அத்தியாயம் - 8

இன்று….

ThenWare Infotech-ற்கு இரண்டாவது முறையாக அன்று வருகை தந்திருந்த சரண்யா… கலக்கம் நிறைந்த முகத்துடன் விஜய்யின் முன்பு அவனது அறையில் அமர்ந்திருந்தாள். விஜய் அமர்ந்திருந்த நாற்காலியின் அருகிலேயே கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த பரத்தின் பார்வை முழுதும் அவளிடம்!

“ஜூஸ் சாப்பிட்றியா சரண்யா?” – பரத்.

“ப்ச், வேண்டாம்” - சரண்யா

“உன்னைப் பார்த்தா.. பயத்துல 2 நாள் சாப்பிடாம பட்டினி இருக்கிற மாதிரித் தெரியுது”

“ஹலோ! எனக்குப் பயமெல்லாம் இல்ல! இதை எங்கப்பாவுக்குத் தெரியாம எப்படி சமாளிக்கிறதுன்ற நினைப்பு மட்டும் தான்”

“உனக்கிருக்கிறத் தெனாவெட்டுக்கு நீயெல்லாம் எப்பிடி இந்தக் களவாணிப்பயகிட்டப் போய் மாட்டுன?”

பல்லைக் கடித்துக் கொண்டுப் பார்வையைத் தழைத்தவளைக் கண்டு.. “கொள்கையைக் கடைபிடிக்குற அவசரத்துல மூளை வேலை செய்யாம போயிருக்கும் மச்சி!” என்றான் விஜய்.

“இரண்டு பேரும் என்னை இப்படி நோகடிக்கத் தான் வரச் சொன்னீங்களா?” – ஆங்காரத்துடன் கத்தினாள் அவள்.

“ஷ்ஷ், சரண்யா… அவன் உனக்கு ஹெல்ப் பண்ணத் தான் ட்ரை பண்றான்! அவனை எப்போ தான் நீ புரிஞ்சுக்கப் போற?” – எரிச்சலுடன் பரத்.

தலையைக் குனிந்து கொண்டு அமைதியுடன் அமர்ந்திருந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு… “நீ பேசு மச்சி! நான் அப்புறம் வர்றேன்” என்ற பரத் அறையை விட்டு வெளியேறினான்.

ஏதோ முடிவு செய்திருக்கிறான் போலும் என்ற நம்பிக்கையுடன் விஜய்யின் முகத்தையே நோக்கியவளைத் தானும் நிமிர்ந்து நோக்கினான் விஜய்.

லாவண்டரும்,வெள்ளையும் கலந்த குர்த்தி அணிந்திருந்தாள், காதில் அதே குடை ஜிமிக்கி!

“எப்பவும் இந்த ஜிமிக்கி தான் போட்டிருப்பியா?” – விஜய்

எதற்கு இந்தக் கேள்வி இப்போது?, கேட்டால் திட்டுவான்! எரிச்சல் மண்டினாலும் மறைத்து “இந்தக் குர்த்திக்கு மேட்சா இருக்கேன்னு போட்டேன்” என்றாள்.

“நல்லாயிருக்கு” – அவன் பார்வையில் என்ன இருக்கிறதென்பதைச் சத்தியமாக அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை!

ரொம்ப முக்கியம்!! “இ….இதுக்கு எ..என்ன பதில் சொல்ல்ல்ல்றது….?” – காதைச் சொரிந்தபடி இழுத்தவளைக் கண்டுப் புன்னகை கொண்டு… “சரண்யா” என்றான்.

“சொல்லுங்க சீனியர்” – பயபக்தியுடன் அவள்!

“நான் இப்போ சொல்லப் போறதை நீ ரைட் சென்ஸ்ல எடுத்துக்கனும்! இல்ல, முடியாதுன்னு எதுவும் ஆரம்பிச்சேனா, நேரா உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணி நடந்துட்டிருக்கிற விசயத்தை நானே புட்டு,புட்டு வைச்சிடுவேன்”

“இல்ல,இல்ல எனக்கு நீங்க சொல்றதைக் கேட்குறதைத் தவிர வேற வழியே இல்ல! அதனால எதிர்த்து எதுவும் பேச மாட்டேன்” – அவசரத்துடன் கூறினாள் அவள்.

ஒரு பெருமூச்சுடன் தொடங்கினான் அவன்.

“ஸ்டீபன் என்னோட எக்ஸ்-எம்ப்ளாயின்னு சொன்னேன் இல்லையா?”

“ம்ம்”

“அதனால உன் நம்பர்ல இருந்து அவன் கிட்டப் பேசுனது நான் தான்னு போலீஸ் விசாரணைல சொல்லப் போறேன்”

“நீ….நீங்களா?, எ..எப்படி?”

“என்னோட நெருங்கிய ரிலேஷனா… என்னோட ஒரே வீட்ல இருக்கிற ஆளா உன்னைக் காட்டினோம்ன்னா, உன் ஃபோன்ல இருந்து அவனைக் காண்டாக்ட் பண்ணினது நான் தான்னு லாஜிக்கலா ப்ரூவ் பண்ணிடலாம்! நீ வேற ராத்திரி,பகல் பார்க்காம உன் ஆசைக் காதலனோட அளவளாயிருப்ப! அதைச் சமாளிக்க இது ஒன்னு தான் வழி”

“…………….” – புரியவேயில்லை அவளுக்கு.

“அவன் வேலையை விட்டுப் போய் ஒன்றரை மாசம் தான் ஆகுது! அதனால வேலை சம்பந்தமா, செட்டில்மெண்ட் விசயமா நான் அவனைக் காண்டாக்ட் பண்ணினதா என்னால பேசி சமாளிக்க முடியும்.”

“ஓ……”

“இப்போ க்வஸ்டின் உனக்கும்,எனக்கும் என்ன ரிலேஷன்ஷிப்ன்றதுல வந்து நிற்கும். நீ சொல்லு.. ஒரே வீட்ல ஆல் டைம் கூட இருக்கிற மாதிரி.. ரொம்ப உரிமையா உன் ஃபோனை நான் யூஸ் பண்ணிக்கிற அளவுக்கு.. உன்னையும்,என்னையும் க்ளோஸா காட்டிக்கனும்னா.. எந்த ரிலேஷன்ஷிப்பை சொல்லலாம்?

“எ…என்னன்னு சொல்லலாம்?” – கேள்வியை அவன் புறமே திருப்பினாள் அவள்.

“அண்ணன் தங்கச்சின்னு வைச்சுக்கலாமா?”

“ச்சி! வேணாம் வேணாம்” – முகத்தைச் சுழித்தபடி பதிலளித்தாள் அவள்.

“ஏன்?”

“ப்ச், ஒரு காலத்துல விழுந்து விழுந்து சைட் அடிச்சப் பையனைப் போய் அண்ணன்னு சொல்வேனா நான்?”

“ஓ! உனக்கு அதெல்லாம் நியாபகம் இருக்கா?”

“நீங்க வேணா மறந்திருப்பீங்க” - முறுக்கிக் கொண்டவளிடம் “ஆமா!, நான் தான் மறந்துட்டேன்! வாயை மூடுடி! வாயை மூடு! எரிச்சல் வருது எனக்கு” என்று அவன் சீற.. கையைப் பிசைந்தபடி அமைதியாகி விட்டாள்.

சிறிது நேரம் அறையில் அமைதி நிலவ.. அவன் பார்வை அவள் புறம் கோபமாகப் பதிந்திருப்பதை அவளால் உணர முடிந்தது! அப்படி என்ன என் மேலக் கோபம் இவனுக்கு! நெரித்தப் புருவங்களுடன் அமர்ந்திருந்தாள் அவள்

“நான் ஸ்ட்ரைட்டாவே சொல்றேன்! நீயும்,நானும் புருஷன்,பொண்டாட்டின்னு சொல்லப் போறேன்!, உனக்கும்,எனக்கும் கல்யாணம் ஆகிட்டதா டியூப்பிலிகேட் மேரேஜ் சர்டிஃபிகேட் ரெடி பண்ணச் சொல்லியிருக்கேன்! இந்த விசயத்துல இருந்து நீ தப்பிக்க இது ஒன்னு தான் வழி” – படபடவெனக் கூறி முடித்தான் அவன்.

வெகுவாக யோசித்தபடி அமர்ந்திருந்தவளிடம் எந்தவிதப் பதிலும் இல்லாமல் போக.. “சரண்யா” என்றழைத்தபடி மேஜையைத் தட்டினான்.

நிமிர்ந்து அவனை நோக்கியவளிடம் “பதில் சொல்லு. உனக்கு ஓகே வா?” என்றான்.

“எங்கப்பாவுக்கு இது எதுவும் தெரிய வராதுல்ல?” – பீதியுடன் அவள்.

‘மரமண்டை! மரமண்டை! எவ்ளோ பெரிய விசயத்தைச் சொல்லிட்டு ஹார்ட்டைக் கைல பிடிச்சுட்டு உட்கார்ந்திருக்கேன்! இவ என்னடான்னா.. இப்பவும் அவ அப்பனைப் பத்தி யோசிக்கிறா! பேக்கு!

“அதெல்லாம் தெரிய வராது. இந்த இண்சிடெண்ட்டுக்கு அப்புறம், நீயும்,நானும் பார்த்துக்கக் கூடப் போறதில்ல! அப்புறம் என்ன பயம்?”

“ப்ச், ஏன் அப்படி சொல்றீங்க?, நான் உங்களோட காண்டாக்ட்ல தான் இருக்கப் போறேன்”

“பார்ப்போம். உன் ஃபோனைக் கொடு! கொஞ்ச நாளைக்கு என் கிட்டயே இருக்கட்டும் இந்த ஃபோன்! விசாரணை முடிஞ்சப்புறம் சிம்-அ டி-ஆக்டிவேட் பண்ணிக்கலாம்!” – அவன் முடிவாகக் கூறி விட.. அவளும் வேறு வழியின்றித் தலையாட்டி வைத்தாள்.

“வ…வந்து..” – சரண்யா.

“ம்ம்?”

“நாம கொடுக்கிற சர்ட்டிஃபிகேட் போலின்னு தெரிஞ்சுடுச்சுன்னா?”

“அப்போ நிஜமாவே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரிஜினல் சர்டிஃபிகேட்டே கொடுத்துடலாமா?”

“சீனியர்ர்ர்ர்ர்” – விரிந்த விழிகளுடன் வாயைப் பிளந்தாள் அவள்.

“முடியாதுல்ல?, அப்போ கேள்வி கேட்காத. சப்போஸ் அது போலிச் சான்றிதழ்ன்னு தெரிய வந்தா.. அதையும் நானே சமாளிச்சுக்கிறேன். இப்போ இதுல ஒரு கையெழுத்துப் போட்டுட்டு நீ கிளம்பு..” என்றபடி ஒரு காகிதத்தை நீட்டினான்.

