அத்தியாயம் - 9

I think I’ve lost my brain!

நிச்சயமாகக் கூற வேண்டுமானால் மூன்றாண்டுகள் கழித்து ஹரிணியை அன்று சந்தித்த ரிஷிகார்த்திகேயனுக்கு நட்பெனும் உணர்வைத் தாண்டி அவள் மீது வேறு எந்த வித எண்ணமும் கிடையாது. ஒரு வகையில் அம்மாதிரியான எண்ணங்களை அவனுள் விதைத்தற்கான காரணம் அவள் தான் என்று கூடக் கூறலாம்.

ஆஷாவின் பர்த்டே பார்ட்டி முடிந்த அன்றிரவு ரிஷியின் ஃபார்ம் ஹவுஸில் அவனுடனே தங்கி விட்டான் அர்ஜூன். பல கதைகளைப் பேசியபடி இரு நண்பர்களும் அந்த இரவைக் கழித்தனர்.

“டேய்… தயவு செஞ்சு காலைல ஷேவ் பண்ணிட்டு ஸ்கூலுக்கு வாடா. இப்டியே வந்தேன்னா வாட்ச் மேன் கண்டிப்பா வாசல்லயே துரத்திடுவான்”-அர்ஜூன்

“சரிடா. எங்கப்பன் என்னைப் பழி வாங்க ஸ்கூல் ஃபீஸைக் கட்டாம விட்டுட்டானோன்னு தோணுது எனக்கு. பார்ஷியல் அமௌண்ட் தான் வந்திருக்குன்னு இன்னிக்கு எனக்கு லெட்டர் வந்தது”-ரிஷி

“நாளைக்கு ஸ்கூல்ல விசாரிச்சுக்கலாம்டா. அந்தாளு என்ன தான் நினைச்சுட்டிருக்கிறாராம் மனசுல?,”

“அந்தாளும்,அந்தப் பொம்பளையும் நிச்சயம் என் கையால தான் சாகப் போறாங்க” – ஆத்திரத்துடன் எதிரிலிருந்த சுவரை வெறித்தான் ரிஷி.

றுநாள் பள்ளியில் விசாரித்த போது ட்யூஷன் பீஸ் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறதென்றும், ஹாஸ்டல் பீஸ் கொடுக்கப்படவில்லையென்பதும் தெரிய வந்தது. கோபத்துடன் பள்ளி முடிந்ததும் தான் தன் அன்னையுடன் முன்பு வாழ்ந்த வீட்டிற்குச் சென்றான் ரிஷி.

“தம்பி….” என எதிர்கொண்ட தோட்டக்காரரிடம் “அவர் இருக்காரா அங்கிள்?” என்று விசாரித்தான். தயக்கத்துடன் அவனை நோக்கியவர் “அப்பாவும், கூ…கூடவே அந்தம்மாவும் இருக்காங்க தம்பி. நீங்க.. இப்போ உள்ளே போறது சரிவரும்ன்னு எனக்குத் தோணல” என்றார்.

முன் தலை முடியை அழுந்தக் கோதி கோபத்தைக் கட்டுப்படுத்தியவன் விறுவிறுவென அந்த பங்களாவினுள் நுழைந்தான்.

உள் நுழைந்ததும் நேராக நோக்கியவனுக்கு, அந்தப் பெரிய ஹாலில் நடுநாயகமாக வீற்றிருந்தத் தன் அன்னையின் படம் தென்படாதது ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது. சுத்தம்,சுத்தம் என்று ஒரு நாளைக்கு நான்கு முறை வீட்டைத் தூய்மைப்படுத்தும் அன்னையில்லாது, அந்த வீடு தூசி,துப்பட்டையுடன் பாழடைந்து போயிருப்பதைக் கண்டு நெஞ்சு வலித்தது அவனுக்கு. வேலைக்காரர்கள் யாரும் கண்ணில் படவில்லையே! என்ன தான் நடக்கிறது இந்த வீட்டில்?

இடது புறமாகப் படியேறி பூட்டப்பட்டிருந்த பூஜையறையைத் திறந்தவனுக்கு இதயம் ஒரு நொடி நின்று போனது. அந்த வீட்டில் மாட்டப்பட்டிருந்த அவனுடைய படங்களும், அவன் அன்னையுடைய படங்களும் மொத்தமாய்த் தூக்கியெறியப்பட்டு கண்ணாடிகளனைத்தும் உடைந்த நிலையில் அலங்கோலமாகக் கிடந்தன.

வேகமாய் ஓடிச் சென்று அன்னையின் படத்தை எடுத்துத் தூசி தட்டியவனுக்கு வியர்த்துப் படபடத்து அழுகை முட்டிக் கொண்டு வந்தது. படத்தை எடுத்துக் கொண்டு வேக,வேகமாக மாடியேறினான்.

திறந்திருந்த படுக்கையறையில் நிலைக் கண்ணாடியின் முன்பு அமர்ந்து தன் ஆறடிக் கூந்தலை வாரிக் கொண்டிருந்தாள் அரைகுறை ஆடையணிந்த அழகியொருத்தி. அவளைப் பொருட்படுத்தாமல் “அப்பா….. அப்பா…. “ என்று சத்தமிட்டான்.

“ஷ்ஷ்ஷ்ஷ்…. ரிஷி…”-என எழுந்து வந்தவள் “உன் அப்பா குளிச்சிட்டு இருக்கார். கத்தாதே!” என்றாள்.

அவள் முகத்தைப் பார்க்கக் கூட விரும்பாதவள் போன்று வேறு புறம் திரும்பியவன் “அப்பா…. அப்பாஆஆஆ வெளியே வரப் போறீங்களா இல்லையா?” என்றான்.

