அத்தியாயம் - 13
நான் என்று சொன்னாலே.. நான் அல்ல நீ தான்!
நீயின்றி வாழ்ந்தாலே.. நீர் கூடத் தீ தான்!
-எஸ்.பி.பியோட வாய்ஸ்க்கு நான் ஒரு அடிமைன்னு எல்லாருக்கும் தெரியும்! இளையராஜாவோட அவர் பாடல்கள் ரசகுலா மாதிரின்னா.. ரஹ்மானோட அவர் பாடின பாடல்கள் ஜாமூன் மாதிரி! ஒவ்வொன்னையும் கடிச்சு சாப்பிட்டு உள்ளுக்குள்ளேயே வைச்சுக்கலாம்! எல்லாரும் தான் பாடுறாங்க! இந்த பாவம் எப்படி இவருக்கு மட்டும் வர்றது! அந்தப் பாடலும்,வரிகளும் என்ன சொல்ல வர்றதுங்கிறதை, அந்தக் குரலோட பாவமே சொல்லிக் கொடுத்துடுது! இந்த பூமியில நான் வாழ்ற வரைக்கும் எனக்கு எஸ்.பி.பி வாய்ஸ் மட்டும் போதும்!
அடுத்து வந்த இரண்டு நாட்களும் செண்டர் பீஸ்-க்காக அவர்கள் திட்டமிட்டிருந்த பிரம்மாண்ட வெட்டிங் கேக்கைத் தயாரிப்பதில் ஈடுபட்டனர் ‘N-கேக்ஸ்’ பணியாளர்கள். டிரெஸ்ஸிலிருந்த லேஸ் வேலைப்பாடிலிருந்துத் தொடங்கி நயனா அணிந்திருந்த முத்துத் தோடு வரை அனைத்தையும் டிசைன் செய்ய வேண்டியிருந்தது. ஸ்டோல்லென் ஃபெஸ்டிவலில் பங்கேற்ற அனுபவம் இருந்ததால்.. தேவைப்படும் பொருட்களின் அளவை சேத்ரனால் சரியாகக் கணக்கிட முடிந்தது. இரவு,பகலாக விடாமல் வேலை பார்த்தவர்களுக்குக் கடைசியில் கிடைத்தக் கேக்கைக் கண்டதும் பெருத்த நிறைவு! நூறு சதவீதம் சரியான முக அமைப்புகள் கிடைக்காவிடினும், பார்த்ததும் ‘இது சேத்ரன்,நயனா’ எனக் கூறுமளவிற்கு வந்திருந்தது.
அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த க்ராண்ட் ரீ-ஓபனிங் நாளும் வந்தது. ரிப்பன் கட் செய்து ஓபனிங் கொடுப்பதற்கு, தான் ஜெர்மன் வரக் காரணமாக இருந்த,இதற்கு முன் வேலை பார்த்த பேக்கரி ஓனரை அழைத்திருந்தான் சேத்ரன்.
அதிகாலையிலேயே எழுந்து குளித்துக் கீழே வந்துத் தனக்கென காஃபியை எடுத்துக் கொண்ட நயனா… அதை உறிஞ்சியபடியே இருளில் மூழ்கியிருந்த பேக்கரியைக் கண்டு ஒவ்வொரு ஸ்விட்சாகத் தட்டினாள்.
ஆங்காங்கு ஒளிர்ந்த விளக்குகளைக் கண்டபடி வந்தவள்.. முன்பு பீவெரெஜெஸ்க்கென ஒதுக்கப்பட்டிருந்த பெரிய சுவற்றின் மீது சேத்ரன்,நயனாவின் ஆளுயரப் படம் போஸ்ட்டராக ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டு விழி விரித்தாள்.
போஸ்ட்டரில், புல்வெளியில் நின்றிருந்த நயனா தன் கையிலிருந்த பூங்கொத்தைக் காண,அருகே நின்றிருந்த சேத்ரனோ அவள் தலையில் தன் நெற்றியை லேசாகச் சாய்த்து மந்தகாசப் புன்னகையைக் கொண்டிருந்தான்.
