அத்தியாயம் - 8

I wanna hug you!

வனைக் கண்டதும் சிரிப்பும்,மகிழ்ச்சியுமாய் துள்ளிக் குதித்த அன்றைய ஹரிணியின் கள்ளமில்லாத அன்பை எண்ணி ரிஷியின் மனம் குமுறியது. அந்த அன்பைத் துஷ்ப்ரயோகப்படுத்தி,கொச்சைப்படுத்தி முட்டாள்த்தனமாய் வாழ்நாள் முழுமைக்குமான வலியை அவளுக்குத் தந்து விட்டானே? அன்றைய மனநிலையில், வாழ்வின் மீதிருந்த வெறுப்பில் அவன்,அவனையே சீரழித்துக் கொள்ளத் துடித்தது சரி தான், ஆனால் அவன் வாழ்க்கையில் உடன் பயணித்ததைத் தவிர அவள் வேறு எந்த பாவமும் செய்யவில்லையே? தன் கோபத்திற்கு வடிகாலாய் அவளை அவன் உபயோகித்துக் கொண்டது எவ்வளவு பெரிய கொடுமை? சிரிப்பையே மறந்து போனாளே! அவள் கண்களில் எப்போதும் குடி கொண்டிருக்கும் சிறுபிள்ளைத்தனமும், அறியாமையும் மொத்தமாய்த் தொலைந்து போய் விட்டதோ?

மானிட்டரில் தங்களது இருவரது முகங்களைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்த சித்தார்த்,மீராவைத் தாண்டி ரிஷியின் பார்வை தூரத்தில் நின்றிருந்த ஹரிணியிடம் ஏக்கமாய்ப் பதிந்தது.

வினோத்,சுதன்,ரோஷினி புடை சூழ சாண்ட்விச்சை வாயில் அடைத்துக் கொண்டிருந்த ஹரிணி, ரிஷியின் பார்வை தன்னையே உற்று நோக்குவதைக் கண்டுத் திகைத்துப் பின் அவசரமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

விறுவிறுவெனக் கால் போன போக்கில் நடந்தவள் ஷூட்டிங் நடந்த இடத்தைத் தாண்டி ஆள் நடமாட்டமில்லாத மரத்தடி கல் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தாள். இதற்காக.. இந்தக் காரணத்திற்காக மட்டும் தான் அவனுடன் பணி புரிவதைத் தவிர்க்க நினைத்தாள்! விதி தான் சதி செய்கிறதே! பெருமூச்சொன்றை வெளியிட்டபடிக் கையிலிருந்த கோக்கை அவள் வாயில் ஊற்றிய சமயம் “ஹாய் ஹனி..” என்றபடி அருகே அமர்ந்தான் ரிஷி.

எதிர்பாராமல் அவனைக் கண்டதில் புரையேறி விட லொக்,லொக்கென இருமியபடியே அடித்துப் பிடித்து எழுந்தவள் வேகமாய் அவனை விட்டு நான்கடித் தள்ளி நின்றாள்.

நிதானமாய் அவள் செய்கையை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தவன் பின் மெல்ல அந்தக் கல் பெஞ்சில் தலை சாய்த்தான்.

ஒருவாறு தன்னைச் சமன்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு அடுத்த என்ன செய்வதென்று புரியவில்லை. வழக்கம் போல் ஓடி விடலாமா?, எத்தனை முறை தான் ஓடுவது?, ஆனால்.. இவன் எதற்காக இப்படித் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறான்?, இதற்கு முடிவு கட்டாமல் இங்கிருந்து நகரக் கூடாது.

எழுந்து நின்ற மறு நிமிடம் ஓடி விடுவாளென எதிர்பார்த்திருந்த ரிஷி, அவள் அங்கேயே நிற்பதைக் கண்டு தலையை நிமிர்த்தி அவளை நோக்கினான்.

“நீ இன்னும் ஓடல?”

“ம்ம்??, நா…நான் ஏன் ஓடனும்?”

பார்வையை அவளிடமிருந்துத் திருப்பி தூரத்து இருட்டை வெறித்தான். பின் கை நீட்டி அவளை அருகே வருமாறு சைகையில் அழைத்தான். சந்தேகத்துடன் அருகே வந்தவளிடமிருந்துக் கோக் டின்னைப் பறித்து வாயில் ஊற்றிக் கொண்டான்.