“ஏன் கோபமா இருக்கிற ரிஷி?, என்னாச்சு?”

“நான் இங்க நிற்கப் போறது பத்து நிமிஷம் தான். அதுவரைக்கும் உன் மூச்சுக் காத்து கூட என் மேல படக்கூடாதுன்னு நினைக்கிறேன். தயவு செஞ்சு என்னை வெறியேத்தாம எங்கேயாவது போயிடு”

“ரிஷி… நீ என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குற. எனக்கு முக்கியம் உன் அப்பா இல்ல. நீ தான்” – என்றபடி அவன் தோளைத் தொட்டு ஒரு மாதிரி சிரித்தவளைத் திரும்பிய நோக்கிய ரிஷிக்கு அருவெறுப்பில் வாந்தி வந்தது. அவளும்,அவளது அரைகுறை ஆடையும்! முகத்திலிருக்கும் கோணல் சிரிப்பும்! ச்சை!

கனிவு,கண்ணியத்துடன் கம்பீரமாய் வீற்றிருந்த அவன் அன்னையின் இடத்தில் யாரோ ஒரு ஊரறிந்த பரத்தை, பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் ஈனப்பிறவி அமர்ந்து கொண்டு அந்தக் குடும்பத்தின் நிம்மதியை, சந்தோசத்தை சுலபமாய் அழித்து விட்டாள். இந்தப் பிடாரியை எதிர்த்துப் போரிடத் துணியாமல், செருப்பால் அடித்து விரட்ட முடியாமல் தன் உயிரையே மாய்த்துக் கொண்டு இவ்வுலகை விட்டுச் சென்று விட்டாள் அந்த பாக்யவதி.

அன்னையின் நினைவு வந்ததும் கோபம் கண்ணை மறைக்க ஆத்திரம் தாளாமல் முழு பலத்துடன் அவள் கையை ஓங்கித் தட்டி விட்டான் அவன். நிலை குலைந்து நான் கடித் தள்ளி விழுந்தவள் எழுப்பிய சத்தத்தில் பாத்ரூம் கதவைப் படாரெனத் திறந்து கொண்டு வெளியே வந்தார் விஸ்வநாதன்.

எழ முயன்று கொண்டிருந்த காமினி கோபத்தில் “ராஸ்கல்.. சின்ன பையனாச்சேன்னு நான் பொறுமையா போனா.. என்ன காரியம் பண்றான் பாருங்க விசு” என்றாள்.

கோபத்தில் மகனை ஓங்கி அறைந்த விஸ்வநாதன் “நீ இப்படி தேர்ட் ரேடட் ரௌடியா மாறுவதைப் பார்க்க முடியாம தான் உன் அம்மா போய்ச் சேர்ந்துட்டா டா. இன்னுமா நீ திருந்தாம இருக்க?” என்றார்.

“எ..எ..என்னால என் அம்மா இறந்தாங்களா?, ஹாஹாஹா…. இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி சொல்லி தப்பிக்கலாம்ன்னு பார்க்குறீங்க?, ஒரு உயிர் தன்னையே அழிச்சுக்கிட்டப் பிறகும் கூட உங்களால மனசாட்சிக்கு நேர் விரோதமா வாழ முடியுதா?”

“ஷட் அப் ரிஷி…..”

“நான் அப்படித் தான்ப்பா பேசுவேன். ஏன் அடிக்குறீங்கப்பா?, என் அம்மாவோட சேர்த்து என்னையும் சொர்க்கத்துக்கு அனுப்பிட்டு நீங்க இந்த விபச்சாரியோட குடும்ப நடத்தலாம்ன்னா?”

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ரிஷி”

“நான் ஏன்ப்பா மைண்ட் பண்ணனும்?, உங்களுக்கும்,உங்க பையனுக்கும் சேர்த்து வப்பாட்டியா இருக்க நினைக்கிற இவளை நம்பியா என் அம்மாவை சாகடிச்சீங்க?”

“வெளியே போடா ராஸ்கல்”- மீண்டும் அவர் அடித்த அடி அவன் கன்னத்தில் இடியாக இறங்கியது.

“நான் போகத் தான் போறேன். என் அம்மாவை, இந்த வீட்டை மொத்தமா அழிச்சுட்ட இவ, உங்களையும் உறிஞ்சு ஒரு நாள் தெருவில் எறியப் போறா. அப்போ நான் அப்பான்ற நினைப்புல உங்களைத் தேடி வருவேன்னு நினைக்காதீங்க. ரொம்ப நாள் உயிரோடல்லாம் நீங்க இருக்க மாட்டீங்க. இவளே உங்களுக்கு விஷம் வைச்சுக் கொன்னாலும் ஆச்சரியப்படுறதிக்கில்ல”

“உனக்கு என்னடா வேணும் இப்போ?”

“என் ஸ்கூல் ஃபீஸை ஏன் முழுசாக் கட்டல?”

“இதுக்கு மட்டும் நான் வேணுமாடா?”

