அத்தியாயம் - 8
சட்டென நனைந்தது நெஞ்சம்…
சர்க்கரை ஆனது கண்ணீர்..
-இந்தப் பாட்டு எனக்கு என் ஃப்ரெண்ட் உஷாந்தினால அறிமுகமாச்சு! அவளோட கதை ஒன்னுல மென்ஷன் பண்ணியிருப்பா! அவ சொன்னதுக்கப்புறம் கேட்க ஆரம்பிச்சு.. அதோட வரிகள்லயும்,வாய்ஸ்லயும் இம்ப்ரெஸ் ஆகி நம்மோட ப்ளே லிஸ்ட்ல ஆட் ஆயிடுச்சு! ஒவ்வொருத்தரோட ரசனை… அவங்களோட மெச்யூரிட்டி லெவலையும் காட்டிக் கொடுத்துடுது! இல்ல? அவளோட விசிறிகளுக்கு மட்டும் தான் இந்த ஸ்டேட்மெண்ட் புரியும்!!
“ஆறு மாத கோர்ஸை 2 குவார்ட்டரா பிரிச்சு, ஒவ்வொரு குவார்ட்டர்லேயும் ஒவ்வொன்னு சொல்லித் தருவாங்க. முழுக்க முழுக்க ப்ராக்டிகல் க்ளாஸஸ் மட்டும் தான்! ஒவ்வொரு குவார்ட்டர் முடிவுலேயும் பரீட்சை இருக்கும். மெனு ப்ளானிங்,பட்ஜெட்டிங், மெய்ண்டனென்ஸ்லேயிருந்து ஸ்டார்ட் பண்ணி….. நயனா… நயனா, நான் உன் கிட்ட தான் பேசிட்டிருக்கேன். கவனிக்கிறியா இல்லையா?”
தான் மேற்படிப்பைத் தொடர்வதற்குத் தந்தை ஒப்புக் கொண்டதை இன்னமும் கூட நம்பாத நயனா.. அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் விரிந்த கண்களை மேலும் விரித்தபடி ஆச்சரிய பாவனையிலேயே அமர்ந்திருந்தாள்.
“நயனா….”
“கேட்குறேன். மேல சொல்லுங்கோ”
“ம்ம், எடுத்ததும் க்ளாசிக் பேக்கிங் பத்தி நடத்துவாங்க. மாவு வகைகள்,ஈஸ்ட், தண்ணீர் அளவு, அப்புறம் பேசிக் வைட் ப்ரெட்,ஹோல் வீட் ப்ரெட்,மல்ட்டி க்ரைன் ப்ரூமர் இதைப் பத்தின பாடம் இருக்கும்”
“………….”
“அதுக்கப்புறம் சிம்பிள் க்ளாசிகல் டெசெர்ட்ஸ்,ஸ்நாக்ஸ் பற்றின வகுப்புகள்! அப்புறம் டார்ட்ஸ்,ஃப்ரென்ச் பேஸ்ட்ரீஸ்,குக்கீஸ்ல இருந்து தொடங்கி க்ரீம்ஸ்,கஸ்டர்ட்ஸ்,சாஸஸ், கேக்ஸ், ஐசிங்ஸ், ஃப்ரோசன் டெசர்ட்ஸ்,வெட்டிங் கேக்ஸ்ன்னு எல்லாம் சொல்லித் தருவாங்க. பேசிக் சாக்லேட் டிஸ்ப்ளே, ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைல் ப்ளேடட் டெசர்ட்ஸ் கூட கவர் ஆயிடும்! ஸ்டடி ட்ரிப்ஸ், ஹோட்டல் விசிட்ஸ்ன்னு பெரிய,பெரிய ஸ்டார் ஹோட்டல்ஸ்க்கு அழைச்சிட்டுப் போய் அங்க இருக்கிற பிசினெஸ்,ட்ரெண்ட்ஸ் எல்லாம் கத்துத் தருவாங்க. கடைசியா இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் இருக்கும் 2 மந்த்ஸ்க்கு. இந்த எக்ஸ்டர்னல் ட்ரைனிங் தான் உனக்கு நல்ல எக்ஸ்போஷரைக் கொடுக்கும்”
“ஹ்ம்ம்ம்ம்”
“என்ன நீ?, நான் எவ்ளோ பேசிட்டிருக்கேன்?, ம்ம்ம்-ன்ற?, உனக்கு எந்தக் கேள்வியும் இல்லையா?”