என்ன இதுவெனக் கேள்வி கேட்டால்.. மேலும் சீறுவானோ எனப் பயந்து.. திருமணப் பதிவுக்கான விண்ணப்பம் அதுவெனத் தெரிந்தும், வேறு வழியின்றிக் கையெழுத்துப் போட்டாள்.

“இப்போ நீ கிளம்பு! போலீஸ் விசாரணைன்னு எது வந்தாலும், நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன்! உன்னை இதுல இன்வால்வ் பண்ண மாட்டேன்”

-அவன் கூறியதும் முகம் மலர எழுந்தவள் “நி..நிஜமாவா?, இ..இது சாத்தியமா?, நான் ஸ்டீபனைக் காதலிச்சதை போலீஸ்க் கிட்டயிருந்து அவ்ளோ ஈசியா மறைச்சிட முடியுமா?” எனக் கேட்க… வெளியே செல் எனக் கதவை நோக்கிக் கைக் காட்டினான் அவன்.

அவன் கூறுவதை நம்புமளவிற்குப் போலீஸ் முட்டாளா?, அவளும்,ஸ்டீஃபனும் பேசிய கால்களை ட்ரேஸ் செய்தாலே அவனுடன் பேசியது அவள் தான் என்ற உண்மை தெரிந்து விடுமே! தனக்கும்,ஸ்டீபனுக்குமான உறவை வெளிக் கொண்டு வராமல், இவன் எப்படிச் சமாளிக்கப் போகிறான் என அறிவு கேள்வி கேட்டாலும், அவனதுக் கோப முகத்திற்கும், கடின வார்த்தைகளுக்கும் பயந்து… தன் தந்தையை எண்ணி நடுங்கி.. லாஜிக் பார்க்காமலேயே அவனுக்குத் தலையாட்டி விட்டு ஃபோனையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும் மூச்சை இழுத்து வெளியிட்ட விஜய்.. சீட்டில் சாய்ந்து அமர்ந்து.. தலையைக் கோதினான்.

உண்மையில்.. அவனைப் பொறுத்தவரையில் இது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை! போலீஸ் கமிஷ்னர் கேதர்நாத் அவனது நண்பனின் தந்தை தான்! ஏற்கனவே ஸ்டீபன் விசயத்தை அவரை வைத்துத் தான் முடித்திருந்தான்.

மீண்டும் அவனைப் பற்றிய கேஸ் என்றதும், அவரிடம் சரண்யாவைப் பற்றிக் கூறி விசாரணைப் பட்டியலிலிருந்து அவள் பெயரை நீக்கச் செய்திருந்தான்! சரண்யா வந்து கூறிச் சென்ற அன்றே இவ்வனைத்தையும் முடித்து விட்டான். ஆனாலும் இந்த விசயத்திற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்து அவளுடனான உறவை முடித்துக் கொள்ள அவனுக்கு விருப்பமில்லை!

இது கடவுளாகக் கொடுத்த செகன்ட் சான்ஸ்! இந்தப் பத்து வருடங்களில்.. அவளை நினைக்காத நாளில்லை என அவன் காதல் வசனம் பேசப் போவதில்லை! ஆனால்.. மனதின் ஒரு மூலையில் அவளைப் பற்றிய நினைவு.. பூஞ்சையாய் பரவிப் போய் தான் கிடந்தது. பிடுங்கி எறிய முடியாத கள்ளிச் செடி அது!

படிப்பு முடிந்ததும் வெளி நாட்டு வேலையென மூன்று வருடங்களைக் கடத்தியவன் அதன் பின்பு மும்பையில் செட்டில் ஆகியதும், தொடங்கியப் புதுக் கம்பெனியின் வளர்ச்சியைக் காண்பதில் அடுத்த ஐந்து வருடங்களைச் செலவழித்திருந்தான். புதைந்து போயிருந்த அவள் நினைவுகள் முன்னே வராமலிருக்கப் பெரிதும் பங்கு வாய்த்தது இந்த வேலை தான்!

இடைப்பட்ட இத்தனை வருடங்களில் அவளைப் பற்றிய பேச்சு நண்பர்களிடையே எழாமல் இருந்ததில்லை. நேஷனல் யுனிவர்சிட்டியிலிருந்து அவள் பாதியில் சென்ற பிறகும் கூட அவளுடன் ஃபேஸ்புக்,ட்விட்டர் என சோஷியல் நெட்வர்க் வழி உறவில் இருந்தவர்களின் மூலமாக அவளைப் பற்றிய செய்தி அவன் காதில் விழுந்து கொண்டு தானிருந்தது. ‘அவளுக்குத் திருமணமாகி விட்டதென்ற செய்தியை இதுவரை எவரும் கூறாயிருந்ததாலோ என்னவோ… இரண்டு வருடங்களாகத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவன் அன்னை தொல்லை செய்யும் போதெல்லாம்… அவளது முகமே வந்து போகும்!

ஆனாலும் தேடிச் சென்றுக் காதல் சொல்ல முடியாத அளவிற்கு மனதுக்குள் அவனை மீறிய ஒரு தடை! அதை.. ஒரு விதப் பயம் என்று கூடச் சொல்லலாம்! அவனை நிராகரித்து விடுவாளோ என்கிற பயம்!

ஒரு வேளை அவளுக்குத் திருமணமாகியிருந்தால்… ஒரு வேளை அன்னையின் தொல்லை தொடர்ந்திருந்தால்.. அவனும் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு.. குழந்தை,குட்டியெனக் குடும்பமாய் மாறியிருப்பான்! ஆனால்.. அதில்.. காதல் இருந்திருக்குமாவெனத் தெரியாது!

எது எப்படியாயினும் இப்போது அவள் அவன் கண்ணில் பட்டு விட்டாள்! இந்த முறை எந்தக் காரணத்திற்காகவும் அவன் அவளை விட்டுக் கொடுப்பதாக இல்லை! தன்னை மறுக்க முடியாத நிலையில் அவளை நிறுத்தி வைத்து… தவிர்க்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விட வேண்டுமென்கிறத் தீர்மானத்துடன்!

Back to 2004….

ன்று லேப் செஷன் முடிந்துத் தனது புத்தகங்களைப் பையில் திணித்துக் கொண்டிருந்த சரண்யா… கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த விஜய்யைக் கண்டு.. “குட் ஈவ்னிங் சீனியர்” எனக் கூறி மலர்ந்து சிரித்தாள்.

அவள் புன்னகையைக் கண்டுத் துள்ளிக் குதித்த மனதை அடக்கி லேசாக அவளிடம் தலையசைத்தவன் நேரே ப்ரஃபசரை நோக்கிச் சென்றான்.

அவன் வெளியே வரும் வரை லேப் வாசலில் காத்திருந்தவள், தன்னைக் கடந்து செல்லவிருந்தவனின் கையைப் பற்றி “சீனியர், என்ன கண்டுக்காம போறீங்க?” என்று நிறுத்தினாள்.

என்னவோ தெரியவில்லை! அவள் முகம் பார்த்து.. அந்தக் கண்களை நோக்கி.. இயல்பாக அவளுடன் உரையாட முடியுமென்றேத் தோன்றவில்லை அவனுக்கு! எல்லாம் அந்த இரவு செய்த மாயம்! ஆண்களுக்குக் கூட வெட்கம் வருமா?,

அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தாலே.. கண்கள் ஃப்ரீஸ் ஆகி விடுகிறது! அதன் தாக்கத்தில் விறைத்துக் கிடக்கும் இதழ்களை விரித்து எப்படி உரையாடுவது?,

தன் கைகளைப் பற்றியிருந்த அவள் விரல்களை நோக்கியவனுக்கு, அந்த விரல்களை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொள்ளும் வேகம் பிறக்க.. சட்டென அவள் கையை உதறியவன்… அவளைப் போலவே “என்னைத் தொட்டுப் பேசக் கூடாது” என்றான்.

அவன் செய்கையில் புருவத்தைத் தூக்கி “பார்றா….” என்றவளுக்குச் சிரிப்பு வந்து விட.. “ஹலோ! என்ன ரொம்பப் பண்றீங்க?” என்று வம்பு செய்தாள்.

“ஏன்?,உனக்கு மட்டும் தான் கற்பு இருக்கா?, எனக்கு இல்லையா?, வயசுப்பையன் நான்! என்னைத் தொட்டுப் பேசுறதும் தப்பு தான்! புரிஞ்சதா?” – பெரிதாக முறுக்கிக் கொண்டவனை முறைத்துப் பின்..

“என்ன காலைல இருந்து உங்களைப் பார்க்க முடியல?, ரொம்ப பிஸியா?” – என்றாள்.

என்ன கூறுவான்?, உன் கண்ணைப் பார்த்துப் பேச வெட்கமாக இருந்தது! அதனால் தான் உன் முன்னே வரவில்லை என்றா? ப்ச்! விஜய்! இப்படி மாறிட்டியேடா! கிண்டலடித்த மனசாட்சியை அடக்கி.. “ஹ்ம்ம்,ஆமா கொஞ்சம் பிஸி” என்றான்.

“என்னவோ சரியில்லையே!” – என்று முணுமுணுத்தபடி அவனையே கூர்ந்து நோக்கியவளைக் கண்டு… அவனுக்குப் புன்னகை பூக்க… எப்படிப் பார்க்குறா பாரு! முட்டக்கண்ணி! என்று சிரித்துக் கொண்டவன்..

“என்ன? சைட் அடிக்கிறியா?” என்றான் வம்பு செய்யும் நோக்கத்துடன்.

டக்கெனக் கண்களில் தோன்றிய ஒளியுடன் “யெஸ்! இந்த ப்ளூ ஷர்ட் உங்களுக்கு சூப்பரா இருக்கு” என்றாள்.

“ம்ஹ்ம்??” என்றபடியே அவளை மேலும்,கீழும் நோக்கியவன் “நீயும் அழகா இருக்க” என்றான்.

களைந்து போய்க் கிடந்தத் தலைமுடியும், வரண்டு போயிருந்த கன்னங்களுமாய் நின்றவளை அவன் அவ்வாறு கூறவும் “ப்ச், என்ன நக்கல் பண்றீங்களா?” என்று சிடுசிடுத்தாள் அவள்.

“இல்ல, நிஜமாவே அழகா இருக்க”

“ப்ச், சீனியர்”

“வேணும்ன்னா இந்தப் பையனைக் கூப்பிட்டுக் கேட்டுப் பார்ப்போமா?”

“ஷ்ஷ், ஏன் என்னைக் கலாய்க்கிறீங்க இப்போ?”

“அப்போ நான் சொல்றதை நம்பு”

“என்ன சொன்னீங்க?

“நீ ரொம்ப,ரொம்ப அழகாயிருக்கன்னு”

“சரி, நான் ரொம்ப ரொம்ப அழகாயிருக்கேன். ஓகே?” – கையைத் தூக்கி அவள் ஒப்புக் கொண்டதும் வாய் விட்டு நகைத்தான் அவன்.

