அத்தியாயம் - 10

I Like her to the death!

ஸ்பான்சர் லிஸ்ட்ல ஒரு சின்ன சேஞ்ச் இருக்கு. ஆச்சி மசாலான்னு இருக்கிற இடத்துல லையன் டேட்ஸ்ன்னு மாத்திக்கோங்க. மத்த எல்லா லைன்ஸூம் ஓகே தான்” – அனுப்ரியாவிற்கு மைக்கை மாட்ட உதவி செய்தபடி ஸ்கிர்ப்ட்டில் இருப்பதை விவரித்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.

“ஹ்ம்ம்ம், எனக்கு மட்டும் ஒத்த பேப்பர் வசனம்?, ஆனா புதுசா வந்திருக்கிற ஆங்கர் ஜெனிஃபர்க்கு மட்டும் பக்கம் பக்கமா, பக்கம் பக்கமா எழுதிக் கொடுக்கிறீங்க?”

“ஹிஹி! நீங்க ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்ட் ஆங்கர் இல்லையா?”

“அதுசரி, ஜாயின் பண்ணினதும் நல்லா பேசக் கத்துக்கிறீங்க?”

“ஷாட் ரெடி..” – அர்ஜூன் சத்தமிட்டதும் ஹரிணி நகர்ந்து விட தனக்களிக்கப்பட்ட நாற்காலியில் கால் மேல் காலிட்டபடி ஒய்யாரமாக அமர்ந்தாள் அனு.

“ஹாய்,ஹலோ,வணக்கம் அண்ட் வெல்கம் டூ லயண்ட் டேட்ஸ் வழங்கும் கபிள் பேண்டஸி பவர்ட் பை ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள்” –அனு

“கட்! ஒன் மோர்” –அர்ஜூன்

“ஏன் நல்லாத் தான இருந்துச்சு?”

“லயண்ட் டேட்ஸ் வழங்கும்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்”-அர்ஜூன்

“ஓகே!, லயண்ட்டேட்ஸ் வழங்கும் கபிள் ஃபேண்டஸி!, ரெடி.” – அனு

“யப், கோ….”

அனு சிரிப்பு நிறைந்த முகத்துடன் தன் வேலையைத் தொடங்க கேமராவின் வழியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரிணி,அர்ஜூனின் முகங்கள் தீவிரமாயிருந்தது.

அடுத்த பத்து நிமிடத்தில் “கட்! ஒன் மோர்” – என அர்ஜூன் கூறியதும் அருகிலிருந்தத் தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டாள் அனு.

அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியைச் சரி செய்தபடி மானிட்டரை நோக்கிய ஹரிணி அனுவைப் பார்த்து “இளமையும்,அழகும்ல இருந்து மறுபடி ஸ்டார்ட் பண்ணுங்க” என்று விட்டு அர்ஜூனிடம் திரும்பினாள்.

“அனுவைப் பார்த்தா நம்ம ஆஷாவைப் பார்க்குற மாதிரி இல்ல?, வாய் ஓயாம பேசிட்டே இருக்கிறதெல்லாம்??”

இதுவரைத் தன்னைத் தெரிந்தவன் போன்றோ, தாங்களிருவரும் ஒரே வகுப்பில் ஒன்றாய்ப் படித்தவர்கள் என்பதையோ வெளிக் காட்டிக் கொள்ளாமல் இத்தனை நாட்களாய் யாரோ ஒருத்தி போல் நடந்து கொண்டிருந்தவள் திடீரென இப்படிக் கேட்கவும் திகைத்த அர்ஜூன் பின்பு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பதிலளித்தான்.

“ஹாஹா, அவ உன்னை மாதிரி இருக்கிறதா தான் எனக்குத் தோணுது. முக ஜாடை, கண்,சிரிப்பு எல்லாம்”

“கொஞ்சம் அப்படித் தான் இருக்கு. ஆனா நிறுத்தாம பேசுறதெல்லாம் பார்க்குறப்போ ஆஷா நியாபகம் தான் வருது”

“ஹ்ம்ம், ரொம்ப வருஷம் ஆச்சு அவளைப் பார்த்து. இப்போ என்ன பண்றான்னு தெரியுமா?”