“ஹய்யோ சேத்ரன்! முதல்ல இதெல்லாம் உண்மையா,இல்லையான்னே என்னால நம்ப முடியல. நீங்க என்னடான்னா அடுத்த ஸ்டேஜ்க்கு போயிட்டீங்க? என்.. என் அப்பாவா ஒத்துண்டுட்டார்??, எ..எப்படி சேத்ரன்?, பொண்ணுங்க வெளியே போய் படிச்சிட்டு வர்றதெல்லாம் எங்கப்பானால பொறுத்துக்கவே முடியாத விஷயம். அவரே என் கிட்ட வந்து இந்த ஃபார்மைக் கொடுத்து.. நாளைக்கு அகாடமிக்கு போறோம்,ஃபில் பண்ணி வை-ன்னு சொன்னப்போ.. கிருஷ்ணா….. இதெல்லாம் கனவு தானே?” – நறுக்கெனத் தன் கையைக் கிள்ளிக் கொண்டவளைக் கண்டு ‘ஹாஹாஹா’-வென சிரித்தவன் கையிலிருந்த நோட்-புக்கால் அவள் தலையிலடித்து “கனவு இல்ல மண்டு” என்றான்.
அவனுக்குமே பேராச்சரியம் தான்! ஏதோ போகிற போக்கில் ‘படிக்க வைச்சாத் தான் நயனாவுக்குக் கல்யாணம் நடக்கும்’ என்று அவன் கூறிய வசனத்தை பெரிதாக எடுத்துக் கொண்டு சேஷன் இத்தனை தூரம் இறங்கி விடுவாரென்று அவன் கனவிலும் எண்ணவில்லை.
“நீங்க தான் அவரை ஏதோ மாயம் பண்ணியிருக்கீங்க!, எனக்கும் அந்த மந்திரத்தைச் சொல்லித் தாங்க சேத்ரன்”- என்று பரபரத்தவளிடம் நடந்ததைக் கூறினான்.
“ஓஓஓஓஓஓ…”-என்றவளுக்கு சுருதி இறங்கி விட “கடைசில என் கல்யாணத்துக்காகத் தான் இவ்ளோ மாற்றமுமா?,” என்றாள்.
“ப்ச், உடனே டல்லாகாத நயனா. நேத்து வரைக்கும் உனக்குத் தெரியுமா உங்கப்பன் மாறுவான்னு?, நீ கும்பிடுற கிருஷ்ணன் உங்கப்பனை விட கால்குலேட்டிவ்வான ஆளு! காரணமில்லாம உனக்கு இந்த சான்ஸ் கிடைச்சிருக்காது. நான் அடிக்கடி சொல்ற மாதிரி.. உனக்கு இந்த இண்டஸ்ட்ரில பெரிய ஃப்யூச்சர் இருக்கு. யாருக்குத் தெரியும், பிற்காலத்துல நான் கூட உன் கிட்ட கைக்கட்டி சம்பளம் வாங்குற ஆளா மாறலாம்!”
“ஹாஹாஹா.. என்னை வெட்கப்பட வைக்காதீங்கோ. நிஜமாவே இதெல்லாம் நடக்குமா சேத்ரன்?, எனக்கே எனக்குன்னு நானும் ஒரு பேக்கரி ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பிக்க முடியுமா?”
“நிச்சயம் நடக்கும்!, என்னைக்காவது, எப்படியாவது என் ஆசைகளெல்லாம் நிறைவேறும்ன்ற எண்ணத்துல தான் நான் என் மாமா இழுப்புக்கெல்லாம் சம்மதிச்சிட்டிருக்கேன்! நம்பிக்கை தானே வாழ்க்கை!”
