட்டல் பொறுப்புகளை கம்ப்ளீட்டா இவன் டேக் ஓவர் பண்ணிட்டானாம்! உங்கப்பா நிறைய வெளியே கூட வர்றதில்லைன்னு ஒரு பேச்சிருக்கு!, நீ போனதுல இருந்து.. மாமியும் அவரோட பேசுறதையே நிறுத்திட்டாங்க போல!, ஹே… இங்க பாரேன் மாமியை.. மடிசார் கட்டாம வெளியே வர மாட்டாங்க. இப்போ பார், டிசைனர் புடவைல எவ்ளோ அழகா இருக்காங்கன்னு?” – அவன் காட்டியப் புகைப்படத்தில் லேசான புன்னகையுடன் வைத்தியின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்த அன்னையைக் கண்டு அழுகை பொங்கி விட்டது நயனாவுக்கு.
வாயை மூடிய படித் தேம்பியவளை அருகே வந்து இறுக அணைத்துக் கொண்டவன் “நீ தப்புப் பன்ணிட்ட நயனா!, உன் அப்பா மேல இருந்த கோபத்துல மாமியை இக்னோர் பண்ணிட்ட! உன் வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சிடும்ன்னு உன் அப்பாவை எதிர்க்கத் தயாரா இருந்தவங்க அவங்க!, அவங்களோட இத்தனை வருஷமா பேசாம இருக்கிறது தப்பு நயனா… இனிமேலும் நீ ஒதுங்கியிருக்க வேண்டாம். ப்ளீஸ்” என்றான்.
கண்களைத் துடைத்தபடி நிமிர்ந்து மீண்டும் புகைப்படத்தை நோக்கியவள் கண்ணீருடனே சிரித்து “அம்மாவுக்கு இதெல்லாம் செட்டே ஆகல” எனக் கேலி செய்து அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா ரொம்பவும் பாவம் சேத்ரன்! பெத்தக் குழந்தை பொண்ணுன்றதால பாச,நேசமில்லாம தலையெழுத்தேன்னு வளர்த்த எங்கப்பா, பொண்டாட்டியை எவ்ளோ மட்டமா ட்ரீட் பண்ணியிருப்பார்?, எல்லாத்தையும் எங்க 2 பேருக்காக சஹிச்சிண்டு பாதி வாழ்க்கையை ஓட்டிட்டாங்க!”
“ஹ்ம்ம், ஆணும்,பெண்ணும் சமம்ன்ற எண்ணம் மனுஷங்களுக்கு இல்லாததால, இதையெல்லாம் சகிச்சுத் தொலைக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு! விடு, காலம் மாறும்! நான் உன்னையோ,உன் பெண்ணையோ என்னிக்கும் அடிமைப்படுத்த நினைக்க மாட்டேன்! இது என் அம்மா மேல சத்தியம்! சரியா?”
பளிச்செனச் சிரித்து அவன் மார்பில் சாய்ந்தவள் “நீங்க அப்படியில்லன்னு நேக்குத் தெரியாதா?” எனக் கூற.. “உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கூட இருக்கு” என்று விட்டு ஐ-பேடிலிருந்த வீடியோ ஒன்றை ஓபன் செய்தான்.
“ஹாய் நயனா….” என்று அதில் கையாட்டிய வைத்தி “சேத்ரன் என் கிட்ட எல்லா விவரமும் சொன்னார். கடைசில நீ அவர்க்கிட்ட போய்ச் சேர்ந்தது எனக்கு எவ்ளோ பெரிய சந்தோஷம் தெரியுமா?, அப்பா மேல உனக்குக் கோபம் சரி! எங்களையெல்லாம் ஏன் இத்தனை நாளா அவாய்ட் பண்ணுன?, நான் என் கல்யாணத்துக்கும்,குழந்தை பிறந்ததுக்கும் உன்னைக் காண்டாக்ட் பண்ண எவ்ளோ ட்ரை பண்ணினேன் தெரியுமா?, உன் கூடப் படிச்சவங்க, வேலை பார்த்தவங்க யாருக்கும் உன்னைப் பத்தி எந்த விவரமும் தெரியலை! நயனா… அப்பாவை தண்டிக்க நீ இதுவரை ஒதுங்கியிருந்தது போதும்! அம்மா இத்தனை வருஷமா அவரோட பேசாம இருக்கிறதே,அவருக்குக் கிடைச்ச உச்சகட்ட தண்டனை தான்! இனியும் எங்களைப் பார்க்காம இருந்து உன்னை நீயே வருத்திக்காத. அம்மா ரொம்பப் பாவம்டி! நீ இல்லாம, எந்த சந்தோசத்தையும் அவங்களால முழுசா அனுபவிக்கக் கூட முடியல. ப்ளீஸ்.. இந்தியா வா.” என்றான்.