“அவ.. அவ இங்க நம்ம சேனல்ல தான் வர்க் பண்ணுறா.”

“இங்கயா?, நிஜமாவா?”

“ஆமாம், பி பில்டிங்ல இருக்கா. அறுசுவை இது தனிசுவை ப்ரோக்ராம்ல வர்க் பண்றா"

“ஓ!, சுஜிதா மேம் டீமா?, எத்தனை வருஷமா இருக்கா?”

“லெஸ் தான் அ இயர் ஐ கெஸ்”

“ஹாஹா.. இங்க ஒரு குட்டி பிஷப் இண்டர்நேஷனல் ஸ்கூலே இருக்கும் போல. நம்ம கூடப் படிச்ச விஜய் ப்ரகாஷ் இருக்கான்ல?, உனக்குக் கூட சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட்ல லவ் லெட்டர் கொடுத்தானே?, அவனும் இங்க தான் வர்க் பண்றான்”

“ஹாஹாஹா ரியலி?”

“ஆமாம், பட் ஆஷா இங்க இருப்பான்னு நான் எதிர்பார்க்கல. நான் அவளைப் பார்க்கனும். நீ மீட் பண்ணும் போது சொல்லு. நானும் வரேன்”

“ஆ..ஆனா…. அ…அவளுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு”

“ஏய்….. என்ன நக்கலா?,நான் அனுவைத் தவிர யாரையும் இப்போல்லாம் நினைக்கிறதே இல்ல”

“ம்ஹ்ம் அப்படியா?, அப்போ ரேகா,சங்கீதா,சௌந்தர்யா எல்லாம் யாரு?”

“ரோஸ்மெரி ராஸ்கல், என்னைப் பத்தி இப்படித் தப்பு,தப்பா வெளியே சொல்றாளா?, அ…அவங்கள்லாம் சும்மா!, அனு மட்டும் தான் ரியல்!!”

“ஹாஹா அவ்ளோ பிடிக்குமா அனுவை?”

“ஆமாம், ஐ லைக் ஹெர் டூ த டெத்”– எழுந்து நின்று கண்களை இறுக மூடிக் கொண்டு எக்ஸ்ப்ரஷனுடன் கூறியவனைக் கண்டுக் கைத்தட்டி சிரித்தாள் ஹரிணி.

இருவரையும் நோக்கியபடி அருகே வந்த அனு “என்னடா சொன்ன?, இந்தப் பொண்ணு இவ்ளோ சிரிக்கிற அளவுக்கு?” என்றாள்.

“பை த வே அனு, மீட் மிஸ்.திவ்யா. எங்க டீமோட நியூ ஜாயினி”

“ஹாய் திவ்யா”-எனக் கைக் குலுக்கியவளிடம் “வ..வந்து அனு…. என் தாத்தா உங்களோட பெரிய ஃபேன். எனக்காக ஒரு ஆட்டோக்ராப் போட்டுத் தர்றீங்களா?” என்று ஹரிணி கூற.. ஏதோ பெரிய ஜோக்கைக் கேட்டவன் போன்று கைத்தட்டிக் குதித்து விழுந்து விழுந்து சிரித்த அர்ஜூன் “ஹாஹாஹா உன்னை இதை விட யாரும் கலாய்ச்சுருக்க மாட்டாங்கடி. இந்தப் பைந்தமிழ் நாட்டுல உனக்கு சீனியர் சிட்டிசன்ஸ் மட்டும் தான் ஃபேன்ஸா இருக்காங்கன்னு சொல்லாம சொல்லுது இந்தப் பொண்ணு” என்று மேலும் சிரித்தான்.

“ஏய்… அப்படித் தான் மீன் பண்ணிக் கேட்டியா நீ?”-அனு

“அய்யோ! சத்தியமா இல்ல. இவன் வேணும்னே கலாய்க்கிறான். சிறுசுல இருந்து பெருசு வரைக்கும் அத்தனை பேருக்கும் உங்களைப் பிடிச்சிருக்குன்னு தான் நான் சொல்ல வந்தேன்”

“ஹாஹா… நிஜமாவா?, தேங்க் யூ. கண்டிப்பா ஷூட் முடிஞ்சதும் என் ஆட்டோக்ராப் போட்ட ஃபோட்டோவே கொடுக்கிறேன்” – என்று அனு கூறியதும் கலகலவெனச் சிரித்தாள் ஹரிணி.