“அன்னைக்கு நைட் உங்க முன்னாடி நான் பி.டி ரூம்ல வாந்தி எடுத்துட்டதா நேத்ரா சொன்னதைக் கேட்டதுல இருந்து, பயங்கர எம்பாரசிங்கா இருந்தது எனக்கு! ஒரு வேளை அதனால தான் என்னை அவாய்ட் பண்றீங்களோன்னு பயந்து போயிட்டேன்”

“ப்ச், வாந்தி எடுத்ததுக்காகவெல்லாம் அவாய்ட் பண்ணுவாங்களா?”

“ஹிஹி!, எங்க உங்களுக்கு என்னைப் பிடிக்காம போயிடுச்சோன்னு ஒரு பயம் தான்!”

அவளையே ஒரு மாதிரி நோக்கி “இந்த ஜென்மத்துல உன்னை எனக்கு எந்த காரணத்துக்காகவும் பிடிக்காம போகாது” என்றவனிடம் ஈஈஈஈஈ-என அனைத்துப் பல்லையும் காட்டிப் புன்னகைத்து வைத்தாள் அவள்.

“அன்னைக்கு வேற என்ன நடந்ததுன்னு கேட்டதுக்கு நேத்ரா எதுவுமே சொல்லல! நீங்க சொல்லுங்க சீனியர்! அன்னைக்கு நான் எதுவும் லூசுத்தனமா நடந்துக்கலையே!” - சரண்யா

‘லூசுத்தனம் பண்ணினது நீ இல்லடி! நான் தான்! மொத்தமாக லூசாகி உன் மேல பைத்தியமா சுத்திட்டிருக்கேன்’ – மனதுக்குள் நினைத்துக் கொண்டு..

“ஆமா, நீ ஏன் அன்னைக்கு அவ்ளோ குடிச்ச?, அவளுங்க தான் வம்பிழுக்கிறாளுகன்னு தெரியுதுல்ல?, வாண்டட்-ஆ போய் மாட்டியிருக்க?”

“ப்ச் சீனியர்! நான் தானா போய் வம்பிழுக்க மாட்டேன்! ஆனா வந்த சண்டையைக் கண்டிப்பா விட மாட்டேன்!” – வசனம் பேசியவளை அவன் முறைத்துப் பார்க்க…

“வேற என்னப் பண்ணியிருக்கனும்?, சரிங்க பால்டின்! நீங்க சொல்ற மாதிரியே கேட்டு நான் இனிமே விஜய் சீனியர் கூடப் பேசலன்னு ஒதுங்கியிருக்கனுமா?, அப்டியெல்லாம் உங்களை என்னால விட்டுக் கொடுக்க முடியாது!” – சட்டமாகக் கூறியவளைக் கேட்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.

பாக்கெட்டுக்குள் இரண்டு கைகளையும் நுழைத்துக் கொண்டு.. குளிர்க்காற்றில் சிலிர்த்து நின்றவனைத் தானும் சிரிப்புடன் அவள் நோக்க… பார்வை மாற அவளை நோக்கினான் அவன்.

“நீங்க ரொம்ப ஹாண்ட்சமா இருக்கீங்க” – ரசனையுடன் கூறியவளிடம் முறுவலித்து “தேங்க்ஸ்” என்றான்.

இப்போதும் பார்வையை விலக்காதிருந்தவளிடம் “அநியாயத்துக்கு சைட் அடிக்கிற நீ” என்று சிரிப்புடன் அவன் கூற.. தோளைக் குலுக்கி உதட்டைச் சுழித்து “நான் அப்படித் தான்” என்றவளின் இதழ்களில் மொத்தமாய்த் தொலைந்து போனவன் தலையை உலுக்கிக் கொண்டுத் திரும்பி நடந்தான்.

“ஹலோ!, பேசிட்டிருக்கும் போதே விலகி நடந்தா என்ன அர்த்தம்?” – முதுகுக்குப் பின்னே கத்தியவளிடம் “என்னை நல்ல பையனாவே இருக்க விட மாட்டா! ராட்சசி!” என்று முணுமுணுத்தபடியே சென்று விட்டான் அவன்.

Dorm-க்குச் செல்லும் வழியிலிருந்த அப்ளைட் சயின்ஸ் டிபார்மெண்ட்டின் வகுப்பறையில் லைட் எரிவதைக் கண்டு உள்ளே நுழைந்தாள் சரண்யா.

“யோவ் நேபாலி.. க்ளாஸ்க்குள்ள நீ மட்டும் தனியா உட்கார்ந்து என்னய்யாப் பண்ணிட்டிருக்க?”

-வகுப்பறையில் தனியாக அமர்ந்திருந்த துஷரிடம் கேள்வி கேட்டபடி அவன் அருகே வந்தமர்ந்தாள்.

“ப்ச், சும்மா தான்! கொஞ்சம் லோ-ஆ ஃபீல் பண்ணேன்! அதான்..”

“ஏன்?, என்னாச்சு?”

“ஒன்னுமில்ல”

“மறுபடியும் ஹாஸ்டல்ல பிரச்சனையா?”

“ம்ம்”

“இப்போ என்ன பண்ணானுங்க?”

“காலைல நான் குளிச்சிட்டிருந்தப்போ பாத்ரூம் கதவு, என் ரூம் கதவு எல்லாத்தையும் பூட்டி வைச்சுட்டுப் போயிட்டாங்க! 6-ஹவர்ஸ்க்கு அப்புறம் என் ரூம் மேட் வந்துத் திறந்து விட்டான். குளிர்ல ரொம்ப நேரம் இருந்ததால.. ஒரு மாதிரியிருக்கு” – என்றவனின் நெற்றியில் கை வைத்துப் பார்த்து “காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு! வா,வா ஹாஸ்பிடல் போகலாம்” எனப் பதறியவளிடம் “வேணாம் சரண்யா, பரவாயில்லை. டேப்ளட் போட்டிருக்கேன்” எனப் பாவமாய்க் கூறினான் அவன்.

“இவனுங்கள்லாம்.. சோறு தான திங்குறானுங்க?, சக மனுஷனைக் கொடுமைப் படுத்துற அளவுக்கு வக்கிரக் குணமா ச்சி!” – கோபத்தில் கொதித்தாள் அவள்.

“இதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் மாறாது! ஜாதி,மதம்,மொழி,இனம்ன்னு எதுவும் அழியாத வரைக்கும் இது எதையும் மாத்த முடியாது”

“நீ ஏன் இதை விஜய் சீனியர் கிட்ட சொல்லாம இங்கே வந்து இப்படி உட்கார்ந்திருக்க?”

“வேண்டாம் சரண்யா! அவர்க்கிட்ட சொன்னா.. அவரும் பதிலுக்கு ஏதாவது செய்வார்! அப்புறம் பெரிய பிரச்சனை ஆகும். என்னால அவங்க பாதிக்கப்படுறதை நான் விரும்பல!”

“ப்ச்,உன்னை மாதிரி ஒரு நல்லவனைப் போய் தேடித் தேடி வந்து தொல்லை கொடுக்கிறானுங்களே!”

“…………..”

“சரி விடு நேபாலி! சியர் அப்! வாழ்க்கைல ஆண்டவன் கஷ்டத்தை மட்டுமே கொடுத்திட்டு இருக்க மாட்டான்! அப்பப்போ சந்தோசத்தையும் கொடுப்பான்! இப்போ உனக்குக் கடவுள் கொடுத்த சந்தோசம் தான் நான்! என் கிட்ட ஒரு பத்து நிமிஷம் பேசுனேன்னு வை!, சும்மா கலகலன்னு சிரிப்ப! பேசுறியா??”

“ஹாஹாஹா! பேசல்லாம் வேண்டாம்! உன்னைப் பார்த்தாலே எனக்கு சிரிப்பாத் தான் வருது”

“ப்ச், நேபாலி! என்ன கலாய்க்கிறியா?”

“ஹாஹா! நோ ஐம் சீரியஸ்!”

“ப்ச், போய்யா”

“ஆமா, நீ எப்பவும் விஜய் பாய்-ஐ விட்டு நகர மாட்டியே! இப்போ என்னத் தனியா சுத்திட்டிருக்க?”

“அவர் இன்னிக்கு ரொம்ப பிஸி போல! பத்து நிமிஷம் நின்னு பேசிட்டு ஓடிப் போயிட்டார்”

“சரண்யா…..”

“ம்ம்”

“நீ விஜய் பாய்-அ லவ் பண்றியா?” – திடீரென்ற அவன் கேள்வியில் படபடத்த இதயத்தை மறைத்து “ஏ….ஏன் ஏன் அப்படிக் கேட்குற?” என்றுத் திக்கினாள்.

“ஒன்னுமில்ல! பயப்படாத! உங்க ரெண்டு பேரையும் பார்த்தா.. அப்படித் தோணுச்சு! அதான் கேட்டேன்..” – என்ற துஷரிடம் பதிலேதும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் சரண்யா.

“ஆனா…. சரண்யா……. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்கக் கூடாது”

“சொல்லு”

“உனக்கு அவர் மேல அப்படியெந்த ஃபீலிங்கும் இல்லன்னா.. நீ அவர்க்கிட்ட ரொம்பவும் நெருங்கிப் பழகாம இருக்கிறது நல்லது!” – அவனது அறிவுரையில் கண்கள் விரியத் திகைத்துப் போய் எழுந்தவள்.. குழம்பிய மனநிலையுடன் வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள்.

துஷரிடம் விடைபெற்று யோசித்தபடியே ஹாஸ்டலை நோக்கி மைதானத்தில் நடந்து கொண்டிருந்தவளைக் கண்டு அசோக் “சின்ன மணிக் குயிலே… மெல்ல வரும் மயிலே.. எங்கே உன் ஜோடி?” எனப் பாடி “ஹேய் ஸ்பிரிங் முடி, எங்க உன் ஆளு விஜய்? பேண்ட் பாக்கெட்ல செருகி வைச்சிருந்தேனா, கொஞ்சம் இறக்கி விட்றியா?” என நேரம்,காலம் தெரியாமல் கேலி செய்து தொலைக்க…

“ஜஸ்ட் ஷட்-அப்..” என்று சீறினாள் அவள்.

“ஏய்ய்.. யாரை வாயை மூடச் சொல்ற?” – பதிலுக்கு அசோக் அருகே நின்றிருந்த ரமேஷ் பாய்ந்தான்.

“பின்ன என்ன?, ஒரு பையனும்,பொண்ணும் க்ளோஸா பழகுனா தப்பா?, உடனே உன் ஆளு,உன் ஆளுன்னு இட்டுக் கட்டி விட்றீங்க!, இன்னொரு தடவை அவரை என் ஆளு, அப்டி,இப்டின்னு சொன்னீங்கன்னா நான் டென்ஷன் ஆயிடுவேன்” – என்று கத்த.. அவளுக்கு எதிர்ப்புறமாக நடந்து வந்து கொண்டிருந்த விஜய்யின் காதில் இது அனைத்தும் மொத்தமாய் விழுந்து தொலைத்து அவனை இறுகச் செய்தது.