“அடேங்கப்பா! நான் என்னவோ உங்க சொந்தக் காசை எடுத்துக் கொடுக்க சொல்ற மாதிரி சீன் போடுறீங்களே?, இது என் அம்மா எனக்காக விட்டுட்டுப் போன காசு. மத்தபடி உங்களோட காசுல நான் சாப்பிடனும்னு நிலைமை வந்துருந்தா.. என் அம்மாவோடு சேர்ந்து நானும் செத்திருப்பேன்”

“நாளைக்கு செக் அனுப்பிட்றேன். நீ முதல்ல இங்கிருந்து போ”

“எல்லாம் எனக்குப் பதினெட்டு வயசு ஆரம்பமாகுற வரைக்கும் தான். அப்புறம் என் அம்மா சொத்தெல்லாம் லீகலா என் கைக்கு வந்துடும். அதுக்கப்புறம் உங்க முகத்துல நான் முழிக்க வேண்டிய நிலைமை வராது”

“இப்படிப் பேசாத ரிஷி”

“இப்போ ஏன்ப்பா அடக்கமா பேசுறீங்க?, என் சம்பந்தப்பட்ட சொத்துக்களையும் கொள்ளையடிக்கனும்னு இவ ஆசைப்படுறாளா?, அப்படி ஏதாவது எண்ணமிருந்தா….” என்றவன் அருகே வைக்கப்பட்டிருந்த பழக்கூடையின் மீதிருந்த கத்தியை அவள் மீது வீசியெறிந்தான்.

சட்டென விலகி அவனை பயத்துடன் நோக்கியவளைக் கண்டு சிரித்து “உங்களையும், இவளையும் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன்” என்று விட்டு விறுவிறுவென அந்த வீட்டை விட்டு வெளியேறினான் ரிஷி.

அன்னையின் படத்தைத் தன் இல்லத்தில் வைத்து விட்டு டார்மிட்ரியை நோக்கி நடந்தவனுக்கு அன்னை இறந்த அன்றிலிருந்து இந்த மூன்று வருடங்களும் வாழ்க்கையின் சூனியப் பக்கங்களாய் மாறி விட்டதைக் கண்டு வெறுப்பு வந்தது. “அப்பா ஆரம்பத்திலிருந்தே அப்படித் தான் ரிஷி. இப்போ நான் நோய்வாய்ப்பட்டு படுத்தப்புறம் அவருடைய அட்டூழியம் ரொம்ப அதிகமாயிடுச்சு. அதிலும் அந்தக் காமினி அவரை மொத்தமா ஆட்டி வைக்குறா. என்னால அவரோட இதுக்கு மேல போராட முடியும்னு தோணலப்பா”- அவன் அன்னை கடைசியாக அவனிடம் இதைத் தான் கூறினாள்.

கண்களில் பெருக்கெடுத்தக் கண்ணீரை அடக்க முயன்றபடி நடந்து கொண்டிருந்தவனை “ஹேய்… ரிஷி….” என்றழைத்தபடிக் கையில் ஐஸ்க்ரீமுடன் ஓடி வந்தாள் ஹரிணி.

“இந்தக் குளிர்ல ஏன் டா வெளிய சுத்திட்டிருக்க?”

“நீ ஏன் சுத்திட்டிருக்க?, அதுவும் ஐஸ்க்ரீமோட?”

“சும்மா தான்.. எ..என்னாச்சுடா?, கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?, உடம்பு சரியில்லையா?” – வினவியபடியே அவன் நெற்றியில் கை வைத்து சோதித்தவளை எரிச்சலுடன் நோக்கினான்.

ஏனோ அவனுக்கு சற்று முன்பு அவன் வீட்டில் காமினி அவன் தோளில் கை பதித்தது நினைவிற்கு வந்து அருவெறுப்பு கொள்ளச் செய்தது. பட்டென அவள் கைகளைத் தட்டி விட்டு “இனிமே என்னைத் தொட்டுப் பேசாத. எனக்கு சுத்தமா பிடிக்கல” என்று எறிந்து விழுந்தான். திகைத்து அவனை விட்டு நான்கடி விலகியவள் முகம் சிவந்து அழுகையுடன் ஓடிச் சென்று விட்டாள்.

தனக்கிருந்த பிரச்சனையில் அடுத்த வந்த நாட்களில் அவளைப் பெரிதாக ஒன்றும் கண்டு கொள்ளவில்லை அவன். ஆனால் ஒரே பெஞ்சில் அருகருகே அமர்கையில் எந்நேரமும் தொணத் தொணவெனப் பேசி எரிச்சல் மூட்டுபவள் அமைதியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டாலும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை அவன்.

அன்றும் அப்படித்தான் வகுப்புத் தேர்வு நடந்து கொண்டிருக்கையில் இருவரும் அந்த பெஞ்சின் இரு மூலையில் அமர்ந்திருந்தனர். முதல் நாள் இரவு நண்பர்களுடன் ஆட்டம் போட்டு உறங்கி விட்டதில் ஒரு வரி கூட படிக்கவில்லை அவன். “உனக்கென்னப்பா?, அதான் பக்கத்துல ஹரிணி இருக்காளே!, அவ பார்த்துப்பா!” என்று அர்ஜூன் வேறு ஏற்றி விட்டிருந்தபடியால் அவளை நம்பி வகுப்பிற்கு வந்து விட்டான்.

ஆனால் தேர்வு தொடங்கியதிலிருந்து வினாத் தாளைத் தவிர வேறு எதையும் பார்க்காமல் குனிந்த வண்ணமிருந்தவளைக் கண்டு வியப்புற்றவன் மெல்லக் குனிந்து “ஷ்ஷ்ஷ்” என்றான்.

“ஹனி… ஹனி…”

மெல்லத் திரும்பி அவன் கைகளை நோக்கினாள் அவள்.

“உன் பேப்பரை எனக்குக் காட்டு ப்ளீஸ். நான் படிக்கல” –என்றான். தன் வினாத்தாளை அவன் புறம் தள்ளி வைத்தபடி மீண்டும் குனிந்து கொண்டாள் அவள். சிரித்தபடி விறுவிறுவெனத் தன் வினாத்தாளை நிரப்பத் தொடங்கினான்.