ன்று மாலை திட்டமிட்டபடி கபிள் ஃபேன்டஸி ப்ரோக்ராமின் அடுத்த எபிசோடிற்கான படப்பிடிப்பு சேனல் ரெட்டின் அலுவலகத்தில் தொடங்கியது. கருப்பு நிற டீஷர்ட்டும்,புளூ ஜீன்ஸூமாக வினோத்திடம் அன்றைய ஸ்கிர்ப்ட்டை விவாதித்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் முகத்தில் டச்-அப் செய்து கொண்டிருந்தாள் அவனுடைய ஸ்டைலிஸ்ட்.

லைட்டிங்கை சரிபார்த்தபடி மாரியிடம் “இன்னும் இரண்டு ஸ்டெப் பின்னால போகலாம் அண்ணா, அந்த இடம் ரொம்ப சன்னியா இருக்கு” என்ற அர்ஜூன், ரிஷி வருவதைக் கண்டு அவனிடம் ஓடிச் சென்றான்.

“என்னடா?, எங்க போன?”

“இல்ல, 4-வது எபிசோட்க்கு சரவணன்-மீனாட்சி ரச்சிதாவோட காமியோ ரோல் பத்தி சொல்லியிருந்தேன் இல்ல?, அதைப் பத்தின டிஸ்கஷன் தான்”-என்றவன் காயமடைந்திருந்த வலது கை விரல் முட்டிகளை ஊதினான். முதல் நாளிரவு மரத்தில் குத்தியதின் பலன்! மருந்திடப்படாமல் சிவந்து விட்டிருந்தது.

“ஹாங்ங்ங்ங்!!! ர….ரத்தம்… என்ன பாஸ் ஆச்சு?,” – ரோஷினி கத்திய கத்தில் அனைவரும் அவனைச் சுற்றிக் கூடி விட்டனர். கேமரா மேனிடம் உரையாடியபடி நின்றிருந்த ஹரிணியும் என்னவோ,ஏதோவென்று ஓடி வந்து கூட்டத்தில் கலந்து நின்றாள்.

“எப்போ அடி பட்டுச்சு?, இவ்ளோ சிவந்து வீங்கியிருக்கு?”-அர்ஜூன்

“அய்யோ!, பெருசா ஒன்னுமில்ல. எல்லாரும் ஏன் சீன் கிரியேட் பண்றீங்க?”-ரிஷி

“அட்லீஸ்ட் மருந்து தடவி பேண்ட்-எய்டாவது போடலாமில்ல?”-சுதன்

“இதோ…. இதோ…. ஆயிண்ட்மெண்ட் வந்துடுச்சு. அர்ஜூன், இதை அப்ளை பண்ணி விடுடா” – ரோஷினி

நிமிடத்தில் எங்கிருந்தோ மருந்தும்,பேண்ட்-எய்டும் வந்து விட, காயத்திற்கு மருந்திட்டு பேண்ட்-எய்டை ஒட்டினான் அர்ஜூன்.

“பார்த்து கேர்ஃபுல்லா இருக்க வேண்டாமா?, சின்னக் காயம்ன்னு விட்டு அது பெருசா எதையும் இழுத்து வைச்சுட்டா என்ன பண்றது?” – என ஆளாளுக்குப் புலம்பத் தொடங்கவும் “இதெல்லாம் ரொம்ப ஓவர் டா” – என்றபடி திடீரெனப் பிரவேசித்தார் சம்பத்.

“ஏன் டா 3 மாசத்துக்கு முன்னாடி நான் ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பிடல்ல இருந்தப்போ ஒரு பய எட்டிப் பார்க்கல?, இப்போ இவனோட இத்துனூண்டு காயத்துக்கு இப்படிக் கூட்டம் கூடியிருக்கீங்க?”-சம்பத்

“வேலையைப் பாருங்க,வேலையைப் பாருங்க மக்களே” –எனக் கூட்டத்தைக் களைத்து விட்ட சுதன் அவரை ஒரு மாதிரி பார்த்து விட்டு நகரவும்… “அடி ராஸ்கல், என்னடா பார்வையிது?”-எனப் பல்லைக் கடித்தார் சம்பத்.