அவசரத்துடன் “கு…குடிக்காதீங்க. அது நான் எச்ச பண்ணது” என்றாள்.

புருவத்தை உச்சிமேடு வரைத் தூக்கியவன் பின் தன் உதட்டை கோக் டின்னின் வாயில் உரசி வேண்டுமென்றே எச்சில் படுத்தினான். எரிச்சலுடன் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தவளைக் கண்டு சிரித்துத் தலை குனிந்தவன் பின் எழுந்து அவளருகே சென்றான்.

தரையைப் பார்த்தபடி அசையாது நின்றிருந்தவளின் கோர்த்திருந்தக் கைகளை மெல்லப் பற்றியதும் திகைத்து சட்டென விலக்கிக் கொள்ள நினைத்தவளின் முயற்சியை அடக்கி இறுகப் பற்றியவன் பெருமூச்சுடன்..

“3 வருஷம் கழிச்சு அன்னிக்கு என்னைப் பார்த்ததும் உனக்கு எவ்ளோ சந்தோசமா இருந்துச்சோ, அதை விட ஆயிரம்,லட்சம்,கோடி மடங்கு சந்தோசம் இப்போ,இந்த நிமிஷம் உன்னைப் பார்க்குற எனக்கு இருக்கு. எட்டாங்கிளாஸ்ல உன் பக்கத்துல உட்கார்ந்து படிச்ச சின்னப் பையன் நான் இல்லன்றது தெரிஞ்சும், வயசு வந்த பெரிய ஆணா எல்லா விதத்துலயும் மாறி உன் முன்னாடி நிற்கிறது தெரிஞ்சும், அது எதையும் மைண்ட் பண்ணாம.. கொஞ்சம் கூட யோசிக்காம.. என்னைக் கட்டிப்பிடிச்சு சந்தோசத்தை வெளிப்படுத்துன அந்த ஹரிணியோட தைரியம் இப்போ எனக்கு வேணும்னு தோணுது..” – என்றான்.

லேசாய் அவன் கண்களிலிருந்துத் துளிர்த்து விட்டிருந்தக் கண்ணீரைக் கண்டு விழிகளைப் பெரிதாய் விரித்து வியப்பைக் காட்டி அவனையே நோக்கியவளிடம்.. மெலிதாகி விட்ட குரலுடன் கூறினான்.

“ஐ… ஐ.. வான்ன ஹக் யூ ஹரிணி…”

“…………………………”

“உ..உன்னைக் கட்டிப்பிடிச்சு என்னோட சந்தோசத்தை சொல்லனும். உன்னை பத்து வருஷமா எவ்ளோ மிஸ் பண்ணேன்னு சொல்லனும். பார்க்குற இடத்துல எல்லாம் உன்னைத் தேடித் தேடி ஏமாந்து போன நான், மறுபடி உன்னை இங்கே பார்த்ததும் சந்தோசத்துல தலை,கால் புரியாம பைத்தியமானதை சொல்லனும். கண் முன்னாடி நீ இருந்தும், என் மனசுல இருக்குற எதையும் வெளிப்படுத்த முடியாத என்னோட கையாலாகாதத் தனத்தைச் சொல்லனும்…. ஹ..ஹரிணி… ஐ..ஐ மிஸ்ட் யூ… ஐம் ஸ்டில் மிஸ்ஸிங் யூ…”

அவன் பேசும் எதையும் கேட்க விரும்பாதவள் போன்று விடாது அவனிடமிருந்து விலக்கிக் கொள்ள போராடியவளின் கைகளைப் பற்றி நெஞ்சில் பதித்துக் கொண்டவன்..

“அன்னிக்கு செஞ்ச தப்பை நினைச்சு நிறைய தடவை செ..செத்துப் போயிடலாமான்னு கூட யோசிச்சிருக்கேன். ஆனா.. உன்னை மறுபடி சந்திக்காம… செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்காம சாகுறது தப்புன்னு தோணுச்சு. இத்தனை வருஷமா எப்படியாவது உன்னைப் பார்த்துடனும்ன்ற நினைப்புல வாழ்ந்துட்டிருந்த என் முன்னாடி… நீ திடீர்னு வந்து நின்னப்போ.. எ…என்னால… என்னால.. உன் கிட்ட நெருங்குறதைத் தவிர்க்க முடியல. நீ யார்ன்னே தெரியாத மாதிரியும்,உன்னை யாரோ ஒருத்தி மாதிரியும் ட்ரீட் பண்ண முடியும்னு எனக்குத் தோணல. நான்.. நான் என்ன செய்யட்டும் ஹரிணி…?” என்றான்.