கொஞ்ச நேரத்திற்கு முன்னே அவள் பேசிய பேச்சென்ன?, இப்போது இவனிடம் சீறுவதென்ன?, சுர்ரெனக் கோபம் ஏற அப்படியே நின்று விட்டான் விஜய்.

அவளிடம் தன் மனதிலிருந்ததை வெளிப்படுத்தி விட்ட நாளிலிருந்து இன்று வரைத் தரையில் கால் பதியாமல் பறந்து கொண்டிருந்தவனின் செருக்குக்குக் கிடைத்த பெரிய அடியாகவே அவள் பேசிய வார்த்தைகளை உணர்ந்தான் அவன்.

“ஏய், என்ன ரொம்பப் பேசுற நீ?, சும்மா… அவன் பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி சுத்தி,சுத்தி வந்தா.. ஆளுன்னு சொல்லாம என்னன்னுடி சொல்வாங்க?” – சீனியர் என்கிற மரியாதை இல்லாமல் கத்தியவளிடம் உச்சக்கட்டக் கோபத்தில் பொங்கினான் அசோக்.

அவன் நாய்க்குட்டி என்றதும், ‘டி’ போட்டுப் பேசியதும் சரண்யாவை ஆத்திரமடையச் செய்ய.. அவனை நோக்கி உறுத்து விழித்தவள்.. “யூ ஆர் சோ சீப்” என்று விட்டுக் கடகடவெனக் குனிந்த தலை நிமிராமல் ஹாஸ்டலை நோக்கி நடந்து விட்டாள். வழியில் நின்றிருந்த விஜய்யை அவள் கவனிக்கவேயில்லை.

அவனைக் கண்டதும் அசோக் “பார்த்தியா மாப்ள எப்டி மரியாதையில்லாம பேசிட்டுப் போறான்னு?, சின்னப் பொண்ணாச்சேன்னு பாவம் பார்த்தது தப்பாப் போச்சு” என்று புலம்ப… “நீ ஏன் அவளை டி போட்டு மரியாதையில்லாம பேசுற?, அவளுக்கு டி போட்டுப் பேசுனா பிடிக்காது! நாளைக்கு அவளைப் பார்க்கும் போது ஒழுங்கா சாரி கேளு” என்றவன் இறுகிய முகத்துடன் அறைக்குச் சென்று விட்டான்.

“இப்போ நான் என்ன சொன்னேன்னு 2 பேரும் இப்டி பிஹேவ் பண்றாங்க?” – என்று கதறிய அசோக்கைச் சமாதானப்படுத்தி அவனையும் அறைக்கு இழுத்துச் சென்றான் ரமேஷ்.

துஷரின் பேச்சு சரண்யாவை ரொம்பவும் பாதித்து விட்டது! அவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள், எப்படி நடந்து கொண்டிருக்கிறாள் என்பதேச் சுத்தமாகப் புரியவில்லை அவளுக்கு! ஹாஸ்டல் வாசத்தில், தந்தையின் கண்டிப்பு இல்லாமல் சுதந்திரமாகத் திரிவதால்.. இஷ்டத்திற்கு இருந்து விட்டாளோ! ஆண்களுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதையே அறியாதவள்… விஜய்யுடன் அதிகமாய் நெருங்கி விட்டாளோ! யோவ் டாடி! நீ மட்டும் 5-ங்க்ளாஸ்ல அந்த சேட்டை சேதுவோட என்னைப் பழக அனுமதிச்சிருந்தா.. இன்னிக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?

லவ் பண்றியா?- எனக் கேட்டானே துஷர்! இதயத்தில் அப்போது தோன்றிய நடுக்கம் எதனால்?, பதினேழு,பதினெட்டு வயதில் தோன்றும் உணர்வுகளைக் காதல் தான் என எப்படி முடிவெடுப்பது?, யாரிடம் விளக்கம் கேட்பது?

விஜய்யுடன் அவளுக்கிருப்பது சாதாரண நட்புறவு அல்ல! அதை அவள் புரிந்தே இருந்தாள்! ஆனால்… அதையும் தாண்டி அந்த உறவு என்னவென்பதை யோசிக்கும் தைரியம் அவளுக்குக் கொஞ்சமும் கிடையாது! அவள் யோசிக்கவும் விரும்பவில்லை! எல்லை மீறிப் பழகாதவரை எதுவும் தவறில்லையென்கிற எண்ணத்தில், அவள் நடமாடிக் கொண்டிருக்க… தாங்கள் இருவரும் காதலிப்பதைப் போன்றொருத் தோற்றத்தை அனைவரும் உருவகப்படுத்துவது அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது.

ஓட்டுரிமைக் கூடக் கிடைத்திடாத இந்த வயதில் காதல் எனக் கூறிச் சுற்றித் திரிந்தால்.. பார்த்தசாரதி பெல்ட்டைக் கழட்டி விளாசித் தள்ளி விட மாட்டாரா?,

மோர் ஓவர், அவளுக்கென சில கொள்கைகளை வேறு வைத்திருக்கிறாளே! வேற்று மதத்தைச் சேர்ந்தவனைக் காதலித்துக் கலப்புத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று! ஜாதி,மதம் போன்றவை அழிய.. அவளால் ஆன சிறு முயற்சியாக இந்தத் திருமணத்தை எண்ணி வைத்திருக்கிறாளே! மாற்றத்திற்கான பாதையைத் தேடி சென்று கொண்டிருக்கும் உலகத்திற்கு அவள் தன்னாலான உதவியைச் செய்ய வேண்டுமென நினைத்து வைத்திருக்கிறாளே!

துஷருடனான அன்றைய உரையாடலுக்குப் பிறகு விஜய்யுடனான சந்திப்பென்பதே பயத்தைக் கொடுக்க.. குழம்பிப் போயிருந்த மனநிலையுடன் அவனைக் காண இயலாது, அவனிடமிருந்து மெல்ல விலக ஆரம்பித்தாள் சரண்யா.

முதிர்ச்சியற்றப் பதின் வயதுப்பெண் மிகச் சாதாரணமாய் எடுத்த முடிவு, அந்த இருபது வயது ஆண் மகனைப் பெரிதாகப் பாதிக்க.. அவன் நிலைகுலைய ஆரம்பித்திருந்தான்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் அவனைத் தவிர்த்தவளை மூன்றாம் நாள் மாலை நிறுத்தி வைத்துப் பேசினான் விஜய்.

முழுதாய் இருட்டியிருந்த வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவன் கம்ப்யூட்டர் லேப்பிலிருந்து வெளியே வந்தவளின் முன்னே சென்று நின்றான். அந்த இரவில், அங்கே அவனை எதிர்பாராது விழித்த சரண்யா பின் தலையைக் குனிந்த படி அமைதியாக நின்று கொண்டாள்.

“என்னாச்சு?, தொடர்ந்து 2 நாள் உன்னைப் பார்க்கவே முடியல?” – அவளையேத் தன் கூரிய விழிகளால் கூறு போட்டபடி வினவினான் அவன்.

“க்ளாஸ் டெஸ்ட். அதான் கொஞ்சம் பிஸி” – அலட்டிக் கொள்ளாமல் அவளும் பதிலளித்தாள்.

“நீ க்ளாஸ் டெஸ்ட்டுக்குப் படிக்கிற ஆளா?, சரண்யா.. நீ புக்கைத் தொடாம பரீட்சை எழுதினா கூட.. பாஸ் ஆயிடுவன்னு எனக்குத் தெரியும். அதனால, உண்மையைச் சொல்லு. என்னாச்சு?”

“…………….” – இன்னும் தலையைக் குனிந்த நிலையிலேயே வைத்திருந்தாள்.

“சரண்யா…” – ஆழ்ந்த குரலுடன் அவன்.

“………”

“நிமிர்ந்து என்னைப் பாரு…”

மறுக்கத் தோன்றாமல் மெல்ல அவனை நிமிர்ந்து நோக்கினாள். குளிர்க்காற்றில் நடனமாடிக் கொண்டிருந்த அவனது முன்னுச்சி முடியையும், அழுத்தமான அந்தக் கண்களையும் கண்டு மனம் மீண்டும் லிட்டர் கணக்கில் வழியத் துவங்க.. வயதுக்கும்,அறிவுக்கும் இடையே மாட்டி செய்வதறியாது ஃப்ரீஸ் ஆகி நின்றாள்.

அவள் தன்னை நோக்கியதும், தானும் அவளையே பார்த்தபடி முழுதாக ஐந்து நிமிடத்தை அமைதியாகக் கடத்தியவன் மெல்ல வினவினான்.

“எதுக்குடி என்னை அவாய்ட் பண்ற?” – மீண்டும் அதே ஆழ்ந்த குரல் அவனிடம்.

“எ…என்ன ‘டி’ போட்டுப் பேசுறீங்க?” – அதிர்ச்சியாய் அவள்.

“அப்படித் தான் பேசுவேன். நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு”

“……………..”

“சரண்யா, என்னைக் கோபப்பட வைக்காத”

“இ…இல்ல.. சீனியர்ஸ் எல்லாரும் உங்களை என் ஆளு அது,இதுன்னு ரொம்பக் கேலி பேசுறாங்க! அதான்ன்ன்ன்ன்” – இழுத்தவளை முடிக்க விடாமல் இடைமறித்தான் அவன்.

“ஏன்?, இன்னிக்கு நேத்தா அப்டிச் சொல்றானுங்க?, எப்பவும் நடக்கிறது தான?, புதுசா என்னப் பொத்துக்கிட்டு வருது உனக்கு?”

“…………….”

“சரண்யா, வாயைத் தொறந்து பதில் பேசு”

“இ…இல்ல… தேவையில்லாம எதையும் அப்ரிஷியேட் பண்ண வேணாம்ன்னுனுனு….”

“இத்தனை நாள் இல்லாம, இப்போ ஏன் அது தேவையில்லாததாத் தெரியுது உனக்கு?, நான் கேட்குறது உன் மரமண்டைக்குப் புரியுதா? புரியலயா?”

அவன் மரமண்டை என்றதும் டென்ஷனாகி நிமிர்ந்தவள் “ந..நம்ம 2 பேருக்கிடைல ஏ…ஏதாவது இ..இருக்கான்னு துஷர் அன்னைக்குக் கேட்டான்! அதான் பயந்துட்டேன்” என்றாள்.

“இதுல பயப்பட என்ன இருக்கு?, அவன் கேட்டக் கேள்வில உண்மை இல்லையா?”

“அதுல உண்மை இருக்கா?” – கண்களை விரித்தபடி சரண்யா.