“ஏன் டா நீங்க 2 பேர் தான் என்னை மதிக்க மாட்டீங்கிறீங்க சரி, உங்களுக்குக் கீழ வேலை பார்க்குறவனுகளும் ஏன் டா இப்படி இருக்கானுக?”

“சரி,சரி கோச்சுக்காதீங்க சார். சின்னப்பசங்க தான?, மன்னிச்சு விட்ருங்க”-அர்ஜூன்

“ஏன் சார் ஹலோ டாக்டர் ப்ரோக்ராமை வைண்ட் அப் பண்றீங்களாம்?, உண்மையாவா?”-ரிஷி

“ஆமாடா. அந்த ஸ்லாட்ல ஜெகனோட கனெக்ஷன்ஸ போடப் போறானுகளாம்”

“அப்போ நீங்க இனி வெட்டி தானா?”- ரிஷி

“ஏன் டா?, எனக்காக நீ கபிள் பேண்டஸி ப்ரோக்ராமை விட்டுத் தர மாட்டியா?”

“ரிஷி, அப்போ நான் இன்னிக்கே வேலைய விட்டுட்றேன் டா”-அர்ஜூன்

“விளையாடாதீங்க சார், இன்னும் ஒரு எபிசோட் கூட ஏர் ஆகல, அதுக்குள்ள பிரச்சனை பண்ண வந்துட்டீங்க?” – ரிஷி

“இல்லடா. நான் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சிக்கு ஜம்ப் ஆகுறேன். இதோ பார், சூப்பர் சிங்கர் ஃபைனல் ஸ்டேஜ் பிரெப்-வர்க் டெய்லி ஸ்டேட்டஸ் கொடுக்கச் சொல்லி மேலிடத்திலிருந்து என்னை டார்ச்சர் பண்றாங்க”

“டீம்-B தான அதுக்கு ரெஸ்பான்ஸிபிள்?, எனக்கென்ன பத்து கையா இருக்கு?, நான் இந்த ஷூட்டை முடிக்கிறதா?, இல்ல அதைப் பார்க்குறதா?”

“அவங்க தான் டா பண்றாங்க. அவங்க பண்ற வர்க்கை ரிவ்யூ பண்ணி நீ எனக்கு ஸ்டேட்டஸ் மட்டும் அனுப்புடா. நெக்ஸ்ட் வீக் ஸ்டேஜ் உங்களோடது தான்.”

“சரி, நான் பரத் கிட்ட பேசுறேன். அதுவரைக்கும் இப்டி நேர்ல வந்து என் பசங்களை டார்ச்சர் பண்ணாதீங்க”-ரிஷி

“அதுசரி, சுதன் டேய்….. உன்னை அப்புறம் கவனிக்கிறேன் டா”- என்று அவர் மிரட்டி விட்டு நகர “யு ஆர் ஆல்வேஸ் வெல்கம் சார்” என்றான் சுதன்.

தூர இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஹரிணிக்கு சிரிப்பு வந்தது. சிரிப்பும்,குதூகலமுமாய் டென்ஷன் ஏதுமின்றி சந்தோஷமாய் வேலை பார்க்கும் ஜாலி டீம் அவனுடையது. லைட் மேனிலிருந்து தொடங்கி நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆர்ட்டிஸ்ட் வரை அனைவரையும் சமபங்காக நடத்தித் தட்டிக் கொடுத்து வேலை வாங்குபவன்! பழகுவதற்கு மிக,மிக இனிமையானவன் அன்றிலிருந்து இன்று வரை! அதை நிரூபிக்கும் விதமாக அவனைச் சுற்றி அவனுக்கே உரிய ஒரு கூட்டம்! சிரிப்புடன் நகர்ந்தவள் சித்தார்த்திடம் “ஷாட் ரெடி சார்”எனக் கூறி விட்டு கேமராவின் பின்னே சென்று நின்றாள்.