தன் எண்ணங்கள் அனைத்தையும் கண்களில் தேக்கி எதிர்பார்ப்புடன் அவளையே நோக்குபவனைக் கண்டுத் தலை கிறுகிறுத்துப் போனது அவளுக்கு.

திகைப்புடன் அவனையே பார்ப்பவளைக் கண்டு அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் பற்றியிருந்தக் கைகளை இழுத்து அவளை இறுக அணைத்தான். கண்களை இறுக மூடி அவன் இழுத்த இழுப்பில் அவன் மார்பில் கன்னத்தை முட்டியவளின் எண்ணங்கள் அவளை வேறு ஒரு சூழ்நிலைக்கு இழுத்துச் சென்றது.

அன்றும் கூட இதே போன்று ஆள் நடமாட்டம் ஏதுமில்லாத இருள் சூழ்ந்த இடத்தில் தான் அவளை அணைத்தான். விர்.,விர்ரென்று குளிர் காற்றில் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்த மரங்களும், மயான அமைதியும், தன்னை அணைத்திருந்தவனின் தள்ளாட்டமும்,நிதானமற்ற போக்கும்! அதை… அதைத் தொடர்ந்த சம்பவங்களும்…..! சட்டென பேயைக் கண்டவள் போன்று அவனை முழு பலத்துடன் விலக்கித் தள்ளியவள் விழி நிறைய பயத்துடன்,கை,கால் வெடவெடக்க… விழுந்தடித்துக் கொண்டு வேகமாய் ஓடியே விட்டாள்.

தன்னை விட்டு விலகி ஓடுபவளைத் தடுக்க முடியாமல்.. தொடர்ந்து செல்லவும் முடியாமல்.. கண்களில் தேங்கிய நீர் கன்னங்களில் வழிந்தோட.. செய்கையற்று நின்றான் அவன். இயலாமையும்,கோபமும் அன்று போல் இன்றும் தன் மீதே வெறுப்பு கொள்ளச் செய்ய “ஆஆஆஆஆஆஆஆ”-வெனத் தலையைப் பிடித்து வெறி பிடித்தவன் போல் கத்தியவன் அருகிலிருந்த மரத்தை முஷ்டியால் குத்தினான்.

அவனிடமிருந்துத் தப்பி விடும் நோக்கத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டு சுற்றுப்புறம் பாராமல் விறுவிறுவென ஓடிய ஹரிணி எதிரே வந்த அர்ஜூன் மீது படாரென மோதி நான்கடித் தள்ளிக் கீழே விழுந்தாள்.

இருட்டில் எதன் மீது மோதுகிறோம் என்று தெரியாமல் பயந்து “ஆஆஆஆஆ”-வென அலறிய அர்ஜூன் பின் கண்களைக் கசக்கி “ஹ.. ஹரிணி???” என்றான்.

கீழே விழுந்தும் கூட சுயநினைவு பெறாமல் மீண்டும் எழுந்து ஓட முயன்று கொண்டிருந்தவளின் அருகே சென்று “திவ்யா… திவ்யா…” என்றழைத்தான்.

அவன் சத்தமாய் அழைத்ததும் நடப்பிற்கு வந்தவள் கண்களை அகலத் திறந்து தான் இருக்குமிடத்தை நினைவு கொள்ள முயன்றாள்.

“எ.. என்னாச்சு?” – எனத் தயங்கி வினவியவன் கைக் கொடுத்து எழுப்பலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த சமயம் வினோத்தும்,ரோஷினியும் ஓடி வந்தனர்.

“என்னாச்சு திவ்யா? எப்படிக் கீழே விழுந்த?”-என்றபடி அவளுக்குக் கைக் கொடுத்துத் தூக்கிய ரோஷினி வியர்வையில் குளித்து மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்க படபடப்புடன் நிற்பவளைக் கண்டு சந்தேகமாய் அர்ஜூனை நோக்கினாள்.