தேர்வு முடிந்ததும் வெற்றிச் சிரிப்புடன் அவள் புறம் திரும்பியவன் அவள் முன் நெற்றி முடியைக் களைத்து “தேங்க்ஸ் ஹனி” எனக் கூற… அவள் பதில் பேசாமல் பையை எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டாள்.

அவள் சென்றதும் பின் பெஞ்சில் அமர்ந்திருந்த சார்லஸ்ம்,ஜெர்ரியும் “ஹேய்…. ரிஷி…. கங்க்ராட்ஸ்.. கங்க்ராட்ஸ் மேன்” என்று குதூகலக் குரலில் கூறினர்.

“கங்க்ராட்ஸா?, எதுக்குடா?”

“எதுக்கா??, என்னடா இந்தக் குழந்தையும் பீர் குடிக்குமா ரேஞ்சுக்கு முகத்தை வைச்சிருக்க?, டேய்… நீயும்,ஹரிணியும் லவ் பண்றீங்க தான?”

“லவ்வா?”-எனத் திகைத்து வினவிய ரிஷி பக்கென சிரித்தான்.

“ஏன் சிரிக்கிற?, லவ் இல்லையா?, டேய்.. நம்ம செக்ஷனோட இப்போதைய லவ் பேர்ட்ஸே நீங்க தான் டா. ஸ்கூலே உங்க ஜோடிப் பொருத்தத்தைப் பத்தி பெருசா பேசிட்டிருக்கு. நீ என்னடான்னா அசால்ட்டா சிரிக்கிற?”

“லூசு தான் டா நீங்க”

“யாரு நான் லூசா?, அந்தப் பொண்ணு தினம்,தினம் உன்னைப் பார்க்குற பார்வையில் லிட்டர்,லிட்டரா லவ் வழியுது. உங்க டெஸ்க்கைக் கடந்தாலே காதல் வாசனை தான் டா வருது.”

“டேய்.. உளறாதீங்கடா. நானும், அவளும் சின்ன வயசுல இருந்தே நல்ல ஃப்ரண்ட்ஸ். அவ்ளோ தான். அதைத் தாண்டி எந்த உறவுமில்ல”

“ஆனா.. அவளைப் பார்த்தா அப்டி தெரியலயே டா. க்ளாஸ்க்குள்ள வர்ற வரைக்கும் சிரிச்சுட்டே வர்றா. உன்னைப் பார்த்ததும் அவ முகமே மாறிடுது. நீ எதையுமே நோட் பண்ணலையா? ப்ரபோசல் முடிஞ்சு நீங்க டேட்டிங் வரைக்கும் போயிட்டீங்கன்னு நாங்க நினைச்சிட்டிருக்கோம்”

“ஏய்.. ச்சி, அப்படியெல்லாம் எதுவுமில்ல. தேவையில்லாம புரளியைக் கிளப்பாதீங்க”

“நோ ரிஷி. ஐ திங்க் ஷீ லவ்ஸ் யூ”-என்றான் தாய்லாந்தைச் சேர்ந்த மாணவனான ஜெர்ரி.

அவர்கள் கூறும் எதையும் பொருட்படுத்தாமல் “நோ வே…” என்றபடி எழுந்தவனை முன்னிருக்கை மாணவிகள் அனைவரும் ஒரு மாதிரிப் பார்த்துத் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதைக் கண்டபடியே வகுப்பை விட்டு வெளியேறினான்.

“ஹரிணி என்னை லவ் பண்றாளாம்!, எப்படியெல்லாம் கிளப்பி விட்றானுக?” என்று புலம்பிக் கொண்டே தலை முடியைக் கோதியபடி நடந்தவன் வாசலருகேயிருந்த மரத்தடியில் தோழிகளுடன் நின்றிருந்த ஹரிணியைக் கண்டான்.

தன்னைக் கண்டதும் அதுவரை அவள் முகத்திலிருந்தப் புன்னகை மாறி படபடப்பு குடியேறுவதையும் அவள் தன் பார்வையைத் தவிர்த்து எதிரில் நிற்பவர்களிடம் ஏதோ உளறிக் கொட்டுவதையும் கண்டுக் குழம்பி யோசனையுடன் நடந்தான்.

நான்கடி சென்றதும் மீண்டும் திரும்பி அவன் அவளை நோக்குகையில் அப்போதும் ஒரு மாதிரிப் பார்வையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் பட்டெனப் பார்வையைத் திருப்பினாள். இம்முறை மாட்டிக் கொண்டதற்கான அறிகுறியாக பதட்டமும்,பயமும் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய.. நெற்றி முடியைச் சரி செய்தவாறுக் கீழே குனிந்து கண்களை இறுக மூடித் தன்னையேத் திட்டிக் கொண்டாள்.

ஏதோ ஓர் உணர்வு அடிவயிற்றிலிருந்துக் கிளம்பி உள் மனதைப் பிசைவது போல் தோன்ற பிடரி முடியைக் கோதியபடி உதட்டைக் கடித்துப் புருவங்களைச் சுருக்கியவன் தலையை இருபுறமும் ஆட்டியபடி முன்னே நடந்தான்.

டார்மிட்ரிக்கு செல்வதற்கான வளைவில் திரும்பியவன் என்ன நினைத்தானோ… கண் மூடி நின்று ஊஃப்ஃப் என்று விட்டு வந்த பாதையில் கால் வைத்து பின்னோக்கி நடந்து வளைவில் நின்றுத் தலையை மட்டும் நீட்டி அவள் நின்றிருந்த இடத்தை எட்டிப் பார்த்தான்.

உடனிருந்த தோழிகள் அனைவரும் சென்று விட்ட நிலையில் அவள் மட்டும் அவன் சென்ற திசையை நோக்கியபடி அந்த மரத்தடியில் தனியாக நின்று கொண்டிருந்தாள்.