அன்றைய ஷூட்டிங் மீராவின் டான்ஸ் க்ளாஸிலும் அதைத் தொடர்ந்து முட்டுக்காடு போட்டிங் ஹவுசிலும் தொடர… அன்று இரவு உணவை அங்கேயே கழித்தனர் ரிஷி குழுவினர்.

வலித்த வலது கையை ஊதியபடி தன் சாப்பாட்டுத் தட்டை ஏந்திக் கொண்டு அருகிலிருந்த போட்டின் மீது அமர்ந்தான் ரிஷி. கையிலிருந்த ஸ்பூனால் இட்லியைப் பிய்க்க முயன்றவனுக்கு வலியெடுக்க எரிச்சலுடன் ஸ்பூனை இடது கைக்கு மாற்றினான். சற்றுத் தள்ளி வினோத்துடன் பேசியபடி உண்டு கொண்டிருந்த ஹரிணி அவன் சாப்பிடப் போராடுவதைக் கண்டு அருகே வந்தாள்.

யாரோ தன்னருகே நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து நோக்கிய ரிஷி அவளைக் கண்டதும் பார்வையை வேறு புறம் திருப்ப.. குனிந்து மண்டியிட்டு அவன் முன்பு அமர்ந்தவள் தன் கையிலிருந்த ஸ்பூனைக் கொண்டு அவன் தட்டிலிருந்த இட்லிகளைத் துண்டுகளாக்கினாள். பின் தன் தட்டிலிருந்த ஃபோர்க்கை அவன் தட்டில் வைத்து விட்டு அவனை நோக்கினாள்.

அதுவரை அவள் செய்கையை வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தன்னை நோக்கியதும் பேச்சின்றித் தட்டை நோக்கினான். உதட்டைக் கடித்தபடி அவன் முகத்தை ஒரு நொடி நோக்கிய அவளும் மறுநொடி எழுந்து சென்று விட… திகைப்புடனே இட்லிகளைக் காலி செய்யத் தொடங்கினான் அவன்.

றுவாரத்தில் வெள்ளியன்று மாலை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று டி.பி.ஜெயின் காலேஜ் க்ரவுண்டில் பிரம்மாண்ட மேடையுடன் கோலகலமாகத் தொடங்கவிருந்தது. ரிஷியின் குழுவினர் அனைவரும் கடைசி ஒருவாரமாக இதில் மொத்தமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எப்போதும் போலல்லாது அது லைவ் நிகழ்ச்சி என்பதால் ஒவ்வொரு நுண்ணிய விசயமும் கவனமாக ரிஷியின் பார்வையின் கீழ் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.

மேடையை விட்டுத் தூரமாகப் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மேடையில் தோன்றுவோரின் முகத்தைத் தெளிவாகப் பார்க்கும் விதமாக க்ரௌண்டுக்கு நடுவில் பெரிய திரை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதன் கீழிருந்தக் கம்ப்யூட்டர்களை ஆப்பரேட் செய்து கொண்டிருந்தவர்களின் அருகே நின்றிருந்த அர்ஜூன் அந்தத் திரையில் பிம்பம் சரியாகத் தோன்றுகிறதா என்று சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

கேமரா கண்ட்ரோல் அறையில் அமர்ந்திருந்த பத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் காதுகளில் செருகப்பட்டிருந்த இயர் ஃபோன்ஸூடன் “கேமரா 2 ஸ்டாண்ட் பை. டேக் கேமரா ஒன்” எனத் தங்களது ரிஹர்சலைத் தொடங்கியிருந்தனர்.

மேடையின் அலங்காரங்களையும்,லைட்டிங்கையும் சரிபார்த்தபடி பலர், சீட்டிங் அரேஞ்ச்மெண்ட்டுகளை நோக்கியபடி சிலர் என அரங்கம் முழுதும் மக்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தன் கையிலிருந்தப் பேப்பரை ப்ரடக்ஷன் டீமைச் சேர்ந்த ராமிடம் காட்டி ஸ்பான்சர்கள்,கெஸ்ட்கள் லிஸ்ட்டை சரி பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி. “டைமிங்க்ஸ் எல்லாம் கரெக்ட் தானேடா?, மெயின் கெஸ்ட் வர்ற டைம் பத்தின இன்ஃபர்மேஷன் யார் கொடுக்கப் போறா?”

