அத்தியாயம் - 9
பெண்ணே…. பெண்ணே…. பூலோகம் எல்லாமே தூங்கிப் போன பின்னே..
புல்லோடு பூ வீசும்.. ஓசை கேட்கும் பெண்ணே!
-நான் ஒரு 90-ஸ் கிட்! ஏ.ஆர்.ஆர் பாடல்களோட வளர்ந்த ஒருத்தி! அறியாத வயசுல வெளியான பாடல் தான்னாலும், வரிகள் புரியத் தொடங்கின பிறகு, மியூசிக்கை ரசிக்கத் தொடங்கின பிறகு, ஹரிஹரன் வாய்ஸ்ல வந்து விழுகிற இந்த வரி.. ஹப்ப்பாஆஆஆ.. டேய்.. லவ் பண்ணுங்கடா எல்லாரும்.. லவ் பண்ணுங்கன்னு கத்த வைச்சிடுது!! ஹாஹா..
ட்ராக் சூட்-ஸ்வெட்டர் தூக்கிக் கட்டியக் கொண்டை சகிதம், ஏதோ ஒரு மந்திரத்தை மூச்சு விடாமல் முணுமுணுத்தபடி இடது கையால் மணியை ஆட்டிக் கொண்டு வலது கையிலிருந்த ஆரத்தித் தட்டை முன்னேயிருந்த கிருஷ்ணர் படத்திற்குக் காட்டிப் பூஜை செய்து கொண்டிருந்தாள் நயனமோகினி.
“இவளா டா அந்த லேடி ஜாக்கிசான்?” - காண்டீபன்
“ஆமா…” - சேத்ரன்
“ஏதோ நட்டுக்கிட்டான்னு பேரை மாத்திட்டான்னு சொன்ன?”
“நாயே…. அது நடாஷா..”
“ஏதோ ஒரு எழவு! ஆனா.. நம்மள ஏன் டா இந்த ராட்சசி இப்படி நிற்க வைச்சிருக்கா?”
“இன்னையில இருந்து அவளும் ஒரு பார்ட்னர் இந்த பேக்கரிக்கு. கொஞ்சம் மரியாதையா பேசு”
“தம்மதூண்டு பேக்கரிக்கு எத்தனை பார்ட்னர்ஸ்டா டேய்..”
“செருப்புப் பிஞ்சிடும்”
“பிராமணப் பொண்ணுன்னு சொன்ன, பூஜை பண்றச்ச லட்சணமா புடவை கட்டி பூ,பொட்டெல்லாம் வைச்சு கையில இரண்டு வளையலை மாட்டிக்கனும்னு தெரியாது?” – அவன் முணுமுணுத்தது நயனாவின் பாம்புக் காதுகளை எட்டி விட.. சட்டென சீற்றத்துடன் திரும்பியவள் “சாமி சொல்லுச்சா?, ம்? சாமி சொல்லுச்சா?, புடவை கட்டு,பூ வைன்னு?” என்று கேட்டபடி அருகே வர.. பதறிப் போன தீபன் “இல்ல,இல்ல! சாமி கேட்கல!, நீங்க டூ-பீஸோட பூஜை பண்ணாக் கூட இனி நான் ஒன்ன்ன்ன்ன்னும் சொல்ல மாட்டேன்” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.
அவ்வளவு தான்! கண்கள் ரௌத்திரத்தில் பளபளக்க சேத்ரனிடம் திரும்பியவள் “நான் இங்க இருக்கனும்னா.. இவன் இங்க இருக்கக் கூடாது!” என்றாள்.
“என்ன சும்மா மிரட்டுற?, ஒரு வாரமா நானும் பார்க்குறேன், எங்களை ஏதோ ஸ்ட்ரீட் டாக்ஸ் மாதிரி ட்ரீட் பண்ணுற? நான் ஒன்னும் இவனை மாதிரி கிடையாது. சொல்றதோட நிப்பாட்டிக்காம, நேரா உன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கே இழுத்துட்டுப் போயிடுவேன்! ராங்கி! உன் ஃபெமினிசத்தையெல்லாம் இவனோட நிறுத்திக்கோ! பொம்மனாட்டின்னா ஒரு அடக்கம் வேணாம்?, திமிர்ப்பிடிச்சவ” - தீபன்
“டேய்ய்ய்ய்ய்ய்ய் உன்னைஐஐஐஐஐஐ..” கையில் வைத்திருந்த மணியால் அவன் தலையைத் தாக்கப் பாய்ந்தவளைக் கண்டு நண்பனின் பின்னே ஒளிந்தான் தீபன்.