“ஹ்ம்ம்ம்.. எது எப்படியோ.. என்னால இந்த நாளை மறக்கவே முடியாது சேத்ரன்!! உ..உங்களுக்கு ரொம்ப,ரொம்ப நன்றி!!!!” – தன்னையறியாமல் அவனது கையைப் பற்றிக் குலுக்கி அவள் பூரித்த போது சேத்ரனுக்கு எதையோ சாதித்து விட்ட உணர்வு!
-நயனா எதையும் பெரிதாக வெளிப்படுத்தும் குணாதிசயம் கொண்டவள் அல்ல. சத்தம் போட்டு வாய் விட்டுச் சிரிக்கும் பழக்கமெல்லாம் அவளுக்குக் கிடையவே கிடையாது! கோபத்திலும்,அழுகையிலும் கூட ஒரு அடக்கமிருக்கும்! இன்று மித மிஞ்சிய மகிழ்ச்சி தான்! சந்தோசத்தில் திக்கு,முக்காடிப் போனவளது முகம் மலர்ந்த விதமே அவளது மனதைச் சொன்னது! ஆனால்.. அருகே நின்றால் கூட.. தன்னிச்சையாய் இரண்டு அடி நகர்ந்து விடுபவள், இன்று தானே அவனது கையைப் பற்றியது சேத்ரனுக்கு பெரிய ஆச்சரியம்! கூடவே ஒரு வித குதூகலம்! வெகு நாளைக்குப் பிறகு திருப்திகரமான மனநிலையில் இருந்தவன் அவளிடம் வம்பு செய்யத் தொடங்கினான்.
“நயனா.. க்ளாஸஸ் ஜாயின் பண்ணின பிறகாவது இந்தப் புட்டியை மாத்தி லென்ஸ் வைச்சுக்கோயேன்!”
“ஏன், எங்கப்பா இதுக்கும் முழுக்கு போடுறதுக்கா?, அடுத்த ஆறு மாசத்துக்கு என் விஷயத்துல அவருக்குக் கோபமே வரக் கூடாது. அந்த அளவுக்கு இருக்கிற இடம் தெரியாத மாதிரி ரொம்ப அமைதியா நடந்துக்கனும்னு முடிவு பண்ணியிருக்கேன். நீங்க அதுக்கு விபூதி அடிச்சுடாதீங்கோ!”
“ஹாஹாஹா… அதுவும் சரி தான்! வா ஃபார்மை ஃபில் அப் பண்ணுவோம்” – என்றவன் அடுத்த அரைமணி நேரத்தை விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் கழித்தான்.
பிறகு நயனா கிளம்பும் சமயம் வந்ததும் அருகே வந்தவன் “இனி இந்த ஹோட்டல் பக்கம் வர வேண்டிய வேலை இருக்காது உனக்கு.” என்றான்.
“ஹ்ம்ம்,ஆமாம்! அவங்க சொல்லித் தர்றதுல்ல ஏதாவது சந்தேகம்ன்னா கூட உங்களைக் கேட்க முடியாது”
“ஏன், உன் கிட்ட செல்ஃபோன் இல்லையா?”
“எங்கப்பா எனக்கு செல்ஃபோனெல்லாம் வாங்கித் தருவார்ன்னு நினைச்சீங்களோ?”
“வீட்ல இண்டர்நெட் இருக்கு தானே?, மெயில்,சாட்ன்னு எல்லாத்துலேயும் நான் ஆல் டைம் அவைலபிளா தான் இருப்பேன். நீ என்னைத் தாராளமா காண்டாக்ட் பண்ணலாம்”
“அட ஆமால்ல?, நல்லதாப் போச்சு! இனி உங்களோட பேசக் கூட முடியாதோன்னு நினைச்சிட்டிருந்தேன்”
“ம்ம்ம்ம்”
“எப்போப் பார்த்தாலும் என்னை இர்ரிடேட் பண்ணுவீங்க தான்னாலும் இந்த ஒரு மாசத்துல எனக்கு நிறைய கத்துக் கொடுத்தீங்க. அதுக்கு ரொம்ப நன்றி! எல்லாத்தையும் விட நான் படிக்கிறதுக்கு எங்கப்பாவை நீங்க கன்வின்ஸ் பண்ணினது ரொம்ப ரொம்பப் பெரிய விசயம்! வரலாற்றுல பொறிக்கப் பட வேண்டிய சம்பவம்!, எப்படி சாத்தியமாச்சுன்னு இன்னமும் கூட நம்ப முடியல! இந்த ஒரு இண்சிடெண்ட் உங்களை என் லைஃப் டைம் முழுக்க நினைக்க வைக்கும் சேத்ரன்! என் அழுகையும்,புலம்பலும் அந்தக் கிருஷ்ண பகவானுக்குக் கேட்டு,அவர் தான் உங்க அவதாரமா என் கண் முன்னாடி நிற்கிறார் போல!”