“தீபக். அவன் உங்களுக்கு அப்டேட் பண்ணுவான்”

“ஓகே!, ஆல் செட் தென். தேங்க்ஸ்டா”- என்றவன் கையிலிருந்தப் பேனாவினால் நெற்றியைச் சொரிந்தபடி நிமிர்ந்து எதிரில் தெரிந்த ஹரிணியை நோக்கினான். முட்டி வரையிருந்த ட்ரவுசரும்,டீசர்ட்டுமாகத் தலையில் கேப் அணிந்து கொண்டு க்ரேன் கேமராக்களை சரி பார்த்தபடித் தன் இயர் ஃபோன் வழியாக கன்ட்ரோல் ரூமில் அமர்ந்திருந்தவர்களிடம் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

பின் தன் கையிலிருந்த செக்லிஸ்ட்டை சரிபார்த்தபடி அவன் மேடையின் கீழ்ப்பகுதிக்கு அருகே நடந்து கொண்டிருந்த சமயம்.. மேடையின் மறுபுறத்திலிருந்து கீழே குதித்து இறங்கி வந்தாள் ஹரிணி.

அவளைக் கண்டதும் நிமிர்ந்து நோக்கியவன் மீண்டும் காகிதத்தில் தலையைப் புதைத்துக் கொள்ள… அவனைச் சுற்றிக் கொண்டு முன்னே சென்றாள்.

“திவ்யா… திவ்யா லிஃப்ட் செக் பண்றியா?”- இயர் ஃபோனில் அர்ஜூன் குரல் கேட்டதும் “யெ..யெஸ். ஐ ஆம் செக்கிங்” என்றவள் லிஃப்ட்டின் முன்பு சென்று தயங்கி நின்றாள்.

அன்றைய நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பாடவிருந்ததால் அவருக்காக மேடைக்கு அடியில் லிஃப்ட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தன் மீது நிற்பவரை கீழிருந்து தூக்கிக் கொண்டு சென்று மேடையில் நிறுத்தும் லிஃப்ட் அது.

அவள் இன்னமும் அங்கேயே நிற்பதைக் கண்டு மீண்டும் நிமிர்ந்து பார்த்த ரிஷி பயப்படுகிறாள் போலும் என்றெண்ணி அவளைக் கடந்து சென்று லிஃப்ட்டில் ஏறி நின்று திரும்பி “இப்போ உள்ளே வர்றியா?” என்பது போல அவளை நோக்கினான்.

பெருமூச்சை வெளியிட்டு “தே….தேங்க்ஸ்” என முணுமுணுத்தவள் அவனருகே சென்று நின்று இயர் ஃபோன் வழியாக “ஸ்டார்ட் த லிஃப்ட் ப்ளீஸ்” என்றாள்.

ஒரு பெரிய குலுங்கலுடன் மேலேறிய லிஃப்ட்டைக் கண்டு பயந்து அவள் அவனைப் பார்க்க, அவனோ எதையும் கண்டு கொள்ளாமல் கருமமே கண்ணாயிருந்தான்.

அவள் பயந்தது போல் சிறிது தூரம் சென்றதும் லிஃப்ட் நின்று லைட் அணைந்து இருள் சூழ்ந்து விட “வாட் த ஹெல்?” என்றவன் இயர் ஃபோன் வழியாக “அர்ஜூன், அர்ஜூன்” என்றழைத்தான். அதுவும் வேலை செய்யாது போக, அவள் புறம் திரும்பி “உன் இயர் ஃபோன் வேலை செய்யுதா?”என்று வினவினான்.

அவள் இல்லையெனத் தலையாட்டியதும் “ஷ்ஷ்ஷ், இருக்குற டென்ஷன்ல இது வேறயா?, இப்போ தான் இதையெல்லாம் நீங்க செக் பண்ணுவீங்களா?” என எறிந்து விழுந்தான்.