“நான் உன்னைக் கேட்டேன்”

“நான் உங்களைக் கேட்கிறேன். நீங்க பதில் சொல்லுங்க”

பல்லைக் கடித்தபடி ஒரு நொடி அமைதியானவன் பின் வேக மூச்சுடன் நிமிர்ந்து “ஆமா, எனக்குப் பிடிச்சிருக்கு! நான் எஞ்சாய் பண்றேன்! பசங்க உன்னை என் ஆளுன்னு சொல்றதை!, உனக்கும்,எனக்கும் இடைல ஏதோ இருக்குன்னு கேலி பேசுறதை! நான் ஒத்துக்கிட்டேன். இப்போ நீ பதில் சொல்லு..” – என்றான்.

ஒரு நொடித் திகைத்து விழிகள் விரிய அவனையே நோக்கியவள்.. “ஏன்? ஏன் பிடிச்சிருக்கு? ஏன் எஞ்சாய் பண்றீங்க?” – என்று கேள்வி கேட்டாள்.

ஏளனத்துடன் அவள் மீது ஒரு பார்வையைச் செலுத்தி “என்னை சைட் அடிக்கிறேன்னு சொல்லி தினம்,தினம் என்னைப் பார்த்து வழியுறவ கேட்குறக் கேள்வியா இது?” – என்றான்.

நான் இவன் கிட்ட வழிஞ்சேனாம்! எப்படிச் சொல்றான் பாரு! முகம் கன்ற.. அவனை நிமிர்ந்து பார்த்து “ஆமா சைட் அடிச்சேன்! இப்பவும் அடிக்கிறேன்! அதைத் தாண்டி உங்களுக்கும், எனக்கும் எதுவுமே இல்லாதப்போ.. அவங்க சொல்றதை நான் ஏன் எங்கரேஜ் பண்ணனும்?” – கோபமாய் வினவினாள் அவள்.

“ஓ! அப்போ அதைத் தாண்டி நம்ம 2 பேருக்கிடைல எதுவுமே இல்லையா?”

“ஏன் எதுவும் இருக்கிறதா நீங்க நினைக்குறீங்களா?”

“நான் உன்னைக் கேட்குறேன் சரண்யா!”

“நான் உங்களைக் கேட்குறேன் சீனியர்”

எரிச்சலுடன் தலையைக் கோதியவனுக்குப் பதில் சொல்லப் பிடிக்கவில்லை! அவள் சுயநினைவின்றிக் கிடந்த போது ஐ லவ் யூ எனப் பட்டெனக் கூறி விட்டவனுக்கு ஏனோ இன்று அவள் முகம் பார்த்து ‘யெஸ்! உனக்கும் எனக்கும் இடைல நட்பைத் தாண்டிய ஒரு உறவிருக்கு! அதுக்குப் பேரு காதல்’ எனப் பொறுமையாய் எடுத்துக் கூறுமளவிற்கு முதிர்ச்சியிருக்கவில்லை!

‘பசங்க உன்னை என் ஆளுன்னு சொல்றது எனக்குப் பிடிச்சிருக்கு’ – இந்த வாக்கியத்தைக் கேட்டப் பிறகும் எதுவுமே புரியாத மாதிரிப் பெரிதாக நடிக்கிறாள்! இதை விட நேரடியாக எப்படி வெளிப்படுத்துவது! வாய் மட்டும் எட்டு ஊருக்குப் பேசத் தெரிகிறது! இதைப் புரிந்து கொள்ளத் தெரியாதா?, வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றுவதற்காகவே இப்படி நடந்து கொள்கிறாள்!

சூழ்நிலையோ,சந்தர்ப்பமோ.. விதி, சதி செய்து தன் வேலையைக் காட்டி விட… முட்டிக் கொண்டு முன்னே நின்ற ஈகோவிற்கு முன்னுரிமைக் கொடுத்து அவளிடம் முறைத்துக் கொண்டு விலகி நடந்தான் அவன்.

அடுத்த சில நாட்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை! பேசிக் கொள்ளவில்லை! சிரிப்பைத் தொலைத்து விட்டு இறுகிப் போன முகத்துடனே வலம் வந்தவனிடம் பரத் என்ன நடந்ததென்று நூறு முறையேனும் கேட்டுப் பார்த்து விட்டான்.

“நான் அவக்கிட்ட பேசட்டுமா பாய்?” – மெல்ல வினவியபடி அவனருகே அமர்ந்த துஷரிடம் “என்னன்னு பேசப் போற?” என்றுக் கோபத்துடன் வினவினான் விஜய்.

“ப்ச், பாய்! அவ ரொம்பச் சின்னப் பொண்ணு! அவ தான் மெச்யூரிட்டி இல்லாம நடந்துக்கிறான்னா, நீங்க அவளை விட இருக்கீங்க”

“…………”

“அவளுக்கு உங்களைப் பிடிக்கும்! பட், இந்த வயசுல ஒரு ரிலேஷன்ஷிப்புக்கு ஒத்துக்கிட்டு அதை சக்ஸஸ்ஃபுல்லா லீட் பண்ற பொறுமையோ,முதிர்ச்சியோ அவளுக்குக் கிடையாது! இந்த வயசுல காதலிச்சா,அது தப்பு! அப்பா அடிச்சிடுவார்!- இந்த எண்ணம் மட்டும் தான் அவளுக்கு இருக்கு! இதைத் தாண்டி.. அவ மனசுல உங்களுக்காக இருக்கிற ஃபீலிங்சை அவளுக்குப் புரிய வைச்சு.. உங்களோட காதலை நீங்க தான் காப்பாத்திக்கனும்!”

“என்ன டா என்னவோ அவ ஒரு பாப்பா-ன்ற ரேஞ்சுக்குப் பேசுற?, ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கிற ரேங்க் ஹோல்டர் அவ! எத்தனை விசயத்துல பொறுப்பா நடந்துக்கிறா?, என் விசயம் மட்டும் அவளுக்குப் புரியாம போயிடுமா? அதை நான் நம்பனுமா?, ப்ச்” – ஆத்திரம் கண்ணை மறைக்க.. முன்னே வந்து வேலை செய்ய முனைப்புக் காட்டிய மூளையை பட்டென அடித்துத்தள்ளி விட்டு… அவனாகவே அவள் மீது ஒரு கோபத்தை வளர்த்துக் கொண்டான்.

அவனைச் சொல்லியும் குற்றமில்லை! இத்தனை நாட்களாக அவளைக் காணும் போதெல்லாம் அவனது பார்வை,செய்கை,பேச்சு என அத்தனையிலும் பொங்கி வழிந்தக் காதலின் ஒரு துளி கூடவா அவளைத் தீண்டவில்லை? எதையுமே அவள் உணரவில்லையா?, அல்லது உணர்ந்தும்.. நடிக்கிறாளா?, மனம் வெறுத்துப் போனது அவனுக்கு!

அவன் ப்ரபோஸ் செய்த இரவுக்குப் பிறகு… அடுத்தடுத்த நாட்களில் அவர்களிருவருக்குமிடையே வளரப் போகும் உறவைப் பற்றி என்னன்னவோ கற்பனையில் இறங்கி ஆசையாகக் கனவு கண்டு கொண்டிருந்தவனுக்கு அவளது விலகலை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை! எண்ணி வைத்திருந்ததற்கு மாறாக.. எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது! ப்ச்!

ஓடிச் சென்று அவள் முன்னே நின்று நான் உன்னைக் காதலிக்கிறேன் எனக் கூற அவனது ஈகோ இடம் தரவில்லை! ஈகோவிற்கும்,காதலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாகிப் போனான்! இயலாமையும்,கோபமுமாய் ஆத்திரத்துடன் வலம் வந்து கொண்டிருந்தான்.

விஜய் காட்டிய அமைதியில்,விலகலில் அவனது நண்பர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு சரண்யா மீது அநியாயத்திற்குக் காண்டில் இருந்தனர். அவள் கண்ணில் படும் போதெல்லாம் கேலி செய்வதை வழக்கமாகவே வைத்திருந்தான் அசோக். இதையெல்லாம் கண்டு கொண்டும், அவனை எதிர்த்து எதுவும் பேசவில்லை விஜய்.

ன்று கேண்டீனில் அமர்ந்திருந்தனர் விஜய் மற்றும் அவனது நண்பர்கள் குழு. அப்போது நேத்ராவுடன் உள்ளே நுழைந்த சரண்யாவைக் கண்ட ரமேஷ், அசோக்கின் தொடையைச் சுரண்டினான்.

ட்ரிம் செய்யப்படாத தாடி,மீசையுடனும் தீவிர முக பாவத்துடனும் கையில் காஃபியுடன் அமர்ந்திருந்த விஜய்யைப் படபடத்த இதயத்துடன் ஓரக் கண்ணால் அவள் நோக்கிய வேளை “ஏய்… சோடாபுட்டி வா இங்க..” – எனக் கத்தி அழைத்தான் அசோக்.

நேத்ரா மட்டும் அருகே வர.. “உன் ஃப்ரண்டுக்குத் தனியா இண்விடேஷன் அடிச்சுக் கூப்பிடுவோமா?” என்று அவன் மிரட்டியதும் பதறி “நீயும் வாடி” என்று சரண்யாவையும் இழுத்துக் கொண்டு வந்து நின்றாள்.

எரிச்சலுடன் அசோக்கை முறைத்துப் பார்த்தாள் சரண்யா.

“என்ன முறைக்குற?, ம்?, கொதிக்குற காஃபியை மூஞ்சில ஊத்திடுவேன் பார்த்துக்க”

“ஊத்தி தான் பாருங்களேன்”

“என்ன ஊத்த மாட்டேன்னு தைரியமா?”

“ப்ச், பேச்சை வளர்க்காம எதுக்குக் கூப்பிட்டீங்கன்னு சொல்லுங்க”

“திமிர்ப்பிடிச்சவ” என்று முணுமுணுத்தவன் தொடர்ந்து “நீ ஏன் என் நண்பன் கூடப் பேசுறதேயில்ல?” – எனக் கேட்டு நேராகவே விசயத்திற்கு வந்தான்.

“அதை நீங்க தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க?”

“என்னம்மா இப்படிக் கேட்டுட்ட?, பிரச்சனை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு உங்களை சமாதானப்படுத்தி வைச்சா… பிரிஞ்ச காதல் பறவைகளை ஒன்னு சேர்த்து வைச்ச மகான்னு காலேஜே என்னைப் பாராட்டும்”

நக்கலடித்துச் சிரித்தவனிடம் பல்லைக் கடித்துக் கொண்டு “நாங்க ஒன்னும் காதல் பறவைங்க இல்ல!” என்று அடிக்குரலில் கூறினாள்.

“அடடா! அப்படியா?, அப்போ இத்தனை நாளா நட்புக்கு இலக்கணம் வகுத்திட்டிருந்தீங்களோ”

“டேய்… அடங்குடா! ஏய்… நீ இடத்தைக் காலி பண்ணு” – அசோக்கை அதட்டிய பரத், சரண்யாவிடம் சீறினான்.