“ஏய்ய்ய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்! விட்டா சங்கு,சக்கரம் எங்கன்னு கேட்ப போல! சும்மா உங்கப்பனைப் போட்டுப் பார்த்தேன், அந்த சொட்டைக் கிழவனும் சம்மதிச்சுட்டான்! அதுக்காக.. என்னை பரமாத்மாவா உருவகப்படுத்துறதெல்லாம் டூமச்!, இது தான் உனக்கு நடக்கனும்னு விதி இருந்திருக்கு. அது என் மூலமா நடந்திருக்கு. அவ்ளோ தான்!”
“என்ன இருந்தாலும்ம்ம்ம்ம்…..”
“ஷ்ஷ், மொக்கை போடாத நயனா. போதும்! உன் நன்றி நவில்தல் நிகழ்ச்சியை இத்தோட முடிச்சுட்டுக் கிளம்பு. நான் வேலையைப் பார்க்கனும்” -துரத்தாத குறையாக அவளை அனுப்பியவனைத் திரும்பி,திரும்பிப் பார்த்தபடி மகிழ்ச்சியுடனே விடை பெற்றாள் நயனா.
அதன் பிறகு அடுத்த நான்கு மாதங்களில் ஒரு முறை கூட அவனைத் தொடர்பு கொள்ளாத நயனா.. திடீரென ஒரு நாள் ஹோட்டலுக்கு வருகை தந்தாள். நேராகத் தன்னைக் காண வந்தவளின் முகத்திலிருந்த பரபரப்பை உணர்ந்து கொண்ட சேத்ரன் (ஆம்! புட்டி மறைத்த அந்த முகம் காட்டும் பாவத்தைப் புரிந்து கொள்ளும் வித்தையை அவன் ஓரளவு கற்றிருந்தான்) புருவத்தை சுருக்கினான்.
“உங்களோட கொஞ்சம் பேசனும் சேத்ரன்”
“ஏன்?, என்னாச்சு?”
கைகளைப் பிசைந்த படி சுற்றியிருந்தவர்களை நோக்கினாள் அவள்.
“ஓ!, பாடத்துல டவுட்டா?, உங்கப்பன் தான் என் கிட்ட அனுப்பினானா?, நோட்டைக் கொடு” என்றபடி அவள் கையிலிருந்த டைரியைப் பிடுங்கியவன் “வா வா” என்று அறை மூலைக்கு அழைத்துச் சென்றான்.
தனியே ஒதுங்கியதும் “என்னாச்சு?, உங்கப்பன் முசுட்டுக் கிழவன் மறுபடி பிரச்சனை பண்ணுறானா?” என்று விசாரித்தான்.
“இல்ல,இல்ல. அப்பானால எந்தப் பிரச்சனையும் இல்ல”
“பின்ன?”
“வ..வந்து.. இது கா..காலேஜ்ல ஒரு பிரச்சனை”
“காலேஜ்ல பிரச்சனையா?, நீ எந்த வம்பு,தும்புக்கும் போகாத ஆளாச்சே”
“அ.. அது வந்து சேத்ரன்.. என் கூட படிக்கிற ஒருத்தன், என்னைக் காதலிக்கிறதா சொல்லி வம்பு செய்யுறான். என் சூழ்நிலையை எடுத்துச் சொல்லி எனக்கு இதுல எல்லாம் நாட்டம் இல்லன்னு சொல்லிட்டேன். ஆனாலும் தொல்லை பண்ணுறான்”
என்னவோ ஏதோ என்று பதறிய சேத்ரனுக்கு விசயத்தைக் கேள்விப் பட்டதும் சிரிப்பு பீறிக் கொண்டு வந்தது.