கண்ணீர் வழிய வீடியோவை நோக்கிக் கொண்டிருந்தவள் அடுத்ததாகத் திரையில் தெரிந்த அன்னையின் முகத்தைக் கண்டுத் தேம்பத் தொடங்கினாள்.
“நயனா…..” என அழைத்து மேலே எதுவும் கூறாமல் அழுத வண்ணம் நின்றவரை வைத்தி தேற்ற, கண்களைத் துடைத்துக் கொண்டு கேமராவை நோக்கியவர் “என் கிட்ட வந்துடுடி. உன்னைப் பார்க்கத் தான் இன்னும் இந்த உயிரை கையில் பிடிச்சுண்டிருக்கேன்” என்று கூற.. பொலபொலவெனக் கண்ணீர் வடித்தாள் நயனா.
வீடியோவை நிறுத்தி விட்டு அவள் கைப்பற்றிக் கொண்டவன், அவள் அழுகை நிற்கும் வரை அமைதியாக இருந்தான். ஒருவாறு சமாதானமாகி நிமிர்ந்தவளிடம்..
“சொல்லு. எப்போ இந்தியா போகலாம்?” என்றான்.
“உடனே! எவ்ளோ சீக்கிரம் முடியுமோ,அவ்ளோ சீக்கிரம்” – அவள் கூறி முடித்ததும் பாக்கெட்டிலிருந்து டிக்கெட்டுகளை எடுத்து அவளிடம் நீட்டினான்.
வியப்புடன் அவனை நோக்கியவளிடம் “ஆனா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு” என்றான்.
“என்ன?”
“அங்கே போனதும் உனக்கும்,எனக்கும் கல்யாணம்! நம்ம முறைப்படி”
வெட்கமாய்ச் சிரித்தவள் “அப்போ இதுக்குத் தான் இவ்ளோ ப்ளானிங்குமா?” என்று வினவினாள்.
“ச்ச,ச்ச! நீ யு.எஸ்-ல இருந்து தான் இங்க வந்திருக்கன்னு தெரிஞ்சதும், நான் வைத்தியை காண்டாக்ட் பண்ணிட்டேன்! அப்பவே வைத்திக்குத் தெரியும், நீ என் கூடத் தான் இருக்கன்னு! உடனே உன்னைப் பார்க்கனும்னு குதிச்சான்! நான் தான் பொறுமையா இருக்கச் சொன்னேன்! எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, அப்புறம் தான் அவங்களை நீ மீட் பண்ணனும்னு நினைச்சேன்”
“இவ்ளோ நாளா என் கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்களா?, முன்னாடியே அம்மாவைப் பார்த்திருக்கலாம்!”
“கிழிச்ச! நாம வாழ்க்கைல உருப்படாம போயிட்டோமே! இவன் பேக்கரில எப்படி வேலை செய்றதுன்னு தயங்குன ஆள் நீ!, அப்படிப்பட்டவ உன் அம்மா முகத்தைத் தைரியமா ஃபேஸ் பண்ணியிருப்பியாக்கும்?, வீட்டை விட்டு வெளியே வந்தாலும், தன் கனவுகளை நிறைவேத்திக்கிட்ட சக்ஸஸ்ஃபுல் நயனாவைத் தான் உன் ஃபேமிலி பார்க்கனும்! அதுக்காகத் தான் தள்ளிப் போட்டேன்! மன்னிச்சுடு!” – என்றவனைக் காதலுடன் நோக்கியவள் எட்டி அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்து “தேங்க்யூ சோஓஓஓஓ மச்ச்ச்ச்ச் மாஸ்டர்” என்றாள்.