“ஏய்.. ஏய்… என்னை ஏன் சந்தேகமா பார்க்குற?, இந்தப் பொண்ணு வந்து டமால்ன்னு என் மேல மோதுனதுல என் நுரையீரல் இரண்டும் டேமேஜ் ஆயிடுச்சோன்னு யோசிச்சிட்டிருக்கேன். என்னை முறைக்குற?, இங்க நான் தான்ம்மா விக்டிம். புரிஞ்சுக்க” - அர்ஜூன்

“சா..சாரி.. வேகமா ஓடி வந்ததுல எதிர்ல வந்த உங்களை நான் பார்க்கல.” - திவ்யா

“அப்படி எதைப் பார்த்து இவ்ளோ வேகமா ஓடி வந்த?”-வினோத்.

தயக்கத்துடன் நின்றவளைத் தாண்டி பின்புறம் நோக்கிய மூவரின் கண்களில் சோகமே உருவாய் நடந்து வந்து கொண்டிருந்த ரிஷி தெரிந்தான். “ம்க்க்க்க்க்க்க்க்கும்” என்ற வினோத் “திவ்யா என்னோட வா. பேண்ட்-எய்ட் போட்டு விட்றேன்” என முன்னே நடந்து விட, இப்போது மீண்டும் சந்தேகத்துடன் அர்ஜூனை நோக்கினாள் ரோஷினி.

“பா.. பாஸ் ஏன் அங்கிருந்து வர்றார்?”

“நீ மூடிட்டு உன் வேலைய பார்க்க மாட்டியா?”

“ஆனா அர்ஜூன், இந்தப் பொண்ணு வந்ததுல இருந்து பாஸ் ஒரு மாதிரி இருக்கிறதை நோட் பண்ணுனியா? சம்திங் இஸ் ராங் டா”

“ரோஸ்மெரி… நீ இந்த விசயத்துல இன்வால்வ் ஆகாம இருக்கிறது நல்லதுன்னு அந்த மரத்துல நிக்கிற பட்சி சொல்லுது. நீ என்ன சொல்ற?”

“ஆமாமா.. எனக்கு எதுக்கு இந்தப் பொழப்பு?, ஏய்.. உன் காலேஜ்மேட்ஸ் 2 பேரை இன்ட் ரொடியூஸ் பண்ணி வைக்கிறேன்னு ரொம்ப நாளா சொல்றியே?, எப்போடா பண்ணப் போற?”

“ஹ்ம்ம்ம், இந்த வீக்-எண்ட் கண்டிப்பா. ஓகே?”

பெரு விரலைத் தூக்கிக் காட்டிக் கண் அடித்து விட்டு அவள் நகர்ந்து விட.. பெருமூச்சை வெளியிட்டு வேகமாய் ரிஷியின் அருகே சென்றான் அர்ஜூன்.

“டேய்… உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்காடா?, வர்க் ப்ளேஸ் டா இது. இப்டி எல்லாருக்கும் சந்தேகம் வர்ற மாதிரி அவ பின்னாடியே போயிட்டிருக்க?”

“என்னைத் தனியா விடு அர்ஜூன். நான் பயங்கரமான ஃப்ரஸ்ட்ரேஷன்ல இருக்கேன்”

“அப்டியெல்லாம் விட முடியாதுடா. நாளைக்குரிய ஷூட்க்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் யாரு கொடுக்கிறது?, நீங்க பிஷப்ல படிச்சிட்டிருக்க ரிஷி கார்த்திகேயன் இல்ல. சேனல் ரெட்-ஓட டைரக்டர் ஆர்.கே. புல் யுவர்செல்ஃப் டூகெதர். இடியட்” என்றவன் அவனை இழுத்துக் கொண்டு நடந்து சென்றான்.

ன்று ஷூட்டிங் முடிந்து வீடு வந்து சேர்ந்ததும் ரிஷி உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்டு கையில் டீ கப்புடன் பால்கனியில் வந்து நின்றான் அர்ஜூன். அன்றைய நிகழ்வுகளை எண்ணிப் பெருமூச்சை வெளியிட்டபடி பாக்கெட்டிலிருந்த செல்ஃபோனை எடுத்தவன், சம்பத் சாரிடமிருந்து ஆறு மிஸ்ட் கால்கள் வந்திருப்பதைக் கண்டு அவரை அழைத்தான்.

“ஹ்ம், சார்… கூப்பிட்டிருந்தீங்களா?”

