மோகனராகம்
கொல்லையில் விழுந்து கிடந்தக் காகிதத்தைக் கண்டு மோகனாவை முறைத்த ரகுவரன், “பெருசுங்க யார் கையிலயும் லெட்டர் சிக்குச்சுன்னா, நான் கைமா தான் டா மோகன்” எனப் பதறினான்.
“லெட்டர்ல பேர் போட்டிருக்கியா?”
“இல்லையே”
“பின்ன என்ன?, மொட்டைக் கடுதாசியாட்ருக்குன்னு நினைச்சுக் குப்பைல போட்ருவாங்க! பதறாத”
“மோகன் மோகன் லூஸ் மோகன்! என்ற கையெழுத்து என்னைக் காட்டிக் கொடுக்காதா? பார்த்ததும் தெரிஞ்சிடும் அதை எழுதுனது நான் தான்னு”
“அய்யோ ஆமா! நீ வேற அழகா எழுதித் தொலைவியே”
“இப்போ அதுவா முக்கியம்?”
“இப்படிப் பதறிக்கிட்டே நிற்குறதுக்கு, யாரும் பார்க்குறதுக்குள்ள போய் லெட்டரை எடுக்கலாம் வா”- அவள் கூறியதும் அவசரமாய் இருவரும் கீழே இறங்க முற்பட்ட சமயம்.. நைட்டியும்,கொண்டையுமாய் கையில் ‘கோல்கேட்’ பல்பொடி டப்பாவுடன் கொல்லைக்கு வந்து சேர்ந்தாள் பூர்ணி.
“ஏய்,ஏய்,ஏய் நில்லு நில்லு நில்லு. பூர்ணி வர்றா” மோகனா மெல்லிய குரலில் பரபரப்புடன் கூற.. வேகமாய் எட்டி நோக்கினான் ரகுவரன். “நீ அதிர்ஷ்டக்காரன் ரகு! லெட்டர் சேர வேண்டிய இடத்துல சேர்ந்திடுச்சு! காலைல யார் முகத்துல முழிச்ச?” என்ற மோகனாவிடம் பதில் கூறாமல் கீழே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். காலில் மிதிபட்டக் காகிதத்தைக் கையில் எடுத்த பூர்ணி, அதைப் பிரித்துப் பார்த்தாள். அது ரகுவின் கையெழுத்தென்பதைப் புரிந்து கொண்டாள் போலும்! சுருக்கிய புருவங்களுடன்.. அதை வாசித்தபடியே அவள் உள்ளே நடக்க.. ஒருவரையொருவர் ஒரு நொடி நோக்கிய மோகனாவும்,ரகுவரனும்.. அடுத்த நொடிக் கடகடவென மாடியிறங்கி.. அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினர். லெட்டரைக் கூர்ந்து பார்த்தபடி அடுக்களைக்குள் நின்றிருந்தப் பூர்ணியைக் கண்டு அவசரமாய் அருகே சென்றவர்கள்.. ஆர்வமாய் அவளது ரியாக்ஷனை நோக்கியபடி வாசலருகே அவளறியாமல் நின்றனர். கதவைப் பற்றிக்கொண்டு மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தபடி மோகனா, அவள் பின்னே ரகுவரன். பரபரப்புடன் எச்சில் விழுங்கியபடி மோகனா நிற்க, மூச்சைப் பிடித்துக் கொண்டு இமைக்காமல் பூர்ணியையே வெறித்தபடி ரகுவரன் நின்றான். ஆர்வம் குறையாது இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க.. அதையறியாத பூர்ணி.. புருவம் சுருக்கி உதட்டைக் கடித்துக் கொண்டு கடிதத்தை ஒரு நொடி ஆழ்ந்து நோக்கினாள். பின்.. மெல்லக் கையை உயர்த்தி.. புரியாத பாவனையுடன் தலையைச் சொரிந்தாள். அதன் பின் என்ன நினைத்தாளோ…
“நி… த்… தி.. ய.. த்… தி… ல், நித்தியாத்தில்… இ…ரு…. பே..ரு..ம். ஈறுபேறும்” என வாய் விட்டு, தட்டுத் தடுமாறி, எழுத்து கூட்டித் தப்பு,தப்பாய் வாசிக்கத் துவங்க.. வெளியே நின்றபடி அவளையே கவனித்துக் கொண்டிருந்த மோகனா, சத்தியமாக இப்படியொரு ரியாக்ஷனை அவளிடமிருந்து எதிர்பார்த்திராத காரணத்தினால்.. சிரிப்பை அடக்கப் பெரும்பாடு பட்டுப் பின் முடியாமல்.. இரு கைகளால் வாயைப் பொத்திக் கதவில் சாய்ந்து.. கண்ணில் நீர் வர சிரிக்கத் துவங்க.. அவள் சிரிப்பைக் கண்டுப் பல்லைக் கடித்த ரகுவரன், அவளை இடித்துத் தள்ளி விட்டுக் கடகடவென உள்ளே நுழைந்து.. பூர்ணியின் கையிலிருந்தக் காகிதத்தைப் பட்டெனப் பறித்தான்.
மேலும் வாசிக்க... கீழே உள்ள லிங்க்குகளைக் க்ளிக்கவும்!!