“இரு மச்சி! என்ன தான் சொல்றா-ன்னு கேட்போம்!, உங்களுக்கு வேணும்ன்னா பேசுவீங்க, வேணாம்ன்னா போயிடுவீங்க!, பசங்களைப் பார்த்தா… உங்களுக்கெல்லாம் எப்படிடி தெரியுது?”

-கேண்டீனுக்குள் வருவோர்,போவோர் அனைவரும் வேடிக்கை பார்க்க.. அத்தனை பேரின் முன்பு, அவன் கேட்டக் கேள்வியில்.. அவமானப்பட்டுப்.. பின் வெகுண்டெழுந்து விஜய்யின் அருகே சென்றவள் “நான் என்னவோ உங்களை ஏமாத்திட்ட மாதிரி உங்க ஃப்ரண்ட் அசிங்கமா பேசுறாரு! நீங்களும் அதைப் பார்த்துட்டு அமைதியா இருக்கீங்க?” என்றுக் கத்த.. அவனோ…. அவளைக் கண்டுகொள்ளாமல் காஃபியை ஒரே மூச்சாக வாயில் சரித்து விட்டு அசால்ட்டாக எழுந்து வெளியே சென்று விட்டான்.

“ஏய், கேள்வி கேட்டது நான்! அவன் கிட்ட ஏன் சண்டை போடுற?, இங்க நான் தான் சீனியர். நீ ஜூனியர். நான் சொல்றதை தான் நீ கேட்கனும்” என்ற அசோக் அருகேயிருந்த நோட்டை அவளிடம் தூக்கிப் போட்டு “நாளைக்கு என் அசைன்மெண்ட்டை கம்ப்ளீட் பண்ணிட்டு வந்துடு” என்றான்.

அவன் தூக்கியெறிந்த நோட்டை அவனை முறைத்தபடியே கையில் பிடித்து நேத்ராவிடம் திணித்து விட்டு விறுவிறுவென விஜய்யின் பின்னே ஓடினாள் அவள்.

“நில்லுங்க….” என்றபடித் தன் பின்னேயே ஓடி வந்தவளின் புறம் பார்வையைக் கூடச் செலுத்தவில்லை அவன்.

“ப்ச்,நில்லுங்க” என்றபடி அவன் கையைப் பற்றி நிறுத்தினாள் அவள்.

பற்றியிருந்த அவள் கரத்தை நோக்கியவனுக்கு தலை முதல் கால் வரைப் பற்றிக் கொண்டு எரிந்தது. உதட்டைக் கடித்துக் கோபத்தை அடக்கியவன்.. அவளை நிமிர்ந்து நோக்கினான்.

“கையை எடுடி” - விஜய்

“முடியாது…”

“இழுத்து வைச்சு அறைஞ்சிடுவேன், எடுடி கையை” – என்றவன் தன் கையை உதறி விடுவிக்க…. “ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க?” கோபத்துடன் வினவினாள் அவள்.

“என்னடி அதட்டுற?, ம்? என்ன அதட்டுற?, அவ்ளோ தைரியமா உனக்கு?” – எரிச்சல் மண்டக் கேள்விக் கேட்டபடி அவளை நோக்கி முன்னே நடந்து வந்தவனைக் கண்டுப் பயந்து அவன் நடைக்கேற்பப் பின்னே நகர்ந்தாள் அவள்.

ஆனாலும் வாய் குறையாமல் “உங்க ஃப்ரண்ட் உங்க முன்னாடியே என்னன்னவோ பேசுறாரு! எல்லாத்தையும் பார்த்தும்,பார்க்காத மாதிரி நடந்துக்கிறீங்க?” என்று வினவினாள்.

“நம்ம இரண்டு பேரைப் பத்தியும் ஒவ்வொருத்தர்க்கிட்டயும் போய் விளக்கம் கொடுக்க முடியாது, அவங்க எப்படி வேணா பேசிக்கட்டும்ன்னு திமிரா சொன்ன! இப்போ ஏன் என்னை விளக்கம் சொல்லச் சொல்ற”

உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியானவளைக் கையை கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தான். எச்சில் விழுங்கியபடி முழுதாக ஐந்து நிமிடத்தை.. தூரத்தில் தெரிந்த மலைத்தொடரிலும், மேத்ஸ் டிபார்ட்மெண்ட் கட்டிடத்தின் மீதும் பார்வையைப் பதித்தபடி ஓட்டியவள்… அவனிடம் திரும்பினாள்.

“சீனியர்…”

“……….”

“நாம காம்ப்ரமைஸ் ஆயிடலாமா சீனியர்?, ப்ளீஸ்ஸ்ஸ்” – கெஞ்சுதலாய் வினவினாள் அவள்.

“எப்படி?”

“புரியல?”

“என்ன மாதிரி சமாதானத்தை மேடம் எதிர்பார்க்குறீங்க?”

“ஒருத்தரையொருத்தர் முறைச்சிக்கிட்டு ஆளுக்கொரு திசைல இப்படி இல்லாம.. பழைய மாதிரி மாறிடலாம்…” –தோன்றியதை அவசரத்துடன் கூறினாள்.

“பழைய மாதிரின்னா.. நீ எப்பவும் என்னை சைட் அடிப்ப!, என் பின்னாடியே சுத்துவ! பசங்களும் உன்னை என் ஆளுன்னு கேலி பேசுவாங்க! அந்த மாதிரியா?”

அவன் கேள்வியில் கடுப்பாகி “என்ன சும்மா சைட் அடிச்சேன், பின்னாடி சுத்துனேன்றீங்க?, நான் உங்களை பார்க்கிறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சு! தெரியுமா?, செகண்ட் இயர் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட்ல பிரசாத்ன்னு ஒரு பையன்! செம்மயா இருக்கான்! அவனைத் தான் இப்போல்ல்லாம் பார்த்திட்டிருக்கேன்” – கோபத்தில் படபடவெனப் பொறிந்தவளை கல்,மண்ணைப் பார்ப்பது போன்ற உயிரற்ற பார்வை பார்த்துவிட்டு முன்னே நடந்தான் அவன்.

ரொம்பத் தான் பண்றான்! எனப் பொறுமிய சரண்யாவும் முறைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

ன்றிரவு ஸ்டார் நைட் என்ற பெயரில் பாலிவுட் நட்சத்திரப் பட்டாளங்களின் பாட்டு,நடனமெனக் கலை நிகழ்ச்சியொன்று நடந்து கொண்டிருந்தது அவர்களது கல்லூரி மைதானத்தில்! ஆண்கள்,பெண்களென ஒட்டு மொத்த ஹாஸ்டல் மக்களும் அங்கே கூடியிருக்க.. கேளிக்கைக்குக் குறைவில்லாமல் இருந்தது.

எதையும் ரசிக்கும் மனநிலையில் விஜய் இல்லாதிருந்தாலும், சரண்யா,சரண்யா என்கிற ராங்கிக்காகவே அங்கே விருப்பமற்று அமர்ந்திருந்தான்.

நண்பர்கள் கேலி செய்வதைப் பொறுக்க முடியவில்லை என்கிறாள்! உனக்கும்,எனக்கும் இடையே என்ன இருக்கிறதென்று அவனையேக் கேள்வி கேட்கிறாள்! சமாதானம் எனக் கை நீட்டி விட்டு.. வேறு ஒருவனை சைட் அடிக்கிறேன் எனக் கொஞ்சமும் பயமின்றி அவனிடமேத் தைரியமாகக் கூறுகிறாள்!

தன் தோழிகளுடன் சேர்ந்து கிளுக்கிச் சிரித்தபடி ஆடிக் கொண்டிருந்தவளை…. தன் கையிலிருந்த டின்-பியரைத் தூக்கி நிறுத்தி.. தூரத்தில் தெரிந்த அவளது உருவத்தோடு, டின்-பியரின் உயரத்தை அளந்தான்!

ஹ்ம்ம்ம்ம்ம்! இந்த டின்-பியர் சைஸ்ல இருந்துக்கிட்டு எவ்ளோ குடைச்சலைக் கொடுக்கிறா! இங்கே ஒருவன் அவளுக்காகவே உருகி வழிவதைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல்.. எத்தனை இயல்பாக சிரிக்கிறாள்! அவளிடம் எந்த பாதிப்புமே இல்லையா?

எரிச்சல் மிகுதியில் கடகடவென பியரை வாயில் சரித்து, உதட்டைத் துடைத்தவனை இப்போது அவளும் திரும்பி நோக்கினாள்.

அவள் பார்வையைக் கண்டு கொள்ளாமல், டின்னைக் கசக்கி எதிரேயிருந்த டஸ்ட்-பின்னுக்குள் எறிந்தான் அவன். ஆடுவதை நிறுத்தி விட்டு அவனையே நோக்கியவளைக் கண்டு புகைந்து ‘இங்க என்ன பார்வை வேண்டிக்கிடக்கு! முட்டக்கண்ணி!’ என்று விட்டு.. சட்டென எழுந்து.. கூட்டத்திலிருந்து விலகி நடந்தான் அவன்.

கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட் வழியாக கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவனுக்கு.. லேப்க்குள் மங்கிய வெளிச்சத்தினுள் யாரோ நிற்கும் உருவம் தெரிந்தது. இந்த நேரத்துல யார் உள்ள இருக்கா என்றெண்ணியபடியே உற்று நோக்கினான்.

நின்று கொண்டிருந்தவன் நிஷாந்த்! கமல்நாத்தின் கூட்டாளிகளுள் ஒருவன்! துஷரைப் பாத்ரூமுக்குள் அடைத்து வைத்து ஆறு மணி நேரமாகத் தவிக்க விட்டவன்! குளிரில் விறைத்து அன்றே காய்ச்சலில் விழுந்த துஷர்.. ஜன்னி கண்டு முழுதாக ஒரு வாரத்தை மருத்துவமனையிலேயே கழித்திருந்தான். துஷரின் வற்புறுத்தலால் வைரல் ஃபீவர் எனக்கூறி அவனிடம் நண்பர்கள் சமாளித்திருக்க, விஷயம் விஜய்யிடம் மிகத் தாமதமாகத் தான் வந்து சேர்ந்திருந்தது.

இது அந்த நாயாச்சே! என்றெண்ணியபடிப் பாக்கெட்டுக்குள் கை விட்டவனுக்கு ஒரு யோசனை தோன்ற… ஓசையெழுப்பாமல் மெல்ல நடந்து லேப்-க்குள் சென்றான்.

அதுவரை தோழிகளின் வற்புறுத்தலுக்கிணங்கி அவர்களுடன் குஷியாக ஆடிக் கொண்டிருந்த சரண்யாவிற்கு, விஜய்யின் பார்வையைக் கண்டபிறகு மனம் மாறியிருக்க… சிறிது நேரம் அமைதியாக நின்றபடி மேடையை வெறித்துக் கொண்டிருந்தவள் பின்.. “ப்ச்” என்றபடி விஜய் நடந்து சென்ற திசையை நோக்கிச் சென்றாள்.