“இப்போவாவது இந்த மாஸ்டர்க்கு அர்த்தம் சொல்லேன் டி”
“மாஸ்டர்ன்னா தெரியாதா?, குரு! எனக்குக் காதல் பாடம் சொல்லிக் கொடுத்த மாஸ்டர்!”
“ஹாஹாஹா! அடேங்கப்பா”
“ஹிஹிஹிஹி”
“சரி, இந்த முத்தத்தோட அர்த்தம், என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்றது தான?”
“ஹ்ம்ம் ஹ்ம்ம்”
“அப்போ நம்ம ஹனிமூன் இந்தியால தானா? ஹேஏஏஏஏஏஏஏஏஏஏ” – அவளைத் தூக்கிச் சுற்றிக் கத்தியவனின் வாயை அடைக்க.. அவன் இதழ்களில் அழுந்த இதழ் பதித்தாள் நயனா.
அடுத்த வந்த நாட்கள் பம்பரமாகச் சுழன்றதில் இந்தியா வந்திறங்கிய சேத்ரன்,நயனா, கிட்டு மாமா,மாமி அவர்களிருவரது திருமணத்தில் தீவிரமாக இறங்கினர். நயனாவின் குடும்பத்தாரோடு அவள் நடத்திய பாசப்போராட்டம் ஒரு வழியாக சேத்ரனால் முடிவுக்கு வந்ததில் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி!
அவளைக் கண்டதும் அழுதுப் பின் கோபம் கொண்டு, பின் கட்டியணைத்துக் கொஞ்சித் தன் பாசத்தை வெளிப்படுத்தினார் கலைவாணி! அண்ணா,அண்ணி,குழந்தையென அனைவரையும் ஒரு நிமிடம் கூடப் பிரியாமல் சுற்றி வந்தவள்.. தந்தை இருக்கும் அறையை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
நயனா வந்து விட்டாள்!, அவளுக்குக் கல்யாணம் என்கிற செய்தி எல்லாம் மகன் மூலமாக அவரது காதுகளைச் சென்றடைந்தது தான்! யாரும் அறியாமல் அவளை எட்டிப் பார்த்ததோடு சரி, அருகில் வந்து அவர் பேச முயலவில்லை! அன்னையின் மறைவுக்குப் பிறகு வீட்டாரின் போக்கு, அவருக்குப் பெரிய அடியாக அமைந்து அவரைத் தனிமைப்படுத்தி அமைதியாக்கி விட்டது தான்! ஆனாலும்,அவர் தன் குணத்தை மாற்றிக் கொண்டு அனைவரிடமும் மன்னிப்புக் கோர முற்படவில்லை! அவரது வயதும்,கௌரவமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை போலும்! தந்தையை நன்கு அறிந்திருந்த நயனாவும் இதைக் கண்டுப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை! இருவரையும் காலம் என்றேனும் ஒரு நாள் சேர்த்து வைக்கும் என்றெண்ணிக் கொண்டு அனைவரும் வேலையைப் பார்த்தனர்.
தான் எண்ணியபடியே அவளை மடிசார் அணிய வைத்துப் பெருமாள் கோவிலில் திருமணத்தை முடித்த சேத்ரன், இதோ…. இன்று கேரளாவில் போட் ஹவுஸில் முதலிரவு கொண்டாடிக் கொண்டிருக்கிறான்.
வழக்கமான ட்ராக் சூட்,டீஷர்ட், கொண்டை சகிதம் அறைக்குள் நுழைந்த நயனா.. சேத்ரனின் கோலத்தைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
ஆறு முழ வேஷ்டி, மார்பை மறைத்தத் துண்டு, நெற்றியில் நாமம் என பக்கா ஐயங்கார் லுக்கில் இருந்தவன் அவளைக் கண்டதும் பாட்டு பாடத் தொடங்கினான்.
“மாடத்திலே… கன்னி மாடத்திலே.. ராணி போல ஐயராத்துப் பெண்ணே!”