அவன் மீண்டும் திரும்பி வருவான் என்று எதிர்பாராததால் திகைத்து விழி விரித்து அசையாது நின்றவளைக் கண்டுத் தானும் வியர்த்துப் போனவன், தன்னை மறந்து அவளையே பார்த்தவண்ணம் அந்தத் தெரு வளைவில் நின்று விட்டான்.

ஒருவரையொருவர் கண்டபடி இரண்டு நிமிடம் அசையாது நின்றிருந்த இருவரும் ஒரே நேரத்தில் சட்டெனப் பார்வையை வேறுபுறம் திருப்பிய சமயம் உள்ளிருந்து நெடிய மூச்சொன்று கிளம்பியது அவனுக்கு. அதுவரை மூச்சுக் கூட விடாமல் அவளையே வெறித்துக் கொண்டிருந்ததது நினைவிற்கு வந்து ரிஷியை ஆச்சரியத்தில் ஆழ்த்த… நெஞ்சைத் தடவியபடி “வாட் த ஹெல் இஸ் ஹாப்பனிங் டூ மீ?” என்று புலம்பிக் கொண்டே ஹாஸ்டலை நோக்கி ஓடினான்.

றுநாள் வகுப்பில் நண்பர்களுடன் அரட்டையடித்தபடி அமர்ந்திருந்தவனின் கண்கள் நொடிக்கொரு முறை வாசலுக்குச் சென்று கொண்டிருந்தது.சற்று நேரத்தில் ஆசிரியருடன் பேசிச் சிரித்தபடி உள்ளே நுழைந்த ஹரிணியைக் கண்டதும் சட்டென இமைகள் வேலை நிறுத்தம் செய்து விட.. கண் சிமிட்டாமல் அவளையே நோக்கினான் அவன்.

மூன்று வருடத்தில் இவ்வளவு மாறி விட முடியுமா என்ன?, எட்டாம் வகுப்பில் ஒல்லியாய், உயரமாயிருந்தவள் இப்போது லேசாக சதைப் பிடித்து கொழு,கொழுக் கன்னங்களுடன் பூசினார் போல் மாறியிருந்தாள். நெற்றியிலிருந்துத் தொடங்கி இரு புருவங்களையும் உரசியபடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த முன் கற்றை முடியும், துறு துறுக் கண்களும் மட்டும் மாறவேயில்லை. இரட்டை ஜடையுடன் ஸ்கர்ட்டும்,கோட்டுமாகக் கைகளில் புத்தகத்தைச் சுமந்து கொண்டு அவனை நோக்கி நடந்து வருபவளைத் திறந்த வாயுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் “ஷீ பிகேம் மோர் அண்ட் மோர் பியூட்டிஃபுல்” என்றான்.

“டேய்.. ரிஷி.. டேய்….” என்று சார்லஸ் தட்டியதும் நடப்பிற்கு வந்தவன் ஆசிரியர் வருகையினால் அனைத்து மாணவர்களும் எழுந்து நிற்பதையும், தான் மட்டும் அமர்ந்திருப்பதையும் கண்டு அசடு வழிந்தபடி எழுந்து நின்றான்.

“என்ன மேன் காலைலயேவா?” என்ற சார்லஸின் விலாவில் இடித்து அடக்கினான்.

ஆசிரியருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அனைவரும் அமர்ந்ததும் ரிஷியின் பார்வை மட்டும் அடிக்கடி ஹரிணியைத் தழுவி மீண்டு கொண்டிருந்தது. பெஞ்சின் ஓரத்தில் கிட்டத்தட்ட நுனியில் அமர்ந்திருந்தவள் கரும்பலகையை மட்டுமே பார்த்தபடி ‘அட்டென்ஷன்’ தோற்றத்தில் விறைத்துப் போயிருந்தாள்.

“ஹரிணி.. கொஞ்சம் குனிஞ்சு உட்காரேன். எனக்கு போர்ட் மறைக்குது” என்று சார்லஸ் வம்பு செய்ததும் “ஓ! சாரி…” என்றபடி பெஞ்சின் பின்னே சாய்ந்தாள்.

சாய்கையில் லேசாக அவனை உரச நேர்ந்ததில் பதறித் தோளை விலக்கியவளிடம் மீண்டும் ஆச்சர்யப் பார்வையைச் செலுத்தினான் ரிஷி. மெல்லத் தலை குனிந்து கொண்டு கைகளைப் பிசைந்தபடி படபடப்பை அடக்கிக் கொள்ள முயற்சித்தவளுக்கு உதட்டின் மேலே வியர்வை பூத்தது.

அவள் காட்டும் மாற்றங்கள் அனைத்தும் ஏனோ அவனை போதை கொள்ள வைத்துக் கொண்டிருந்தது. அது என்ன உணர்வென்பதை மூளைக்குள் ஏற்றி அவன் ஆராய்ந்து பார்ப்பதற்குள்.. இதயம் அதை வென்றதோடு மட்டுமல்லாமல் சுகமான வெப்ப அலை ஒன்றை உடல் முழுதும் பரவச் செய்து.. அவனை மேலே யோசிக்க விடாமல் சிலையாக்கிக் கொண்டிருந்தது.

தன்னையே அவன் பார்ப்பதை உணர்ந்து குனிந்த தலை நிமிராமல் உதட்டைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருப்பவளைக் கண்டுப் பார்வையை மெல்லத் திருப்பிய ரிஷிக்கு இதழோரம் முறுவல் உண்டானது. “ம்க்கும்” என்றபடிக் கால்களை அகட்டி பெஞ்சில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவன் மீண்டும் லேசாக அவள் மீது உரசி விட… சட்டென விலகி நிமிர்ந்து அமர்ந்தவள் மூச்சை அடக்கிக் கண்களை அகல விரித்தாள்.