“டேய்.. எத்தனை தடவைடா உங்க 2 பேருக்கும் கூப்பிடுறது?, ஏன் டா டீம் லீடரை மதிக்கவே கூடாதுன்னு நினைச்சிருக்கீங்களா?”

“சார்.. சார்… ஹலோ… ஹலோ.. நீங்க பேசுறது எதுவும் கேக்கல சார்.. ?”

“எப்பிடிக் கேக்கும்? நல்லா நடிக்கக் கத்து வைச்சிருக்கீங்க டா. பேசாம தொழிலை மாத்திட்டு டைரக்ஷன்ல இருந்து நடிக்கப் போயிருங்கடா”

“உங்க கருத்துக்களை கண்டிப்பா கண்சிடர் பண்றேன் சார். இதைச் சொல்லத் தான் கூப்பிட்டிங்கன்னா.. இப்போ நான் ஃபீரியா இல்ல. நாளைக்குப் பேசலாம். குட்நைட் சார்”

“செருப்புப் பிஞ்சுடும் நாயே..”

“சாரி சார்”

“சூட்டிங் எப்படி டா போயிட்டிருக்கு?, சித்தார்த்,மீரா ஜோடி தேறுமா?”

“ஹ்ம்ம் ஜோடி சூப்பர் சார். ஸ்க்ரீன்ல பார்க்க ரொம்ப ஃப்ரஷ்ஷா இருக்காங்க. உங்களையும்,உங்க வைஃப்-ஐயும் விட அழகுன்னா பார்த்துங்களேன்”

“டேய்.. டேய்… நாங்க இரண்டு பேரும் லவ் பண்ண காலத்துல எடுத்த ஃபோட்டோஸைக் காட்டட்டுமா? உங்க காஸ்ட்டிங் எல்லாம் தோத்துப் போயிடும். நானும்,அம்புஜமும் அம்புட்டு அழகா இருந்தோம்.”

“சார்.. எனக்கு லைட்டா வாமிட் வர்ற மாதிரி இருக்கு. அப்புறம் பேசட்டுமா?”

“சரி, அதெல்லாம் இருக்கட்டும். சூப்பர் சிங்கர் ஃபைனல் ஸ்டேஜ் ப்ரிபரேஷன் எப்படி போயிட்டிருக்கு?, நாளைக்கு நான் ரிபோர்ட் பண்ணனும். எனக்கு டீடெயில்ஸ் கொடு”- என்றவர் அடுத்த பதினைந்து நிமிடம் அவனை வறுத்தெடுத்து விட்டு ஃபோனைக் கட் செய்தார்.

“ஷ்ஷ்ஷ் அப்பா… இந்தாளோட வேலை செய்றதுக்கு கசாப்பு கடைல கறி வெட்டலாம் போலயே!,” என்று புலம்பியவன் தன் பின்னே யாரோ சத்தமின்றி நடந்து வருவதை உணர்ந்து உதட்டை மடக்கி லேசாகச் சிரித்தான்.

“நடுராத்திரில ஏன்டி பேய் மாதிரி உலாத்திட்டு இருக்க?”-அர்ஜூன்

“ஷ்ஷ்ஷ், கண்டுபிடிச்சிட்டியா?, சத்தமில்லாம வந்து உன்னை சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு பார்த்தேன். ச்ச” என்று ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கினாள் அனு.

“நீ வர்றதுக்கு முன்னாடியே உன் கல்வின் க்ளேன் பர்ஃப்யூம் ஸ்மெல் வந்துடுச்சு. நைட் டிரஸ்ல கூட செண்ட் போடுவீங்களாடி?”

“ஆமா. பின்ன? வாசனையா இருக்க வேண்டாமா?”

“ஓஹோ, நான்லாம் இந்த டீஷர்ட்டைத் துவைச்சு 3 வாரம் இருக்கும்னு நினைக்கிறேன். ஸ்மெல் பண்ணிப் பாரேன். மயங்கிடுவ” என்றபடி அவள் தலையைப் பற்றித் தன் மார்பில் அழுத்தினான்.

“உவ்வேவேவே… ச்சை.. மானங்கெட்டவனே விட்றா என்னை”

“ஏன்டி திட்டுற?, நீ தான் பொறுப்பா இதையெல்லாம் கவனிச்சு மாமா டிரெஸ்ஸெல்லாம் துவைச்சு சுத்தமா வைக்கனும்”

“ஏன் டா இவ்ளோ சம்பாதிக்கிறீங்களே?, ஒரு வேலைக்காரி வைச்சுக்க மாட்டீங்களா?”