“நான் ஐயர் இல்ல. ஐயங்கார்”
“மாமி…. சின்ன மாமி… மடிசார் அழகி.. வாடி சிவகாமி…..” என்றவன் அணிந்திருந்த துண்டினால் அவள் இடையைப் பற்றி அருகிலிழுக்க “அது யார் சிவகாமி?” என்றாள் அவள்.
“என் சிவகாமி,அபிராமி எல்லாஆஆஆம் நீ தான் டி தங்கம்!” என்றவன் “ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று ஆர்வமாக வினவினான்.
அவன் தலையில் அடித்து விட்டு நடந்து சென்று கட்டிலில் அமர்ந்தவள், அவனையும் அருகே அமரச் சொன்னாள்.
“என்னடி பேசப் போறியா?, கொன்னுடுவேன் உன்னை”
“உட்காருங்க மாஸ்டர்!, உடனேவா எல்லாம் நடந்துடும்?”
“நீ ஒரு டைப்பா தான் டி இருக்க”
“இந்த இடத்தை ஏன் சூஸ் பண்ணீங்க?”
“ரம்யமா இருக்குல்லடி?,ஏன் உனக்குப் பிடிக்கலையா?”
“ம்ஹ்ம், ரொம்பப் பிடிச்சிருக்கு! சேத்ரன்…….”
அவள் நெற்றி முடியைக் காதோரம் ஒதுக்கிக் கொண்டிருந்தவன் “ம்,சொல்லு” என்றான்.
“நான் ஒன்னு சொல்ல நினைக்கிறேன். ஆனா.. சொல்றதுக்குக் கொஞ்சம் தயக்கமா இருக்கு”
“என்ன?”
“வந்து.. இதுவரைக்கும் ‘நீங்க என் லைஃப்ல வராட்டி நான் என்ன ஆயிருப்பேன்’, ‘தேங்க் யூ சோ மச்’ இந்த மாதிரி டையலாக்ஸ் எல்ல்லாம் நிறைய சொல்லிட்டேன். அதனால…”
“அதனால??”
“புதுசா ஏதாவது சொல்லலாம்ன்னு!, சரி,அது இருக்கட்டும்! என்னை லவ் பண்றதா சொல்ற நீங்க சொல்லி ஒரு வருஷத்துக்கும் மேலாகிடுச்சு! நீங்க ஏன் என் கிட்ட அதைச் சொல்லவே இல்ல?”
“ஏய்ய் ஏய்ய் ஏய்ய்.. ஓஹோஓஓஓஓ! ஹாஹாஹா மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தை!! அதைச் சொல்லத் தான் இவ்ளோ வெட்கப்படுறியா?”
“ஆமாம்! நீங்க ஏன் ஒரு முறை கூட சொல்லல?”
“என் வயசுக்கு நான் அதெல்லாம் சொல்லிட்டுத் திரிய முடியுமாடி?”
“காதலுக்குக் கண் மட்டுமில்ல,வயசும் இல்ல. தெரிஞ்சுக்கோங்கோ”
“தெரிஞ்சுண்டேன்! நீ ஆரம்பிச்சதை முடி.”
“கொஞ்சம்ம்ம்ம் தயக்கமாஆஆஆ” என்று தலையைச் சொறிந்தவள்.. பின் எழுந்து வந்து அவன் முன்பு மண்டியிட்டு அவன் கையைப் பற்றிக் கொண்டு “அறியாத வயசுல, தெரியாம உங்க மேல வந்த ஃபீலிங்க்ஸ்க்கு அப்போ எனக்குப் பெயர் வைக்கத் தோணலை!, அதுக்கான தைரியமும் இல்ல! ஆனா.. அந்த ஃபீலிங்க்ஸ், ஏன் அதுக்கப்புறம் யார் மேலயும் எனக்கு வர்லைன்றது.. எனக்கான விடையைக் கொடுத்திடுச்சு! ட்ரெஸ்டென்ல உங்களை மீட் பண்ணாம இருந்திருந்தா.. நான் லைஃப் ஃபுல்லா கன்னியா தான் கழிச்சிருந்திருப்பேன். இது தான் உண்மை….” – அவள் பேசப் பேச புன்னகை மாறாமல் அவளையே நோக்கிக் கொண்டிருந்த சேத்ரன், அந்தக் கண்களுக்குள் மொத்தமாய்த் தலைக் குப்புற விழுந்து விட்டான்!