“இ….இப்போ என்ன பண்றது?”

“உன் செல்ஃபோன் இல்லையா?”

“இல்ல. மொபைல் யூஸ் பண்ணக்கூடாதுன்னு அர்ஜூன் சொல்லிட்டான். உ..உங்க செல்ஃபோன்?”

“அதுல சிக்னல் இல்ல”

“……………………………….”

“அவங்களே செக் பண்ண ஆரம்பிச்சிருப்பாங்க. வெயிட் பண்ணலாம்”- என்றவன் தன் செல்ஃபோனிலிருந்த லைட் வெளிச்சத்தில் கையிலிருந்த காகிதத்தைப் பார்க்கத் தொடங்கினான். என்ன செய்வதென்று புரியாமல் வியர்த்துப் போய் அவனையும்,காகிதத்தையும் மாறி மாறிப் பார்த்தாள் ஹரிணி.

அந்த கும்மிருட்டில் லேசான வெளிச்சத்தில் அவள் பார்வையை உணர்ந்த ரிஷி காகிதத்தைக் கீழிறக்கி விட்டு மறுபுறம் திரும்பிப் பெரு மூச்சை வெளியிட்டான். எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்றெண்ணியபடி!

தலையை நன்றாகக் குனிந்து, அணிந்திருந்த கேப்பினால் கிட்டத்தட்ட முகம் முழுதையும் மறைத்துக் கொண்டவளுக்கு இதயம் தொண்டைக்குள் வந்து துடித்தது. அடுத்த நொடி மீண்டும் பலமாக அதிர்ந்த லிஃப்ட் ஒரு குலுங்கலுடன் ஓரடி கீழிறங்கி நிற்க சுவரோடு சுவராய் ஒட்டிக் கொண்டு கண்களை இறுக மூடினாள்.

செல்ஃபோன் வெளிச்சத்தில் அவள் முகத்தைக் கண்டவன் சட்டென அருகே சென்று நெருங்கி மெல்ல அவள் கையைப் பற்றி “ரிலேக்ஸ்…” என்றான். ஏற்கனவே வியர்த்துப் போயிருந்த அவள் முகம் இன்னும் அதிகமான வியர்வை சுரப்பிகளை வெளியிட்டு அவளைக் குளிப்பாட்ட.. படபடக்கும் அவள் இமைகளைக் கண்டபடி அசையாது நின்றான் அவன்.

அவர்களை மேலும் சோதிக்காமல் அடுத்த நிமிடம் விளக்கெரிந்து லிஃப்ட் கீழ்த்தளத்தில் நின்று விட சட்டென அவனிடமிருந்து விலகி வெளியேறினாள் ஹரிணி.

அவளுக்காகவேக் காத்திருந்தவன் போன்று நின்றிருந்த அர்ஜூன் பதற்றத்துடன் “ஹரிணி, ஆர் யூ ஓகே?” என்றான். “ஹ்ம்ம், ஐம் ஓகே”-என்றவளைத் தாண்டி லிஃப்ட்டிலிருந்து வெளிப்பட்ட ரிஷியை ஏறிட்டான் அர்ஜூன்.

இவன் எப்படி உள்ளிருந்து வர்றான் என்றெண்ணியவன் கலக்கத்துடன் இருவரையும் நோக்கி விட்டு “இ..இதை நான் செக் பண்ணிக்கிறேன். நீ ஆடியோ செக்கைப் பாரு” எனக் கூறி நகர்ந்து விட்டான்.

டுத்த இரண்டு மணி நேரத்தில் தன் முன்னே கூட்டமாய் நின்றிருந்த சிறுவர்களிடம் “ஃபர்ஸ்ட் பெர்ஃபாமன்ஸ் நீங்க தான். நான் ரெடின்னு சொன்னதும் நகர்ந்து ஸ்டேஜ்ல நிக்கனும். நான் சிக்னல் கொடுத்ததும் மியூசிக் ஸ்டார்ட் ஆகும். அப்புறம் நீங்க பாட ஆரம்பிக்கலாம். நேத்துப் பண்ணின ரிஹர்சல் மாதிரி தான் இன்னிக்கும். ஓகே?” என்று அர்ஜூன் கூறியதும்..