“ச்சீ, மாமா உன்னைத் தவிர யாரையும் வைச்சுப்பேனா?” – என அவள் இடையைப் பற்றி அருகிலிழுத்தான்.

“டேய்…..”

“அதுக்கெல்லாம் நேரமில்ல. ஏய்.. உனக்கு என்னடி வேணும் இப்போ?, நடுராத்திரி எதுக்கு பேச்சுலர்ஸ் வீட்டுக்குலாம் வர்ற?”

“என்னடா ரொம்பக் கத்துற?, நான் போறேன் போ..” –என்றவளை அவசரமாகப் பற்றி பால்கனியில் சாய்த்தவன் “கோச்சுக்காதடா செல்லக்குட்டி” என்றான்.

சுருக்கிய புருவங்களுடன் எங்கோ பார்த்தவளின் முகத்தைத் திருப்பிக் காதோரக் கூந்தலை ஒதுக்கியபடி “தூக்கம் வர்லையா?” என்று வினவினான்.

ஆம் என்பது போல் தலையாட்டியவள் “தனியா படுக்க ஒரு மாதிரியிருந்தது. அதனால வந்தேன்” என்றாள்.

“நீ ஏன் பேசாம, இங்கேயே ஷிஃப்ட் ஆயிடக் கூடாது?”

“என்னை என்ன உன் லவர்ஸ் லிஸ்ட் ரேகா,சங்கீதா மாதிரி நினைச்சிட்டியா?”

“ச்ச,ச்ச அப்டிலாம் இல்ல. அவங்கலாம் ஒரு தடவை கூட இங்க வந்ததேயில்ல”

ஒன்றும் பேசாமல் முறைத்தவளிடம் “அப்டி சொல்ல முடியாது. நிறைய தடவை வர வைக்க ட்ரை பண்ணிருக்கேன். பட், நடக்கல. எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா?, நீ தான் கூப்பிடாமலே வர்ற குட் கேர்ள்” என்றான்.

“பொறுக்கி.. நான் ஒன்னும் உன்னைப் பார்க்க வரல டா. ரிஷியைப் பார்க்க வந்தேன்” என்றவள் “ரிஷி…….” எனக் கத்த வேகமாய் அவள் வாயை மூடியவன் “ஏய், கத்தாதடி. அவனே நாள் பூரா ஸ்ட்ரெஸ்ல இருந்து இப்போ தான் தூங்குறான்” என்றான்.

“என்னாச்சுடா?, அந்தப் பொண்ணு திவ்யா டீம்-Dல ஜாயின் பண்ணிருக்காமே? நிஜமாவாடா?”

“நீ ஏன் டி அடுத்தவன் கதையைக் கேக்குறதுல இவ்ளோ ஆர்வமா இருக்க?”

“அடுத்தவனா?, டேய்.. அவன் என் ப்ரண்ட் டா”

“அப்போ நான்?”

“நீ…. நீ……”

“நான்?, சொல்லு. சொல்லு.”

“நீ எனக்கு நத்திங் டா”

“ஏன் டி ஒத்துக்க மாட்டேங்குற?”

“எதை”

“என்னைப் பிடிச்சிருக்கிறத”

பதில் பேசாமல் எங்கோ பார்த்தவளின் கன்னத்தில் முகத்தைப் பதித்து சிரித்தபடி கண் மூடினான்.

“அனு…….”

“ம்ம்?”

“போன தடவை ஆரம்பிச்ச கிஸ்ஸை இப்போ முடிச்சு வைக்கலாமா?”

“வா..வாட்?”

“பால்கனி, இருட்டு, சில்லுன்னு காத்து. சிச்சுவேஷன் கரெக்டா இருக்குடி. சென்னைல ஜில்லுன்னு காத்தடிக்கிறதே பெரிய விசயம். இதை வேஸ்ட் பண்ணக் கூடாது”

“அதனால?”

“அதனால… நம்ம ஃபர்ஸ்ட் கிஸ்ஸை இப்போ…. இந்த இடத்துல வைச்சுக்கலாம். என்ன சொல்ற?”