“நான் கோபப்பட்டாலும் பொறுத்துக்கிட்டு, நான் அடிச்சாலும் வாங்கிட்டு, அழுதாலும் சமாதானப்படுத்திட்டு…. என் ஆசையை,கனவை உங்களோடதா நினைச்சு நிறைவேத்தி வைச்சு….. ஹப்பாஆஆ!! உங்க அளவுக்கு யாரும் என்னை ஸ்பெஷலா ட்ரீட் பண்ணினது இல்ல! ஒரு வகையில அப்பா சரியில்லாம போனது நல்லது தான்! அதனால தானே இவ்ளோ நல்ல ஹஸ்பண்ட் கிடைச்சிருக்கார்ன்னு நினைக்கத் தோணுது! யூ ஆர்…. யூ ஆர் லைக் ஆன் ஏஞ்சல் டூ மீ சேத்ரன்! ஒரு ஆண் தேவதை! ஐ ஆம் சோ சோ லக்கி டூ ஹாவ் யூ இன் மை லைஃப்” – உணர்ச்சிகரமாக நீர் தேங்கி விட்ட விழிகளுடன் அவனை நோக்கியவள் ஒரு நிமிட இடைவெளியின் பின் “ஐ லவ் யூ” என்றாள்.
சிரிதாக இதழ்களில் தொடங்கிய முறுவல் மொத்தமாய் விரிந்து அழகான புன்னகையை அவன் முகத்தில் தோற்றுவிக்க.. கீழே அமர்ந்திருந்தவளை அள்ளித் தூக்கி அணைத்துக் கொண்டவன் “நான் தான் ரொம்ப,ரொம்ப லக்கி! நீ என் லைஃப்ல வந்ததுக்கு” எனக் கூறினான்.
அவன் தோளில் தன் இதழ்களைப் பதித்து இறுக அணைத்துக் கொண்டவள் “மாஸ்டர்.. கபி குஷி கபி கம்-ல வர்ற மாதிரி ஒரு சின்ன ஸ்டூல் வாங்கி வைச்சுக்கலாமா?, அப்போ தான் உங்க ஹைட்டை என்னால மேட்ச் பண்ண முடியும்” என்று கூற.. “நீ கேட்டா.. என்னனாலும் வாங்கித் தருவேன்” என்றபடியே விளக்கை அணைத்து அவளைப் படுக்கையில் இட்டுத் தானும் அருகே படுத்துக் கொண்டான்.
“அப்புறம் டைமண்ட் நெக்லஸ்?”
“அதுவும் வாங்கித் தருவேன்..”
“அப்புறம்……” என்றவளின் இதழ்களைப் பற்றிக் கொண்டவன் விடுவித்த போது மீண்டும் அவள் “சேத்ரன்…….” எனத் தொடங்கினாள்.
“என்ன?”
“பேசாம, நம்ம பேக்கரி பேரை நயனஷேத்ரம்ன்னு மாத்தி வைச்சுக்கலாமா?”
“நானும் இதை யோசிச்சு தீபன் கிட்ட சொன்னேன், ‘என்னது நயன் தாராவை ஷேர் பண்ணிக் கொடுக்கிறியா?’-ன்னு கேட்டு அசிங்கப்படுத்துறான்!”
“ச்ச,ச்ச அப்போ வேண்டாம்! எங்கண்ணன் பையன் கௌஷிக் எவ்ளோ க்யூட் இல்ல, சேத்ரன்.. உங்களுக்குப் பெண் குழந்தை பிடிக்குமா?, ஆண் குழந்தை பிடிக்குமா?”
“பெண் குழந்தை தான் பிடிக்கும், அதுக்கு வழி பண்ணலாம்ன்னு பார்த்தா.. நீ விடாம பேசிண்டிருக்க?”
“இல்ல சேத்ரன்ன்ன்” என ஆரம்பித்தவளிடம் “ஷ்ஷ்ஷ்” என்றவன் மந்தகாசப் புன்னகையுடன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான்.
******************* முற்றும் *******************
