ஒரு பூவின் நிழல்!
அமர்ந்திருந்த பெஞ்ச்சை இறுகப் பற்றியிருந்தவனின் பார்வை நேர் வெறித்திருக்க, எதிர் வீட்டிலிருந்து வெளி வந்த மாமியைக் கண்ட கதிர் “அம்புஜம் மாமி, அம்புஜம் மாமி! விஷயம் தெரியுமா உங்களுக்கு?” என்றபடி அவரிடமும் சொல்லிச் சிரிக்க.. கடுப்புடன் எழுந்து நின்றவன்... “டேய் அண்ணா.. ரேஷன் கடைல சுகர் வாங்கினு வரச் சொல்லி உன்னை வெளிய அனுப்புனா, நீ டீக்கடை வாசல்ல என்னாடா பண்ணினு இருக்குற?” என்றப் பெண் குரல் கேட்டு இடது புறம் திரும்பினான். கதிரின் தங்கை செல்வித் தன் சோடாபுட்டியைத் தூக்கிக் கோபத்துடன் கதிரை முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். ‘வாயைப் பாரு! மூதேவி! தங்கச்சியா இது! என்று போகிற போக்கில் ஒரு கமெண்ட்டை உதிர்த்த வெற்றி, அவளைத் தொடர்ந்து, அருகே நின்றிருந்தவளைக் கண்டு விழிகளைப் பெரிதாக விரித்தான். ஏனெனில் அங்கே நின்றிருந்தது அவனது டீச்சரும், ஹிப்-பியூட்டியுமான மிஸ்.ஜமுனா.
‘வானெங்கும் ஊர்வலம்.. வாவென்னும் உன் முகம்..
கண்டால்... மயக்கம்! கலந்தால்.. இனிக்கும்!
செனோரீட்டா ஐ லவ் யூ.. மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ...’ -‘ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..... இவளைப் பார்க்கும் போதெல்லாம் நீங்க நான்-சிங்க்ல உள்ள வர்றீங்க ராஜா சார்!’ என்று முணுமுணுத்தபடி அவன் அவளை நோக்குகையில், அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வையில் பெரிதாக அலட்டலில்லை. ஏன், குறைந்தபட்சம், இவன் எப்படி இங்கே என்கிறத் திகைப்புக் கூட இல்லை! லேசாகத் தலை சாய்த்துக் கொண்டு, கைகளைக் கட்டியபடி மிகப் பொறுமையாக மேலிருந்துக் கீழ் வரை அவனை அளவெடுத்தாள். ‘என்னாடா இவ! கொஞ்சம் கூடக் கூச்சநாச்சமில்லாம இப்புடிப் பார்க்குறா!’ - கைகள் தானாக, அணிந்திருந்த டீ-ஷர்ட்டை இழுத்து விட்டுக் கொள்ள, பரபரவெனத் தலை முடியையும் கோதி விட்டுக் கொண்டான் வெற்றி. ‘நீ என்னாத்துக்கு டா இந்த ராங்கியைப் பார்த்து இப்பிடிப் பதறுற?’ – என்றுத் திட்டிய அவன் மனசாட்சி ‘அன்னைக்கு அவ இடுப்பைப் பார்க்குறதுக்கு அவ்ளோ யோசிச்ச நீ! ஆனா.. இவளைப் பாரு, உத்துப் பார்த்தே உன் உள் பனியன் சைஸைக் கண்டுபிடிச்சுடுவா போல” என்று கலாய்க்க... முசுட்டு முகத்துடன் உதட்டை வளைத்தவன் ‘இன்னும் இன்னாடி பார்க்குற?, நான் பல்லு விளக்கிட்டேனா இல்லையான்னு தெரியனுமா?, கிட்ட வா! ஊதிக் காட்டுறேன்!’ என்ற ரீதியில் முறைத்து வைத்தான்.
தொடர்ந்து வாசிக்க.... கீழே உள்ள லிங்க்குகளைக் க்ளிக்கவும்!!