வியப்பில் விரிந்த விழிகளுடன் இமைக்க மறந்து நின்றிருந்த நயனா அருகே அரவம் உணர்ந்துத் திரும்ப எத்தனிக்கையில்.. அவள் முயற்சியைத் தடுத்து.. அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்ட சேத்ரன், முகம் முழுதையும் அவள் தோளில் மொத்தமாய் அழுத்திப் புதைந்திருந்தான்.
திடுக்கிட்டுப் பின் பதறி விலக முயன்றவளைக் கண்டு கொள்ளாமல்.. அவள் தோளில் நாடியைப் பதித்து நிமிர்ந்து போஸ்ட்டரை நோக்கினான்.
“ஃபோட்டோ அழகா வந்திருக்குல்ல?”
“என்ன பண்ணிண்டிருக்கீங்க நீங்க இப்போ?, தள்ளிப் போறீங்களா இல்லையா?”
“நீ இன்னும் ரிங்கை கழட்டலைன்னு எனக்குத் தெரியும். நீ கழட்டி எறியறப்போ நான் தள்ளிப் போறேன்”
“இதெல்லாம் ரொம்ப ஓவர். “ – பல்லைக் கடித்தவளிடம் “இல்ல, ரொம்பக் கம்மி” என்றவன் தைரியமாக முன்னேறி அவள் கன்னத்தில் இதழ்களை அழுந்தப் புதைத்தான். சில்லிட்டிருந்த கன்னங்களில் சூடான அவன் இதழ்கள் பதிந்து ஏதேதோ விபரீத எண்ணங்களைத் தூண்ட.. அவள் கன்னங்கள் முழுதையும் எச்சில் படுத்த முயன்று கொண்டிருந்தவனின் மீது.. கையிலிருந்த காஃபியைக் கடகடவெனக் கொட்டினாள் நயனா.
“ஆஆஆஆஆஆஆ” என்று கத்தியபடியே விலகியவன் “அறிவிருக்காடி உனக்கு?, அவ்ளோ சூடா இருக்கிற காஃபியைத் தலையில கொட்டுற?”என்றுத் திட்டினான்.
“என்ன, என்ன நடக்குது இங்க?” – என்றபடியே நடந்து வந்த காண்டீபன் சட்டையை உதறிக் கொண்டிருந்த நண்பனைக் கண்டு “அவ தான் வையலண்ட் ஆன ஆளுன்னு தெரியுமோல்லியோ?, பின்ன ஏண்டா அபிஷ்டு, அவளாண்ட வம்பு செய்யற” என்றான்.
“பரவாயில்ல. இவளோட தான் மீதி வாழ்க்கைன்னு முடிவு செஞ்சப்பவே, நான் இதுக்கெல்லாம் தயாராய்ட்டேன்” – பெருமையாச் சொல்லியவனைக் கண்டுச் சிரிப்பு வந்தாலும்.. அடக்கிக் கொண்டு முன்னே நடந்தாள்.
அன்று எடுத்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஆங்காங்கு போஸ்டர்களாக மாறியிருப்பதைக் கண்டு நயனாவுக்குப் புன்னகை புரிவதை அடக்கிக் கொள்ள முடியவில்லை! தான் இத்தனை அழகா என்ற வியப்பைத் தாண்டி.. சேத்ரனும்,அவளும் ஜோடியாக அத்தனை அம்சமாகத் தெரிந்தது ஆச்சரியத்தைத் தந்தது.
வெட்கப் படு நயனா என்று விடாமல் தொல்லை செய்யும் சேத்ரன் மட்டும் இப்போது அவளது முகத்தைப் பார்த்தானானால் வியப்பில் மூழ்கி விடுவான்! சூடேறிச் சிவந்திருந்த காது மடல்களை நீவி விட்டபடி, வேலையைக் காணச் சென்றாள்.
திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு சேத்ரன் அழைத்திருந்த செஃப் ரிப்பன் கட் செய்து விழாவைத் தொடங்கி வைக்க.. கொஞ்சம்,கொஞ்சமாகக் கூட்டம் சேரத் தொடங்கியது.
செண்டர் பீஸாக அவர்கள் வைத்திருந்த ஆளுயர வெட்டிங் கேக் எதிர்பார்த்தபடி அனைவரையும் கவர்ந்தது. ஆங்காங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் இருந்தவர்களின் முகங்கள் தான் எனக் கண்டு கொண்ட மக்களிடம் சமீபத்தில் தான் தனக்குத் திருமணம் நடந்ததென அள்ளி விட்டான் சேத்ரன். ‘அடப்பாவி’என்று முறைத்தாலும் பல்லைக் காட்டினாள் நயனா. அன்றே சில,பல வெட்டிங் ஆர்டர்களும் கிடைத்து விட.. அனைவரது முகங்களும் ஈஈஈஈ-யென்றானது.
நகரும் பெல்ட்களில் வரிசையாகச் சென்று கொண்டிருந்த கலர்,கலர் பேஸ்ட்ரிக்கள், ட்ரெண்டி கேக்ஸ் என்ற தலைப்புடன் செஃப்கள் அனைவரும் தங்கள் கைவரிசையைக் காட்டிய கேக்குகள்! நட்ஸ்கள் நிரம்பிய ஹெல்தி மஃபின்ஸ்கள், சிறுவர்களைக் கவரும் கார்ட்டூன் கேரக்டர் டிசைன்கள் என அவர்கள் திட்டமிட்ட அனைத்தும் மக்களைக் கவர்ந்தது. அனைத்தையும் தாண்டி சிரிப்புடன் வருவோரைக் கவனித்த பணியாளர்கள்!, புதிதாகத் தாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதைப் பொறுமையாக எடுத்துச் சொன்ன விதம் என அனைத்தும் சேத்ரனுக்குத் திருப்தியாக அமைந்தது. ஏற்கனவே அந்த பேக்கரிக்கு நல்ல பெயர் இருந்தபடியால் மக்களின் வருகை அன்று அதிகமாக இருக்கவும், பணியாளர்கள் முழு பிஸியுடன் சுற்றிக் கொண்டிருந்தனர்.
ஒரு வழியாக விழா முடிந்து அன்று கிடைத்த லாபத்தைத் தோராயமாக சேத்ரன் கூறும் போது பணியாளர்களிடையே கரகோஷமும், ஊஊஊஊஊஊ என்கிற சத்தமும் கிளம்பி அவனையும் உற்சாகம் கொள்ள வைத்தது!
அன்றிரவு ஷாம்பெய்ன் பார்ட்டி என்று அவன் அறிவித்திருந்த படியால்.. ஆளாளுக்குக் கையில் பீர் பாட்டில்களையும்,ஷாம்பெய்ன் பாட்டில்களையும் பீச்சி அடித்து விளையாடியபடி.. ஆட்டம்,பாட்டமென கூத்தடித்துக் கொண்டிருந்தனர்.
தன்னை பிராமணன்,பிராமணன் என்று பீற்றிக் கொள்ளும் காண்டீபன் தான் அங்கே செண்டர் ஆஃப் அட்ராக்ஷன்! இதுவரை எத்தனை பீர்களை உள்ளே அனுப்பியிருப்பான் என்பது அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்!
அனைத்தையும் சிரித்த முகத்துடன் கண்டபடிக் கையில் ஒரு சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொறித்துக் கொண்டிருந்த நயனாவின் தோளைத் தட்டி அழைத்தான் சேத்ரன். என்னவென்று திரும்பியவளிடம் வா-வெனத் தலையசைத்து விட்டு முன்னே நடந்தான்.
விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்த பலகணியருகே வந்தவர்கள்.. கீழே விரிக்கப்பட்டிருந்த கார்பெட்டின் மீது அமர்ந்து தெருவை வெறித்தனர். ஆளரவமற்ற தெருவையும்,ஆங்காங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தையும் கண்டபடி சிப்ஸை மென்று கொண்டிருந்தவளிடமிருந்துப் பாக்கெட்டைப் பறித்துக் கீழே வைத்தவன்.. சட்டெனக் குனிந்து அவள் மடி மீது தலை சாய்த்தான்.
ஒரு நிமிடம் விறைத்துத் தடுமாறியவள் பின் குனிந்து அவன் முகம் நோக்கி “இப்படியெல்லாம் பண்றச்ச, உங்களை ஒரு ரொமாண்ட்டிக் பர்சனாலிட்டியா திங்க் பண்ணிப்பேளோ?” என்றாள்.
“ஏய்.. நார்மல் பர்சன்,ரொமாண்டிக் பர்சன்னு வகைகள் எதுவும் உலகத்துல கிடையாது. செக்ஸ்ன்றது உலகத்து ஜீவராசிகள் அத்தனைக்கும் தேவையான ஒன்னு”
“ச்சி, நான் என்ன சொன்னா.. நீங்க என்ன சொல்றேள்?”
“செக்ஸ்ன்றது கெட்ட வார்த்தை இல்ல நயனா”
“அய்யோ! நிறுத்துங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்”
“இப்போ உன் காது சிவந்திடுச்சு தான?ஹாஹாஹா” – அவன் சொன்னதும் உச்சுக் கொட்டியபடி காது மடல்களை நீவி விட்டுக் கொண்டாள்.
“நயனா…..”
“ம்ம்ம்”
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..”
“எதுக்கு?”
“இங்க என்னோட… பேக்கரியில இருக்க ஒத்துண்டதுக்கு! என் லவ்வ அக்செப்ட் பண்ணிட்டதுக்கு! என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு!”
“நிறுத்துங்க,நிறுத்துங்க! பர்ஸ்ட் ஸ்டேட்மெண்ட் ஓகே! அடுத்த ரெண்டையும் என்னால ஏத்துக்க முடியாது. சும்மா ஒரு ரிங்கை மாட்டி விட்டுட்டு கல்யாணமே நடந்து முடிஞ்சிட்ட மாதிரி பில்ட்-அப் கொடுக்கிறதெல்லாம் டூ மச்”
“அப்படியா?, இன்னிக்கு வந்த ட்ரெஸ்டென் மக்கள் எல்லாரும் உன்னை என் பொண்டாட்டின்னு தான் நினைச்சிட்டிருக்காங்க!”
“ஆனாலும்.. நீங்க பெரிய ஃப்ராட்! எல்லாத்தையும் பிசினெஸ் ஆக்குறீங்க?”
“ச்சிச்சி நீ ஏன் அந்தக் கோணத்துல பார்க்குற?, எனக்காக இங்க இருக்க சம்மதிச்ச, என் கேர்ஸ் ஃப்ரெண்டுக்கு ஏதோ என்னால முடிஞ்ச சின்ன அன்புப் பரிசு. கால,காலத்துக்கும் எல்லார் மனசுலயும் நிற்கும்ல, முக்கியமா உன் மனசுல” என்றபடி அவள் விரல்களை முத்தமிட்டவனிடமிருந்துப் பட்டெனக் கைகளை இழுத்துக் கொண்டாள்.
“இப்படியெல்லாம் பண்ணீங்கன்னா.. நான் எழுந்து போய்டுவேன்”
“கிஸ் பண்றது தப்பில்ல டார்லிங்”
“ஓஹோ! அப்போ கீழே போய் ஜென்னிக்கு ரெண்டு கொடுத்துட்டு வாங்கோ”
“ட்ரை பண்ணேன்! ஆனா.. அவ பாய் ப்ரெண்ட் உதைச்சிட்டான்”
“எ….என்ன??” என்றவள் அவன் தலை முடியைப் பிடித்து ஆட்டி “வேலை செய்யற ஸ்டாஃபை இப்படித்தான் பேசுவாங்களா?” எனக் கூற “வலிக்குது விடுடி.” என்று அவள் கையைப் பற்றி நெஞ்சில் பதித்துக் கொண்டவன் கண்களை மூடிக் கொண்டு மீண்டும் “நயனா….” என்றான்.