“உ..உன்னையா காதலிக்கிறேன்னு சொன்னான்? ஹாஹாஹாஹா”
“ஏன் சிரிக்கிறீங்க?”
“இல்ல, உன்னையே காதலிக்கிறேன்னு சொல்லிருக்கான்னா அவன் எவ்ளோ அட்டு பீசா இருப்பான்?”
“நக்கலா?, வெறும் புற அழகைப் பார்த்து மட்டும் எல்லாருக்கும் காதல் வர்றதில்ல. தெரியும் தான?”
“அடேங்கப்பா! அவனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ணுற?, நோக்கும் அவனைப் பிடிச்சிருக்கோ?”
“ச்சி,ச்சி என்னப் பேச்சு இது?”
“லவ் பண்றது தப்பில்ல நயனா. உங்கப்பனுக்குப் பயப்படுறியா?”
“அய்யோ ஆண்டவா! அந்தப் பையன் என்னைத் தினம் தொல்லை பண்றான். எங்கப்பாக்கு தெரிஞ்சா படிப்பைத் தொடர விட மாட்டார். அதான் நீங்க ஏதாவது உதவி செய்வீங்கன்னு நம்பி உங்களைப் பார்க்க வந்தேன். நீங்க என்னடான்னா.. கேலி பேசிண்டு இருக்கீங்க?”
“சாரி,சாரி! இதுல நான் செய்யுறதுக்கு என்ன இருக்கு?,– என்றவனைக் கீழிருந்து மேல் வரை நோக்கியவளிடம் “என்ன அப்படிப் பார்க்குற?” என்றான் அவன்.
சற்றுத் தயங்கியவள் பின் “இல்ல, ஹைட்டும்,வெயிட்டுமா.. தாடி,மீசையெல்லாம் வைச்சுண்டு நீங்க பார்க்கக் கொஞ்சம் ரௌடி மாதிரி இருக்கேளா, அ…அதான்.. உ..உங்களைப் பார்த்தா அந்தப் பையன் பயந்துடுவான்ன்ன்ன்ன்ன்னு….”
“என்னைப் பத்தி எவ்ளோ நல்ல அபிப்ராயம் வைச்சிருக்க நீ?”
“உங்க அம்ஜத்கான் ஆர்ம்ஸைக் காட்டி எனக்காகக் கொஞ்சம் உதவி செய்யப்படாதா?” – கெஞ்சலாய்க் கேட்டவளிடம் “அடிப்பாவி! நக்கலைப் பாரேன்” என்றெண்ணியவன் கைகளைக் கட்டிக் கொண்டு “வர்ரேன். ஆனா ஒரு கண்டிஷன்” என்றான்.
“என்ன?”
“இனிமே என்னை நீ அத்தான்னு தான் கூப்பிடனும்”
“வா…வாட்? ச்சிசிசிசிசிசி”
“என்ன ச்சி?, உன்னை விட 8 வயசு மூத்தவன் நான். ஆனா கொஞ்சம் கூட பயமில்லாம நீ என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுற?, ‘என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கா’-ன்னு அன்னைக்குக் கேட்டியே! நீ இரண்டு சுண்டி போட்டுண்டு அரைக் கால் பாவாடையோட திரிஞ்சது கூட எனக்கு நன்னா நினைவிருக்கு. என் அம்மா ‘அத்தான் கூட விளையாடுடி’-ன்னு உன்னை என் கையில கொடுத்ததும் நினைவிருக்கு. சோ.. என் அம்மா சொன்ன மாதிரி நீ என்னை அத்தான்னு கூப்பிடு. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்”
“ரொம்ப சீஸியா இருக்கு சேத்ரன். ச்ச, எனக்கு அதெல்லாம் வராது”
“அப்போ என்னால ஹெல்ப் பண்ண முடியாது. நான் கிளம்புறேன். எனக்கு வேலையிருக்கு.” – என்று நகர்ந்தவனைக் கை நீட்டித் தடுத்தவள் ரொம்ம்ம்ம்பவும் தயக்கத்துடன் “எனக்கு உதவி பண்ணுங்க அத்…அத்..அத்தான்.. ப்ளீஸ்” என்றாள்.
