நான் உன்னைக் காதலிக்கிறேன்!

“நெக்ஸ்ட் நம்ம லவ் பேர்ட்ஸ்!, ரிஷி, போடா…”-என்று அர்ஜூன் பிடித்துத் தள்ளியதும் ரிஷியும்,ஹரிணியும் மேடையேறினர். அந்த வகுப்பிலேயே அழகன் என்றழைக்கப்பட்டவனும்,அழகி என்றழைக்கப்பட்டவளும் ஒரே மேடையில் நிற்பது அனைவரையும் ஆ-வெனப் பார்க்க வைத்தது. வழக்கம் போல ஆளுக்கொரு புறமாய் நின்றிருந்த இருவரும் ஒருவரையொருவர் பார்வையைத் தவிர்க்க.. இருவரது முகமும் பிரதிபலித்த உணர்ச்சிகள் கீழே அமர்ந்திருப்போரைப் பொறாமை கொள்ள வைத்துக் கொண்டிருந்தது.

“ஸ்டார்ட், ஸ்டார்ட்” –என்று ஆஷா கைத் தட்டியதும் முன்னே வந்து ஒரு சீட்டை எடுத்துப் பிரித்தவன் புருவத்தைச் சொரிந்தபடி அவளிடம் காட்டினான். காகிதத்திலிருப்பதை வாசித்தவள் முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டு போர்டின் புறம் திரும்ப “என்ன, என்ன”-வென்று அனைவரும் பரபரத்தனர். காகிதத்தைக் கசக்கி பாக்கெட்டில் திணித்துக் கொண்டு ரிஷி மேடையை விட்டிறங்க.. “ஏய்ய்ய்… ஏய்ய்ய்ய்ய்..”என ஓடி வந்த அர்ஜூனும்,சார்லஸூம் அவனைத் தடுத்து மீண்டும் மேலே ஏற்றி பாக்கெட்டிலிருந்த சீட்டை சண்டையிட்டுப் பறித்தனர்.

“என்னடா எழுதியிருக்கு?”- பரபரப்புடன் ஆஷா.

தங்களிடமிருந்துக் காகிதத்தை பறிக்க விடாது முயற்சித்துக் கொண்டிருந்த ரிஷியிடம் போராடியபடி “ஸே…. ஐ லவ் யூயூயூயூயூயூயூயூ” என்று கத்தினர் இருவரும். “வாவ்வ்வ்வ்வ்வ்வ்!!!!, ஊஊஊஊஊஊ”-என ஆளாளுக்கு எழுந்து நின்றுக் கைத் தட்டத் தொடங்க.. “திஸ் இஸ் அ கன்ஸ்பிரஸி. என்னால பண்ண முடியாது” என்றான் ரிஷி.

“டேய்…. எல்லாரும் மறுப்பு சொல்லாம விளையாடிட்டிருக்காங்க. உனக்கு மட்டும் என்ன?, இட்ஸ் ஜஸ்ட் அ கேம் டா” – ஆனந்தி

“உங்க மூஞ்சிகளையெல்லாம் பார்த்தா அப்படித் தெரியலையே!” – ரிஷி

“டூ இட், டூ இட், டூ இட்”- என நாலாபுறமும் அனைவரும் சத்தமிட.. வேறு வழியின்றி மேடையேறி நின்றான் ரிஷி.

“லேடீஸ் ஃபர்ஸ்ட், ஹரிணி நீ தான் முதல்ல சொல்லனும்”-சார்லஸ்

“அடி,ராஸ்கல்”-பல்லைக் கடித்த ஹரிணியிடம் “லேடீஸ் ஃபர்ஸ்ட், லேடீஸ் ஃபர்ஸ்ட்”எனக் கத்தினர் அனைவரும்.

என்ன செய்வதென்று புரியாமல் தன்னருகே நின்றிருந்தவனை அவள் நோக்க அவனும் தோளைக் குலுக்கி “லேடீஸ் ஃபர்ஸ்ட்” என்றான். நெற்றியை அழுத்தியபடி வேறு வழியின்றி அவன் புறம் திரும்பி நின்றவள் “ஓகே!!”-எனக் கூற அனைவரும் “ஓஓஓஓஓஓஓஓ”என்றனர்.

பெரிய,பெரிய மூச்சுக்களால் தன்னைச் சமாளித்துக் கொண்டு நிற்பவளையும், அவள் முகத்தையே ஆர்வத்துடன் நோக்கியபடி கண்ணிமைக்காமல் நிற்பவனையும் கண்டு வகுப்பு முழுதும் அமைதியடைய… அனைவரின் பார்வையும் மேடையிலிருந்த இருவரின் மீது மட்டுமே பதிந்திருந்தது.

“ஹரிணி, டைம் போயிட்டே இருக்குடி…”-ஆஷா

“ஷட்-அப், மூடைக் கெடுக்காதே” – அர்ஜூன்

இருவரும் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத ஹரிணி ஒரு முடிவுடன் தலை நிமிர்ந்து அவனை நோக்கி வாயைத் திறந்த நேரம் திடீரென விளக்கணைந்து வகுப்பறை முழுதும் இருள் சூழ்ந்தது.

மேலும் வாசிக்க..... கீழே உள்ள லிங்க்குகளைக் க்ளிக்கவும்!!!