“டேய்.. எதை,எதையெல்லாம் ப்ளான் பண்ணிப் பண்ணுவடா?, பொறுக்கி”

“ப்ச், ஸ்டே ஸ்டில்” என்றவன் அவளது இரு கன்னங்களையும் பற்றினான்.

“டேய்… மரியாதையா தள்ளிப் போடா. என்னைப் பார்க்கும் போதெல்லாம் எப்பவுமே இப்டி டர்ட்டியா தான் யோசிப்பியா?”

“ஆமாம் பின்ன?, இந்த மாதிரி ஃபீலிங்க்ஸ் எல்லாம் போற,வர்ற பொண்ணுங்ககிட்டயெல்லாமா தோணும்?”

“ஏன் சௌந்தர்யா என்ன ஆனா?”

“அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்காம்டி. என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா. ஷ்ஷ், பேசாத.”

“ஏன் டா?”

“மூட் ஸ்பாயில் ஆகுதுடி”

“இப்போ நீ தள்ளிப் போகாட்டி வெளக்கமாத்தால அடிப்பேன் டா”

“நிஜமாவே கிஸ் பண்ணப் போறேன்டி”

“…………………………………………………………”

“ரெடி… ஸ்டார்ட்….. 1……… 2………. 3……..” என்றவன் அவள் இதழ்களை நோக்கிக் குனிந்த நேரம் அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவன் உதடுகள் நேராக அவள் கன்னத்தில் பதிந்து விட்டது.

கண்களை அகலத் திறந்து அவள் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நிமிடம் அடித்துப் பிடித்து விலகினான் அர்ஜூன். “சா.. சாரிடி.. சாரிடி.. சாரிடி” என்று பதட்டத்தில் கை,கால்களை உதறி துள்ளிக் குதித்தவனைப் பொருட்படுத்தாமல் அபார்ட்மென்ட்டே அதிருமளவுக்கு “ஆஆஆஆஆஆஆஆஆஆ” எனக் கத்தினாள் அவள்.

“கத்தாத, கத்தாத… கத்தாதாடி ப்ளீஸ்……” என்றவன் அவள் வாயைக் கையால் பொத்தியும். “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என சைகையால் அவனைத் தொடர்ந்து திட்டியவள் முழு பலத்துடன் உதறித் தள்ள.. பால்கனிக் கதவில் தலையை இடித்து “ஆஆஆஆஆ”-வென வலியால் துடித்தான் அர்ஜூன்.

“எ….என்னடா பண்ண இப்போ?”

“ஏ..ஏ.ஏய்…. ச..சத்தியமா.. இண்டென்ஷனோட பண்ணலடி. தெ..தெரியாம நடந்துடுச்சு”

“நான்.. நான் மட்டும் கன்னத்தைத் திருப்பாட்டி என்ன நடந்துருக்கும்??”

“அதான் மிஸ் ஆயிடுச்சுல்ல?, விடேன்டி”

“என்னடா சொன்ன?”

“கத்தாதடி. எனக்கே ஷாக்கிங்கா தான் இருக்கு.”

“இடியட்.. இடியட்….”

“உண்மையை சொல்லுடி. இது உன் ஃபர்ஸ்ட் கிஸ் தான?”

“ம்க்கும், ம்க்கும்.. அம்ம்மாஆஆஆஆஆஆ” எனக் கை,கால்களை உதறி அழுதவள் கன்னத்தைப் பற்றிக் கொண்டு “ஏன் டா இப்படிப் பண்ண?” என்று மீண்டும் திட்டினாள்.

“சா.. சாரிடி….. நிஜமா சாரி…”

“இன்னொரு தடவ என் பக்கத்துல வந்த, மவனே.. ரேப் அட்டெம்ட்ன்னு உன்னை உள்ள தள்ளிடுவேன். மம்மி…… என் கன்னம்…..” என்று புலம்பியபடியே உள்ளே சென்றாள்.

உயர்த்திய புருவங்களுடன் உதட்டைக் கடித்துக் கொண்டு அவளையே நோக்கியவன் அவள் நகர்ந்ததும் இரு கைகளால் வாயை மூடித் தோள் குலுங்க அடக்க மாட்டாமல் சிரித்தான்.

றுநாள் காலை விரைவிலேயே எழுந்து விட்ட ரிஷி வாக்கிங் செல்வதற்காக வெளியே வந்த போது தன் வீட்டுக் கதவைப் பூட்டியபடி வாசலில் நின்று கொண்டிருந்தாள் அனு.