திடும்மென எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்து.. ஷூ சத்தம் கேட்கவும் “யாரது?” என்று கேட்டபடியே சுற்றிச் சுற்றிப் பார்த்த நிஷாந்த விளக்கு ஸ்விட்சை நோக்கி நடக்க எத்தனிக்கையில்.. யாரோ அவன் முட்டியின் பின்புறத்தில் ஓங்கி மிதித்துச் சாய்க்க.. மடங்கிக் கீழே சரிந்தவன் என்ன,ஏதென்று உணரும் முன்பே அவன் வாயையும்,கையையும் கட்டி உருட்டித் தள்ளினான் விஜய்.

பின் எதுவும் நடவாதது போல் அவன் வெளியே வருகையில் அவனைத் தேடிக் கொண்டு வந்த சரண்யாவவையும், அவள் பின்னே தூரத்தில் வந்த நிஷாந்தின் நண்பர்களையும் கண்டு…. சட்டெனச் சரண்யாவின் கையைப் பற்றியிழுத்துக் கொண்டு கெமிஸ்ட்ரி லேப்-க்குள் நுழைந்துக் கதவைச் சாத்தினான் விஜய்.

இடது கையால் அவள் இடையை இறுகப்பற்றியவனிடம் என்ன-என்று வாய் விட்டுக் கேட்க வந்தவளின் இதழ்களை வலது கையால் மூடியவன் “ஷ்ஷ்ஷ்” என்று எச்சரிக்க… என்னவோ,ஏதோவென அமைதியாகி விட்டாள் சரண்யா.

முழுதாக இருளில் மூழ்கியிருந்த லேப்-க்குள் ஒரு மூலையில் “ம்,ம்” என நிஷாந்தின் முனகல் குரல் ஒலிக்க.. மறுமூலையிலிருந்த ஜன்னலின் பின்னே… லேசான நிலவொளியில் தடதடக்கும் இதயத்தோடு தனக்கு வெகு அருகே நின்றவனைக் கண்களை நிமிர்த்திக் கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சரண்யா.

பின்னே வந்த கூட்டம் கையில் பாட்டில்களுடன் லேப்-ற்குச் சற்று முன்னேயிருந்தப் புல் தரையில் அமர்ந்து விட.. “ஷ்ஷ்ஷ், மாட்டினடா விஜய்!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஜன்னல் வழியே அவர்களை நோக்கினான்.

கஷ்டப்பட்டு அவன் கரத்தைத் தன் இதழ்களிலிருந்து விலக்கியவள் மிக மெல்லிய குரலில் “என்னாச்சு?” என்று வினவினாள்.

அறை மூலையில் கீழே கிடந்த உருவத்தை நோக்கி அவன் கையை நீட்ட.. “யார் அவன்?,நீங்க அடிச்சீங்களா?ஏன்?” என்றாள்.

“நிஷாந்த். துஷரை ரெஸ்ட் ரூம்ல வைச்சு லாக் பண்ணினவன்” – மெல்லிய குரலில் அவனும் பதிலளித்தான்.

“ஓ….”என்றபடி அவனைத் திரும்பி நோக்கியவள் விஜய்யிடம் “நான் வேணா பக்கத்துலப் போய் 2 மிதி,மிதிச்சுட்டு வந்துடட்டுமா?” என்று வினவ… முகத்தில் தோன்றிய சிரிப்பை மறைக்க சிரமப்பட்டுப் போனவன் உதட்டில் கை வைத்து “உஷ்ஷ்ஷ்ஷ்” என்றான்.

சிறிது நேரம் அமைதியாகக் கழிய.. “இப்படியே எவ்ளோ நேரம் நிற்கிறது?” என்றவள் தன் புறம் நோக்கியவனிடம் தன் இடையிலிருந்த அவனது கையைச் சுட்டிக் காட்டினாள்.

சட்டெனத் தன் கையை உறுவியவன் லேசாகத் தொண்டையைச் செறுமிக் கொண்டான்.

“இப்போ எப்படி வெளியே போறது?” - சரண்யா

“இந்த கேங் நகர்ந்தப்புறம் தான்” - விஜய்

“அவங்க எப்போ போவாங்க?”

“நான் வேணாப் போய் கேட்டுட்டு வரட்டுமா?”

“ப்ச்” என்று முறைத்தவளுக்குச் சிரிப்பு வர.. களுக்கென்று அவள் நகைத்ததும் கூட்டத்திலிருந்த ஒருவன் லேப்-ஐத் திரும்பி நோக்க.. சட்டென அவள் வாயைப் பொத்தித் தன்னருகேயிழுத்தான் விஜய்.

நோக்கியவன், எழுந்து வந்து லேப்-இன் வாசற்கதவை நோட்டமிட… அவன் தோளை இறுகப் பற்றியபடி ஜன்னல் வழியே வெளியே பார்வையைப் பதித்திருந்தாள் சரண்யா,

“ஏதாவது பூனையா இருக்கும்” – என்று ஒருவன் ஹிந்தியில் கூறியதும், வந்தவன் திரும்பிச் சென்று ஜோதியில் ஐக்கியமாகிவிட்டான்.

“ஊஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்” – என மூச்சுவிட்டவனிடம் “உங்களுக்குப் பயப்படக் கூடத் தெரியுமா சீனியர்?” என்று வியப்புடன் வினவினாள் அவள்.

பல்லைக்கடித்துக் கொண்டு அவளை நோக்கியவன் “அரை மென்டல்! உன்னை யாரு இப்போ இந்தப் பக்கம் வரச் சொன்னது?, “ என்றுத் திட்டினான்.

“இவனுங்கக் கிட்ட மாட்டுனா.. கைமா தான்! நம்ம பசங்க வேற மப்படிச்சு மட்டையாய்ட்டானுங்க!” – என்று அவன் கூறியதும் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு பீதியுடன் அவனை நோக்கினாள் சரண்யா.

“பயப்படாத எப்படியாவது உன்னை சேஃபா வெளிய கூட்டிட்டுப் போயிடுவேன்”

அவன் தன்னைக் கண்டு கொண்டதில் முகம் மாற “நான்..நான் ஒன்னும் பயப்படலயே” என்றவள்.. தனக்கு வெகு அருகே நின்றிருந்தவனது முகத்தை நிமிர்ந்து நோக்கினாள்.

வெள்ளை சட்டையும்,கருப்பு ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள் அவள்! அந்த ஜன்னல் வழி வந்த நிலவொளியில் பளபளத்த அவளது டஸ்க்கி கன்னங்களை அத்தனை நெருக்கத்தில் நோக்கியவனுக்கு, அவர்களிருவருக்குமிடையே நிலவிக் கொண்டிருக்கும் பிணக்கைப் பற்றி மறந்தே போனது.

மானரோஷமின்றி, அவள் முகம் முழுதிலும் பாரபட்சமில்லாமல் பயணம் செய்த விழிகளைத் தடுக்கும் வழியறியாமல் பார்வை மாற… அவளையே நோக்கிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் பார்வையின் அர்த்தத்தை வழக்கம் போல் புரிந்து கொள்ளாமல் “சீனியர்” என்றழைத்தாள் அவள்.

“ம்ம்”

“குடிச்சிருக்கீங்களா?”

“ம்ம்..”

“நிறைய குடிச்சிட்டீங்களோ?”

“ம், ஒரு 8,10 பியர் டின் உள்ளே போயிருக்கும்! ஏன்?”

“ஸ்மெல் பயங்கரத் தூக்கலா இருக்கு” –என்றபடி முகத்தைத் திருப்பி மூக்கைச் சொரிந்தாள் அவள்.

உதட்டை மடக்கி உடல் குலுங்க லேசாகச் சிரித்தவன் “சரண்யா… நீ ரொம்ம்ம்ம்ப க்யூட் தெரியுமா?” – கிறங்கிய குரலில் கூறினான் அவன்.

“ஐ நோ…” என்றபடிக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவளுக்கும் இருவருக்குமிடையே நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையைப் பற்றியும், தனதுக் குழப்பத்தைப் பற்றியும் மறந்து போனது!

“சரண்யா..”

“ம்ம்”

“யார் அவன் பிரசாத்?”

“பிரசாத்தா?, யாரு?”

“மதியம் சொன்னியே! செகண்ட் இயர் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட்ன்னு!”

“ஓ! அவனா?, ஏன் திடீர்ன்னு அவனைப் பத்திக் கேட்குறீங்க?”

“சும்மா தான்.. தெரிஞ்சனுக்கனும்ன்னு தோணுச்சு”

“என்ன தெரிஞ்சுக்கனும்?”

“அவன் என்னை விட ஸ்மார்ட்டான்னு தெரியனும்!”

“ச்சி, ச்சி! உங்க சுண்டு விரல் கிட்டக் கூட அவனால வர முடியாது”

“பின்ன எதுக்கு அப்படி சொன்ன?, அவனைத் தான் இப்போல்லாம் சைட் அடிக்கிறன்னு?”

“அ….அது.. சும்மா ஒரு ஃப்ளோல சொல்லியிருப்பேன்? இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி?” என சிடுசிடுத்தவள் அவனிடமிருந்து விலகப் பார்க்க.. அவள் இடையைப் பற்றித் தனக்கு வெகு அருகே இழுத்துக் கொண்டவன்.. அவள் காதருகேத் தன் கைவிரல்களைப் பதித்து மீண்டும் “சரண்யா….” என்றான்.

கடுங்குளிரோடு சேர்ந்து கொண்டு ஊதல் காற்றும் சுழற்றியடிக்க.. மழை வரப் போவது போலிருந்தது அந்த இரவு!

அந்தக் காற்றும்,குளிரும் உட்புகாதிருந்த அந்த இருட்டறைக்குள்,மெல்லிய வெளிச்சத்தில்.. அவனது நெருக்கத்தில்.. செய்கையற்று நின்றிருந்த சரண்யாவிற்கு லேசாக வியர்த்தது.

“நான் இந்த நேரத்துல,இப்படியொரு சூழ்நிலைல ஒரு பையன் பக்கத்துல இவ்ளோ க்ளோஸா நிற்கிறதை எங்கப்பா பார்த்தார்ன்னா பெல்ட்டைக் கழட்டிடுவார்” – கலக்கமும்,தயக்கமுமாய் அவன் விழி நோக்கிக் கூறியவளிடம்.. லேசாகப் புன்னகைத்தவன்.. அவள் முகத்தை மேலும் தன் அருகிலிழுத்து…

“எப்பவும் உங்கப்பாவைப் பத்தியே யோசிக்காத! கொஞ்சம் என்னைப் பத்தியும் யோசி” என்றான்.