“நயனா.. ப்ளீஸ்… அவனை விடு”
“நகருங்க… நகருங்க சேத்ரன்.. இன்னிக்கு இவனை உரிச்சு உப்புக் கண்டம் போட்டாத் தான் என் மனசு ஆறும்! பொம்மனாட்டின்னா அடக்கமா இருக்கனுமாம்! யாருக்குடா அடங்கி இருக்கனும்?, உனக்கா? ம்? உனக்கா?” – சேத்ரனின் பின்னே நின்றவனைப் பிடிக்கப் போராடிக் கொண்டிருந்தவளைக் கண்டு பயந்து போன தீபன் “இவ பொண்னே இல்லடா சேத்ரன். வா டா போலீஸ் ஸ்டேஷன் போகலாம்” என்றான்.
“அய்யோ.. 2 பேரும் இப்போ சும்மா இருக்கப் போறீங்களா இல்லையா?” – எரிச்சலுடன் சேத்ரன் கத்தியதும் அடங்கிய இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நின்றனர்.
“ரெண்டு பேருக்கும் என்ன வயசாகுது?, சின்னப்புள்ளத்தனமா சண்டை போட்டுக்கிறீங்க?”
“என்னால இவளோடெல்லாம் வேலை செய்ய முடியாது டா சேத்ரன்”
“இது தான் வேணும்னு சூஸ் பண்ற ரைட்ஸையெல்லாம் நீ என்னைக்கோ இழந்துட்ட. இந்த பேக்கரில இருக்கனும்னு நினைச்சேனா.. இனி நான் சொல்றதை மட்டும் தான் கேட்கனும்”
“……………” – உம்மென்று முகத்தை வைத்தபடித் தலையைக் குனிந்து கொண்டான் தீபன்.
“நயனா.. இவன் கொஞ்சம் துடுக்காப் பேசுவான். மத்தபடி ரொம்ப நல்லவன்!”
“ஆமாமாம், அதனால தான் டூ-பீஸ்ல பூஜை பண்ணச் சொன்னான். ராஸ்கல்” - நயனா
“ச்ச,ச்ச அது ஒரு ஃப்ளோல சொல்லியிருப்பான். மத்தபடி டூ-பீஸ் போட்டுண்டு யாராவது பூஜை பண்ணுவாளா?, அப்டியே நீ பண்ணினாலும் இவன் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டான். ஏன்னா.. அதைப் பார்க்குற ரைட்ஸ் இருக்கிற ஒரே ஆள் நான் மட்டும் தான்”
“சேத்ரன்ன்ன்ன்ன்ன்ன்” – நயனா.
“அட ச்சை! என்னக் கருமாந்திரம் டா நடக்குது இங்க?”-தீபன்
“அது வந்து டா தீபன்… ஏழு வருஷத்துக்கு முன்னாடி என்னைத் தான் கட்டிப்பேன்னு அடம் பிடிச்சு நயனா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துட்டா. என் மேல அவ்ளோ லவ்!”
“என்ன உளறல் இது?” – நயனா
“அப்போ ஓடி வந்தவ, இப்போத் தான் உன்னைக் கண்டுபிடிச்சிருக்காளாக்கும்?”-தீபன்
“ஆமா..”
“நீங்க 2 பேரும் இந்த மாதிரி பேசியே நேரத்தை வேஸ்ட் பண்ணுறதா இருந்தா, நான் கிளம்புறேன்” – நயனா.
