மழை நிலவே!
90ஸ் கிட்ஸ்ல ஒரு கேட்டகரி இருக்கானுங்க! அவனுங்க ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கீழயும் வர மாட்டானுங்க! இளையராஜாவுக்குள்ளயும் அடங்க மாட்டானுங்க! என்னா தான் டா உங்க டேஸ்ட்டூன்னு கேட்டா, ‘ஒயிட் லகான் கோழி ஒன்னு கூவுது’-ன்னு உற்சாகமா பாடுவானுங்க! ‘ஓ! தேனிசைத் தென்றல் தேவா’-போலன்னு நாம நினைச்சு முடிக்குறதுக்குள்ள ‘எங்கே அந்த வெண்ணிலான்னு’ சிற்பியைக் கூப்பிடுவானுங்க (சிற்பியா?, யார்றா அவுரு?!), அடக் கடவுளேன்னு நாம ஃபீல் ஆயிட்டிருக்கும் போது ‘மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குதுன்னு’ – எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் போயிருவானுங்க! ஆனா இவனுங்க அப்பாவிங்க கிடையாது! அடப்பாவிங்க! ஏன்னா, நடிகை மந்த்ரா (தில்ரூபா,தில்ரூபான்னு அருண் விஜய் கூட ஆடுவாங்களே!, remember?, அவக தான் இவுக!) போஸ்ட்டரை ஜொள்ளு வடிய நாள் முழுக்கப் பார்ப்பானுங்க! ‘காஞ்சிப்பட்டு சேலை கட்டி’ பாட்டை அடிக்கடி முணுமுணுக்குற விவகாரம் புடிச்சவனுங்க!
‘ஜமீன் கோட்டை’ படத்தைப் பெரிய ‘ஹாரர்’ மூவி ரேஞ்சுக்கு பேசுவானுங்க!! வெள்ளிக்கிழமை மத்தியானம் பாளையத்தம்மன், படைவீட்டு அம்மனெல்லாம் மிஸ் பண்ண மாட்டானுங்க! வாட்டக்குடி இரணியன், குங்குமப் பொட்டுக் கவுண்டர், பந்தா பரமசிவம், பட்ஜெட் பத்மநாபனெல்லாம் இவனுங்க ‘ஃபேவரைட் லிஸ்ட்’! தமிழ் சினிமால இப்பிடிப் படம்,பாட்டெல்லாம் இருக்காடா டேய்! என்ன ரசனை டா யப்பாஆஆ!
ஃப்ரெண்ட்ஸ்ங்களோட போனா, பொண்ணுங்களை மானாங்கண்ணியா கலாய்ப்பானுங்க! ஒத்தைல போறப்ப கூட்டமா பொண்ணுங்களைப் பார்த்தா, தலைய குனிஞ்சுக்கிட்டு மானங்கெட்டத்தனமா நடப்பானுங்க! வீட்டுப் பொண்ணுங்க கிட்ட மட்டும் வாயடிப்பானுங்க, கூடப் படிக்குற பொண்ணு எதிர்ல வந்தா, வானத்தைப் பார்ப்பானுங்க! கூச்ச சுபாவம்ன்னு சொல்ல முடியாது, பொறுக்கிப் பய-ன்னு ஒதுக்கி வைக்கவும் முடியாது! ஆக மொத்தம், நல்லவனுமில்லாத, கெட்டவனுமில்லாத ஒரு வகையான.. ஷ்ஷ்ஷ்ஷ், complicated! இந்தப் பய சசி கூட இப்பிடித் தானுங்க! விவகாரம் புடிச்சவன்!
முழுக்கதையும் கீழே!!...