“ம்ம், கேட்டுண்டு தான் இருக்கேன்”
“ரொம்ப நாளைக்கப்புறம் மனசு எவ்ளோ ரிலாக்ஸ்டா இருக்கு தெரியுமா?, நீ பக்கத்துல இருக்கிறது இவ்ளோ நிம்மதியைத் தரும்ன்னு நினைக்கவேயில்ல”
“………….”
“உனக்கு என் மேல கோபம் இருக்குன்னு தெரியும், நீ பண்ணின தப்புக்கு நான் என்ன பண்ணுறது,எப்படியோ போடின்னு என்னால விடவும் முடியல! பதிலுக்குக் கோபப்பட்டு உன்னை நினைக்கிறதை நிப்பாட்டவும் முடியல! எங்கே,என்ன செய்றியோன்னு உள்ளே ஒரு நமைச்சல் இருந்துட்டே இருந்தது. எதார்த்தமாத் தான் டைரியை ரீட் பண்ணேன்! மாஸ்டர்பேஸ்ட்ரி செஃப் நிகழ்ச்சில கலந்துட்டப்போ.. அதிலிருந்த ரெசிபிக்களை பண்ணித் தான் ஜெயிக்கனும்ன்னு மனசு சொல்லுச்சு! என்னவோ… உனக்குக் கிடைக்காம போன வாய்ப்புகளோட சேர்த்து உன் கற்பனைகளும் அழிஞ்சு போயிடக் கூடாதுன்னு ஒரு பிடிவாதம் இருந்தது. ஆனா.. அப்போ தெரியாது! நீ மறுபடி ஒரு நாள் வந்து என்னோட ஜாயின் பண்ணிப்பன்னு!”
“தெரிஞ்சிருந்தா என் ரெசிப்பிஸ்-ஐ திருடிருக்க மாட்டேள். முதல்ல பேடண்ட் ரைட்ஸ் வாங்கனும்”
“ஹாஹாஹா.. ஏய்,அதுக்காக எனக்கு யோசிக்கிற திறமையே இல்லன்னு நினைச்சுட்டியா?, உன் கற்பனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க என்னோட ஒரு சின்ன முயற்சி! சரியா?”
“ஹ்ம்ம்,ஹ்ம்ம்! நம்புறேன்!, நீங்க இவ்ளோ தூரம் முன்னேறக் காரணமாயிருந்த எனக்கு, நீங்க பதிலுக்கு என்ன தந்தீங்க?”
“அதான் என்னையே தந்துட்டேனே! அது போறாதா?” – என்றவனின் தலையில் மீண்டும் அடித்தவளைக் கண்டுச் சிரித்தான் அவன்.
அமைதியாகக் கழிந்த சில நிமிடங்களை இருவரும் மௌனமாக அனுபவித்தனர். பின்..
“ஹேய், நாம இந்த வீக்-எண்ட் க்ளாஸ்ஹுட்டேக்கு போகலாம்”
“அப்டின்னா?”
“அது ஒரு இடம்டி. அங்க தான் கிட்டு மாமாவும்,மாமியும் இருக்காங்க”
“சித்தி,சித்தப்பா இங்கேயா இருக்காங்க??” – ஆச்சரியமாய் வினவியவளிடம் “அவங்க என் அம்மா-அப்பாவுக்குச் சமம்டி. என் கூட இல்லாம பின்ன யாரோட இருப்பாங்க?”
“ஆனா… அவருக்குத் தான் என்னைப் பிடிக்காதே!”