“ஹே.. இரு இரு. கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருடா தீபன்! உன் பூஜையை நீ முடிச்சிட்டேன்னா.. நாம 3 பேரும் உட்கார்ந்து பேசலாம்”
“ம்ம்”-என்று விட்டுப் பூஜையை முடித்தவள் ஆரத்தித் தட்டை அவர்களிடம் நீட்டினாள். பயபக்தியுடன் கண்ணில் ஒற்றிக் கொண்ட இருவருக்கும் பயம் அந்தப் பரமாத்மாவின் மீதோ, அல்லது இந்தப் பாவையின் மீதோ! அவர்களுக்கே வெளிச்சம்!
பின் ஆளுக்கு ஒரு காஃபி கப்புடன் ஜன்னல் இருக்கையருகே வந்து அமர்ந்தனர் மூவரும்.
“ஒரு வாரம் டைம் கொடுங்கன்னு கேட்ட. நேத்தோட நீ கேட்ட டைம் முடிஞ்சுடுச்சு. என்ன பண்ணலாம்ன்னு ப்ளான் வைச்சிருக்க?”-சேத்ரன்
பதில் கூறாமல் கையிலிருந்த டைரியை நீட்டினாள் நயனா. பிரித்துப் பார்த்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிய இருவரது முகத்திலும் ஆச்சரியம் கலந்த புன்னகை தோன்றியது.
“நீங்க அப்டிப் பெருமையா சிரிக்குற அளவுக்கு அதுல புதுசா ஒன்னுமில்ல. எல்லாமே உங்களுக்கும் தோணுற ஐடியாக்கள் தான்” – நயனா.
“அப்டி மொத்தமா சொல்லிட முடியாது” – சேத்ரன்.
“எல்லாருமே பண்றதைத் தான் நாமளும் பண்ணப் போறோம்! ஆனா.. அதுல புதுசா எதைத் திணிக்கிறோம்ன்றது தான் மேட்டர். ரொம்பவும் நன்றி!! இதுக்கு” – டைரியைத் தூக்கிக் காட்டியவனிடம் “என் பழைய டைரியை ஹாண்ட் ஓவர் பண்ணுற வழியைப் பாருங்க” என்றாள் நயனா.
டைரியின் ஒவ்வொரு பக்கத்திலும் அவள் குறிப்பிட்டிருந்தது இது ஒரு புது ஆரம்பமாக இருக்க வேண்டுமென்பது தான்! பேக்கரியைப் பொறுத்தவரை இது அவர்களது மறுபிறப்பு! அதனால் மக்களைக் கவர ஆரம்பக் கட்டத்தில் சேத்ரன் என்னவெல்லாம் செய்து வியாபாரத்தை வளர்த்துக் கொண்டானோ.. அதை மீண்டும் செய்தாக வேண்டும்!
பேக்கரி தொடங்கி ஐந்து வருடங்களாகி விட்ட படியால் அன்று போலல்லாது இன்று இந்த இடமும்,மக்களுடைய எதிர்பார்ப்பும் சேத்ரனுக்கு அத்துப்படி! அதனால்.. கொஞ்சம் ட்ரெண்டியாக யோசித்தால்.. விட்ட இடத்தைப் பிடிப்பது பெரிய காரியம் இல்லை!
ஏற்கனவே இருக்கும் விசயங்களை மாற்றி அமைத்து, கொஞ்சம் புதிய ட்ரெண்டையும் கலந்து புதிதாக பேக்கரிக்கு ஒரு க்ராண்ட் ரீ-ஒபனிங் கொடுத்து விடலாமென்று தீர்மானித்தனர் மூவரும்!
அதன் முதற்கட்டமாக அவர்கள் ஆரம்பித்தது விளம்பரங்கள்! ஆடைகளோ,நகைகளோ,தின்பண்டங்களோ எதுவாயினும் நம் மக்கள் கால,காலமாக சென்று விழுவது விளம்பரங்களில் தான்! அதனால் பேக்கரிக்காகப் புதிதாக ஒரு விளம்பரப் படத்தைத் தயாரிக்க வேண்டுமென்று முடிவு செய்தனர்.