தயக்கமும்,சங்கடமும் நிறைந்திருந்த அவள் முகத்தைக் காண்பதே சேத்ரனுக்குப் பெரிய வேடிக்கையாக இருந்தது. அவள் தலையைப் பிடித்து ஆட்டியவன் “நாளைக்கு எத்தனை மணிக்குக் கிளம்புவ?, அந்தப் பையன் எங்க இருப்பான்” எனக் கேட்டு விசாரித்து வைத்துக் கொண்டான்.
மறுநாள் மாலை அகாடமி வாசலில் ட்ராக் சூட்-டீஷர்ட் சகிதம் பைக்கில் காத்திருந்தவனைக் கண்டு முகம் மலர்ந்தது நயனாவிற்கு. அருகே வந்தவளிடம் “எந்தப் பையன்?” என்று விசாரித்தான்.
“எதிர்ல நிற்கிற கேங்-ல இருக்கான்”
“என்ன கலர் சட்டை? பெயர் என்ன?”
“நீலக் கலர் சட்டை. பெயர் சேகர்”
“ம்ம்,” என்றபடி வண்டியை விட்டு இறங்கியவனைக் கண்டு “எ..என்ன பண்ணப் போறேள்?, நேரா போய் அடிச்சுடாதீங்கோ. சும்மா.. மிரட்டினா மட்டும் போதும்” என்று பதறினாள் நயனா.
“ஷ்ஷ்” என்றவன் அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு முன்னே நடந்தான். அவர்களருகே சென்றதும் “சேகர்… நீங்க தானே?” என்று நீலச் சட்டையிடம் வினவினான்.
அவனது உயரமும்,நயனாவின் கையைப் பற்றியிருந்த விதமும் ஓரளவு அவனுக்குக் கலக்கமளித்திருக்க வேண்டும். ஆனாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் “ஆமா” என்றான்.
“உங்க கூடக் கொஞ்சம் பேசனும். இப்படி வர்றீங்களா?”
“இல்ல, எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க”
“இல்ல சார், இது கொஞ்சம் பர்சனல். எல்லார் முன்னாடியும் பேச முடியாது.”
தன் நண்பர்களை நோக்கியவன் அவர்கள் பார்வையும் கூடக் கலங்கியிருப்பதைக் கண்டு “வா..வாங்க” என்றபடி சற்று நகர்ந்து சென்றான்.
இப்போதும் கையை விடாமல் பற்றியிருந்தவனைக் கண்டு விதிர்த்துப் போன நயனா.. வியர்த்து வழிந்த நெற்றியுடன் அவனைத் தொடர்ந்தாள்.
“சொல்லுங்க சார்”
“நேத்துலேயிருந்து நயனா ஒரே அழுகை! காலேஜ்க்கு போக மாட்டேன்னு சொல்லி!”
“……………”
“விசாரிச்சப்போ, நீங்க காதலிக்கிறேன்னு சொல்லி அவளை டிஸ்டர்ப் பண்றதா சொன்னா. அதான் உங்களை….” – என்றபடிக் கையைத் தூக்கித் தலையைக் கோதியவனைக் கண்டு பதறிப் போனவன்..
“எ…என்ன சார்?, அடிக்கப் போறீங்களா?, அடிங்க பார்ப்போம்! காலேஜ் வாசலை விட்டுத் தாண்ட முடியாது” என்றான்.
“ச்ச,ச்ச உங்களை அடிக்கிறதால எங்களுக்கு என்ன லாபம்?, வீணா அவளுக்குத் தான் கெட்ட பேர் கிடைக்கும். நான் வந்தது எதுக்குன்னா…..”