“அவருக்குப் பிடிச்சா என்ன,பிடிக்காட்டி என்ன?, நீ குடும்பம் நடத்தப் போறது என்னோட தான்! என்னைத் தவிர யாரையும் நீ கன்சிடர் பண்ணனும்னு அவசியமில்ல”
உள்ளே குளிர்ந்தாலும் மறைத்து “இன்னும் உங்களோட குடும்பம் நடத்த நான் சம்மதிக்கவேயில்ல. மறந்துடாதீங்க?” என்றாள்.
“ஆரம்பிச்சுட்டா டா!” என்றவன் “உன்னை ஆஃப் பண்றதுக்கு நான் ஒரு புது ஐடியாவோட வந்திருக்கேன்” என்றபடி எழுந்து அமர்ந்தான்.
“என்ன??”
பதில் கூறாமல் அவள் இதழ்களை நோக்கியபடி அருகே வந்தவனைக் கண்டு விழிகளை விரித்தவளிடம் “ஒரே ஒரு லிப்-லாக்! மை வெர்ரி ஃபர்ஸ்ட் லிப்-லாக்” என்றான்.
“எ…என்..என்ன??? என்ன சொன்னீங்க?”
“லிப்-லாக்டி. தூய தமிழ்ல சொல்லனும்னா.. இதழ் முத்தம்!”
“இதோடாஆஆஆஆ… உங்க மண்டையைப் பொளந்ததுல தப்பே இல்ல. மீட் பண்ணி முழுசா ஒரு மாசம் கூட முடியல. அதுக்குள்ள என்னென்ன பண்றீங்க?, நான் கிளம்புறேன்ப்பா…” – வேகமாக எழப் பார்த்தவளிடம் “அதுக்கு முன்னாடி ஒரு ஏழு வருஷத்தை நான் உன்னை நினைச்சுட்டும்,நீ என்னை நினைச்சுட்டும் கழிச்சோமே! அதெல்லாம் கணக்குலயே வராதா?” என்றான்.
“அப்போல்லாம் இதைப் பத்தியா நினைச்சிண்டிருந்தோம்???”
“எனக்கு அதெல்லாம் தெரியாது. உன் விரல்ல மோதிரத்தை மாட்டுனப்போ உன் பர்மிஷன் கேட்டுண்டா இருந்தேன்?, நயனா.. உனக்கு இந்த மாதிரி ஃபீலிங்க்ஸ் எல்லாம் ஸ்டார்ட் ஆகும் போது, நான் அரைக் கிழம் ஆனாலும் ஆயிடுவேன்! என்னால வெயிட் பண்ண முடியாது” என்றவன் ஒற்றைக் கையால் அவளது கன்னத்தைப் பற்றியிருந்தான்.
கண்களோடு சேர்த்துக் கைகளையும் இறுக மூடிக் கொண்டவளைக் கண்டுச் சிரித்துப் பின் மூடியிருந்த கையைப் பிரித்துத் தன் விரல்களோடுச் சேர்த்துக் கொண்டு.. மெல்ல அவள் முகம் நோக்கிக் குனிந்தவனிடம் “வெய்ட்,வெய்ட்! நீங்களும் தான குடிச்சேள்?, ஸ்மெல் வராது??” என்று சந்தேகமாக வினவினாள்.
“அதெல்லாம் வராதுடி” என்று கடுப்புடன் பதிலளித்தவன் பொறுமையின்றிக் குனிந்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.
அடுத்த நொடி “த்தூ,த்தூ…” எனத் தன் இதழ்களைப் பிரித்துக் கொண்டவள் “ஸ்மெல் வர்றது,ச்சிசிசிசிசி” என முகம் சுழிக்க.. எரிச்சலாகிப் போனவன்.. “உனக்கெல்லாம் வையலண்ட்டா இறங்குனா தான் டி சரி வரும்” என்றபடியே அவள் தோளைப் பற்றிக் கீழே சாய்த்திருந்தான்.