“விளம்பரப் படமா?, சூப்பர்! ஃபேமஸ் மாடல்ஸ் யாரையாவது வைச்சுப் பண்ணலாமா?”-தீபன்
“அடேங்கப்பா!, நீங்க 2 பேரும் அவ்ளோ பெரிய அப்பாடக்கர்ஸா?” – நயனா
“அதுக்கெல்லாம் நம்ம பட்ஜெட் ஒத்து வராதுடா தீபன்” - சேத்ரன்
“எதுக்கு சம்மந்தமில்லாத யாரையோ கூப்பிட்டு வந்து நடிக்க வைக்கனும்?, பேசாம நாமளே நடிச்சா என்ன?” – நயனா
“நல்ல ஐடியா” - சேத்ரன்
“நான் ஸ்கூல் நாடகத்துல கூட நடிச்சதில்ல. என்னையெல்லாம் இதுல இன்வால்வ் பண்ணாதீங்கோ. மோர் ஓவர் எனக்கு ஜெர்மன் அவ்ளோ வராது..”- தீபன்
“சேத்ரன், இந்தாளை வெளியே துரத்துங்கோ ப்ளீஸ். தன்னால தான் பேக்கரிக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததுன்ற உறுத்தல் கொஞ்சம் கூட இல்லாம, ஓவராவே பண்ணிண்டிருக்கான்”
“ஏய்.. அவன்,இவன்னு சொன்னேனா பல்லைக் கழட்டிடுவேன்”
“எங்க,கழட்டு,கழட்டுடா பார்ப்போம்”
“டா வா?, ஏய்ய்ய்ய்ய்ய்”
“டேய்.. டேய்.. எப்போப் பாரு சண்டைப் போட்டுக்கிட்டு சும்மா இருங்களேன் டா ரெண்டு பேரும்!,!”
“நம்ம செஃப்களை நடிக்க வைச்சு ஒரு விளம்பரத்தை வெளியிடனும் சேத்ரன்! அது தான் ரொம்ப இயல்பா இருக்கும். நம்ம கிட்சன் எப்படியிருக்கு,என்ன பண்றோம்ன்னு பார்க்கிறவங்களுக்குத் தெரியனும். விளம்பரத்துல பார்க்குற மாதிரியே நேர்லயும் இருக்கும் போது மக்கள் இம்ப்ரெஸ் ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்கு”
“ஓகே! நீ சொல்ற மாதிரியே பண்ணிடலாம். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் ஆட்-கம்பெனி வைச்சிருக்கான். அவன் கிட்டேயே ஐடியா கேட்போம்!”
“அப்புறம் இப்போ இருக்கிற லோகோ ஓகே தான்! ஸ்லோகன் ஒன்னு ரெடி பண்ணனும்!!”
“அதையும் நீயே யோசிச்சிருப்பியே! சொல்லிடு” – காண்டுடன் காண்டீபன்.
“We were first, and we're still the best! – இது எப்படியிருக்கு?”
“அவன் நீ என்ன சொன்னாலும் தலையாட்டுவான்!” – தீபன்
“நீங்க என்னோட பேச்சு வார்த்தையே வைச்சுக்காதீங்கோ ப்ளீஸ்”- நயனா
“ஸ்லோகன் ரொம்ப நல்லாயிருக்கு நயனா” – ஈ-யென்ற வாயுடன் சேத்ரன்.
“சொன்னேன்ல?”-தீபன்
“ஆட் ஷூட்டோட சேர்த்து நம்ம செஃப்ஸ் எல்லாரோடயும் ஒரு ஃபோட்டோ ஷூட் வைச்சுக்கலாம். நம்ம மெனு,நியூ ரெசிப்பிஸ்,இந்த செஃப்ஸோட படம், அட்ரெஸ்,ஃபோன் நம்பர்ன்னு போட்டு ஃப்ளையர்ஸ் ரெடி பண்ணனும். ஆஃபர் கூப்பன்ஸோட டிஸ்ட்ரிப்யூட் பண்ணோம்ன்னா கூட்டம் வர வாய்ப்பிருக்கு!”
“யெஸ்! அப்படியேப் பண்ணிடலாம்! என்ன அப்படிப் பார்க்குற?, உனக்கு ஜால்ரா அடிச்சாத் தான் இந்தப் பய இனி எனக்குக் கஞ்சி ஊத்துவான். என்னடா சேத்ரன்?” – தீபன்
“டேய்ய்ய்ய்ய்”- பல்லைக் கடித்தான் சேத்ரன்.