இம்முறை முறுவல் நீண்டு புன்னகையாகி அவன் இதழ் முழுதும் நிறைய தன் 32 பற்களையும் காட்டி அழகாகச் சிரித்தான் ரிஷி. அவன் சிரிப்பதைக் கடைக்கண்ணில் கண்டவளுக்கு அந்த இடத்திலேயே புதைந்து விடலாம் போல வெட்கம் பிடுங்கித் தின்றது. டெஸ்க்கிலிருந்தப் பேனாவை இறுகப் பற்றி தன்னை சமன் படுத்த முயன்றாள்.

வலது கையைக் கட்டிக் கொண்டு இடது கைவிரல்களை மடக்கி வாயில் வைத்தபடி அமர்ந்திருந்த ரிஷிக்குப் புன்னகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போனது.

திடீரென ஆசிரியர் “ரிஷி அண்ட் ஹரிணி…..” என்றழைத்ததும் கனவிலிருந்து மீண்டு அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்த இருவரும் “யெஸ் மேம்……” என்றனர்.

“இப்போ நாம பார்த்துட்டிருக்க கான்செப்ட்டுக்கு ஒரு சின்ன நாடகம் தயார் பண்ணியிருக்கேன். இந்தப் பேப்பர்ல இருக்கிறதை ரீட் பண்ணிட்டு இரண்டு பேரும் ஆக்ட் பண்ணிக் காட்டுங்க” என்று கூறியதும் தயங்கிய இருவரும் வேறு வழியின்றி மேடையேறினர்.

தங்களது கையில் கொடுக்கப்பட்டப் பேப்பரைப் பார்த்தபடி குனிந்த இருவருக்கும் அதிலிருக்கும் எழுத்துக்கள் எதுவும் கண்ணில் படவேயில்லை. உதட்டைக் கடித்தபடி நெற்றியை முடியை ஒதுக்கிய ஹரிணி அந்தக் காகிதத்தில் இருந்ததை வாசிக்கத் தொடங்கினாள்.

“ஹரிணி.. ஐ வாண்ட் யூ டூ ஆக்ட். சும்மா ரீட் பண்ண சொல்லல” – என்று ஆசிரியர் கத்தியதும் ஊஃப் என்றபடி போர்டை நோக்கிப் பெருமூச்சை வெளியிட்டவள் காகிதத்தைக் கண்டபடி “ஹா…ஹாய் ரிஷி….” என்றாள்.

“கீப் ஆன் ஐ காண்டாக்ட் ஹரிணி….” – டீச்சர்

“சா…. சாரி மேம்” என்றவள் நிமிர்ந்து அவனை நோக்கி உள்ளே சென்று விட்ட குரலுடன் “ஹா…. ஹாய் ரிஷி…” என்றாள்.

அவள் கையிலிருந்த காகிதத்திலிருந்துத் தொடங்கி மெல்ல அவள் முகத்தை நிமிர்ந்து நோக்கியவன் தலையசைத்து “ஹாய்……………….. ஹரிணி……….” என்று பொறுமையாக அவள் பெயரை அழுத்தி உச்சரித்தான்.

மீண்டும் நெற்றியைச் சொரிந்தவள் அந்தக் காகிதத்தைப் பார்த்த வண்ணம் அடுத்த வசனத்தைச் சொல்ல “ஐ காண்டாக்ட், ஐ காண்டாக்ட்” என்று வகுப்பறையே சத்தமிட்டது.

காகிதத்தால் முகத்தை மறைத்த வண்ணம் வேறு புறம் திரும்பியவளைத் தலை சாய்த்தபடி அலட்டலின்றி நோக்கிக் கொண்டிருந்தான் ரிஷி.

“அவன் ரொம்ப கூலா இருக்கான்!, ஹரிணி… ஹரிணி உனக்கு என்னாச்சு?”என்று அனைவரும் சலசலத்ததும் “ஐ.. ஐ காண்ட் டூ திஸ் மேம்….” என்று அழாக் குறையாக கூறியவளைக் கண்டு மாணவர்கள் அனைவரும் சத்தமாக நகைக்கத் தொடங்கினர்.

ஏன் என்று புரியா விட்டாலும் அவள் செய்த சேட்டைகளைக் கண்டு சிரித்த ஆசிரியர் “யூ ஹேவ் டூ டூ திஸ் ஹரிணி” எனக் கூற கை,கால்களை உதைத்த வண்ணம் மீண்டும் அவன் புறம் திரும்பினாள்.

அவள் செய்கையை வேடிக்கை பார்த்தபடி ஆரம்பத்திலிருந்து ஒரே இடத்தில் நின்று கொண்டு அசையாமல் இதழோரத்தில் புன்னகையுடன் அவளை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்தவன் அவள் தன்னைக் கண்டதும் புருவம் உயர்த்திக் கண்ணால் சிரித்தான். பின் அவள் தன் புற வசனத்தைக் கூறியதும் அவனும் தொடங்கினான்.

அடுத்த பத்து நிமிடம் நீடித்த நாடகத்தின் இறுதியாக காகிதத்தை நோக்கி விட்டு “பா…..பாய் ரிஷி… நைஸ் டூ மீட் யூ ஆஃப்டர் அ லாங் டைம்” என்றாள்.

அவள் கண்களைக் கூர்மையாக நோக்கியபடி “நைஸ் டூ மீட் யூ டூ” என்று அவன் கூறியதும் பின் பெஞ்சு மாணவர்கள் “டேய்.. இந்த டயலாக் பேப்பர்ல இருக்கா?” என்று கத்தத் தொடங்க கலகலவெனச் சிரித்தான் ரிஷி.