“……………”
“ஒரு பொண்ணைக் காதலிக்கிறதுக்கு முன்னாடி, அவளுக்கு ஏற்கனவே ஆள் இருக்கா,இல்லையான்னு நீங்க விசாரிக்க வேண்டாமா சார்?”
“எ..என்ன சொல்றீங்க?”
“நயனாவுக்கும் எனக்கும் இன்னும் 6 மாசத்துல கல்யாணம். சிம்பிளா சொல்லனும்னா, நான் அவளைக் கட்டிக்கப் போற பையன்”
“ப்ரபோஸ் பண்ணும் போது இவங்க இதையெல்லாம் சொல்லலையே!”
“இது என்ன தலைப்புச் செய்தியா சார்?, மைக் பிடிச்சு ஊரெல்லாம் சொல்றதுக்கு?”– என்றவன் ஆ-வென அவனையே நோக்கிக் கொண்டிருந்த நயனாவின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு “என்ன மோகினி?, அத்தானைப் பற்றின விசயத்தை நீ சார் கிட்ட முன்னமே சொல்லியிருக்கலாமில்லையா? சார் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம இருந்திருப்பார். என்ன சார்?” எனக் கேட்டான்.
விட்டால் போதும் என்று நினைத்திருந்ததாலோ என்னவோ.. “ஆ..ஆமாமாம்! சா..சாரி சார். எனக்கு இந்த விசயம் தெரியாது! இனி நான் அவங்களை தொந்தரவு பண்ண மாட்டேன். சாரிங்க நயனா!” என்று சட்டென முடித்துக் கொண்டான் அவன்.
“பார்த்தியா?, விசயம் எவ்ளோ சிம்பிளா முடிஞ்சுடுத்து?, இதுக்குப் போய் அழுதியே?” என்றவன் “தேங்க்ஸ் சார்” என்று விட்டு “வா கிளம்பலாம்” எனச் சொல்லி அவள் கையைப் பற்றி வண்டியின் அருகே நடத்திச் சென்றான்..
“வண்டில ஏறு”
“எ..என்ன சொல்றீங்க? நான் எப்படி ஏற முடியும்?”
“காலால தான். நயனா… பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு அவன் கிட்ட பில்ட்-அப் கொடுத்திருக்கேன். நீ மண்ணைக் கவ்வ வைச்சிடாத. என் தோளைப் பிடிச்சு ஏறி உட்கார்”
“எங்கப்பா பார்த்தார்ன்னா நான் தொலைஞ்சேன் சேத்ரன்”
“அதெல்லாம் பார்க்க மாட்டான். நீ மானத்தை வாங்காம ஏறு” – கடுப்புடன் சிடுசிடுத்தவனிடம் மேலும் வாதம் செய்யாமல் ஏறிக் கொண்டாள்.
அவர்கள் பார்வை படாத தூரம் சென்றதும் அவன் வண்டியை நிறுத்த இறங்கிக் கொண்டவள் இன்னமும் கலக்கம் தீராத பார்வையுடன் நிற்கவும் “என்ன்ன்ன்ன்ன நயனா?” என்றான் பொறுமையின்றி.
“இல்ல, இனி எந்தப் பிரச்சனையும் வராது தானே?”
“வராது. இனி யார் ப்ரபோஸ் பண்ணினாலும் என்னைக் கட்டிக்க அத்தான் ஒருத்தன் இருக்கான்னு சொல்லிடு!”
“ஏன் அப்படி சொன்னேள்?”
“பின்ன என்ன சொல்லி இதைச் சமாளிக்கனும்?, சும்ம்மா காலை ஒடிப்பேன்,கையை ஒடிப்பேன், ப்ரின்சிபால்ட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்னு சொல்லி மிரட்டுறதெல்லாம் வேலைக்காகாது. தெரியும் தான?”
“அதுக்காக… அதுக்காக இப்படியா சொல்வீங்க?”