“அப்புறம் உங்களோட வெப்சைட்டைக் கூடக் கொஞ்சம் தூசி தட்ட வேண்டியிருக்கு. அதை அப்டேட் பண்ணுறதேயில்லையா நீங்க?”
“ம்ஹ்ம்ம்.. நீ வந்து பண்ணுவன்னு தான் காத்திட்டிருந்தோம்” – தீபன்
“கௌண்ட்டர் கொடுக்காம இரேன் டா தீபன்” – சேத்ரன்.
“இல்லடா, நான் இப்படிப் பேசுனா தான உங்க 2 பேருக்கும் பிடிக்குது?”
“அவனை விடு நயனா. லோக்கல் நியூஸ் பேப்பர்ஸ்,மேகசீன்ஸ்,ரேடியோ ஸ்டேஷன்ஸ்ல எல்லாம் விளம்பரப்படுத்துற பொறுப்பை இவன் பார்த்துப்பான்! வெப்சைட்டை நீ பார்த்துப்பன்னு நம்புறேன். “
“ம்ம்ம்ம்”
“இதையெல்லாம் விட மக்களைக் கவர்ற மாதிரி புது ரெசிப்பிஸ் கொடுக்கனும்”- தீபன்
“கலர்ஃபுல்லான,சுவையான கேக்ஸ் தான் நம்ம நோக்கமே! சோ.. இப்போ ட்ரெண்டியா இருக்கிற கேக்ஸ்,மஃபின்ஸ் பத்தி ஸ்டடி பண்ணுனேன். மிர்ரர் க்ளேஸ் கேக்ஸ், மார்ஷ்மாலோ ஐசிங்,மெரிங் ஐசிங் உபயோகிச்ச கேக்குகள்! அப்புறம் ஐசோமல்ட்டை வித,விதமான மோல்டுகள்ல ஊத்திக் கிடைக்குற ஸ்கல்ப்ச்செர்ஸை வைச்சுத் தயாரிக்கிற கேக்குகள்! எடிபிள்,ஆர்கானிக் பூக்கள்,ஸ்ப்ரிங்கிள்ஸ் வைச்ச டிசைன்கள்! இதெல்லாம் தான் இப்போ ட்ரெண்ட்ல இருக்கு!”
“ஹ்ம்ம், பொதுவா,கேக்ஸ்,ஸ்நாக்ஸ்ன்னா முதல்ல இம்ப்ரெஸ் ஆகுறது குழந்தைங்க தான்! சோ.. அவங்களைக் கவருகிற மாதிரி இப்போ ரிலீஸ் ஆகியிருக்கிற ஃபேமஸ் மூவிஸ், கார்ட்டூன் காரெக்டர்ஸை வைச்சு கேக்ஸ் தயாரிச்சா.. அவங்களை ஈசியா நம்மப் பக்கம் இழுத்துடலாம்” – தீபன்
“ஏற்கனவே நீங்க ஸ்டோல்லென் ஃபெஸ்டிவல்ல கலந்துக்கிட்ட மாதிரி, வேற ஏதாவது ஃபேர்ஸ்,ஃபெஸ்டிவல்ஸ்ல பார்டிசிபேட் பண்ண சான்ஸ் கிடைச்சா, நம்ம பேக்கரியை ப்ரமோட் பண்றதுக்கு வசதியா இருக்கும்” – நயனா
“அந்த வேலையை நான் பார்த்துக்கிறேன். சரி, டிலே பண்ணாம எல்லாத்தையும் நாம உடனே ஆரம்பிச்சாகனும்! க்ராண்ட் ரீ-ஓபனிங் பார்ட்டிக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணுற பொறுப்பையும் நான் உங்கக் கிட்டயே ஒப்படைக்கிறேன். வேற என்ன தேவைன்னாலும் என் கிட்ட கேளுங்க” என்று அவன் கூறியதும் இருவரும் தலையாட்டினர்.