கைத்தட்டி இருவருக்கும் நன்றி சொல்லிய ஆசிரியர் தன் வகுப்பை முடித்துக் கொண்டு வெளியேறியதும் “ஹப்பா!, என்ன கெமிஸ்ட்ரிடா இரண்டு பேருக்கும்?” என வகுப்பு முழுதும் இருவரையும் கேலி செய்தது.

சிரித்தபடி இருக்கைக்கு வந்தவன் தன்னருகே வந்தமர்ந்தவளைக் கண்டு உதட்டைக் கடித்தபடி வேகமாக யோசித்தான்.

“ஹனி…….”

“ம்ம்ம்ம்ம்?”- வியப்புடன் அவன் புறம் திரும்பியவளைக் கண்டு அழகாய்ப் புன்னகைத்தவன் “உன் கூடக் கொஞ்சம் பேசனும்………….. தனியா……….” என்றான்.

பதில் கூறாமல் நேர் எதிரே வெறித்தவளின் முன்புக் கையை ஆட்டியவன் “ஹலோ… உன்னைத் தான்” என்றான். மீண்டும் தலை குனிந்தபடி அமைதியானவளின் தோளை இடித்து “ஈவ்னிங் வெயிட் பண்ணு” என்று கூறி விட்டு சிரித்துக் கொண்டே எழுந்து சென்றான்.

அன்று மாலை அவனுக்காக வெகுநேரம் காத்திருந்தவளை வானம் முழுதாக இருட்டியபிறகு தான் சந்தித்தான்.

“சாரி…சாரி ஹனி.. பசங்களோட ஃபுட் பால் விளையாடிட்டிருந்தேன். டைம் போனதே தெரியல”

“………………………………………………….”

“ஏ…ஏன் இப்படி நிற்கிற?, கோட்,கேப் எல்லாம் எங்க?, எவ்ளோ குளிருது வெறும் ஸ்வெட்டர் மட்டும் போட்டுட்டு நிற்கிற?,”என்றபடி அருகே வந்தவன் தான் அணிந்திருந்த கோட்டின் இரு பகுதிகளால் அவளை அணைத்து நெருங்கி நின்றான்.

“இப்போ குளிருதா?” – காதோரத்தில் அவன் குரல் சூடாக ஒலித்ததும் கண்களை இறுக மூடி அவன் மார்பில் அழுந்தப் புதைந்தாள் அவள்.

அவளிடமிருந்துப் பதில் வராது போனதும் குனிந்து அவளை நோக்கியவன் உதடு நடுங்க கன்னங்கள் சிவந்து போய் அவள் நிற்பதைக் கண்டான்.

அதுவரை எந்த உணர்வுமின்றி அவள் குளிரைப் போக்கும் முயற்சியில் நெருங்கி நின்றவனுக்கு, திடீரெனத் தன் மீது சாய்ந்திருக்கும் அவள் உடலின் வெம்மையும்,மென்மையும் புதிதாகத் தோன்ற சட்டென அவளை விட்டு விலகி நான்கடி தள்ளிச் சென்று மறுபுறம் திரும்பி நின்றான். தலையைக் கோதியபடி “ஊஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்” என ஊதியவன் மீண்டும் அவள் புறம் திரும்பினான்.

“ச….சம்திங் ஃபீல்ஸ் அ பிட் ஸ்ட்ரேஞ்ச் இல்ல?, உனக்கும் எனக்கும் இடையில?”

“………………………………….”

“ஹனி………..”

“………………………………..”

“ஹரிணி…………… நிமிர்ந்து என்னைப் பாரு. நீ என் கண்ணைப் பார்க்காம அவாய்ட் பண்றது தான் வித்தியாசமா ஃபீல் ஆகுது எனக்கு”

மெல்ல நிமிர்ந்து அவனை நோக்க முயற்சித்தவள் காதோர முடியை ஒதுக்கிய படி வேறேங்கோ பார்க்க….. தோள் குலுங்க உதட்டைக் கடித்தபடி சிரிக்க முயற்சி செய்துத் தோற்று மீண்டும் தலை முடியைக் கோதினான் அவன்.

“ஏ..ஏன் நான் லேசா உரசினா கூட இப்போல்லாம் அவ்ளோ…… அவ்ளோ பெருசா ரியாக்ட் பண்ற?, இ…இதுக்கு முன்னாடி நான் உன்னை டச் பண்ணதே இல்லையா?”

“………………………………..”

“அமைதியா……. அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ஹரிணி?” என்றவன் தன்னை விட்டு நான்கைந்து மீட்டர் தள்ளித் தூரமாய் நின்றிருந்தவளைக் கோபமும்,சிரிப்புமாய் நோக்கி “காட்! ஷீ இஸ் கில்லிங் மீ அலைவ்!” என்றான்.

“நீ… நீ இப்படி இருக்கிறது ஏன் எனக்கு இவ்ளோ பிடிச்சிருக்குன்னு சத்தியமா தெரியல. பதறிப் படபடத்து வியர்த்துப் போய், கையைப் பிசைஞ்சிக்கிறதும்! இப்டி…. இப்டி தூரமா தள்ளி நின்னுக்கிட்டு எனக்கே தெரியாம என்னைப் பார்க்குறதும், நான் பார்க்கும் போது வேகமா திரும்பிக்கிறதும் எனக்கு ஏன் உள்ள ஏதோ பண்ணனும்?, இதுக்கெல்லாம்…. என்ன அர்த்தம்??”