“குட்மார்னிங்”-ரிஷி

“மார்னிங்டா. என்ன அதுக்குள்ள எழுந்துட்ட?, ஈவ்னிங் தான் ஷூட்ன்னு சொன்னான் அர்ஜூன்”

“வாக்கிங் போறேன். சென்னை ஜில்லுன்னு இருக்கிறது பெரிய விசயமில்லையா?”

“அதுசரி, அவன எங்க காணோம்?”

“தூங்கிட்டிருக்கான். ஆமா, நடுராத்திரி ஏன் இரண்டு பேரும் கத்திட்டே இருந்தீங்க?, உங்களால அபார்மெண்ட் அசோசியேஷன்ல எனக்கு எவ்ளோ கெட்ட பேரு தெரியுமா?, அடங்கவே மாட்டீங்களா?”

“டேய் ரிஷி….”

“என்ன?”

“ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?”

“மாட்டேன். சொல்லு”

“உ….உன்னோட ஃபர்ஸ்ட் கிஸ் எப்போடா?”

“ஏய்… என்ன நடந்தது நேத்து நைட்?”

“ப்ச், நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுடா”

“ஹ்ம்ம்ம்ம், ட்வெல்த் படிக்கிறப்போ”

“யா….யாரோட?? தி..திவ்யா?”

“ஹ்ம்ம்ம்ம்ம்”

“எ…எப்படி இருந்தது?, அந்த ஆஃப்டர் கிஸ் ஃபீலிங்?”

லேசாய்ப் புன்னகைத்தவன் “ஹ்ம்ம்ம்…. சிவந்து போன முகத்தோட.. என்னை நிமிர்ந்து பார்க்க முடியாம.. கண்ணை மூடி என் முத்தத்தில தன்னைத் தொலைச்சு அழகே உருவா என் முன்னாடி நின்னவளைப் பார்க்கும் போது… எனக்கு என்ன தோணுச்சு?”

“………………………………”-நடந்து கொண்டிருந்த அனு, அவனது வர்ணனையில் விழி விரித்து நின்று அவனை நோக்கினாள்.

“அந்த முத்தம் இன்னும் நிறைய,நிறைய வேணும்னு தோணுச்சு”

“ச்சிசிசிசிசிசி”

“என்ன ச்சி?, முத்தம் ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்குமான உணர்வுகளை அதிகமாத் தூண்டி விட்ற விசயமில்லையா?.”

“கவிதை வாசிக்கிற மாதிரி இருக்குடா நீ சொல்றதைக் கேக்கும் போது”

“ஆக, என் நண்பனோட ஃபர்ஸ்ட் கிஸ்ஸா இது?”

“யாருக்குத் தெரியும்?, அவனோட லவர்ஸ் லிஸ்ட் சீனப் பெருஞ்சுவர் மாதிரி”

“ஆனா அவன் சின்சியரா இருக்கிறது உன் கிட்ட மட்டும் தான்ற விசயம் நம்ம லைட் மேன் மாரியண்ணனுக்குக் கூடப் புரியும்”

“எதையும் வெளிப்படையா எக்ஸ்ப்ரஸ் பண்ணாம, சின்சியரா மட்டும் இருக்கிறதுல ஒரு ப்ரயோஜனமும் இல்ல”

“எக்ஸ்ப்ரஸ் பண்ணினவனை நீ தான ரிஜெக்ட் பண்ண?”

“ஒரு தடவை ரிஜெக்ட் ஆனா, மறுபடி அப்ரோச் பண்ணக்கூடாதா என்ன?”

“இப்போ நீ என்ன சொல்ல வர்ற?”

“நானும், அஜய்யும் சின்சியரா டேட் பண்ணிட்டிருக்கோம்ன்னு சொல்றேன்”

“உங்க லாஜிக் என்னன்னு எனக்கு சுத்தமா புரியல மிஸ்.அனுப்ரியா” – என்றவனிடம் “கேப் வந்துடுச்சு. நான் கிளம்புறேன், பாய்” எனக் கூறிச் சென்று விட்டாள்.

வள் சென்றதும் தன் ஜாகிங்கைத் தொடர்ந்தவனுக்கு அவள் வினவிய முதல் முத்தத்தின் நிகழ்வு நினைவிற்கு வந்தது.