“அப்புறம் நயனா.. இன்னிக்கு காண்டீபன் கூடப் போய் விசா ரெநியூ பண்றதுக்கான ப்ராசஸை முடிச்சிட்டு வந்துடு. ஓகே வா?” என்றவனிடம் “இவனோடயா??” என்று முகத்தை சுழித்தாள் நயனா.
ஆனால் இவனுடன் தான் சென்றாக வேண்டுமென்று சேத்ரன் ஸ்ட்ரிக்டாகக் கூறி விட்ட படியால் அடுத்த ஒரு மணி நேரத்தில் தீபனுடன் காரில் சென்று கொண்டிருந்தாள்.
“you know you love me.. I know you care..” – பக்கத்து இருக்கையில் ஒருத்தி அமர்ந்திருப்பதைச் சட்டை செய்யாமல் தன் போக்கில் சத்தமாகப் பாடிக் கொண்டிருந்தவனைக் கண்டுத் தலையில் கை வைத்தாள் நயனா.
“தயவு செஞ்சு பாடுறதை நிறுத்துங்க ப்ளீஸ்”
“ஏன்?, என் வாய்ஸ் நல்லாயில்லையா?”
“அதை என் வாயால வேற சொல்லனுமா?”
“என்னால அமைதியால்லாம் கார் ஓட்ட முடியாது. நீ ஏதாவது பேசு. இல்ல,என்னைப் பாட விடு “
“வேணாம், வேணாம். எதையாவது பேசித் தொலைங்கோ. கேட்குறேன்”
“ஆமா, நீ நிஜமாவே சேத்ரனை லவ் பண்ணியா?”
“அப்டின்னு அந்தப் புண்ணியவான் சொன்னாரா?”
“அவன் சொல்லல. ஆனா உங்க 2 பேருக்குள்ளேயும் ஒரு இது.. இருக்கிற மாதிரி எனக்கொரு ஃபீல்”
“என்ன ‘இது’?”
“இல்ல, சேத்ரனை எனக்கு 6 வருஷமாத் தெரியும். நான் பழகின இந்த ஆறு வருஷத்துல சேத்ரன் ஒரு பொண்ணைக் கூட நிமிர்ந்து பார்த்ததில்ல. ஆனா.. உன்னை அவன் கொஞ்சம் ஆர்வமா பார்க்குற மாதிரி எனக்குத் தோணுது!”
“அப்படியெல்லாம் எந்த எழவுமில்ல. தேவையில்லாம புரளியைக் கிளப்பாதீங்கோ”
“ஏன்?ஏன்?ஏன்? என் நண்பனுக்கு என்ன குறை?, அழகில்லையா?, அறிவில்லையா?, பணமில்லையா?”
“நல்ல மனசு இல்ல. அதான் பிரச்சனை”
“ஆமா, நல்ல மனசு இல்லாமத் தான், அவன் மண்டையை உடைச்ச உன்னைக் கூப்பிட்டு வந்து பார்ட்னர்ஷிப் கொடுத்திருக்கான். நீ அவனை ஏதோ தப்பா புரிஞ்சிட்டிருக்க”
“……………..”
“சரி, சீரியஸா கேட்குறேன். என்னப் பிரச்சனை உங்க 2 பேருக்கும்?”
“உங்க ஃப்ரெண்ட் உங்கக்கிட்ட சொன்னதில்லையா?”
“மோகினி,மோகினின்னு ஒரு பொண்ணு இப்போ என்ன பண்ணுதோ தெரியலயேன்னு அப்பப்போ புலம்புவான்!, ஆனா முழுசா எதையும் சொன்னதில்ல”
“புலம்புவாரா……..?” – உள்ளே சென்று விட்டக் குரலுடன் கேட்டவளிடம் “ஆமா, நீ முழுசா விஷயத்தைச் சொன்னா.. இன்னும் அவன் என்னவெல்லாம் சொன்னான்னு சொல்லுவேன்” என்று பேரம் பேசினான்.
வெளியே இருந்த குளிரும், காரில் ஒலித்துக் கொண்டிருந்த மெலடியும், காண்டீபனின் கேள்வியும் அவளை அந்த நாளுக்கு இழுத்துச் சென்றது.