குளிர் தாங்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தவளுக்கு அவன் வார்த்தைகளும், செய்கைகளும் மேலும் நடுக்கத்தைக் கொடுக்க இரு கைகளையும் கட்டிக் கொண்டு மேலும் தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஹனி.. சே சம்திங்…”

“…………………….”

“அட்லீஸ்ட் என்னை நிமிர்ந்தாவது பார்க்கலாம் இல்ல?, இன்னிக்கு க்ளாஸ்ல பார்த்த மாதிரி??, நீ இப்படியிருக்கிறது எனக்கு இன்னும் ஏதேதோ உணர்வுகளையெல்லாம் தூண்டி விடுது”

ஒரு முடிவுடன் கட்டியிருந்தக் கைகளை இறக்கியவள் கண்களை அழுந்த மூடித் தன்னையே திட்டிக் கொண்டு அவனை மெல்ல மெல்ல நிமிர்ந்து நோக்கினாள்.

அவள் கண்களை சந்தித்ததும் பட்டெனப் பார்வையைத் திருப்பியவன் இரு கைகளால் தலை முடியைப் பற்றிக் கொண்டு “க்ரேசி! ஐ காண்ட் ஈவன் லுக் அட் ஹெர் ஐஸ் நௌ” என்று கூறிச் சிரிப்பும்,குழப்பமுமாய் விடாது நடந்தும்,குதித்தும் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முயற்சித்தான்.

இப்போது பார்வையை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காமல் அவனையே நோக்கிக் கொண்டிருந்தவளிடம் “இனி… அடுத்து.. அடுத்து என்ன இனி?” என்றான்.

“தெரியல” என்பது போல் தலையை இருபுறமும் அசைத்தவளிடம் மேலும் சிரித்து “ஐ ஃபீல் லைக் ஐம் கோயிங்க் மேட்” என்றவன்..

“இப்படியே தூர தூரமா நின்னு, ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிட்டு.. எதுவும் பேசிக்காம விலகியே தான் இருக்கப் போறோமா?”

அவள் அவன் மீதிருந்த பார்வையை இப்போதும் விலக்கிக் கொள்ளவில்லை.

“ஐ டோண்ட் திங்க் ஐ கேன் டூ தட்”

லேசாய்ச் சிரித்தாள் அவள்.

“சிரிக்காத. இதோ பார், நான் இந்த மாதிரியெல்லாம் பேசுறதுக்கு முழுக்க,முழுக்க நீ தான் காரணம். ஏன்.. ஏன் 3 வருஷத்துல இவ்ளோ அழகா மாறுன?, ஏன் என்னைப் பார்த்த அன்னிக்குக் கட்டிப் பிடிச்ச? ஏன் என்னைத் தூண்டி விடுற மாதிரி இந்த ஒரு மாசமா.. என்னென்னவோ புதுசு,புதுசா ரியாக்ட் பண்ணுற?, அதனால தப்பெல்லாம் உன் மேல தான். என் மேல இல்ல.”

“ஆமாம்” என்பது போல் ஒப்புக் கொண்ட பார்வையுடன் அவனை நோக்கினாள்.

அவளையே ஐந்து நிமிடம் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தவன் “எ….எதுவுமே சொல்லாம அமைதியா இருந்தா நான்… நான் என்ன நினைக்கட்டும்?” என்று பொறுமையின்றி வினவினான்.

அவன் கேள்வியில் இமை தட்டி விழித்தவளின் கண்களிலிருந்து லேசாகத் துளிர்த்த நீர் கன்னங்களில் வழிந்தோட.. திகைத்துப் போனவன்… அதற்குள் உள் மனதில் எழுந்த மற்றொரு உணர்வால் மேலும் திகைத்தான்.

விழிநீரைத் துடைத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தவளைக் கண்டு அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் அவளருகே ஓடிச் சென்றான்.

மூச்சு வாங்கத் தன் முன்னே நிற்பவனை இமைக்காமல் நோக்கியவளிடம் “இந்த மாதிரி உணர்வுகளுக்கெல்லாம் நேரம் ஒதுக்கிற மனநிலைல சத்தியமா நான் இல்ல. ஆனா….. இது வரை நடந்ததுக்கும், இப்போ.. இப்போ நடக்கப் போறதுக்கும் முழுக் காரணமும் நீ தான்றதை மறந்துடாத….” என்றபடியே அவள் முகத்தை சில்லிட்டிருந்தத் தன் இரு கைகளால் பற்றியவன் “காட்….! ஐ ஹேவ் லிட்ரலி லாஸ்ட் மை ப்ரெய்ன்” எனக் கூறிக் குனிந்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.

திகைத்துச் சிவந்தவளை மேலும் அருகிலிழுத்து அவளுள்ளே புதைந்து விடுபவன் போன்று முத்தமிட்டவனைக் கண்டு கண்களை இறுக மூடினாள் அவள்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் சட்டென அவளை விட்டு விலகியவன் சுயநினைவு பெற்று அவளை நோக்குகையில் கண் மூடிய நிலையிலேயே சிலையாகி விட்டிருந்தாள் அவள்.

சுற்றியிருந்த அமைதியும், காற்றிலிருந்த குளுமையும் அவன் முத்தம் அளித்த வெம்மையும் உடல் முழுதும் பரவி சுகமான உணர்வொன்றை இதயத்துக்குள் கிளப்ப…. சிரிப்பும்,அழுகையுமாய் கண் மூடி நின்றவளை மீண்டும்,மீண்டும் முத்தமிடத் தோன்றியது அவனுக்கு.

அவளை நெருங்கி நின்று இறுக அணைத்துக் கொண்டவன் அதிகமாய்க் குழம்பிப் போயிருந்தான்.