“உங்களைப் பத்தி என்ன யோசிக்கனும்?” – என்றபடியே அவனது கையை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் அவள். பேசுவதைக் கொஞ்சம் தள்ளி நின்று பேசக் கூடாதா?, என்ன செய்கிறான் இவன்! பதறிப் போனது அவளுக்கு!

அவள் முயற்சிகளைத் தடுத்து, அழுத்தமாக அவள் இடையைப் பற்றியவன்.. “எனக்குக் கையை எடுக்கிறதா ஐடியாவே இல்ல!, அதனால வீணா ட்ரை பண்ணாத” – மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.

அவனது முணுமுணுப்பும்,அந்தக் குரலும்,அவன் செய்கையும், சூழ்நிலையும்,இருளும் காற்றும்,மழையும்…. இன்னும் சுற்றியிருந்த அனைத்தும்… அப்போது அவளுக்குள் ஏதேதோ உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காக மட்டுமே இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டதாகத் தோன்றியது அவளுக்கு!

இதயம் நடுங்கப் படபடத்த விழிகளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல்… கண்களை ஜன்னலுக்கு வெளியே பதித்துப் பின் முகம் மலர்ந்து அவனிடம் “அவனுங்க எல்லாரும் போயிட்டானுங்க சீனியர்! நாம போகலாம்” எனக் கூற…. சற்றும் அசையாமல் தன் பிடியையும் விடாமல்.. அப்படியே நின்றிருந்தான் அவன்.

அவன் பார்வையில் அவளிடம் தோன்றிய வெட்கமோ,தவிப்போ என்ன கண்றாவியோ… அவள் முகத்தைக் கன்றச் செய்ய.. மெல்லத் தலை குனிந்தவள் தன் கன்னத்திலிருந்த அவன் கரங்களை அகற்ற முயற்சித்து “கை….கையை எடுங்க.” எனக் கம்மிய குரலில் கூற.. அதை மதியாமல்.. ஒரு வேக மூச்சுடன் அவளைப் பற்றித் தூக்கி.. அருகிலிருந்த மேஜையில் அமர்த்தியவன்… அவள் தோளில் தன் முகத்தை அழுந்தப் புதைத்தான்.

ரொமாண்டிக்காக உணர வேண்டியத் தருணத்தை, ஒரு ஹார்ரர் ஃபிலிம் பார்ப்பது போல் அரண்டு போய் அனுபவித்தவள், அதிர்ந்து… அலறி.. அவன் தோளைப் பற்றித் தள்ளினாள்.

அவளது அருகாமையும், சூழ்நிலையின் தாக்கமும், அடித்த பியரின் கைங்கரியமும் சேர்ந்து அவனுக்குள்ளிருந்த அவளுக்கானக் காதலைத் தட்டியெழுப்பி, சிறிது காமப் பொடியையும் தூவி.. ஷோக்காக மூளைக்குள் அமரச் செய்திருக்க.. அதைக் களைக்கும் விதமாக அவள் நடந்து கொண்ட விதத்தில் கடுப்பாகி… விறைத்துக் கொண்டு நின்றவனை மூச்சு வாங்க நோக்கியவள்.. லேப்-கதவைத் திறந்து கொண்டு விறுவிறுவென வெளியே ஓடினாள்.

பின்னந்தலையைக் கோதியபடி ஒரு நிமிடம் தன்னை நிலைப்படுத்தியவன்… தன் தவறை உணர்ந்து அவள் பின்னேயே சென்றான்.

அவர்கள் உள்ளிருந்த போதேத் தூறலுடன் தொடங்கிய மழை இப்போது மிதமான வேகத்துடன் பொழிந்து கொண்டிருந்தது.

“சரண்யா… சரண்யா… நில்லு…” – தன் போக்கில் விடுவிடுவென நடந்து கொண்டிருந்தவளைக் கத்தி அழைத்து நிறுத்த முயற்சித்தான்.

சட்டென நின்று அவனைத் திரும்பி நோக்கியவள்… வலது கையைத் தூக்கி “நீ…நீங்க… எதுவும்,எதுவுமே பேசக் கூடாது” – அதிர்ச்சியில் வார்த்தைகளைத் திக்கி,திக்கி உச்சரித்தாள் அவள்.

எதுவும் பேசாமல் அமைதியாக நின்று விட்டான் அவன்.

நெற்றியில் கை வைத்தபடி மேல்மூச்சு,கீழ் மூச்சு வாங்க எச்சில் விழுங்கியவள்… “இ….இதெல்லாம் எவ்ளோ பெரியத் தப்பு தெரியுமா?” என்று.. அவன் ஏதோ கொலைக்குற்றம் செய்து விட்ட ரீதியில் அவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற… அவனுக்கு அந்தச் சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது!

முகத்தில் வழிந்த மழை நீரைத் துடைத்தவளுக்குக் குளிரில் பற்கள் நடுங்கியது.

“நல்ல குடும்பத்துல பிறந்த யாராவது இந்த மாதிரி பிஹேவ் பண்ணுவாங்களா?” – அவள் அடுத்துக் கேட்டக் கேள்வியில் சுர்ரெனக் கோபம் தலைக்கேற.. “ஏய்ய், என்னடி ரொம்பப் பேசுற?” என்றபடி அவளை நோக்கி உறுமினான் அவன்.

அவனது கோபத்தில் திகைத்து.. “தப்பும் பண்ணிட்டு, என் கிட்டக் கோபம் வேற பட்றீங்களா?, என்ன காரக்டர் நீங்க?, இப்படியொரு சீப்-ஆன எண்ணத்தோட என் கிட்ட இத்தனை நாளா பழகியிருக்கீங்களா?, வெ…வெ…ட்கமாயில்ல உங்களுக்கு?” – பயத்தில் விடாது படபடத்தவளின் தோளைப் பற்றி “என் காரக்டரைப் பத்தி நீ விமர்சிக்கத் தேவையில்ல! ஒழுங்கு மரியாதை போயிரு இங்கயிருந்து….” அவனும் பதிலுக்குத் திட்டினான்.

அவன் பதிலில் சிலிர்த்தெழுந்து “நீங்க பண்ணினது தப்புன்னு கூட உங்களுக்குப் புரியலையா?, ஒரு சாரி கேட்கனும்ன்னு கூட உங்களுக்குத் தோணலையா?” என்று ஆத்திரத்தில் முணுமுணுக்க… எரிச்சலுற்றவன்..

“என்னடி தப்பு,தப்புன்ற? கட்டிப் பிடிச்சது தப்பா?, என்னவோ கற்பே போன மாதிரி ஓவரா சீன் போடுற?”

“எ… என்ன ஆட்டிடியூட் இது?, இ…இப்படியெல்லாம் நீங்க பேசுவீங்களா?” – உடல் தளர… கலங்கிப் போய் அவள் வினவிய விதம்…. நெஞ்சை அழுத்த.. “சரண்யா… நீ போ இங்கயிருந்து” என எச்சரித்தான் அவன்.

“போக மாட்டேன்! நீங்க சாரி கேட்குற வரைக்கும் போக மாட்டேன்! நீங்க பண்ணினது தப்புன்னு நீங்க ஃபீல் பண்ற வரைக்கும் இங்கயிருந்துப் போக மாட்டேன்”

“போகாத! என்னால சாரி கேட்க முடியாதுடி! உன்னால முடிஞ்சதைப்பாரு” – கோபத்துடன் கூறி விட்டுத் தலையைக் கோதியபடியேத் திரும்பி நடந்தவன்……

“பொறுக்கி………………….” – என ஒவ்வொரு எழுத்தாக அழுத்தமாக உச்சரித்தவளின் குரல் கேட்டு… ஒரு நிமிடம் மூளை வேலை நிறுத்தம் செய்ய… யா..யாரைப் பொறுக்கியென்கிறாள் எனத் திகைத்து… அதிர்ந்து அவளைச் சட்டெனத் திரும்பி நோக்கினான்.

பொங்கி வழிந்து கொண்டிருந்த மழைத்துளிகளின் மத்தியில்.. ஆத்திரத்தில் முகம் ஜொலிக்க, மூச்சு வாங்க நின்றவளைக் கண்டு….. அடித்த போதை முற்றிலும் இறங்கிப் போக, தலை முதல் கால் வரைக் கோப நரம்புகள் விறைத்தெழுந்து… அவனை அறிவிழக்கச் செய்ய… அழுத்தமானக் காலடிகளுடன் வேகமாக அவளருகே நெருங்கியவன்… நேர்ப்பார்வையாக அவனை நோக்கிக் கொண்டிருந்தவளின் கையைப் பற்றி முறுக்கி அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கினான்.

உச்சகட்ட ஆத்திரத்தில் “ஆமாடி! நான் பொறுக்கி தான்! என்ன செய்வ?, ம்? ஊரெல்லாம் போய் போஸ்டர் அடிச்சு ஒட்டுவியா?, முடிஞ்சா பண்ணிப் பாரு! அப்புறம் என்ன சொன்ன?, சாரி கேட்கனுமா? கேட்குறேன்! கண்டிப்பாக் கேட்குறேன்! இதுக்கும் சேர்த்து… மொத்தமா கேட்குறேன்” – என்றவன் தன் செய்கையில் திகைத்து உறைந்து போய் விழி விரிய நின்று விட்டவளின் இதழ் நோக்கிக் குனிந்து.. ஒரு நிமிடம் தயங்கிப் பின்.. அழுந்த முத்தமிட்டான்.

அவன் குனியத் துவங்கியதுமே அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்டவள், தப்பித்து விலகப் பார்க்க…. வெகு இயல்பாக… அவள் முகத்தை இரு கைகளாலும் பற்றியிருந்தவன்.. அவளது முயற்சிகளை சட்டை செய்யவில்லை!

அவன் எச்சிலோடு சேர்ந்து பொழிந்து கொண்டிருந்த மழை நீரையும் சேர்த்து ஜீரணிக்க முயன்றவளுக்கு பயத்தில் மயக்கம் வரும் போலிருந்தது.

முழுதாக இரண்டு நிமிடம் கழித்து அவளை உதறித் தள்ளியதும்.. முழுப்பயத்தில் பொத்தெனக் கீழே விழுந்தவள்… தன் உதடுகளை அழுந்தத் துடைத்துக் கொண்டு அவனை விட்டு நான்கடித் தள்ளி.. வேகமாகப் பின்னே நகர்ந்தாள்..

அவள் கண்களிலிருந்தப் பய உணர்வைக் கண்டவனின் கண்கள் கோபம்,இயலாமை,ஆத்திரம் என சகல உணர்ச்சிகளையும் பிரதிபலிக்க… இரு கைகளாலும் தலையை அழுந்தப் பற்றியவன் அவள் புறம் திரும்பி “இனி என் கண்ணுலயே படாத!, நான் உன்னைப் பார்க்கவே விரும்பல!” என்று உறுமி விட்டு.. அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.