“சரி,வா. இப்போவே போய் நான் சொன்னது பொய்ன்னு அவன் கிட்ட சொல்லிட்டு வந்துடலாம்"
“அய்யோ! வேண்டாம். வேண்டாம்”
“சும்மா எரிச்சலைக் கிளப்பாத நயனா. என் வேலை,வெட்டியெல்லாம் விட்டு நான் உனக்காக வந்ததே பெரிசு! இந்தப் பிரச்சனை இத்தோட முடிஞ்சாச்சு. இதுக்கு முற்றுப் புள்ளி வைச்சிட்டு அடுத்த வேலையைப் பாரு. அவன் வேற ஏதாவது பிரச்சனை பண்ணுனா என் கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கிறேன்” – அவன் கூறிய விதத்தில் முகம் மலர்ந்தவள்.. குறும்பு கூத்தாட..
“எல்லாம் சரி, அவன் கிட்ட பேசிட்டிருக்கும் போதே ஏன் கையைத் தூக்கி தலையைக் கோதுனீங்க?, பாருடா என் ஆர்ம்ஸைன்னு சொல்லாம சொன்னீங்களோ!”
“கண்டுபிடிச்சிட்டியா?, பரவாயில்லையே!, நீ தான என்னை அம்ஜத்கான்னு சொன்ன?” என்றபடி மீண்டும் கையைத் தூக்கித் தலையைக் கோதியவன் “நோக்கும் கூட இதைப் பார்த்தா லைட்டா பயம் வர்றதோ!” என்று வினவ..
“அய்யடாஆஆஆஆ” எனச் சொல்லிக் கலகலவென சிரித்தாள் நயனா.
“எனி வே! உங்களுக்குக் கோடி நன்றிகள்! என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாத்துனதுக்கு!” – கைக் கூப்பி நன்றி சொன்னவளிடம் தலையாட்டியவன் “இங்கேயிருந்து உனக்கு பஸ் கிடைக்கும். ஏறிப் போய்ப்பியா?, இல்ல நானே வண்டில இறக்கி விடட்டுமா?” எனக் கேட்டான்.
“அய்யய்யோ! வேண்டாம் வேண்டாம். நானே போய்ப்பேன்!”
“ஏன் பயப்படுற?, கட்டிக்கப் போற அத்தானோட ஒரு ரைட் வர மாட்டியா?”
“சேத்ரன்ன்ன்ன்ன்” – பல்லைக் கடித்தாள் அவள்.
“ச்ச, பில்லியன்ல உன்னை வைச்சிண்டு உங்கப்பன் மூஞ்சி முன்னாடி ஒரு ஸ்டண்ட் காட்டுனா.. எப்ப்ப்ப்படியிருக்கும்! செம்ம காண்டாயிடுவான்ல?”
“…………..” – உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டவளிடம்….
“என்ன?, இப்படியெல்லாம் பேசாதீங்கோ. நேக்குப் பிடிக்காது. அதானே சொல்லப் போற?” என்று அவன் கூற சிரிப்பை அடக்க முயன்று தோற்றுக் கலகலவென சிரித்தாள் நயனா.
“இதோட மூணாவது தடவை”
“என்னது?”
“நீ இப்படி சிரிச்சுப் பார்க்குறது”
“………………”
“பஸ் வந்துடுச்சு”
“ஓகே! நான் வர்றேன்”
“நயனா…….”
“ம்?”
“க்ளாஸ்ல வைச்சு அடிக்கடிக் கண்ணாடியைக் கழட்டாத.”
“ஏன்?”
“அதனால தான் நிறைய ப்ரபோசல்ஸ் வருது” – கையைக் கட்டிக் கொண்டு வண்டி மீது சாய்ந்து நின்றிருந்தவன் லேசான சிரிப்புடன் இதைக் கூறினான்.
என்ன சொல்கிறான் என்று புரியாமல் ஒரு நிமிடம் விழித்துப் புரிந்த பின்.. எதற்கென்றே தெரியாமல் லேசாய் வெட்கம் கொண்டு.. சூடாய்ச் சிவந்த கன்னங்களை மறைக்கச் சட்டெனத் திரும்பி முன்னே நடந்தாள் நயனா.
