நயனஷேத்ரம்
அடுத்த பத்தாவது நிமிடம் கடை வாசலின் முன்பு ட்ரைவருடன் நின்றிருந்த காரில் ஏறி பயணம் செய்யத் தொடங்கியிருந்தான் ஷேன்.கண்ணை மூடி சீட்டில் சாய்ந்தவனின் நாசி உணர்ந்த நெடி, அவனது குடலைப் பிரட்டியது. என்ன கருமம் இது?, ட்ரைவர் குடித்திருக்கிறானா?, எரிச்சலுடன் ஜெர்மன் பாஷையில் அதை அவன் வினவிய போது ‘இல்லை’ எனத் தலையாட்டினான் ட்ரைவர்.“ப்ச்” என்றபடி நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவனின் கண்கள் மீண்டும் ட்ரைவர் புறம் பாய்ந்தது. எப்படியோ இன்னும் ஒரு மணி நேரத்தைக் கடத்தியாக வேண்டும். வெளியே தெரியும் பனிப்பொழிவை வெறிப்பதற்கு இவனையேனும் பார்க்கலாம்.
பச்சையுமாய்,ப்ரௌனுமாய் ஃபர் கோட் அணிந்திருந்தான். ஸ்டியரிங் வீலில் பதிந்திருந்த நீளக் கை விரல்கள் அத்தனையிலும் மோதிரங்கள். ஆனால் இது ஆணுடைய கரங்களைப் போல் தெரியவில்லையே! தன்னையறியாமல் பார்வையில் ஆர்வம் தோன்ற, சற்றே நிமிர்ந்து அமர்ந்து கூர்ந்து நோக்கினான்.சுருட்டை,சுருட்டையானத் தலைமுடி பரட்டையாய்ப் படர்ந்திருந்தது. விக்கா என்ன?, இரண்டு காது மடல்களிலும் வரிசையாய் வளையத் தோடுகள்! முகத்தில் பாதியை மறைக்குமளவிற்குப் பச்சை வண்ணக் மூக்குக் கண்ணாடி. மூக்கிலும் கூட சின்னதாய் ஒரு வளையம்! இதழில் சாயம் எதுவும் பூசப்படவில்லை. அலட்டலின்றி நேர் வெறித்தபடி சீராக வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான்,இல்லை கொண்டிருந்தாள்.டோப் அடிக்கும் பார்ட்டி போலத் தெரிகிறாள். பாக்கெட் மணிக்காக வண்டி ஓட்டுகிறாள் போலும்! அவளையே நோக்கிக் கொண்டிருந்த ஷேனுக்கு மயக்கம் வருவது போல் தோன்ற அவன் அனுமதியின்றியே கண்கள் சொருகித் தலை தொங்கி விட்டது. லேசாக அவனுக்கு விழிப்பு தட்டிய போது யாரோ அவனது தோள்களை இறுக்கமாகப் பற்றி வண்டியிலிருந்துத் தரத்தரவென வெளியே இழுத்துக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து வாசிக்க..... கீழே உள்ள links-களை அழுத்தவும்....!