“அதெல்லாம் நாங்க பார்த்துப்போம் அர்ஜூன் அண்ணா, ஆனா நீங்க ஏன் இன்னிக்கும் அழுக்கு சட்டையே போட்டிருக்கீங்க?, நீங்க இப்படி இருந்தா அனு அக்கா கடைசி வரை உங்களுக்கு ஓகே சொல்ல மாட்டாங்க” என்று கலாய்த்தனர்.

“அவ இல்லாட்டி வேற பொண்ணாடா இல்ல?, கண்ணுகளா, நீங்க நல்லா பர்ஃபார்ம் பண்ணாத் தான் அண்ணன் புது சொக்கா வாங்க முடியும். சரியா?ஆல் த பெஸ்ட். கலக்குங்க” என்று விட்டு விறுவிறுவென அனுவிடம் ஓடினான்.

இரண்டு வாழைப் பழங்களை உரித்துக் கடகடவென உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்த அனு தனக்களிக்கப்பட்ட ஸ்கிர்ப்ட்டை வாசித்துக் கொண்டிருந்தாள். “செல்லக்குட்டி ரெடியாடி?” என்று கத்தியபடியே உள்ளே வந்தவன் சிகப்பும்,கோல்டன் நிறமும் கலந்த லெஹங்காவில் ஜொலித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு “வாவ்வ்வ்வ்” என்று உதட்டை வளைத்தான்.

“செம்மையா இருக்கடி”

“தேங்க்ஸ்டா. போகலாமா?”

“என்னடி இப்டி சொல்ற?”

“ஏன்?, லேட் ஆகலையா?”

“ஏன்டி உன்னைக் கிஸ் பண்ணதுல இருந்து அதையே நினைச்சு தூங்காம லூசு மாதிரி நான் சுத்திட்டிருக்கேன். நீ என்னடான்னா அழகழகா மேக்கப் போட்டு வந்து என் முன்னாடி நின்னு கிளப்பி விட்டுட்டிருக்க?”

“கத்தாதடா நாயே!, தயவு செஞ்சு அதைக் கிஸ்ன்னு சொல்லி என் மானத்தை வாங்காத. இன்னிக்கு அஜய் நம்ம ஷோ-க்கு வர்றாரு. நான் அவரை மீட் பண்ற மூட்ல இருக்கேன். மரியாதையா போயிடு”

“ப்ச், இனிமே நீ சொல்ற ஒவ்வொரு ஆம்பள பேருக்கும் உனக்கு ஒவ்வொரு கிஸ் தரணும்டி”

“பொறுக்கி” – அவனைக் கண்டுகொள்ளாமல் முன்னே நடந்தவளை ஒரு மாதிரி நோக்கியபடி பின்னே சென்றான் அர்ஜூன்.

தொடக்கத்திலிருந்து இறுதி வரை முழு டென்ஷனுடன் வலம் வந்த ரிஷியின் குழுவினர் நிகழ்ச்சி முடிந்து கூட்டம் களையத் தொடங்கிய பின்பு தான் நிம்மதியாக மூச்சு விட்டனர்.

அனைத்துக்கும் முற்றுப்புள்ளியாக அன்று நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்து சேர்ந்த அஜய் என்பவனை விழுந்து விழுந்து கவனித்து அர்ஜூனின் காதுக்குள் புகை வரச் செய்து கொண்டிருந்த அனு, நிகழ்ச்சி முடிந்ததும் “அஜய் என்னை டின்னர்க்குக் கூப்பிட்டிருக்கார்” என்று குதித்துக் கொண்டு அவனுடைய காரிலேயே சென்று விட அர்ஜூன் முகத்தில் ஈயாடவில்லை.

வருத்தமாய்த் தன்னை நோக்கிய ஹரிணியைப் பொருட்படுத்தாமல் கையிலிருந்த ஃப்ரூட்டி டப்பாவை எரிச்சலுடன் தூக்கியெறிந்தவனிடம். “நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்டி தானடா?, ஏன் புதுசா கோபப்படுற?” என்று கேட்டு வைத்து ரிஷி வேறு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.